For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதலைப் பிரிக்க நினைத்த தோழி செய்த அதிர்ச்சி செயல்! my story #266

தன்னுடைய காதலன் தன்னை ஏமாற்றி தன் தோழியையே திருமணம் செய்து கொண்ட சம்பவத்தை பெண்ணொருத்தி சொல்கிறார். அந்த கடிதத்திலிருந்து

|

முதன் முதலாக காதலை உணரும் போது யாரிடம் சொல்வீர்கள்? நண்பர்களைத் தாண்டி வேறு யாரையும் யோசிக்கக்கூட முடியவில்லை தானே... இதுவரை கேள்விப்பட்ட பார்த்த காதல்களில் எல்லாம் நண்பர்கள் தான் இந்த காதலை ஜெயிக்க வைக்கிற , மனஸ்தாபங்கள் ஏற்படும் போதெல்லாம் இருவரை சேர்த்து வைக்கிற நபர்களாய் இருந்திருக்கிறார்கள்.

அது குறித்து ஏகப்பட்ட கேலிகள், கிண்டல்கள் வந்தாலுமே.... அந்த நண்பர் என்ற உறவு என்பது மிகவும அவசியமானது என்பது மெல்லப் புரியும். நட்பு காதலுக்கு துணையாய் மட்டுமல்ல நம் காதலை பிரிக்கவும் செய்யும் என்பது பிற்பாடு தான் தெரிந்தது. காதல் பிரிந்தது ஒரு பக்கம் என்றால் அதுவரை நேரமும் உடனிருந்த தோழியின் துரோகத்தை என்னவென்று சொல்வது? அதைத் தான் இன்றும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

பத்தாம் வகுப்பிற்கு பிறகு க்ரூப் பிரித்த போது நாங்கள் இருவரும் ஒரே வகுப்பறைக்கு மாறினோம். அதற்கு முன்பாக ஒரே பள்ளியென்றாலும் வேறு வேறு பிரிவு என்பதால் அதிகமாக பேசிக் கொண்டதில்லை ஏன் பார்த்துக் கொண்டதுமில்லை.

ஒரே வகுப்பறை என்றானதும் எதார்த்தமாக பேச இருவரின் எண்ண அலைகள் ஒரே மாதிரியாய் இருப்பதை உணர்ந்து இருவரும் நெருங்கிய தோழிகளாகிவிட்டோம்.

#2

#2

எங்கள் வகுப்பறைக்கு வரும் ஆசிரியர்கள் முதற்கொண்டு எல்லாருக்கும் எங்களின் நட்பு பரிச்சயம். என்ன இன்னக்கி அதிசயமா ரெண்டு தனித்தனியா உக்காந்திருக்கீங்க என்று சொல்லி, நாங்களே தனித்தனியாக உட்கார்ந்திருந்தாலும் சேர்த்து உட்கார வைத்து விடுவார்கள்.

அவள் எதாவது கேட்க வேண்டும் என்றால் என்னை விட்டு சொல்ல வைப்பார்கள் அதே போல என்னிடம் எதாவது சொல்ல வேண்டும் நான் கேட்க மாட்டேன் என்று தெரிந்தால் அவளை விட்டு சொல்ல வைப்பார்கள். ஏனோ அப்படியே பழகிவிட்டது.

#3

#3

இரண்டு வருட உறவு மிக நெருக்கமானது. விட்டுப் பிரிய மனமில்லை அதனால் தோழிகளாக நாங்கள் ஐந்து பேர் ஒரே கல்லூரியில் சேர்ந்தோம். நாங்களிருவர் எங்களுடன் இன்னும் மூன்று பேராக நுழைந்த முதலாமாண்டு கல்லூரி நாள் இன்றும் பசுமையாய் நினைவில் நிற்கிறது.

எங்களுக்கு சீனியர்கள் நடத்திய வெல்கம் பார்ட்டி, கேம்பஸ் ரவுண்ட் அப் என செம்ம ஜாலியாக இருந்தது.

