For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

18 வருசம் கழிச்சு உசுரு திரும்ப கிடச்ச மாதிரி இருந்துச்சு! My story #208

தன் காதலியை கரம் பிடிக்க ஒரு ஆண் பதினெட்டு வருடங்கள் வரை காத்திருந்து கரம் பிடித்திருக்கிறார்.

|

இதுக்கு சம்மதிக்கலன்னா என்ன பண்ணுவ என்று கேட்டகப்பட்ட போது, அடடா..... இப்படி ஒரு ட்ராக் இருப்பதை யோசிக்காமல் விட்டுவிட்டோமே என்று அப்போது தான் முதன் முறையாக தோன்றியது.

கிட்டதட்ட 18 வருட காதல் எங்களுடையது நீண்ட காத்திருப்பிற்கு பின் ஒன்றாக சேர்ந்திருக்கிறோம். காதலிக்க ஆரம்பித்த நாட்களில் எங்கள் காதலில் இவ்வளவு உறுதியாக இருப்போம் என்று நாங்களே நினைத்திருக்க வில்லை. இருவர் வீட்டிலும் பயங்கர எதிர்ப்பு அதற்காக வீட்டை விட்டு வெளியேறிட வில்லை என்றைக்காவது ஒரு நாள் எங்கள் காதலை ஏற்றுக் கொள்வார்கள் என்று காத்திருந்தோம். கிட்டதட்ட பதினெட்டு வருடங்கள் கழித்து எங்களுடைய 36வது வயதில் திருமண பந்தத்தில் இணைந்தோம்.

அத்தனைக்கும் இந்நேரம் எங்கோ ஒரு மலையில் குடும்பத்துடன் சந்தோஷமாக இருப்பான், திருமணம் செய்திருப்பான், என்னையெல்லாம் மறந்திருப்பான் என்று நினைத்து நானும் இதே போல எனக்கு திருமணம் முடிந்திருக்கும் என்று நினைத்து அவனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளாமலே.... ஏன் போன் கூட செய்யாமலேயே பல ஆண்டுகள் கழிந்தது.

இனியும் இவர்களை நம் வழிக்கு கொண்டு வர முடியாது என்று நினைத்தார்களோ என்னவோ.... நீ யார சொல்றியோ அவங்களையே கல்யாணம் பண்ணிக்கோ என்று சொல்லிவிட்டார்கள். இதோ இன்று நாங்கள் சேர்ந்து விட்டோம். திருமணமாகி இரண்டு மாதங்கள் ஆகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோவில் விழா :

கோவில் விழா :

வருடந்தோறும் பங்குனி தேர்திருவிழா எங்கள் ஊரில் மிகச் சிறப்பாக இருக்கும். வருடம் தவறாமல் அப்பா எங்களை தேர்த்திருவிழாவிற்கு அழைத்துச் சென்று விடுவார். தேர் திருவிழாவிற்கு முந்தைய தினம் கோவிலில் பூஜை நடக்கும்.

நான் சித்தி பெரியம்மா பாட்டி அத்தைமார்கள் என கூட்டமாக நின்றிருந்தேன், அப்போது எதிர்தரப்பில் நின்றிருந்த ஆண்கள் கூட்டத்திலிருந்து யார் முதலில் பால் குடத்தை தூக்குவது என்பதில் சண்டை ஆரம்பித்தது, வழக்கமாக பெண்கள் முதலில் தூக்குவார்கள், அதன் பிறகு தான் ஆண்கள் தூக்கி வருவார்கள் என்றோம்..... இல்லை இந்த முறை நாங்கள் என்றார்கள் இருவருக்கும் பலத்த வாக்குவதாம்.

யாரென்றெ தெரியாத ஒருவன் எங்களுடன் வந்து சண்டையிட்டான்.

மன்னிப்பு :

மன்னிப்பு :

அம்மா இவன் யாருன்னே தெர்ல..... மொதோ ஆளா வந்து சண்ட கட்றானே.... என்றேன் நம்மள மாதிரி யார் வீட்டுக்கோ திருவிழாவுக்கு வந்திருப்பாங்க.... இங்க இப்டியொரு விஷேசம் நடக்குறது இந்த ஊர்க்காரங்கள தவிர வெளியூருக்கு எல்லாம் தெரியாது என்றார்.

