For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதலித்த மகளை பழிவாங்க 20 வருடம் காத்திருந்த பெற்றோர்! My Story#190

காதல் திருமணம் செய்து கொண்ட மகளை பழிவாங்க இருபது வருடங்களுக்கு பிறகு கொலை செய்த கொடூரம்.

|

ஊரில் எங்கள் பாட்டிக்கு வீட்டிற்கு அருகில் தான் அவனுடைய வீடும் இருந்தது. ஊரில் இருப்பவர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம், எல்லாரும் ஒரே வீட்டினர் போல உறவு முறை சொல்லிதானே அழைத்துக் கொள்வார்கள். அவனும் எங்கள் வீட்டிற்கு மிக அருகில் என்பதால் எங்கள் வீட்டின் சமையலறை வரும் வரையில் அனுமதி பெற்றிருந்தான். பாட்டியிடம் வந்து காசு வாங்கிச் செல்வது, அம்மாவிடம் வந்து வேர்கடலை அவிச்சுத்தாங்க என்று உரிமையுடன் கேட்டு வாங்கி செல்வான்.

பாட்டி வீட்டில் அவனுக்கும் எங்களைப் போலவே சம உரிமை கொடுக்கப்படுவது எனக்கும் என் பெரியப்பா சித்தப்பா பசங்களுக்கும் பிடிக்காது. அவனை விளையாட்டிலேயே சேர்த்துக் கொள்ளவோ மாட்டோம்.

Father Kills Their Daughter And Family

அவனும் அசராமல் எங்களை வம்பிழுத்துக் கொண்டேயிருப்பான். அவனைக் கண்டாலே எனக்கு பிடிக்காது. பிறருக்கும் அவனுக்கும் சண்டை வருவதை விட எனக்கும் அவனுக்கும் தான் சண்டை வரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பத்தாம் வகுப்பு :

பத்தாம் வகுப்பு :

பத்தாம் வகுப்பு தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது, நாங்கள் எல்லாம் ஒன்றாக படித்துக் கொண்டிருந்தோம். இரவு அவர்கள் ஊருக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்கள். நாளைக்கு பரிட்சைய வச்சிட்டு எங்க போறீங்க? அம்மா கேட்டார்....

இல்லக்கா அப்பாக்கு அங்க இழுத்துட்டு கிடக்குதுன்னு போன் வந்துச்சு அதான் கிளம்பி போறோம்... பரிட்சை இருக்குன்னு வரமாட்டேன்னு அடம் பிடிச்சு அழறான் என்று ரவியை காண்பித்தார்.

நீ வேணா இங்க வந்து இருந்துக்கு ஒரு வாரம் தான எக்ஸாம் அத முடிச்சுட்டு இவங்க அப்பாவ வந்து விட சொல்றேன்... பாவம் படிக்கிற பையன்.

 இருக்கியா டா :

இருக்கியா டா :

ச்சை.... இந்தம்மா சும்மாவே இருக்காது. ஏன் தேவையில்லாம அவன இங்க தங்க சொல்லுது என்று மனதில் நினைத்துக் கொண்டேன். இருக்கியாடா ? என்று ரவியிடம் அவனின் அம்மா கேட்க சரி என்று மண்டையாட்டினான். அதன் பிறகு துணிமணிகள், புத்தகங்களுடன் எங்கள் வீட்டிற்கு வந்து விட்டான்.

அவர்கள் கிளம்பிச் சென்றார்கள். அவர்கள் சென்றதும் சில மணி நேரம் சோகமாக இருந்தவன் அடுத்து முகத்தை கழுவிக் கொண்டு படிக்க உட்கார்ந்து விட்டான். இரவு ஒரு மணி வரை படித்துக் கொண்டேயிருந்தான், மறுநாள் #mce_temp_url#விடியற்காலை ஐந்து மணிக்கே எழுந்து விட்டான்.

இப்படி விழுந்து விழுந்து படிக்கிற குழந்தைக்கு வீட்டில் எப்படி வரவேற்பு கிடைத்திருக்கும் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை.

