For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நான் விர்ஜின் இல்லன்னு தெரிஞ்சும் என்ன காதலிக்கிற அன்பான கணவர் - My Story #202

நான் விர்ஜின் இல்லன்னு தெரிஞ்சும் என்ன காதலிக்கிற அன்பான கணவர் - My Story #202

By Staff
|

என் அப்பா - அம்மாவுக்கு கல்யாணம் ஆகுறதுக்கு அஞ்சு மாசத்துக்கு முன்னாடியே நான் பிறந்துட்டேன். அவங்க ரெண்டு பேருமே வேறவேற மதம்ங்கிற ஒரே காரணத்தால ரெண்டு வீட்டுலயும் அவங்க காதல் ஏத்துக்கல. அதனால, வேற வழி இல்லாம அப்பா, அம்மா வீட்ட விட்டு, ஊரவிட்டு வேற ஊருக்கு பிழைப்பு தேடி போக வேண்டிய கட்டாயம். நான் பிறந்த பிறகு தான் கல்யாணமே பண்ணிக்கிட்டாங்க.

ஒரு கட்டத்துல்ல தன்னோட அப்பாவ இம்ப்ரஸ் பண்ண அம்மாவ மதம் மாத்தினாரு அப்பா. ஆனாலும், தாத்தாவோட அந்த கோபம் முழுசா குறையில. அதனால சொத்துல இருந்து பங்கும் கிடைக்கலம, தாத்தாக்கிட்ட இருந்த எந்த உதவியும் கிடைக்கல. இது மாதிரி சில காரணங்களால கிடைக்கிற வேலைய பார்த்துட்டு அக்கம்பக்கத்து ஊருக்கு வீடு மாறிக்கிட்டே இருந்தோம்.

இப்போ எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு... 25 வயசாகுது... இது தான் நான் கடந்து வந்த என்னோட வாழ்க்கை பாதை...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அப்பாவின் எண்ணம்...

அப்பாவின் எண்ணம்...

என் குழந்தை பருவத்தில்...

அப்பாவுக்கு தாத்தாவோட சொத்து வேணும், அவரோட உதவி வேணும், ஏன்னா, இப்ப அவரு பாக்குற வேலையில வர சம்பாத்தியம் குடும்பத்துக்கு போதாது. வர பணம் சாப்பாடு, வாடகை, படிப்பு செலவுக்கு சரியா போயிடும். அதனால், என்னெல்லாம் செஞ்சு தாத்தாவோட மனச குளிர வைக்க முடியுமோ அதெல்லாம் பண்ணினார். அவருக்கு காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்ட அம்மாவவிட, சொந்த மகள விட சொந்தக்காரங்க, சொத்து தான் முக்கியம்.

பதின் வயது!

பதின் வயது!

என்னோட ஸ்கூல் லைப் அவ்வளோ சிறப்பா அமையல. ஃபிரெண்ட்ஷிப்ன்னு கூட எந்த ஒரு பையன் கூட பேச முடியாது. எங்கே நான் ஏதாவது காதல், கீதல் பண்ணி தாத்தா கிட்ட நிரந்திர கெட்ட பேரு வாங்கிடுவேனோன்னு அவருக்கு பயம். திருடனோட பார்வை எல்லாரையும் திருடனாவே பார்க்க வைக்கும்ங்கிற மாதிரி. அவரு பண்ணது தப்புங்கிறதுனால, நானும் அப்படியே பண்ணிடுவேன்னு அவருக்கு ரொம்பவே பயம்.

காலேஜ் லைப்!

காலேஜ் லைப்!

என்னோட லைப்ல காலேஜ் நாட்கள மறக்கவே முடியாது. நான் சந்தோஷமா எனக்கு பிடிச்ச மாதிரி வாழ்ந்த நாட்கள் அது மட்டும் தான். அதுக்கு முன்னாடி வாழ்ந்த நாட்கள் கொடுமைன்னா, காலேஜ் முடித்த ரெண்டு வருஷத்துல நான் வாழ்ந்த, வாழ்ந்துட்டு இருக்க நாட்கள் நரக கொடுமை.

காலேஜ் படிக்கும் போது நிறைய பசங்க மேல க்ரஷ் இருந்துச்சு. ஆனா, எதுவுமே காதலா மாறல. என்னோட பிரண்ட்ஷிப் சர்க்கிள்ல இருந்த ஒரு பிரெண்ட் கூட லவ் பிரபோஸ் பண்ணான். ஆனா, அது காதலா மாறல.