ஒரு நாள் மதியம் நாங்கள் சாப்பிட்டு கொண்டிருந்த போது, அன்று கோவிலில் எங்களுடன் சண்டையிட்ட நபர் வீட்டிற்கே வந்து விட்டார். மன்னிச்சிக்கங்க கோவில்ல கொஞ்சம் என்று இழுத்தார்..... அட விடுங்க தம்பி நாலு பேரு கூடின இடத்துல அப்டி கொஞ்சம் எசக்க பிசக்க இருக்கத்தான் செய்யும். இது எல்லாம் பெருசா எடுத்துக்க முடியுமா என்றார்.

போட்டி :

போட்டி :

திருவிழா எல்லாம் முடிந்து நாங்கள் சென்னைக்கு வந்து விட்டோம். சில மாதங்கள் கழித்து கல்லூரி ஒன்றிற்கு கருத்தரங்கிற்காக சென்றிருந்தேன், ஏய்.... பால் குடம் தூக்கலாமா என்றது ஒரு குரல்....

திரும்பினால் அன்று கோவிலில் சண்டை போட்டவன் நின்று கொண்டிருக்கிறான்...

கனா காணும் காலங்கள் :

கனா காணும் காலங்கள் :

எந்த கல்லூரி? என்ன டிப்பார்ட்மெண்ட் என்று எல்லாவற்றையும் விசாரித்தான்..... எண்ணை வாங்கிக் கொண்டான், துடுக்குத்தனமாக பேசுவதும் பின்னர் வந்து சாரி கேட்பதும் அவனுக்கு சகஜமாக இருந்தது.

சும்மா விளையாட்டுக்கு பேசினேன் என்று சொல்வது மிகவும் சர்வ சாதரணமாக கடந்து செல்வான். காதலைத் தாண்டி எங்கள் இருவருக்குமிடையில் ஆழமான நட்பும் புரிதலும் வளர்ந்திருந்தது.

குடும்பம் காத்திருக்கிறது :

குடும்பம் காத்திருக்கிறது :

ஒரு நாள் சென்னைக்கு ஊர்லயிருந்து அப்பா அம்மா எல்லாம் வந்திருக்காங்க நீ வர்றீயா என்றான்.....நானும் கிளம்பி அவன் வரச் சொல்லியிருந்த பீச்சிற்கு சென்றேன். போன் செய்து இருக்கும் இடத்தை சொல்லி அவர்களை நான் இருக்கிற இடத்திற்கு வர வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

அம்மா, அப்பா, அக்கா, அக்காவின் குழந்தை வந்திருந்தார்கள். எல்லா வழக்கமான நலம் விசாரிப்புகள், உபசரிப்புகள் நிகழ்ந்து கொண்டிருந்தது. அம்மா இந்த பொண்ண தான் கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன் ஒகே வா? என்று கேட்டுவிட்டான்.

நிஜமா ஐ லவ் யூ டி..... :

நிஜமா ஐ லவ் யூ டி..... :

மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் நிறுத்திவிட்டு என்னையும் அவனையும் மாறி மாறி பார்த்தார், என்ன சொல்வதென்றே தெரியவில்லை, அவனின் அம்மாவை விட எனக்கு அங்கே பயங்கர ஷாக்....

இதுவரை அப்படி ஒரு எண்ணமோ பேச்சோ எங்கள் இருவருக்குமிடையில் எழுந்தது இல்லை, நாங்கள் எதுவும் திட்டமிட்டு இல்லை இவனிடம் காதலைப் பற்றி பேசக்கூடாது என்றெல்லாம் முன்னெச்செரிக்கையுடன் பழகியிருக்கவில்லை, எதிர்பாராமல் அவனிடமிருந்து வந்த வார்த்தைகள் சற்று தடுமாற்றத்தை கொடுத்திருந்தது.

ஆண்ட்டி அவன் எப்பவும் அப்டித்தான்.... நீ கொஞ்சம் அந்தப்பக்கம் போனதுக்கு அப்பறம் சும்மா சொன்னேன் விளையாட்டுக்கு சாரின்னு என்கிட்டயே சொல்லுவான் என்று நிலைமையை சீராக்க முயன்றேன்....

நான் முடிப்பதற்குள் அவன் முந்திக்கொண்டு ஏய்.... நிஜமா ஐ லவ் யூ டி என்றான்.