Image Courtesy

போன் கூட வேண்டாம் :

போன் கூட வேண்டாம் :

கடைசித் தேர்வு சமூக அறிவியல் பாடம் மட்டும் அதற்கு நடுவில் மூன்று நாட்கள் வரை விடுமுறை கிடைத்திருந்தது. நடுவில் ஒரு நாள் அம்மா, வீட்டுக்கு போன் பேசுறியாடா? உங்க அப்பா அம்மாட்ட பேசு போட்டுத்தரவா என்று கேட்டார்.... இல்லத்த வேண்டாம் பரிட்சைய முடிச்சுட்டு பேசுறேன் என்று சொல்லிவிட்டான்.

பாத்தியா புள்ள எப்டி படிக்கிது... விளையாடுறப்போ விளையாடிட்டு அப்பறம் எப்டி கருத்தா படிக்கிது பாரு என எனக்கு வசவு விழுந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவன் மேல் இருந்த வெறுப்பு விலக ஆரம்பித்திருந்தது.

Image Courtesy

லீவு விட்டாச்சு :

லீவு விட்டாச்சு :

கடைசி தேர்வு முடிந்தது, விடுமுறை ஆரம்பம், ரவியை கையிலேயே பிடிக்க முடியவில்லை. தெருவில் சிறுவர்களுடன் சேர்ந்து பயங்கரமாய் விளையாடினான். கடந்த ஒரு வாரமாக பார்த்துக் கொண்டிருந்த ரவிக்கும் இப்போது பார்க்கிற ரவிக்கும் அப்படியே முழுவதுமாக மாறியிருந்தான்.

இரவில், மாமா நாளைக்கு ஊருக்கு கூட்டிட்டு போறிங்களா அம்மாகிட்ட பஸ் ஏத்தி விட்டா நானா கூட போய்டுவேன் என்றான். பெரிய மனுஷன் நீங்களா போய்டுவீங்களாக்கும்.... முந்தாநேத்து போன் பேசுறியான்னு கேட்டதுக்கு வேணாம்னு சொன்ன என்று கேட்டார் அம்மா

இரவில், அம்மா நினைப்பு வந்திருக்கும் போல..... பயங்கர சுறுசுறுப்பாய் சுழன்று கொண்டிருப்பவர் திடீரென்று அமைதியாக உட்கார்ந்தால் பரிதாபமாக இருக்குமே அப்படியொரு நிலைமை.

Image Courtesy

இது எங்க அப்பா :

இது எங்க அப்பா :

அப்பா எழுந்து அவனருகில் உட்கார்ந்தார். இங்கவாடா, என்று தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டார். நானும் ஓடிச் சென்று அப்பா மடியில் உட்கார்ந்து அவர் என்னுடைய அப்பா என்று நினைவூட்டினேன்.

தலையை வருடிக் கொண்டே... பரிட்சை எல்லாம் எப்டி எழுதினா? அத்த சொன்னா நைட்டெல்லாம் உக்காந்து படிச்சியாம்... படிப்பு தாண்டா நமக்கு முக்கியம். நாளைக்கு அத வச்சுதான் உன்னைய மதிப்பாய்ங்க என்று பாடம் எடுக்க ஆரம்பித்துவிட்டார். இந்த கொடுமைகளை கேட்க உள்ளேயே ஓடிவிடலாம் போலிருந்தது, ஆனால் நமக்கான இடத்தை விட்டுத்தரக்கூடாது அல்லவா அங்கயேஎ உட்கார்ந்திருந்தேன்.

நாளைக்கு காலைல சின்ன வேலையிருக்கு முடிச்சிட்டு பன்னிரெண்டு மணிக்கு வந்திருவேன், நீ டிரஸ் எல்லாம் பேக் பண்ணிட்டு ரெடியாயிரு மதியம் சாப்ட்டு ஊருக்கு கிளம்பலாம். உன்னை உங்க தாத்தா வீட்ல விட்டுட்டு நைட்டு நான் வந்திடறேன் சரியா என்று அப்பா அவனுக்கு சமாதானம் சொல்ல அவன் உற்சாகமானார்.