ஜூனியர்!

ஜூனியர்!

ஆனா, காலேஜ் லைப்ல எனக்கும் ஒரு லவ் ஸ்டோரி இருந்துச்சு. அவன் வேற மதம்ங்கிறது என்னோட குடும்பத்துக்கு ஒரு பிரச்சனை. அவன் என்னைவிட ரெண்டு வயது சின்னவன்ங்கிறது என்ன சுத்தி இருக்கிற சமூகத்துக்கு ஒரு பிரச்சனையா இருந்துச்சு.

என்ன இருந்தா என்னன்னு நானும் அவனும் லவ் பண்ண ஆரம்பிச்சோம். அவன் என்கூட நிறைய நேரம் ஸ்பென்ட் பண்ணான். என்ன முழுசா புரிஞ்சுக்கிட்டான். எங்களுக்குள்ள இருந்த புரிதல், எவ்வளோ பெரிய சண்டை வந்தாலும், உடனே சாரி கேட்க வெச்சிடும். நானோ, அவனோ, யாரோ ஒருத்தர் முதல முன்வந்து சாரி கேட்டு மறுபடியும் பேச ஆரம்பிச்சிடுவோம்.

 வேலை கிடைச்சது!

வேலை கிடைச்சது!

எனக்கு ஒரு நல்ல வேலை கிடைச்சது. திரும்ப என்னோட அப்பா - அம்மாவோட சேர்ந்து வாழ வேண்டிய கட்டாயம். நான் தினமும் வீட்டுல நிறைய நேரம் யாரோ கூட பேசுறேன்னு அப்பாவுக்கு டவுட்டு அதுக்கு அம்மாவ போட்டு அடிக்க ஆரம்பிச்சாரு. இத தவிர்க்க நான் ஆபீஸ்ல ஓவர் டைம்ன்னு சொல்லி அங்கேயே அவன் கூட ஃப்ரீயா பேச ஆரம்பிச்சேன்.

ஒரு கட்டத்துல்ல நான் லவ் பண்றேன்னு அப்பாவுக்கு சந்தேகம் வலுக்க ஆரம்பிச்சது. உடனே எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கவும், அவரோட அப்பா, சொந்தக்காரங்க மத்தியில நல்ல பேரு வாங்கவும் மாப்புள தேட ஆரம்பிச்சாரு.

அவனுக்கும் வேலை...

அவனுக்கும் வேலை...

சரியா இதெல்லாம் நடக்குறதுக்கு நடுவுல, அவனுக்கும் படிப்பு முடிச்சு வேலை கிடைச்சது. நாங்க ரெண்டு பேரும் கிட்டத்தட்ட செட்டில்டு ஜாப்ல இருந்தோம். ஒரு நாள் அவன கூட்டிட்டு வந்து என் அப்பா - அம்மா கிட்ட பேச வைக்கலாம்ன்னு தோனுச்சு. அவன் கிட்ட சொன்னேன். அவனும் ஓகே சொன்னான். எப்படியும் சண்டை வரும்ன்னு தெரியும். ஆனா, அந்த சண்டை நான் எதிர்பார்க்காத நபர்கிட்ட இருந்து வந்துச்சு.

ஒரு நாள்..

ஒரு நாள்..

வீட்டுல அடுத்தடுத்து வரன் காண்பிச்சுட்டே இருந்த சமயத்துல தான் அவன என் வீட்டுக்கு கூட்டிட்டு போனேன்.

அப்பா அவன் கிட்ட என்ன கல்யாணம் பண்ணிக்க விருப்பமான்னு கேட்டாரு. அவன் இல்லன்னு சொன்னான். என் வாழ்க்கையில என்ன பாதிச்ச பேரதிர்ச்சி அந்த நேரத்துல அவன் சொன்ன பதில். என்னோட ஒட்டுமொத்த கோபத்தையும் எப்படி வெளிப்படுத்துறதுன்னு தெரியாம, அவன் கன்னத்துல ஓங்கி அரஞ்சுட்டு போயிட்டேன்.

மாப்பிளை!

மாப்பிளை!

நான் மனசார காதலிச்ச ஒருத்தனும் என்ன ஏமாத்திட்டான். அத நான் ஏத்துக்கிட்டாலும், என்னோட மனசு ஏத்துக்கல.