அவள் வேண்டாம் :

அவள் வேண்டாம் :

விஷயம் விட்டிற்கு தெரிந்தது, எங்கள் வீட்டிற்கு வந்து பேசுவதாய் சொன்னார்கள். அப்பா விசாரித்தார், அவர்கள் வேறு சாதி அதோடு வேறு ஊர் என்பது உறுதியாய் தெரிந்தது இல்ல.... அன்னக்கி வேல விஷயமா வெளியூர்க்கு போறேன் நீங்க வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

அடுத்து இரண்டு மூன்று முறை முயல அப்பா அவர்களை சந்திக்கவேயில்லை..... நாங்கள் இந்தளவிற்கு உன் காதலுக்காக இறங்கி வருகிறோம் அவர்கள் வேண்டுமென்றே தவிர்க்கிறார்கள் என்று சொல்லி அவனின் குடும்பத்தார் இனி அந்த பெண்ணே வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.

எல்லா நேரமும் :

எல்லா நேரமும் :

எல்லா நேரமும் நான் ஜாலியா டேக் இட் ஈஸியா இருக்கேன்னு நீயும் உன் ஃபேமிலியும் என்னைய ரொம்ப ஹர்ட் பண்றீங்க.... தப்பு தான் உன்கிட்ட மொதல்ல லவ் சொல்லாம அம்மா முன்னாடி சொன்னது தப்பு தான்...

ஆனா ஏன்னு தெரியல அந்த டைம் தான் ஃபர்ஸ்ட் டைம் அப்டி தோணுச்சு, உன்னைய கல்யாணம் பண்ணிகிட்டா என்னனு நினச்சேன் டக்குனு சொல்லிட்டேன் மத்தப்படி எந்த ப்ளானும் இல்ல, நீ வேற யாரையாவது லவ் பண்ற இல்ல.... என்னைய கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லன்னு சொன்னா நான் என் வேலைய பாத்துட்டு போய்ட்டே இருப்பேன்.... அத விட்டுட்டு இப்டி அசிங்க படுத்துறது என்ன நியாயம்.

முதன் முறையாக அவனிடமிருந்து சற்று சீரியசான வார்த்தைகளை கேட்கிறேன்.

என்ன சொல்ல? :

என்ன சொல்ல? :

அவனிடம் என்ன சொல்ல ஒகே சொல்லவா வேண்டாமா என்று தெரியவில்லை..... என்ன செய்வதென்று தெரியவில்லை யோசிக்கணும் என்றேன், ஒகே யோசிச்சு சொல்லு என்று சொல்லிச் சென்றான் அதன் பிறகு இரண்டு மாதங்கள் பார்க்கவோ பேசவோயில்லை. தினமும் காலையும் மாலையும் பேருந்து நிலையத்தில் காத்திருக்கவில்லை.

அப்படியே என்னை மறந்திருப்பான் என்று நினைத்தேன்.... அன்று தோழியின் நிச்சயதார்த்த நிகழ்வு அவனும் வந்திருந்தான். மேடம் யோசிச்சாச்சா என்று எதிரில் வந்து நிற்கிறான்.... சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை இரண்டு மாதங்கள் கழித்தும் இப்படி கேட்கிறானே என்று ஆச்சரியமாய் இருந்தது.

சம்மதம் என்று தலையசைத்தேன்.

ஊர் சுற்றிகள் :

ஊர் சுற்றிகள் :

அதற்கடுத்து முதுகலை படிப்பை சேர்ந்து ஒரே கல்லூரியில் படித்தோம், அப்போதே எங்கள் வீட்டில் திருமண பேச்சினை எடுத்து விட்டிருந்தார்கள் எப்படியாவது இதை எங்கள் வீட்டில் சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்தோம்.

ஆரம்பத்துல எங்க வீட்டுல ஒகே சொல்ற நிலமைல தான் இருந்தாங்க உங்க அப்பானால எங்க அப்பாவும் டென்ஷனாகி இனி அந்த பொண்ணே வேண்டாம்னு சொல்லிட்டாரு.... இப்போ நானும் புதுசா மொதோயிருந்து இந்த கதைய ஆரம்பிக்கணும் எப்போ சொல்லி எப்டி புரிய வச்சு உன்னைய கட்டிக்க போறேனோ தெரியல என்றான்.

