For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் குடித்துவிட்டு வந்து அடிப்பான்... ஆனால், ஒரு நாள் எல்லை மீறி.... - My Story #221

நான் அவனுக்காக அனைத்தையும் உதறிவிட்டு வந்தேன். ஆனால், அவன் என்னை தினமும் அடித்து, சித்திரவதை செய்கிறான் - My Story #221

By Staff
|

நான் தமிழகத்தின் தென் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு மாவட்டத்தை சேர்ந்தவள். எங்கள் ஊரில் இருந்து சென்னைக்கு சென்றவர்களை பட்டியலிட்டு எடுத்துப் பார்த்தால் அவர்கள் அனைவரும் படித்தவர்கள் அல்லது நல்ல நிலையில் செட்டிலானவர்களாக தான் இருப்பார்கள்.

இதை சின்ன வயதில் இருந்தே என் அப்பா கூறி, மனதில் ஆழமாக பதிய வளர்ந்தவள் நான். ஆகையால், சென்னை செல்ல வேண்டும் என்பது எனது வாழ்நாள் லட்சியம். ஒருவேளை இப்படியான லட்சியம் என் மனதில் பதியாமல் இருந்திருந்தால் என் வாழ்க்கை இன்றைக்கு நரகமாக இல்லாது, மகிழ்ச்சி நிறைந்த பூங்காவனமாக இருந்திருக்கும்.

நான் முதன் முதலில் சென்னை சென்றது வேலை கிடைத்து தான். தட்டிதடுமாறு நாலைந்து இன்டர்வியூக்கள் அட்டண்ட் செய்து, நான் எதிர்பார்த்த நல்ல ஊதியம் கிடைத்த வேலையில் பணியமர்ந்தேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புதிய ஊர்!

புதிய ஊர்!

சிறு வயதில் இருந்தே கனவு கண்ட இடமாக இருந்தாலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறங்கிய நொடியில் இருந்தே என் கால்களிலும், மனத்திலும் ஒருவித பதட்டம் தொற்றிக் கொண்டது.

எங்கள் ஊரில் ரோட்டில் பேச்சு சத்தம் கேட்கவே காலை எட்டு மணிக்கு மேலாகும். ஆனால், சென்னை அதிகாலை நான்கு, ஐந்து மணிக்கெல்லாம் செயற்பட துவங்கிவிடும்.

ஹாஸ்டல்!

ஹாஸ்டல்!

ஆரம்பத்தில் ஹாஸ்டலில் தான் இருந்தேன். பிறகு, சில மாதங்களில் என் அலுவலக தோழிகள் இருவருடன் ஒரு வீடு எடுத்து தங்க துவங்கினேன். நான் சென்னையுடன் என்னை பொருத்திக்கொள்ள ஆறு மாதங்களுக்கு மேலானது. அந்த நெரிசல், இரைச்சல், வெயில் என அனைத்தும் மெல்ல, மெல்ல பழகிப் போனது.

மயக்கம்!

மயக்கம்!

என்னுடன் தங்கியிருந்த தோழிகளில் ஒருத்தி வாராவாரம் ஊருக்கு சென்றுவிடுவாள். இன்னொருத்தி ஓரிரு வாரங்களுக்கு ஒருமுறை ஊருக்கு சென்று வருவாள். நான் மட்டுமே மாதத்திற்கு ஒருமுறை சென்று வரும் பழக்கம் கொண்டிருந்தேன். அதுவும் அப்பா, அம்மா திட்டுவார்கள் என்பதற்காக. சென்னை மீதான எனது காதல், கடற்கரை, வணிக கட்டிடங்களுக்கு நான் மயங்கி கிடந்த காலம் அது.

ஒரு நாள்!

ஒரு நாள்!