#4

#4

முதலாம் செமஸ்டர் முடிவில் தான் நாங்கள் வகுப்பில் இருக்கும் பிற மாணவர்களுடன் சகஜமாக பேச பழக ஆரம்பித்தோம். என் வகுப்பறையில் உடன் படித்த மாணவன் ஒருவன் குறுஞ்செய்தி வழியாக பேச ஆரம்பித்தான்.

முதலில் யாரென்று தெரியாமல் கேட்க ஆரம்பித்து, விவாதமாக மாறியிருந்தது.

#5

#5

மறுநாள் நான் தான் நேற்று மெசேஜ் அனுப்பினேன் ஒரு டவுட் கேக்கலாம்னு என்று சொன்னான்... என்னங்க புது நம்பர்ல மெசேஜ் வந்தா உடனே இப்டியா?? ஒரு செக்கண்ட் பயந்துட்டேன் என்றான்.

எனக்கும் கொஞ்சம் அவமானமாய் தான் இருந்தது, சாரி... கொஞ்சம் டென்சனா இருந்தேன் அதான் என்று சமாளித்தேன். தயவு செஞ்சு நம் க்ளாஸ் ஸ்டூடன்ஸ் நேம் எல்லாம் சேவ் பண்ணிக்கோங்க என்றான்.

#6

#6

அடிக்கடி போனில் பேச ஆரம்பித்தோம். தோழிக்கும் அவன் அறிமுகமானான் மூன்று பேரும் சேர்ந்து திரையரங்கம், ஹோட்டல் என்று சுற்ற ஆரம்பித்தோம். பெரிதாக மனஸ்தாபம் என்று எதுவும் அப்போது எங்களுக்குள் எழவில்லை.

அவள் தான் எங்களிருவரையும் சேர்த்து ஓட்ட ஆரம்பித்தாள். அதெல்லாம் ஒன்றுமில்லை என்று தவிர்த்துவிடுவேன்.

#7

#7

கடைசி செமஸ்டருக்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கும் போது என்னிடம் தனியாக பேச வேண்டும் என்று அழைத்தான். நானும் தோழியும் செல்ல.... எதுவுமே சொல்லாமல் சும்மாதான் கூப்டேன் இன்னொரு நாள் பேசலாம்.... திடீர்னு ஃபிரண்ட் கூப்டான் சாரி.... கிளம்பணும் என்று சொல்லி சென்றுவிட்டான்.

அன்று இரவு போன் செய்து.... உன்கிட்ட பேசணும்னு வர சொன்னா எதுக்கு அவள கூட்டிட்டு வர்ற? என்றான்... இது என்ன கேள்வி எப்பவும் என்கூட தான வருவா... இப்ப மட்டும் நீ வராத அவன் என்னைய மட்டும் கூப்டான் நான் போறேன் எப்டி வர்றது என்றேன்.

#8

#8

சரி நாளைக்கு காலேஜுக்கு எட்டு மணிக்கு வா.... என்றான். அவ்ளோ சீக்கிரமாவா. பத்து மணி காலேஜுக்கு.... என்று இழுக்கும் போதே ஒரு நாள் தான? இன்னும் மூணு மாசம் கழிச்சு இந்த காலேஜ் பக்கமே வர முடியாது நியாபகம் இருக்குள்ள.. நீ மட்டும் வா. புரிஞ்சதா? வீட்டுல இருந்து தான வர்ற அவ கூட ஒட்டிக்கிட்டு தான் வருவேன்னு வந்து நிக்காத என்றான் சற்றே எரிச்சலாய்.

சரி என்று சொல்லி வைத்து விட்டேன்.

 #9

#9

மறுநாள் எட்டரை மணிக்கு சென்றேன். கேண்டீன் மூடியிருந்தது அதன் வாசலில் உட்கார்ந்திருந்தான். சாரி லேட் ஆச்சு எட்டு மணிக்கு வந்துட்டியா என்று அவனருகில் சென்றேன். ஏழு மணிக்கே வந்துட்டேன் என்றவன் எழுந்து நின்று எனக்கு எதிர்ப்பக்கமாக திரும்பிக் கொண்டான்.

