For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஃப்ளாஷ்பேக்கிலும் தன் இணையை புகுத்திய விசித்திரமான தம்பதிகள்!!

இப்போது தம்பதிகளாக இருக்கும் நபர்கள் எதேச்சையாக சிறுவயதில் சந்தித்துக் கொண்ட சுவாரஸ்யமான சம்பவங்கள்

|

எது நினைக்கிறோமோ அதுவாகவே மாறுகிறோம் அல்லது நினைப்பது நிஜமாகும் போன்ற வசனங்களை எல்லாம் கேட்டு சிரித்திருப்போம். நமது எண்ணங்களுக்கு அவ்வளவு மதிப்பு இருக்கிறது என்பதை பலரும் உணர்ந்திருக்கவே மாட்டாரக்ள்.

பொதுவாக திருமணம் என்று வருகிற போது இருவரின் மன ஒற்றுமையை பார்க்க இங்கே ஜாதகம் மற்றும் பல யுக்திகளை வைத்திருக்கிறார்கள். ஆனால் யாரிடமும் இருவரின் மனப்பொருத்தத்தை அறிந்து கொள்ளக்கூடிய சக்தி எங்குமில்லை. காதலிப்பவர் வாழ்க்கைத்துணையாக கிடைப்பதே வரம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் வாழ்க்கையில் முதன் முதலாக நீங்கள் பார்த்து ரசித்த ஒரு நபரே உங்களுக்கு வாழ்க்கைத் துணையாக வந்தால்?

அப்படிப்பட்ட சில சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பு தான் இது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

ஜஸ்டின் மற்றும் ஏமி சமூகவலைதளம் மூலமாக நட்பாகி பழகி வந்தார்கள். ஜஸ்டின் பேசத்துவங்கிய முதல்நாளே எனக்கு ஏமி என்ற உன்னுடைய பெயர் மிகவும் பிடித்திருக்கிறது ஏனென்றால் என்னுடைய முதல் க்ரஷின் பெயர் ஏமி என்று சிரித்திருக்கிறார்.

ஆரம்பத்தில் கோபப்பட்டவர் பின்னர் சகஜமாக பேச ஆரம்பித்திருக்கிறார். ஒரு முறை அப்படி பேசிக் கொண்டிருக்கும் போது ஜஸ்டின் கண்ணுக்கு அருகில் தழும்பு ஒன்று இருந்ததைப் பார்த்து எப்படிஆனது என்று கேட்டார் ஏமி.

Image Courtesy

#2

#2

ப்ரீ ஸ்கூல் படித்துக் கொண்டிருக்கும் போது பள்ளியின் ப்ளே ஏரியாவில் தவறி விழுந்துவிட்டேன் என்றாராம். எந்தப் பள்ளி என்று கேட்டதும் சன்ஷைன் பரீ ஸ்கூல் என்று பெயரைச் சொல்லியிருக்கிறார்.

அட நானும் அங்கு தான் படித்தேன் என்று சொன்னதுடன் ஊர், ஏரியா எல்லாவற்றையும் மீண்டும் உறுதி செய்து கொண்டார். நாம் இருவருக்கும் ஒரே வயது நானும் அதே பள்ளியில் தான் படித்தேன் என்றிருக்கிறார். மேலும் மேலும் பேசப்பேச ப்ரீ ஸ்கூலில் ஜஸ்டின் பார்த்து ரசித்த அதே ஏமி தான் இப்போது காதலியாய் கிடைத்திருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.

Image Courtesy

#3

#3

விரோனாவிற்கு பெற்றோர் திருமண நிச்சயம் செய்திருந்தனர். திருமணத்திற்கு சில மாதங்கள் இருக்கும் நிலையில் தன்னுடைய சிறுவயது புகைப்படத்தை தன் வருங்கால கணவரிடம் காட்ட வேண்டும் என்று நினைத்தார்.

தன் உறவுக்கார சிறுவர்களுடன் பீச்சில் உட்கார்ந்திருக்கும் போட்டோவை காண்பித்து அன்று நடந்த விஷயங்களை சுவாரஸ்யமாக பகிர்ந்து கொண்டிருந்தார்.

 #4

#4

அப்போது இவர்களுக்கு பின்னால் ஒரு சிறுவன் தண்ணீரில் மிதக்க பயன்படுத்தும் ரேஃப்ட்டை பயன்படுத்தி மிதந்து கொண்டிருப்பதை பார்த்து அதே நிறத்தில் தன்னிடமும் ஒன்று இருந்ததாக சொல்லி உத்து பார்த்திருக்கிறார்.

