For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்ட விட்டு ஓடிப்போனவ தான நீ.. தொடரும் சித்திரவதைகள் my story #255

|

நல்லதே நின....நல்லதே நடக்கும் இதைத் தான் என்னுடைய அம்மா அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார்... ஆனால் உண்மை வேறு மாதிரியல்லவா இருக்கிறது. நீ என்ன நினைத்தாலும் சரி உன் விதிப்படி என்ன நடக்க வேண்டுமோ அது தான் நடக்கும் என்று நாம் சற்று எதிர்ப்பார்க்காத நிகழ்வுகள் நம் வாழ்வில் அரங்கேறி அப்படியே நம்மையும் நம்முடைய வாழ்க்கையையும் புரட்டிப் போட்டு விடுகின்றன.

என் விஷயத்தில் குறிப்பாக திருமணம் என்று வரும்போது இவ்வளவு சிக்கல்கள் இருக்கும். நான் இவ்வளவு பிடிவாதம் பிடிப்பேன் என்று அவர்களும் என் பிடிவாதத்தை மீறி எனக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என்று நானும் நினைக்கவேயில்லை.... சத்தியமாக அம்மா சொன்னது போல நல்லதே தான் நினைத்தேன்...

நல்லது நினை என்று சொன்ன அம்மா யாருக்கு நல்லது என்று சொல்லாமல் விட்டதாலோ என்னவோ எனக்கு நல்லது என்று எடுத்துக் கொண்டேன்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பக்கத்து வீடு :

பக்கத்து வீடு :

கல்லூரி கடைசி செமஸ்டர் முடித்திருந்தேன். அதற்கு முன்பிருந்தே ராஜுவை எனக்குத் தெரியும். எங்கள் வீட்டிற்கு பக்கத்து வீடு தான். பல முறை பார்த்திருக்கிறேன் ஆனால் பேசியதில்லை.

அடிக்கடி பார்த்து சிரிப்பான். நான் நடந்து சென்றாலே சுதாரித்து எழுந்து நிற்பது என்னையே கண்கொட்டாமல் பார்ப்பது என்று அட்டூழியம் செய்வான் . இந்த கலர் உனக்கு எடுக்கவேயில்ல என்று சைகை காண்பிக்க அடுத்த் நொடியே உள்ளே சென்று முகம் கழுவி வேறு உடையை மாற்றிவிட்டு வாசலில் வந்து நிற்பேன். அவன் கண்ணில் பட வேண்டும் என்று சொல்லி நான்கைந்து முறை அவனின் வீட்டை கடந்து சென்று வருவேன். பார்த்து அழகா இருக்க என்று சொன்னால் தான் சற்று ஆசுவாசமாய் இருக்கும்.

பின்னால் உட்கார்ந்து பாத்திரங்களை கழுவும் போது அவனும் படிப்பதாய் சொல்லி அவன் வீட்டிற்கு பின்னால் வந்து உட்கார்ந்து விடுவான். இருவரும் பேசிக் கொள்ள மாட்டோம் ஆனால் பார்த்துக் கொண்டேயிருப்போம். எங்கள் இருவருக்குமே அது ரொம்பவே பிடித்திருந்தது.

வீட்டில் :

வீட்டில் :

ஒரு நன்னாளில் வீட்டில் மாட்டிக் கொண்டோம். எங்கள் பாட்டி தான் அப்பாவிடம் போட்டுக் கொடுத்திருந்தார். இந்த புள்ள சரியில்லடா ராசுப்பயல பாத்து பல்ல பல்ல காட்டுது அவனும் இவளப்பாத்து இளிக்கிறான் என்னான்னு கேளு..

அப்பா அமைதியாகவே இருந்தா... நானும் பாத்தேன் நான் பாத்தேன் என்று சொல்லி சித்தப்பா, உர மூட்டை போடும் அண்ணன் என வந்து நின்றார்கள். அடப்பாவிகளா எங்கயிருந்துடா பாப்பீங்க அத்தனைக்கும் நாங்க பேசிக்க கூட இல்லையே அதுக்குள்ள இப்டியா என்று நினைத்துக் கொண்டு அப்பா முன்னால் போய் நின்றேன்.

ஏற இறங்க பார்த்தார். எதுவும் பேசவில்லை. ஒழுங்கா இரு.... என்னைய பத்தி தெரியும்ல ஜாக்கிறத என்று சொல்லி எழுந்து போய்விட்டார்.