சரி சொல்லு.... ஏன் இவ்ளோ சீக்கிரம் வர சொன்ன? என்றேன்.... இன்னும் என் பக்கம் திரும்பவில்லை. பாக்கெட்டில் கைவிடுவது, பின்னந்தலையை தேய்ப்பதுமாய் எதேதோ செய்து கொண்டிருந்தான்.

#10

#10

எக்ஸாம் டென்ஷனா? ப்ராஜெக்ட் க்ளியர் தான.... என்று நானாகவே யூகித்து கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தேன். எல்லாவற்றிற்கும் ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னவன். ஒரு கட்டத்தில் கடுப்பாக ஒரு நிமிஷம் அமைதியா இருக்கியா?

வந்ததுல இருந்து பட படன்னு பேசிட்டே இருக்க... ஒரு நிமிஷம் யோசிக்க விடு என்றான்.

#11

#11

அவ்ளோ அதிகமாவா பேசிட்டோம் என்று நினைத்துக் கொண்டு அமைதியாக நின்றேன். ஐந்து நிமிடங்கள் எதுவும் பேசவில்லை. அவன் இப்போது என்னை விட்டு விலகி நடக்க ஆரம்பித்தான். அடேய் இது என்னடா.... என்று மனதில் நினைத்துக் கொண்டு அவனையே பார்த்தேன்.

இப்போது மெல்ல அங்குமிங்குமாய் நடந்தான். சரி இது சரிபட்டு வராது என்று நினைத்துக் கொண்டு, நான் அங்க எண்ட்ரன்ஸ் படில உக்காந்திருக்கேன் நீ யோசிச்சுட்டு அங்க வா சரியா என்று கிளம்பினேன்.

#12

#12

ஏய் நில்லு.... என்றவன் பின் என்ன நினைத்தானோ சரி அங்க உக்காந்திரு நான் வரேன் என்றான். ஒன்பதே கால் மணி கிரவுண்டில் இருந்த மாணவர்கள் எல்லாம் கிளம்ப ஆரம்பித்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாய் மாணவர்கள் கல்லூரிக்கு வர ஆரம்பித்தார்கள்.

ஹெட்போனை மாட்டிக் கொண்டு பாட்டுக் கேட்டுக் கொண்டே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். வந்தான்.... உக்காரு யோசிச்சு முடிச்சிட்டியா இதுக்கு என்னைய ஒன்பது மணிக்கே வர சொல்லியிருக்கலாம்.... நான் அரக்க பரக்க எந்திருச்சு கிளம்பி வந்தேன்.

#13

#13

நான் ஒண்ணு கேப்பேன் யார்கிட்டயும் கேக்காம, நீ மட்டுமே யோசிச்சு சொல்லு இப்பவே... என்று நிறுத்தினான். சரி கேளு என்று சொல்லி ஹெட்போனை எடுத்து பேகின் ஜிப்பில் திணித்தேன்.

அவனைப் பற்றிய சில கேள்விகளை கேட்டு பின் என்னைய உனக்குப் பிடிக்குமா என்றான். ம்ம்ம்... பிடிக்குமே என்று சொன்னதும் அப்போ கல்யாணம் பண்ணிக்கிறியா என்றான். அவன் சொல்லி அரை நிமிடம் கூட முடிந்திருக்காது சம்மதம் சொல்லிவிட்டேன்.

#14

#14

கல்லூரி முடியும் எங்கள் காதல் யாருக்கும் தெரியவில்லை நானும் தோழிக்கு சொல்லிக் கொள்ளவில்லை. அவனுக்கு முதலில் வேலை கிடைத்தது. பின் அடுத்த இரண்டு மாதங்களில் அவளுக்கும் அடுத்த ஆறு மாதத்தில் எனக்கும் வேலை கிடைத்தது.

மூவரும் சென்னை. ஆனால் வெவ்வேறு நிறுவனம் முதலில் தனித்தனி ஹாஸ்டலில் தங்கியிருந்தோம் பின் ஒரே ஹாஸ்டலுக்கு மாறினோம்.