ஒரு நாள் உடல்நலம் சரியில்லாமல் போனது. உடன் தோழிகள் யாருமில்லை. எனவே, நானாக ஒரு 11 மணியளவில் மெல்ல எழுந்து ஆட்டோ பிடித்து அருகே இருந்த மருத்துவமனைக்கு சென்றேன். அங்கே, அந்த நேரத்தில் பெண் மருத்துவர் யாரும் இல்லாததால், ஆண் மருத்துவர் ஒருவர் என்னை பரிசோதிக்க வருவார் என்று கூறினார்கள்.

அப்போது தான் நான் அவனை முதன் முதலில் கண்டேன்.

மருத்துவன்!

மருத்துவன்!

நான் சென்னையில் முதல் முறையாக உடல் நிலை சரியில்லாமல் போனதும் அன்று தான். மனநிலை சரியில்லாமல் போனதும் என்று தான். அவனை கண்ட உடனேயே ஒரு ஈர்ப்பு. அவன் அந்த வெள்ளை கோர்ட்டை கழற்றி வைத்துவிட்டான் என்றால், அவனை யாரும் மருத்துவன் என்றே கூற மாட்டார்கள். ஒரு மாடல் போல இருப்பான்.

பேசிக் கொண்டோம்...

பேசிக் கொண்டோம்...

பரிசோதனை முடிந்து திரும்பும் போது, ஏதாவது என்றால் என்னை அழையுங்கள் என்றான். வீடு திரும்பியதும், வேண்டும் என்றே சந்தேகம் என்ற பெயரில் அவனுக்கு அழைத்து பேசினேன். நிறைய பேசினோம். நட்பாக தான் ஆரம்பத்தில் பழகினோம். முதல் ஓராண்டு காலம் நட்பாக தான் பயணித்தோம். அது எந்த நிலையில் எங்களுக்குள் காதலாக மாறியது என எனக்கே தெரியவில்லை.

சண்டை!

சண்டை!

நான் அவனை தான் திருமணம் செய்துக் கொள்வேன் என என் பெற்றோரிடம் சண்டை பிடித்தேன். ஊருக்கு செல்லவே மறுத்தேன். ஒருவழியாக என் சந்தோஷம் தான் அவர்கள் சந்தோஷம் என்ற முடிவுக்கு வந்தனர். ஆனால், அப்போது தான்... அவன் என்னிடம் மறைத்த நீண்ட நாள் பொய் ஒன்று உடைப்பட்டது.

அவனுக்கு நான் மட்டுமே காதலி அல்ல. பல பெண்களுடன் உருகி, உருகிப் பேசி வந்தான்.

பிரிவு!

பிரிவு!

பெற்றோரிடம் சண்டை போட்டு கல்யாணத்திற்கு சம்மதம் வாங்கிய நிலையில் நாங்கள் இருவரும் பிரிந்தோம். அம்மா திருமணத்திற்கு முன்பே அறிந்துக் கொண்டாய் அல்லவா? இப்போதாவது புரிந்துக் கொள் என்று அறிவுரை கூறினாள். ஆனால், அவனை மறப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. நான் என் பெற்றோர் மற்றும் சென்னைக்கு அடுத்து அதிகம் நேசித்தது அவனை தான்.

ஓராண்டு காலம்!

ஓராண்டு காலம்!

அவனது பிரிவை கடந்து வாழ்ந்த காலம் கொடியதாக இருந்தது. நிறைய நாள் அழுது தீர்த்தேன். அவன் மீண்டும் என் வாழ்வில் வருவானா என்ற ஏக்கம் ஒருபுறம்.

ஒருநாள் தெரியாத எண்ணில் இருந்து, மீண்டும், மீண்டும் அழைப்பு வந்துக் கொண்டே இருந்தது. முதலில் என் தோழி தான் எடுத்து பேசினாள். அவன் என்று அறிந்ததும் போனை வெடுக்கென பிடுங்கி அழுதுக் கொண்டே பேசத் துவங்கினேன். நான் முன்பு மாதிரி இல்லை. நான் உன்னை நிறையவே மிஸ் செய்கிறேன். கல்யாணம் செய்துக் கொள்ளலாமா என்றான்.

