For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உன்னைய அடையாம விடமாட்டேன்....டார்ச்சர் செய்ய குடும்பமே ஒப்புதல் my story #261

ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படியெல்லாம் பிறரால் மாற்றியமைக்கப்படுகிறது, தன் வாழ்க்கைக்கான முடிவுகளை கூட அவள் எடுக்க முடியாமல் எப்படி திண்டாடுகிறார் என்பதை விளக்கும் கதை

|

ஒரு பெண்ணுடைய எதிர்காலத்தை அவளை விட பிறர் தான் தீர்மானிக்கிறார்கள். என்ன சாப்பிட வேண்டும், எப்போது எங்கே செல்ல வேண்டும் ஆகியவற்றில் துவங்கி வாழ்க்கைத் துணை வரை எல்லாமே பிறர் தான். பிற விஷயங்களை முன் பின்ன விட்டுக் கொடுத்தாலும் வாழ்க்கைத் துணை விஷயத்தில் ஒட்டு மொத்த குடும்பமே மூக்கை நுழைக்கும்.

குடும்பம், சாதி, வசதி, எல்லாம் பார்ப்பார்கள் தீர ஆராய்வார்கள் ஆனால் தப்பித் தவறியும் கூட அந்த மாப்பிள்ளையை பெண்ணுக்கு பிடித்திருக்கிறதா என்று கேட்கமாட்டார்கள். கேட்டால் அவளுக்கு என்ன தெரியும், நாம் தான் நல்ல வாழ்க்கை அமைத்துத் தரவேண்டும் என்று சொல்லிக் கொள்வார்கள். இதில் சில விதிவிலக்குகள் இருக்கலாம் ஆனால் பெரும்பாலான குடும்பங்களில் இதுவே தொடர்கதையாய் இருக்கிறது.

பெற்றோருடன் இருப்பவருக்கு இந்த நிலைமை என்றால் அம்மா அப்பாவை இழந்து நிற்பவர்களுக்கு? அதைவிட உறவுகள் மத்தியில் பெற்றோரின் வாய்ஸ் இல்லாமல் இருப்பது என்று எடுப்பார் கைப்பிள்ளை போல இருப்பவர்களின் மகள்களைப் பற்றி என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 அம்மா :

அம்மா :

நடுத்தரக் குடும்பம் தான் எங்களுடையது. அப்பாவிற்கு மில்லில் வேலை எனக்கு முன்பு இரண்டு அண்ணன்கள் மூன்றாவது தான் நான். திடீரென்று ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுபவர்களை எல்லாம் வேலையை விட்டு நீக்குவதாக அறிவித்தார்கள்.

அதன் பிறகு எங்கள் குடும்பத்தின் பொருளாதாரம் தலைகீழாய் மாறிவிட்டது. அப்பாவிற்கு சரியான தொழில், வருமானம் என்று எதுவும் இல்லை. ஏற்கனவே இருந்த சுமைகள் போதாதென்று மூன்றாவதாக பெண்பிள்ளையும் பிறந்துவிட்டது.

வேலை கிடைக்காத விரக்தி, குடும்ப பாரத்தை சுமக்க முடியுமால் அப்பா குடிக்க ஆரம்பித்தார். அதைவிட எல்லோரிடத்திலும் கடன். இதனால் தினமும் வீட்டில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை நடந்து கொண்டேயிருக்கும்.

சண்டை :

சண்டை :

ஒரு முறை காலையில் சரி, இனி நான் குடிக்கவே மாட்டேன் நம்ம புள்ளைங்க மேல சத்தியம் என்று சொல்லிச் சென்ற அப்பா மாலையில் முழு போதையில் வீடு திரும்பியிருக்கிறார். எவ்ளோ சொன்னாலும் புத்தி வராது இருக்குற வரைக்கும் வருமானம் பாக்காது கடன் வாங்கி குடிச்சிட்டே இருக்கும் என்று நினைத்த அம்மாவிற்கு பயங்கர கோபம்.

கைக்குழந்தையாய் இருந்த என்னை மட்டும் தூக்கிக் கொண்டு பாட்டி வீட்டிற்கு வந்துவிட்டார்.