போன் பேசி விவரத்த சொல்லு என்றார் அம்மாவிடம்

எப்போ போறோம் ஊருக்கு :

எப்போ போறோம் ஊருக்கு :

மறு நாள் பையை தயார் செய்து வைத்துக்கொண்டு காலை பத்து மணியிலிருந்தே வாசலில் காத்திருந்தான். டேய் உள்ள உக்காருடா மாமா வந்தபிறகு வெளிய போலாம் என்று சொல்லியும் கேட்கவில்லை. எங்கம்மாவ பாக்கப்போறேன், அப்பா எனக்கு சைக்கிள் வாங்கித்தரேன்னு சொல்லியிருக்காரு என்று சொல்லிக் கொண்டு வாசலிலேயே கிடந்தான்.

மணி பன்னிரெண்டை கடந்து நேரம் சென்று கொண்டேயிருந்தது. அத்த மாமா எப்போ வருவாங்க, ஏன் இன்னும் வர்ல என்று நச்சரிக்க ஆரம்பித்தான் அம்மாவை, பாட்டி மாமாக்கு போன் போடுங்க என்று பாட்டியையும். சரியாக மூன்று மணிக்கு அப்பா வந்தார்.

மாமா, ஏன் இவ்ளோ லேட்டு வாங்க இப்பவே கிளம்பலாம் என்று இழுத்தான்.

ரவி... :

ரவி... :

இருடா ராசா.... ஏம்மா வாளில தண்ணிய கொண்டா என்றார் அப்பா, கொண்டு வந்து கொடுக்க என்றும் இல்லாத மாதிரி வாசலில் கை காலை கழுவிக் கொண்டு உள்ளே வந்தார். நேராக பாத்ரூமுக்குச் சென்று குளிக்கப் போனார்.

நான் சொல்ல சொல்ல மாமா பாத்ரூமுக்குள்ள போகுது, மாமா என்னைய இப்பவே கூட்டிட்டு போற என்று பாத்ரூம் வாசலில் நின்று அழ ஆரம்பித்துவிட்டான் ரவி.

எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை, பாட்டியும் அம்மாவிடம் குசுகுசுவென்று என்னாச்சு என்று கேட்டார், அம்மா தெரியலயே என்று சைகை செய்தார். வெளியே வந்த அப்பா எதுவும் பேசவில்லை மிகவும் இறுகிய முகத்துடன் இருந்தார். ஏங்க.... என்று அம்மா ஆரம்பிக்கும் போதே, எதுவும் கொஞ்ச நேரத்துக்கு எதுவும் கேக்காத... சொல்றேன். சோத்த போடு என்று உட்கார்ந்தார்.

திடீர் பாசம் :

திடீர் பாசம் :

ரவி காலைல இருந்து சாப்டல.... எங்க மாமா வருவாரு அவரோட ஊருக்கு போறேன்னு காலைல இருந்து வாசல்லயே உக்காந்திருக்கான் என்று அம்மா புகார் வாசித்தார்.

இங்க வா நீ... காலைல இருந்து என்ன பண்ண,என்று அப்பா அதட்டும் தொனியில் கேட்க, அழ ஆரம்பித்துவிட்டான். என்னைய ஊருக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லி ஏமாத்திட்ட என்றதும் ஒரு கணம் அப்பா யோசித்ததை கவனித்தேன்.

தட்டு கொண்டுவா புள்ளைக்கு சோறு போடு என்று அம்மாவுக்கு கட்டளை இட்டுக் கொண்டே, மாமாவுக்கு ஆபிஸ்ல பயங்கர வேலைடா திடீர்னு லீவ் கேட்டிருக்கேன் என்று அவனை சமாதானப்படுத்தினார்.

இனி ரவி இங்க தான் இருப்பான் :

இனி ரவி இங்க தான் இருப்பான் :

சாப்பிட்டு முடித்து விட்டு மீண்டும் தன் பையருகில் போய் உட்கார்ந்து கொண்டான். அப்பா சமையலறைக்குள் சென்றார். இனி ரவி இங்க தான் இருப்பான், எப்பயும் இங்க தான இருக்கான் என்னடா புதுசா சொல்ற என்றார் பாட்டி.