அதுக்கப்பறம் கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்ல என்கிட்டே காரணம் இல்ல. ஒருசில மாசம் கழிச்சு அப்பா என்கிட்டே ரொம்ப நல்ல படியா பேசி கல்யாணத்துக்கு சம்மதிக்க வெச்சார். அப்பா - அம்மாக்கு பிடிச்ச... உறவுக்காரங்க எல்லாருக்கும் பிடிச்ச மாதிரியான ஒரு மாப்பிளைய பார்த்தாங்க.

நிச்சயம்!

நிச்சயம்!

ஆனா, நான் ஏமார்ந்த வரைக்கும் போதும், நான் இன்னொருத்தர ஏமார்த்த மனசு ஒத்துக்கல.

நிச்சயம் நடக்குறதுக்கு முன்னாடியே என்னோட எக்ஸ் காதல் மற்றும் எங்களுக்குள்ள நடந்த விஷயம் பத்தி எல்லாம் அவர்கிட்ட சாடைமாடையா சொன்னேன். அவர் என்ன மட்டுமில்லாம, என்னோட முன்னாள் வாழ்க்கையையும் சேர்த்து எத்துக்கிறேன்னு சொன்னாரு. ஆனாலுமே கூட அவர கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கு ஒரு சஞ்சலம் இருந்துச்சு.

கல்யாணம்!

கல்யாணம்!

ஒரு நல்ல நாள் பார்த்து, அப்பா, அம்மா, தாத்தாவோட ஆசிர்வாதத்தோட என்னோட கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது.

ஆரம்ப நாட்கள்ல ஏதேதோ காரணம் சொல்லி எங்களுக்குள்ள தாம்பத்தியம் நடக்காம பார்த்துக்கிட்டேன். ஆனா, ஒன்னு ரெண்டு மாசத்துக்கு அப்பறம் அத தள்ளிப்போட முடியாத நிலை.

அச்சம்!

அச்சம்!

ஒருவேளை எங்க ரெண்டு பேருக்கும் மத்தியில தாம்பத்தியம் நடந்தா... நான் ஏற்கனவே கன்னித்தன்மை இழந்தவள்ன்னு அவரு கண்டுப்பிடிச்சுடுவாருங்கிற அச்சம் எனக்குள்ள அதிகமா இருந்துச்சு.

எங்களுக்குள்ள அது நடந்த பிறகு அவர் நிச்சயம் அத உணர்ந்திருக்கலாம். ஆனா, அதுகுறித்து அவரு எந்த கேள்வியும் கேட்கல. என்ன ஒருநாள் கூட மனசு நோகுற மாதிரி அவர் பேசினதே இல்லை.

செலவு!

செலவு!

நான் கைநிறைய சம்பாதிக்கிறேன். ஆனால், எனக்கான எல்லா செலவும் அவரு தான் செய்யிராரு. என்னோட சம்பளம் முழுக்க வங்கி கணக்குல அப்படியே தான் இருக்கும்.

இவரோட காதலுக்கு, அன்புக்கு நான் ஏற்றவளான்னு எனக்கு தெரியில... பேசமா அவரைவிட்டு பிரிஞ்சிடலாம். விவாகரத்து பண்ணிடலாம்ன்னு தோணும். அவருக்கு ஏற்ற நல்ல பொண்ணோட அவரோட வாழ்க்கை அமையட்டும்ன்னு உள்மனசு சொல்லும்.

சில வேலைகள்...

சில வேலைகள்...

சில சமயம் அவர்கிட்ட நேரடியாவே இது பத்தி பேசியிருக்கேன். ஆனாலும், அவரு என்ன முழு அன்போட ஏத்துக்கிட்டார்.

எனக்கான உண்மையான காதல் இதுதானான்னு தெரியல... ஆனா, இதவிட ஒரு சிறந்த காதல் இனி என்னோட வாழ்க்கையில இல்ல அடுத்த எந்த ஜென்மத்துலயும் கிடைக்காதுன்னு மட்டும் தெரிஞ்சுக்கிட்டேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

My Father Always Says, I Born for Their Sin. This is my Fate Love Story!

My Father Always Says, I Born for Their Sin. This is my Fate Love Story. But, I'm myself a sin for my own life.
Desktop Bottom Promotion