தற்கொலை :

தற்கொலை :

அண்ணன்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டும் அவருக்கு சமைத்து போட ஆள் இல்லை என்று சொல்லி அம்மாவை வீம்பாக மீண்டும் அழைத்துக் கொண்டார்கள். இம்முறை அப்பா அம்மாவை அடித்து டார்ச்சர் செய்ய ஆரம்பித்திருந்தார். எங்கள் மூன்று பேரையும் காரணம் காட்டி அப்பா அம்மாவை ப்ளாக் மெயில் செய்து கொண்டேயிருப்பார்.

மனதளவிலும், உடல் அளவிலும் நிறைய காயங்களை சந்தித்த பின்னர். இனியும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று நினைத்தவர் விபரீதமான தற்கொலை முடிவுக்கு வந்திருக்கிறார்.

சிதைந்த குடும்பம் :

சிதைந்த குடும்பம் :

அண்ணன்கள் இருவருக்கும் விஷம் கலந்த உணவை சாப்பிடக் கொடுத்தார், தானும் சாப்பிட்டார். நான் கைக்குழந்தையாய் இருந்ததால் என்ன கொடுப்பது என்று அவருக்கு தெரியவில்லை. அப்போது நான் தாய்ப்பால் மட்டுமே குடித்துக் கொண்டிருந்தேன்.

அன்றைக்கும் போதையில் வந்து சேர்ந்த அப்பாவிற்கு நடந்த விபரீதம் மறு நாள் வரை புரியவில்லை. மறுநாள் ஒன்பது மணிக்கு என் அழுகை சத்தம் கேட்டு எழுந்தவர். வீட்டினர் யாரும் இன்னும் எழுந்தரிக்காததைக் கண்டு அண்டை வீட்டுக்காரர்களை உதவிக்கு அழைத்திருக்கிறார்.

புதிய வீடு :

புதிய வீடு :

அம்மாவும் இளைய அண்ணனும் இறந்திருந்தார்கள். ஊர்க்காரர்கள் எல்லாம் அப்பாவை அடித்து துவைத்தெடுத்தார்கள். கைக்குழந்தையாய் இருந்த என்னை என் சித்தி தூக்கிக் கொண்டார்.

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மூத்த அண்ணனை அத்தைமார்கள் பார்த்துக் கொண்டார்கள். இந்த சம்பவம் நடந்த சில நாட்களிலேயே அப்பா ஊரை விட்டே ஓடிவிட்டார்.

அதன் பிறகு அவர் என்ன ஆனார், உயிருடன் தான் இருக்கிறாரா என்று எங்கள் யாருக்கும் தெரியாது. அண்ணன் மட்டும் எப்போதாவது பாட்டி வீட்டிற்கு வருவார்.

அன்பு :

அன்பு :

விவரம் தெரிந்து இது தான் என்னுடைய குடும்பம் என்று நான் ஒரு சேர யாரையும் கண்டதில்லை. ஆனால் நிறைய பழிச் சொற்களை சுமந்திருக்கிறேன்.

நல்லாத்தான் இருந்தான் வேலை போச்சு அதோட அவ்ளோதான். நீ வயித்தல வந்த நேரம் அப்டி இப்டி குடும்பத்தையே நிர்மூலமாக்கிட்டா என்று அடிக்கடி புலம்புவார் பாட்டி.

நீ பொறந்த நேரம் தான் உங்கப்பன் குடிகாரனாகிட்டான் என்று அழுது கொண்டே புலம்புவதும் வாடிக்கை.

ஆரம்பத்தில் கேட்டு வருத்தப்பட்டாலும் பின் பழகிக் கொண்ட பின் சொல்லும் போதெல்லாம் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிடுவேன். என்னை இலவச வேலைக்காரியாகத்தான் நடத்தினார்கள். ப்ளஸ் டூவிற்கு பிறகு கல்லூரிக் கட்டணம் செலுத்த யாரும் முன்வரவில்லை என்பதால் படிப்பு அதோடு நின்றது. அதன் பிறகு பாட்டிவீட்டிலேயே தஞ்சம் புகுந்திருந்தேன்.