 #15

#15

இனியும் சொல்லவில்லை என்றால் தப்பு என்று நினைத்து அவளிடம் எங்கள் காதலைப் பற்றி சொன்னேன் இவ்வளவு நாளாக ஏன் சொல்லவில்லை என்று முதலில் கோபித்துக் கொண்டவள் பின் தான் ஆரம்பத்தில் சொன்னது நிஜமாகிவிட்டது நான் சொன்னது தான் சரி என்று சகஜமாகிவிட்டாள்.

ஆனால் அதுவரை அவளுக்கு உயிர்தோழியாய் இருந்துவிட்டு திடீரென்று அவளுக்கு தருகிற முக்கியத்துவம் வேறுஒருவருக்கு கொடுப்பது அவளுக்கு பிடிக்கவில்லை.

 #16

#16

நிறைய சண்டை போட ஆரம்பித்தாள். மெசேஜ் அனுப்ப சற்று தாமதமானாலும் என்னைய அவாய்ட் பண்ற, நான் உனக்கு வேண்டாம்ல புதுசா ஒருத்தன் கிடச்சதும் என்னைய கலட்டி விடுறியா என்று சண்டை பிடிக்க ஆரம்பித்தாள்.

யார் பக்கம் நிற்பது என்று தெரியாது தவித்துக் கொண்டிருந்த நேரமது. அலுவலகம் முடிந்து தாமதமாக வந்தால் கூட சண்டை போட ஆரம்பித்தால் ஓவர் பொசசிவ்னெஸ் கொஞ்சம் கொஞ்சம் என் மீது கோபத்தை அவளுக்கு உருவாக்கியது.

#17

#17

ஒரு நாள் எனக்கு அலுவலகத்திலேயே தங்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள் அங்கேயே தங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி ஹாஸ்டல் காலி செய்து சென்று விட்டாள். நான் எவ்வளவோ தடுத்தும் அவள் கேட்கவில்லை.

மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன். எதோ தவறு செய்து விட்டதைப் போன்ற உணர்வு நம்ம லவ் பண்ணியிருக்க கூடாது. இவ்ளோ வருஷம் பிரண்ட்ஷிப்புக்கு துரோகம் பண்ணிட்டோம் என்று நினைத்து வருத்தப்பட்டேன். எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருந்தேன். அவனிடம் சொல்லலாம் என்றால் என்ன சும்மா அவளப்பத்தியே பேசிட்டு என்று சொல்வான்.

#18

#18

அவளைப் பிரிந்த குற்றவுணர்வில் அவனிடம் பேசுவதை தவிர்த்தேன். காரணத்தை கேட்ட போதெல்லாம்... அதெல்லாம் ஒண்ணுமில்ல நான் நல்லாத்தான் இருக்கேன் என்று சமாளித்தேன். காதலை ஏற்றுக் கொள்ளும் போது ஒரு நிமிடத்திற்கும் குறைவாக யோசித்த நான் இப்போது மாதக்கணக்கில் யோசித்துக் கொண்டிருந்தேன். நட்புக்கும் காதலுக்கும் இடையில் சிக்கி தவித்த எனக்கு அப்போது ஆறுதல் சொல்ல யாரும் வரவில்லை.

மூன்று மாதங்கள் ஓடியது. எங்கள் இருவருக்குமிடையில் பேச்சுவார்த்தை குறைந்துவிட்டது. நான் எதுவும் முகம் கொடுத்து பேசுவதில்லை என்று சொல்லி என்னிடம் கேட்பதையே.... இல்லை இல்லை பேசுவதையே விட்டுவிட்டான். உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நான் எதுக்குன்னு தான் ரூம் காலி பண்ணேன் என்று சொன்னவள் என் எண்ணை ப்ளாக் செய்திருந்தாள்.

சில ஆண்டுகள் கழித்து கல்லூரி நண்பர்கள் மூலமாக என் தோழியும் காதலனும் பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக கேள்விப்பட்டேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Girl Shares her Story Whose Lover Cheat and marries her friend

Girl Shares her Story Whose Lover Cheat and marries her friend
Story first published: Tuesday, June 12, 2018, 15:58 [IST]
Desktop Bottom Promotion