ஒரு மாதம் :

ஒரு மாதம் :

அதன் பின் ஒரு மாதம் வரை அவனிடம் பேசவேயில்லை. அன்றைக்கு ரிசல்ட் அறிவிக்கிறார்கள் என்று சொல்லப்பட்டதால் நான் கல்லூரிக்குச் சென்றேன். நான் வீட்டை விட்டு வெளியே வருவதைப் பார்த்தவன் பின்னாலேயே வர ஆரம்பித்துவிட்டான்.

இப்போது அவன் முகத்தை விட அப்பாவின் முகம் தான் நியாபகம் வந்தது. அதைவிட எந்த பொந்துக்குள்ளிருந்து எந்தக் கண்கள் பார்த்துக் கொண்டிருக்கிறதோ என்று படபடப்பாய் இருந்தது. ஒரு காகிதத்தில் என்னுடைய செல்போன் நம்பரை எழுதி பின்னால் அவனை நோக்கி வீசிவிட்டு ஓடினேன். நினைத்தது போலவே அதை எடுத்து பார்த்தவன் எனக்கு போன் செய்தான்.

ஏன் பயம் ? :

ஏன் பயம் ? :

அப்போது தான் தனியாக இருவரும் பேசிக் கொள்கிறோம் என்றாலும் அவ்வளவு உரிமையாக பேசினோம். ஏன் என்னைய பாத்து பயந்து ஓடுற ஒரு மாசமா ஆளக்காணோம்னு தான வந்தேன் என்றான். வீட்டில் நடந்ததைச் சொன்னேன். அப்டியா... ஒரு வீடு தள்ளி தான் இருக்கேன் எனக்கே தெரியல உங்கம்மாவும் எதுவும் எங்கம்மா கிட்ட சொல்லல....

மத்த கதனா மட்டும் வாய்கிழிய சொல்லத்தெரியுதுல என்றான். அதனால் சும்மா என் பின்னாடி வராத என்று சொல்லி முடிப்பதற்குள் என் முன்னால் வந்து நிற்கிறான். ஏய் லூசு மொதோ இங்கயிருந்து போ என்று துறத்த யார் வராங்கன்னு பாப்போம். டேய் யாரா பொந்துக்குள்ளயிருந்து எங்கள நோட்டம் விடுறது நல்லா வெளிய வந்து பாருங்கடா என்று காத்தினான். பேருந்து நிலையத்தில் நின்றிருந்த அத்தனை பேரும் என்னையே குருகுருவென்று பார்ப்பதாய் தோன்றியது.

நினைத்தது போலவே நான் வீட்டிற்கு செல்வதற்கு முன்னால் இந்த விஷயம் வீட்டிற்கு சென்றிருந்தது. அப்பா அடி வெளுத்து விட்டார்.

வா ஓடிப்போலாம் :

வா ஓடிப்போலாம் :

அப்பா மீதிருந்த கோபமா அல்லது என்னை அடித்து விட்டார்கள் என்ற வருத்தமா என்று தெரியவில்லை. இந்த இடத்தை விட்டு நான் போக வேண்டும். அப்போது தான் என்னுடைய அருமை தெரியும் என்னை அடித்து விட்டார்கள் என்ற கோபமே கண் முன்னால் நின்றது.

அப்போது எனக்கு ஒரே வடிகாலாய் இருந்தது அவன் மட்டும் தானே.... அவனிடமே என்னையே இங்கயிருந்து எப்டியாவது கூட்டிட்டு போய்டு இல்லன்னா எங்க வீட்ல என்னையே அடிச்சே சாவடிச்சிருவாங்க என்று அழுதேன். இருவரும் வீட்டை விட்டுப் போவது என்று முடிவெடுத்தும். அவனும் ஊரில் வேலை வெட்டி இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்தவன் தான். நான் பெயருக்குத் தான் டிகிரி முடித்திருந்தேன்.

அதிலிருந்து வருமானம் கிடைக்குமா எங்கே வேலை தேடுவது என்று எதுவும் தெரியாது. வீட்டிலிருந்து பத்தாயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு நானும் அவனும் வீட்டை விட்டு ஓடினோம். சென்னை போனா பொலச்சுக்கலாம் என்று யார் சொன்னார்களோ அவன் சென்னை சென்னை என்று குதித்தான். சரி இருவரும் சென்னைக்கு செல்லலாம் என்று முடிவெடுத்தோம்.

