Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
வெளிநாட்டவர்களை திருமணம் செய்துக் கொண்ட இந்திய நடிகைகள் - டாப் 10!
வெளிநாட்டவர்களை திருமணம் செய்துக் கொண்ட இந்திய நடிகைகள் - டாப் 10!
காதலுக்கு கண்ணில்லை என்பார்கள்... ஆனால், காதலுக்கு ஜாதி, மதம், இனம், நாடு, மொழி என்ற எந்தவொரு எல்லையும், பிரிவும் இல்லை. காதல் காற்று போல, அதை உணர தான் முடியும், காண முடியாது என்பார்களே அது நூறு சதவிதம் உண்மை.
தமிழ் தெரியாத வெளிநாட்டு பெண், நம் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட எளிய ஆண்களை திருமணம் செய்துக் கொண்ட காதல் கதைகளை நாம் செய்திகளில் பலமுறை பார்த்திருக்கிறோம் அல்லவா.
இது எளியவர்களுக்கு மட்டுமல்ல... பிரபலங்களுக்கும் பொருந்தும். இந்திய நடிகைகள் பலர் வெளிநாட்டு ஆண்களை திருமணம் செய்து தங்கள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். அவர்களை பற்றிய ஒரு சிறிய தொகுப்பு....

ராதிகா - ரிச்சர்ட் ஹார்டி!
ராதிகா, பிராதாப் போத்தனுடனான உறவில் இருந்து பிரிந்த பிறகு, ரிச்சர்ட் ஹார்டி எனும் பிரிட்டிஷ் காரரை திருமணம் செய்துக் கொண்டார். ராதிகாவின் முதல் குழந்தையான ரயான் (Rayane) ரிச்சர்ட் ஹார்டி உடனான திருமண பந்தத்தில் பிறந்தவர்.
ஆனால், 1990ல் நடந்த இவர்களது திருமணம் இரண்டே வருடத்தில் முடிவுக்கு வந்தது. ராதிகாக தன் முதல் குழந்தையை பெற்றெடுக்கும் போதே, திருமண உறவில் இருந்து பிரிந்திருந்தார். சிங்கிள் பேரண்டாக இருந்து தன் மகளை வளர்த்து வந்தார் ராதிகா.

பிரியங்கா சோப்ரா - ரிக் ஜோனஸ்!
இந்த பட்டியலில் சமீபத்தில் இணைத்த ஜோய் பி.சி. - ஜோனஸ். அமெரிக்க பாடகரான நிக் ஜோனஸ் மற்றும் பாலிவுட்டின் டேசி கேர்ள் பிரியங்காவும் சர்வதேச அளவில் இப்போது உற்றுநோக்கப்படும் காதல் புறாக்கள். பிரியங்காவை காட்டிலும் பத்து வயது வயதில் இளையவர் நிக். இவர்களது காதலுக்கு வயது ஒரு தடையாக இருக்க வில்லை. சென்ற ஆகஸ்ட் 18ம் தேதி தான் இவர்கள் இருவருக்கும் இந்திய முறையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

செலினா ஜெயிட்லி - பீட்டர் ஹாக்!
முன்னாள் மிஸ் இந்தியாவான செலினா ஜெயிட்லி பாலிவுட்டில் சில படங்களில் நடித்திருக்கிறார். இவர் துபாயை சேர்ந்த ஹோட்டல் தொழிலதிபரான பீட்டர் ஹாக் என்பவரை கடந்த 2011ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இந்த ஜோடிக்கு இரண்டு இரட்டையர் குழந்தைகள் இருக்கின்றன.

டிம்பிள் இனம்தார் - மார்க் வீக்ஸ்!
டிம்பிள் இனம்தார் பாலிவுட்டில் கணிசமான எண்ணிக்கையில் படங்களில் நடித்தவர். இவர் கடந்த 2014ம் ஆண்டு வெளிநாட்டவரான மார்க் வீக்ஸ் எனும் வங்கி நிர்வாகியை திருமணம் செய்துக் கொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு மகள் இருக்கிறாள்.

லிசா ரே - ஜாசன் டெஹ்னி!
லிசா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த மேலாண்மை ஆலோசகரான சாஜன் டெஹ்னி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களது திருமணம் அழகிய இடமான நபா பள்ளத்தாக்கில் நடந்தது.

மது சாப்ரே - கியான் மரியா எமேண்டோத்ரி!
கடந்த 2001ம் ஆண்டில் நடிகை மற்றும் சூப்பர் மாடலான மது, கியான் மரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். கியான் இத்தாலியை சேர்ந்தவர் ஆவார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார்.

ப்ரீத்தி ஜிந்தா - ஜேன் குட் எனஃப்!
ப்ரீத்தி ஜிந்தா ஜேன் குட் எனஃப் என்பவரை திருமணம் கொண்டார். 41 வயதிலான ப்ரீத்தி இவரை திருமணத்திற்கு முன் லாஸ் ஏஞ்சல்ஸில் டேட் செய்து வந்தார். ஆரம்பத்தில் இவர்களது திருமணப் புகைப்படங்கள் பெரிதாக வெளியாகவில்லை. இவர்கள் திருமண படங்களை ஏலத்தில் விட்டு, அதன் மூலம் வரும் பணத்தை ஆதரவற்றோர் இல்லத்திற்கு நன்கொடையாக அளிக்க இவர்கள் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

பர்பி ஜோஷி - வேலன்டினோ பெல்மன்!
டிவி மற்றும் தொலைக்காட்சி நடிகையான பர்பி ஜோஷி வேலன்டினோ பெல்மனை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கண்டார். இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். கடந்த 2014ம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டு வாழ்நாள் உறவில் இணைந்தனர்.

ஸ்வேதா கேச்வாணி - கென் அடினோ!
ஸ்வேதா 2007ம் ஆண்டு அலெக்ஸ் ஓ'நெல் என்பவரை திருமணம் செய்திருந்தார். இவர்களது இல்வாழ்க்கை நான்கு ஆண்டுகளில் முடிவடைய, பிறகு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வந்த கென் அடினோ என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு மகள் இருக்கிறாள்.
Image Source: pinsdaddy

சுசித்ரா பிள்ளை - லார்ஸ் க்ஜெல்ட்சன்!
சுசித்ரா பிள்ளை, லார்ஸ் க்ஜெல்ட்சன் எனும் டானிஷ் நாட்டு என்ஜினியரை காதலித்து 2005ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர்கள் மும்பைக்கு குடி பெயர்ந்தனர். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.



Click it and Unblock the Notifications