காதல் :

காதல் :

இதை காதல் என்று சொல்லலாமா என்றெல்லாம் தெரியவில்லை வீட்டிற்கு மேல் மாடியில் குடியிருந்தவன் என் கதையை எல்லாம் தெரிந்து கொண்டு பரிவு காட்டினான். ஏன் படிக்காம விட்ட நீ படி, பார்ட் டைம் படிக்கலாம்....

வேலைக்குப் போ என்று நிறைய அட்வைஸ் சொல்வான், அவனே எனக்காக யுனிவெர்சிடிக்கு எல்லாம் சென்று அப்ளிகேஷன் எல்லாம் வாங்கி வந்தான், புத்தகங்களை கொடுத்தான்.

அதன் பிறகு நானும் படிக்க வேண்டும் என்ற ஆர்வமும் வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையும் மேலோங்கியது. மூன்று வருடங்கள் பிஏ வரலாறு ஒருவாறாக படித்து முடித்தேன்.

இந்த மூன்று வருடங்களில் எனக்கு பல உதவிகளைச் செய்தவன் அவன். அவன் இல்லையென்றால் இதெல்லாம் சாத்தியப்படாது என்பது மனம் நம்ப ஆரம்பித்த நேரத்திலிருந்து அவன் மீதிருந்த மரியாதை காதலாய் மாறத் துவங்கியிருந்தது.

மாமன் மகளே :

மாமன் மகளே :

ஒருபுறம் இந்த கதை ஓடிக் கொண்டிருக்க, அண்ணனை வளர்த்த அத்தையின் மகன் என்னை திருமணம் செய்து கொள்ளப் போவதாய் சொன்னான்.

இல்ல எனக்கு விருப்பமில்ல என்று சொன்ன பிறகும் பின்னாடியே வந்து டார்ச்சர் கொடுப்பது தொடர்ந்தது. பாட்டியிடம் சொல்ல, அவர் கிளம்பி அந்த அத்தை வீட்டிற்கு சென்று விட்டார்.

அவரும் என் அண்ணன் பொண்ணு என் பையனுக்குதான இதுல என்ன தப்பு அதான் படிப்பு எல்லாம் முடிஞ்சதுல கட்டிக் கொடுங்க என்றார். அவன் பத்தாவது கூட முடிக்கவில்லை, வேலைக்குச் செல்லாமல் வெட்டியாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பவனை நம்பி எப்படி இவளை கொடுப்பது என்று கேட்டார்... அதெல்லாம் அவங்க பாத்துப்பாங்க பேசி முடிச்சிடலாம் என்று கறாராக சொல்லிவிட்டார் அத்தை.

 இரு குடும்பம் :

இரு குடும்பம் :

என் அம்மா வழி உறவுகள் யாரும் மீண்டும் அந்த குடும்பத்துடன் ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம் என்று முடிவுட இருந்தார்கள். ஆனால் அத்தையோ மகனுக்கு என்னை விட்டால் வேறு எந்த பெண்ணும் கிடைக்க மாட்டால் என்பதால் என்னை மருமகளாக்கிக் கொள்ள வேண்டும் என்பதில் குறியாய் இருந்தாள்.

என்னடீ நீ பெரிய உலக அழகியா? கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு மரியாதையா வந்து சேறு என்று ஆரம்பித்து பல நாக்கூசும் வார்த்தைகளால் தொடர்ந்து டார்ச்சர் செய்ய ஆரம்பித்தான் அத்தையின் மகன். வெகு சீக்கிரத்திலேயே இது இரு குடும்பத்திற்குமான மானப் பிரச்சனையாக உருவெடுத்திருந்தது.

என்னால் தானே எல்லாம் :

என்னால் தானே எல்லாம் :

அறையை சாத்திக் கொண்டு அழுது தீர்த்தேன், என்னால் தான் எல்லாருக்கும் பிரச்சனை, என்னால் தான் அம்மாவும் அண்ணனும் இறந்தார்கள், அப்பாவிற்கு வேலை பறிபோனது எல்லாம் என்னால் தான் நான் அதிர்ஷ்டமில்லாதவள். இப்போ என்னால பாட்டிக்கும் இந்த வயசான காலத்தில் தொந்தரவாய் இருக்கிறோம் என்று நினைத்து நினைத்து அழுதேன்.