பதினோரு மணிக்கு போலீஸ் ஸ்டேசன்ல இருந்து போன். ஒரு ஆக்ஸிடண்ட் கேஸு, அவங்க வச்சிருந்த போன்ல கடைசியா உங்க கிட்டதான் பேசியிருக்காங்க. கொஞ்சம் உடனே வாங்கன்னு சொன்னாங்க சரின்னு யாரா இருக்கும்னு என் போன்ல பாத்தா ரவியோட அப்பா நம்பர். பதறிட்டு போனேன்.

ஒரு மணிக்கு அங்க போய் நின்னா ஊர்காரங்க எல்லாரும் நின்னுட்டு இருக்காங்க. போலீஸ்கிட்ட போய் என்னைய வர சொல்லியிருந்தீங்கன்னு சொன்னதும் தனியா உள்ள கூட்டிட்டு போனாங்க பாத்தா அந்தாளு அப்டியே சிதஞ்சு கிடக்குறான். சின்ன புள்ளைக்கு தலையே எங்கன்னு தெரியல... அந்தம்மா....ப்ப்பா என்று கண்களை மூடிக் கொண்டார்.

லாரி ஏறிடுச்சா? :

லாரி ஏறிடுச்சா? :

ஐயையோ.... என்னடா சொல்ற என்று பாட்டி அலறினார். கத்தாதம்மா, நைட்டு அங்க ஏதோ பிரச்சனை நடந்திருக்கு அங்கயிருந்து சண்ட போட்டுட்டு புருசனும் பொண்டாட்டியும் புள்ளைய கூட்டிட்டு பஸ்ஸ்டாண்டுக்கு வந்திருக்காங்க, வர வழில பத்து பேரு சேர்ந்து வெட்டியிருப்பாங்க. ஒருத்தன் ரெண்டு பேர் சேந்து வெட்டினா எல்லாம் இவ்ளோ இடத்துல காயம் வந்திருக்காதுன்னு சொல்றாங்க.

வெட்டியிருக்காங்களா? அப்போ ஆக்ஸிடண்ட் இல்லையா?

அம்மாவுக்கு பெரும் அதிர்ச்சி.

இந்த சாதி தான் :

இந்த சாதி தான் :

அம்மாவும் பாட்டியும் அழ ஆரம்பித்திருந்தார்கள். வாசலுக்கு எதிர்புறமாய் நின்றிருந்த எனக்கு எதுவும் கேட்கவில்லை ஆனால் அவர்கள் அழுவதைப் பார்த்து ஏதோ விபரீதம் என்று மட்டும் புரிந்தது.

இருபது வருசத்துக்கு முன்னாடி இவங்க ரெண்டு பேரும் கலப்பு திருமணம் பண்ணிக்கிட்டாங்களாம். அப்பவே ஊர்ல பெரிய பிரச்சனையாச்சாம், பையன் குடும்பத்த ஊர விட்டே தள்ளி வச்சிட்டாங்களாம். அப்பப்ப சின்ன சின்ன தகராறு நடக்குமாம். பரம்பரை சொத்து கை மாத்துறதுல சின்ன பஞ்சாயத்து ஆகிருக்கு.... அது பேசும் போது கீழ் சாதிக்கரானோட ஓடிப்போனவ தான உன் மவன்னு பேசியிருக்காங்க, அப்பறம் அங்க கோவில் திருவிழா முதல் மரியாதை தர்றதுலயும் ஏதோ பஞ்சாயத்து ஆகிருக்கு.... இதுல பெரியவருக்கு கோவம்.

மவள வரவச்சு குடும்பத்தோட முடிச்சிட்டாரு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Father Kills Their Daughter And Family

Father Kills Their Daughter And Family
Story first published: Saturday, March 3, 2018, 11:30 [IST]
Desktop Bottom Promotion