இரண்டு நாட்கள் :

இரண்டு நாட்கள் :

இரண்டே நாள் தான் கையிலிருந்து பத்தாயிரம் காலியானது. அதற்கு பிறகு எங்கே செல்வது என்று இருவருக்கும் தெரியவில்லை. ரோட்டில் இருவரும் உட்கார்ந்திருந்தோம். அப்போது ஒரு பெரியவர் எங்களிடம் வந்தார்.

என்னப்பா சின்ன புள்ளைங்களா இருக்கீங்க ரொம்ப நேரமா இங்கேயே உக்காந்திருக்கீங்க வீட்ட விட்டு வந்துட்டீங்களா என்று கேட்டு... வாங்க நான் ஹெல்ப் பண்றேன் என்று அழைத்தார். அந்த நேரத்தில் அவரை நம்புவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

சின்ன பொண்ணு :

சின்ன பொண்ணு :

ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அது வீடு என்பதை விட ஓர் அறை என்று சொல்லலாம் அவ்வளவு தான். பெரிய அறை சுற்றிலும் பழைய பொருட்கள் நிறைந்து கிடந்தது. பேயரைந்தது போல நானும் அவனும் பயந்து கொண்டே அந்த அறையில் உட்கார்ந்தோம். மொதோ சாப்டுங்க என்று சொல்லி பார்சல் வாங்கி கொடுத்தார்.

சாப்ட்டு நான் சொல்ற இடத்துக்கு போங்க உங்களுக்கு வேலை கிடைக்கும். மொதோ வருமானம் பாக்கணும்.. கையில காசு இருந்துட்டா கொஞ்சம் தைரியமா இருக்கலாம் என்றார். அவனும் ம்ம்ம்... கண்டிப்பா சார் என்றான் நம்பிக்கையுடன்.

அவனுக்கு வேலை கிடைத்துவிடும்.தனியாக ஒரு வீடு எடுத்து நானும் அவனும் தங்கலாம் என்று நம்பிக்கையிடன் இருந்தோம். அவருக்கு ஒரு போன் வந்தது. ம்ம்ம்.... ஆமாமா சின்ன பொண்ணு தான் நீங்க சொல்லுங்க வேலைய முடிச்சிடலாம் என்று பேசினார். அறைக்கு வெளியே சென்று அவர் பேசினாலும் உள்ளே உட்கார்ந்திருந்த எங்களுக்கு தெளிவாய் கேட்டது.

வீட்டுக்கு போகணும் :

வீட்டுக்கு போகணும் :

சாப்பிட்டு முடித்ததும் அவனை எங்கோ அனுப்பி வைத்தார். நீ பயப்படாத சார் நம்ம நல்லதுக்கு தான சொல்றாரு வேல கிடச்சா நம்ம சந்தோசமா இருக்கலாம் தானா என்று என்னை சமாதானம் செய்து விட்டுச் சென்றான்.

பாப்பா பேரென்ன? இப்டி வீட்ட விட்டு வர்லாமா? பெத்தவங்கள நினச்சுப் பாத்தியா என்று மெல்ல என் பெற்றோரைப் பற்றியும் அவர்கள் இருக்கும் இடம், அவர்களின் வேலை, பணப்புழக்கம் ஆகியவற்றை கேட்டு தெரிந்து கொண்டான். யாரென்றே தெரியாதவரிடத்தில் இதையெல்லாம் சொல்வதா என்று அப்போது தோன்றவில்லை.

அப்படியே இருப்பதை உளறினேன்.

இடமாற்றம் :

இடமாற்றம் :

சரி வாங்க நம்ம வேற இடத்துக்கு போகணும் அன்று அழைத்தார்.இல்ல அவன் வரட்டும் என்றேன். திட்டமிட்டு அவனையும் என்னையும் பிரிக்கிறார்கள் என்று தெரிந்தது. அவனுக்கு மெஸேஜ் அனுப்பினேன். பேசிவிட்டேன் வேலை கிடைத்துவிடும் வீணாக அவரை சந்தேகப்படாதே என்றான்.

அவர் நம்மக்கு உதவி தான் செய்கிறார் நாம் தான் வீணாக சந்தேகப்படுகிறோமோ என்று தோன்றியது. இப்போது சென்றதும் ஒரு பாழடைந்த வீடு. நான்கைந்து அறைகள் இருந்தது. ஒரு வயதானவரை காண்பித்து. இவரு ஆபிஸ்ல தான் ராஜுக்கு வேல கொடுத்திருக்கு... நல்ல மனுஷன் என்று அறிமுகப்படுத்தினார். வணக்கம் வைத்தேன்.