ஒரு வாரம் வரை வீட்டை விட்டு எங்கும் வெளியில் செல்ல வில்லை.மனதார காதலித்த அந்த மேல் வீட்டுக்காரன் அழைத்துப் பேசினான். நடந்த கலேபரங்களை எல்லாம் தெரிந்து கொண்டு,சிறிதும் யோசிக்காமல் உனக்கு பிடிக்கலன்னா பண்ணிக்காத என்று சொன்னான். அதோடு அவன் மீதான மதிப்பு எனக்கு இன்னமும் அதிகரித்தது. இந்த நேரத்தில் எப்படி என் காதலைச் சொல்வது என்று தயக்கமாய் இருக்கவே அமைதியாக நின்றிருந்தேன்.

என்னைய கட்டிக்கிறீயா :

என்னைய கட்டிக்கிறீயா :

இரவு வேலை முடித்து வீடு திரும்பியவன் கீழே இருக்கும் முற்றத்தில் உட்கார்ந்து பூக்கட்டிக் கொண்டிருந்த என்னை மேலே வரச்சொல்லி அழைத்தான்.

பாட்டியிடம் காயப்போட்டிருக்கும் துணியை எடுத்து வருவதாக சாக்கு சொல்லி மேலே வந்தேன். நீ தப்பா நினைக்கலன்னா ஒண்ணு கேக்கலாமா?என்றான்.

நானும் கேளுங்க என்று சொல்லி என்னுடைய பழைய கதையையோ அல்லது ஓடிப்போன அப்பாவைப் பற்றியோ அல்லது என் விஷயத்தில் மூக்கை நுழைக்காமல் இருக்கிற அண்ணனைப் பற்றியோ கேட்கப்போகிறான் என்று நினைத்திருந்தேன்.

ஆனால் சிறிது நேர மௌனத்திற்கு பிறகு என்னைய கட்டிகிறியா? நல்லா யோசிச்சு சொல்லு உனக்கு விருப்பமில்லன்னா நான் எதுவும் சொல்லமாட்டேன், பின்னாடியே வந்து எல்லாம் டார்ச்சர் பண்ண மாட்டேன் பயப்படாத என்றான். இவ்வளவு நாளாக எதிர்ப்பார்த்து காத்திருந்தவை தானே இது சம்மதம் தெரிவித்தேன்.

திருமணம் :

திருமணம் :

எப்படியும் எங்கள் காதலுக்கு சம்மதம் தெரிவிப்பார்கள். முதலில் நான் வேண்டாம் என்பதால் உறவுமுறை இருந்தாலும் கூட அத்தையின் மகனை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கவில்லை

இப்போது இவனை கண்டிப்பாக சம்மதித்து விடுவார்கள் அத்தை மகனிடம் முக்கிய குறையாக சொல்லப்பட்டது படிப்பில்லை வேலையில்லை என்பது தான்.

ஆனால் இவனிடம் அவை இரண்டுமே இருக்கிறது அதை விட முக்கியமாக எனக்கு பிடித்திருக்கிறது என்பதால் நிச்சயமாக எங்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விடுவார்கள் என்று நினைத்திருந்தோம்.

ஆனால் சாதி குறுக்கே வந்தது, அவன் என்ன ஆளுங்க அவனுக்கு எப்டி நம்ம பொண்ண கட்டிக் கொடுக்க முடியும், படிச்சு உத்தியோகத்துக்கு போனா மட்டும் போதுமா? என்று இப்போது புதிய வியாக்கானத்தை ஒப்பித்தார்கள். விஷயம் தெரிந்ததுமே அவனை மேல் அறையை காலி செய்யச் சொல்லிவிட்டார்கள். என்னை அடித்து அவர்கள் கைக்காட்டுகிறவனுக்கு தலையை நீட்ட வைத்தார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Family doesn't accept her love because Of This Reason

Family doesn't accept her love because Of This Reason
Story first published: Wednesday, June 6, 2018, 15:27 [IST]
Desktop Bottom Promotion