சம்மதம்!

சம்மதம்!

நள்ளிரவு வரை நீண்ட அந்த அழைப்பின் முடிவில் திருமணத்திற்கு சம்மதம் கூறினேன். அடுத்த வாரமே கோவிலில் வைத்து திருமணம் செய்துக் கொண்டோம். எங்களுக்கு இப்படி ஒரு திருமணம் நடந்தது யாருக்கும் தெரியாது. நண்பர்கள் சிலர் மட்டுமே அறிவார்கள்.

ஏற்கனவே பிரச்சனையால் பிரிந்திவிட்டோம் என்பதால், மீண்டும் பெற்றோரிடம் இருந்து சம்மதம் கிடைக்காது என்ற எண்ணத்தால், சில காலம் கழித்து வீட்டில் சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்தோம்.

மகிழ்ச்சியான நாட்கள்!

மகிழ்ச்சியான நாட்கள்!

அவனுடன் எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று கற்பனை, கனவு செய்து வைத்திருந்தேனோ... அப்படி எல்லாம் வாழ்ந்தோம். நாங்கள் ஹனிமூன் என்று எங்கும் செல்லவில்லை. எங்கள் வீடு தான் எங்களுக்கு எல்லாமே. ஆனால், என் கனவுகளை தாண்டிய சில விஷயங்களும் ஆறே மாதத்தில் நடக்க துவங்கின.

காரணமே இல்லாமல் குடிக்க துவங்கினான், புகைக்க துவங்கினான். என்னிடம் பேச மறுத்தான். சில நாள் போதையில் என்னை அடிக்கவும் செய்தான்.

நரகம்!

நரகம்!

தினமும் அவன் குடிப்பதும், அவனிடம் நான் அடி வாங்குவதும் அன்றாட வாழ்க்கையாக மாறியது. அவன் ஏன் இப்படி ஆனான் என்று அறிய முடியவில்லை. இதுக்குறித்து வீட்டிலும் கூற இயலாத நிலை.

ஒரு நாள் போதையில் என்னை சுவற்றில் முகம் பார்க்கும் முழு கண்ணாடியில் தள்ளி, முகத்தை வைத்து முட்டினான். ஒரு பக்கம் முகம் வீக்கம் அடைந்தது. ஏறத்தாழ ஒரு மாத காலம் மருத்துவமனையில் இருந்தேன்.

மீண்டும்...

மீண்டும்...

மீண்டும் என்னைவிட்டு சென்றான். இம்முறை முழுமையாக. எங்கள் திருமணம் எப்படி யாருக்கும் தெரியாமல் நடந்ததோ, அப்படியே விவாகரத்தும் நடந்தது. அவன் என்னை விட்டு சென்றாலும், அவன் நினைவுகள், அவன் செய்த கொடுமைகள் மட்டும் என் மனதைவிட்டு செல்லவில்லை.

நான் தனிமையில் இருந்த நாட்கள் எல்லாம் அழுதே தீர்த்தேன்.

நண்பன்!

நண்பன்!

என் அலுவலக நண்பன் ஒருவன் தான் ஆறுதல் கூறி என்னை அந்த பழைய நினைவுகளில் இருந்து வெளியே கொண்டு வந்தான். அவனது உண்மையான அன்பும், அறிவுரையும் தான் வாழ்க்கை எத்தகையது என்பதை உணர செய்தது.

நான் உணர்ந்தது இரண்டே விஷயம் தான். உங்கள் வாழ்வில் எக்காரணம் கொண்டும் யாரையும் குருட்டுத்தனமாக நம்பாதீர்கள். உங்கள் பெற்றோரை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள். அவர்களுக்கு தெரியாமல் எதையும் செய்யாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

I Left Everything for Love. And He is Abusing and Beating Me Everyday!

I Left Everything for Love. And He is Abusing and Beating Me Everyday!
Desktop Bottom Promotion