அதே சிறுவன் அணிந்திருக்கும் சட்டைப் போலவே தன்னிடமும் ஒன்று இருந்ததாக சொல்லி இதை என் பெற்றோருடன் காண்பித்து வருவதாக சொல்லி கேட்டிருக்கிறார் விரோனாவும் கொடுக்க, அதை பெற்றோரிடம் கொண்டு சென்றிருக்கிறார்.அதைப் பார்த்த அவரது பெற்றோர் இது நீயே தான் என்று சொல்லி அதிர்ச்சியூட்டியிருக்கிறார்கள். அதோடு அன்று நடந்த சம்பவங்களையும் நினைவு கூற.... யதார்த்தமாக சிறுவயதில் மனைவி எடுத்த படத்தில் கணவனும் இடம்பிடித்திருக்கிறார்.

Image Courtesy

 #5

#5

ஜெனிவாவில் வாழ்ந்து கொண்டிருந்த போது இவரின் நெருங்கிய நண்பராக இருந்தவர் கேத்லின். இவருக்கும் கேத்லினுக்கு கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் தான் இடைவேளி என்றாலும் இருவரும் சேர்ந்தே விளையாடுவது சுற்றுவது என்றிருந்திருக்கிறார்கள்.

இவருக்கு ஐந்து வயதான போது ஜெனிவாவை விட்டு அமெரிக்காவிற்கு வந்துவிட்டார்கள். அதன் பிறகு ஜெனிவாவில் வசித்து வரும் கேத்லினிடம் எந்த தொடர்பும் இல்லை. அவ்வளவு வருடங்கள் கழித்து பதினெட்டு வயதில் முகநூல் மூலமாக கேத்லின் நட்பு கிடைத்து இருவரும் பேசி பழகியிருக்கிறார்கள். அதே பழைய நட்புடன் சேர்ந்து காதலும் வளர்ந்திருக்கிறது இருவரும் இப்போது திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

Image Courtesy

#6

#6

பள்ளி படிக்கும் போது விளையாட்டாக நீ தான் என் மனைவி என்று சொல்லி விளையாடியிருக்கிறார் இவர். அதன் பிறகு அடுத்தடுத்து வகுப்புகள் செல்ல வேறு பள்ளி வேறு மாகாணம் என்று பிரிந்து விட்டார்கள்.

கடைசியில் பார்த்தால் ஒரே கல்லூரி கல்லூரி முடித்ததும் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் முடிந்த பிறகு தான் இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்றும் அப்போதே தன் கணவர் தனிடம் திருமணம் செய்து கொள்ளவதாய் சொன்னதும் நினைவுக்கு வந்திருக்கிறது.

Image Courtesy

#7

#7

இருவரது பெற்றோரும் சவுதி அரோபியாவில் உள்ள ஆர்ம்கோ என்று எண்ணெய் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது இருவரும் நண்பர்களாக இருந்திருக்கிறார்கள்.

அதன் பிறகு இருவரும் வெவ்வேறு நிறுவனங்கள். வெவ்வேறு நாடுகள் என பிரிந்து சென்றுவிட்டார்கள். இருபது ஆண்டுகள் கழித்து கல்லூரிக்கு சென்ற போது இணையத்தின் உதவியுடன் கண்டுபிடித்து ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.

Image Courtesy

 #8

#8

சிறு வயதில் இருவரும் முறைத்துக் கொண்டு சண்டையிட்டு கொண்டேயிருப்பார்கள். உறவினர் ஒருவரின் திருமணத்தின் போது அந்த சிறுமி பூங்கொத்து உடனும் அந்த சிறுவன மோதிரத்துடன் திருமணம் செய்யவிருந்த தம்பதிகளுக்கு முன்னால் சென்றார்கள்.

அதன் பிறகு ஹை ஸ்கூல், கல்லூரி எல்லாம் முடித்து இணையத்தின் உதவியுடன் பேச ஆரம்பிக்கிறார்கள். பின்னர் காலப்போக்கில் முதன் முதலாக சண்டையிட்ட அதே சர்ச்சில் இவர்களின் திருமணம் நடைப்பெற்றது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Couples when they met at their childhood

Couples when they met at their childhood
Desktop Bottom Promotion