அவர் சேரில் உட்கார்ந்து கொண்டார். பிரிட்ஜ்ல சரக்கு இருக்கும் எடுத்துட்டு வா... தண்ணி எடுத்துட்டு வா... ஊத்திக் கொடு என்று என்னை வேலை வாங்கினார். அதை செய்வதா மறுப்பதா என்றே தெரியவில்லை. ஐயா அப்ப நான் உத்தரவு வாங்கிக்கவா என்று பணிவுடன் என்னை இங்கே கொண்டு வந்து விட்டவர் கிளம்பிச்சென்றார்.

திட்டம் :

திட்டம் :

ஒண்ணும் பயப்படாத உன்னைய ஒண்ணும் செய்யமாட்டேன் என்றார் அந்த பெரியவர். பயத்தில் அழ ஆரம்பித்தேன்.... அன்று இரவு அப்பாவும் சித்தப்பாவும் வந்து அழைத்துச் சென்றார்கள். என்ன நடக்கிறது அவர்களுக்கு எப்படி நானிருக்கும் இடம் தெரிந்தது என்று எதுவும் புரியவில்லை ராஜு எங்கே காலையில் சென்றவன் இன்று வரை திரும்பவில்லை என்று அவர்களிடம் கேட்டேன்.

பதிலே சொல்லவில்லை. பிறகுதான் இவை நாடகம் என்பதை தெரிந்து கொண்டேன். ராஜுவுக்கும் எங்களுக்கு உதவிய பெரியவருக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்திருக்கிறது. இவை அனைத்தும் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட நாடகம்,. வீணாக நான் மாட்டிக் கொண்டேன். அப்பாவிடம் பத்து லட்சம் பணம் வாங்கி தான் என்னை விடுவித்திருக்கிறார்கள். நாங்கள் வீட்டை விட்டு ஓடிய அன்றைய தினம் காலையே அவனின் பெற்றோர் வீட்டையும் காலி செய்திருந்தார்கள்.

திருமணம் :

திருமணம் :

என்னால் அதை நம்பவே முடியவில்லை..... வீட்ட விட்டு ஓடிப்போனவ தான என்று சொல்லி வீட்டில் உறவினர்கள் மத்தியில் மிகப்பெரிய அவப்பெயர்.. இப்போதும் கூட அவன் என்னை ஏமாற்றியிருக்க மாட்டான். அப்பா தான் பொய் சொல்கிறார். அவனிடமிருந்து என்னைப் பிரிக்க இப்படியெல்லாம் சொல்கிறார் என்று நினைத்துக் கொண்டேன்.

ஆனால் அதன் பிறகு பல மாதங்கள் ஆன போதும் அவனிடமிருந்து எந்த ஒரு தகவலோ போனோ வரவில்லை. வீட்டினர் சொல்வது தான் நிஜமோ என்று தோன்ற ஆரம்பித்தது.

சித்திரவதை :

சித்திரவதை :

விஷயம் தெரிந்து யார் திருமணம் செய்து கொள்வார்... நம்ம வீட்டுப் பொண்ணு தெரியாம தப்பு பண்ணிருச்சு... வேணும்னா கூட 100 பவுன் போட்றேன், மாப்ள பேர்ல ஒரு வீடு எழுதி வைக்கிறேன் என்று பேரம் பேசி என்னை உறவினரின் மகனுக்கே மணமுடித்தார்கள்.

இதில் என்னுடைய சம்மதம் என்று கேட்க என்ன இருக்கிறது அவர்களாக முடிவு செய்தார்கள்...நடத்தி முடித்தார்கள் . ஒரு வாரம் சுமூகமாக சென்றது.அதன் பிறகு ஒவ்வொரு நாளும் ரணகளம் தான். எவன்கூடையோ ஓடிப்போனவ தான... ஒரு வாரம் அவன் கூட என்னப் பண்ண என்று ஒவ்வொரு நாளும் என்னை அடித்து சித்திரவதை செய்ய ஆரம்பித்தான்.

நம்ம பொண்ணு மேலயும் தப்பு இருக்கு தான என்று நியாயம் கற்பிக்க ஒவ்வொரு நாளும் அடியும் உதையுமாய் என் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: relationship love marriage my story
English summary

Life Story Of Girl Who Trafficking By Her Boy Friend

Life Story Of Girl Who Trafficking By Her Boy Friend
Story first published: Thursday, May 17, 2018, 12:21 [IST]
Desktop Bottom Promotion