சந்தர்ப்பம் :

சந்தர்ப்பம் :

நாங்கள் காத்திருக்க.... அம்மா அப்பா கத்திருப்பார்களா என்ன? கல்லூரி முடிந்து மாலை நான்கு மணிக்கு வீட்டிற்கு வர உறவினர்கள் எல்லாம் உட்கார்ந்திருக்கிறார்கள். சீக்கிரம் போ டிரஸ்ஸ மாத்து, இன்னக்கி பையன் வீட்லயிருந்து வராங்க தட்டு மாத்திக்க போறோம், அழகா சேலைய கட்டிட்டு வா என்றார் பாட்டி....

ஒரு வார்த்தை கூட சொல்லாமல் திடீர்னு ஏன் இந்த ஏற்பாடு அதுவும் இவ்ளோ பேர கூப்டு.... வாயமூடிட்டு சொன்ன செய் சும்மா கேள்வி கேக்காத என்று சொல்லி என்னை உள்ளே அழைத்துப் போனார் அம்மா.

எல்லாரும் வந்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். என்னை பெண் பார்க்க வந்தவரிடம் தனியாக பேச வேண்டும் என்றேன், அப்பா முறைப்புடன் மேல் மாடியில் போய் பேசுமாறு அனுப்பி வைத்தார். கீழே வந்தவர், நான் யூ எஸ் போய் படிக்கணும் இந்த கல்யாணத்துல எனக்கு இஷ்டமில்ல அம்மா ரொம்ப கம்பல் பண்ணனால தான் வந்தேன் என்றார்.

கடைசி நாள் :

கடைசி நாள் :

வீட்டில் பயங்கர சண்டை, வேறு சாதியில் திருமணம் செய்து கொள்ள ஒரு நாளும் ஒப்புக் கொள்ளவே மாட்டோம் என்றார்கள். அவன் வீட்டிலோ என்னைய அவமானப்படுத்தினவன் முன்னாடி என்னைய வெக்கமே இல்லாம போய் நிக்க சொல்றியாடா.... முடியவே முடியாது என்றார்கள்.

படிப்பு முடிந்தது, அவன் வேலை தேடி பெங்களூருக்கு செல்வதாய் இருந்தது. முந்தைய தினம் சென்னை தெருக்களில் பார்த்துக் கொண்டது தான் கடைசி. என்னை உப்புமூட்டை தூக்கிக் கொண்டான், காலம் பூரா இப்டியே ஒண்ணா இருக்கணும் என்றான். ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாமா? என்று கேட்டேன்..... அப்டி என்ன அவசரம்.... அம்மா அப்பா சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கலாம் அவங்க எப்போ ஒகே சொல்றாங்களோ அதுவரைக்கும் காத்திருக்கலாம் என்றான்.

கிராமத்தில் :

கிராமத்தில் :

என்னை ஊரில் கொண்டு போய் விட்டார்கள், பேய் பிடித்திருக்கும் என்று சொல்லி மந்திரிக்க என்று கோவில் குளமாய் சுத்தினார்கள்.... எவ்வளவு வர்புறுத்தியும் மிரட்டியும் திருமணம் வேண்டாம் அவனைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்பதில் உறுதியாய் இருந்தேன்.

அவன் வருவான் என்னைக்காவது என்னைய தேடி வருவான், நாங்க கல்யானம் பண்ணிப்போம் என்ற நம்பிக்கையில் என்னை நோக்கி வீசப்படுகிற அவதூறுகளை எல்லாம் கண்டுகொள்ளாமல் கிடந்தேன்.

மறந்து விடு :

மறந்து விடு :

அப்பா அம்மாவும் எதேதோ முயன்றார்கள், அம்மா கோவில் கோவிலாய் சுற்ற அப்பாவோ என்னை அடித்து வழிக்கு கொண்டு வந்து விடலாம் என்று நினைத்தார்.... ஒரு கட்டத்தில் அவன் விபத்தில் இறந்து விட்டான், அவனுக்கு திருமணமாகிவிட்டது நீ மட்டும் இன்னும் அவனையே நினச்சுட்டு இரு ஆனா அவன் உன் நினைப்பே இல்லாம பொண்டாட்டி புள்ளன்னு செட்டில் ஆகிட்டான் என்றார்.

மாற மாட்டேன் :

மாற மாட்டேன் :

இருக்காது... என்னை விட காதலில் அவன் தான் உறுதியாக இருந்தான், அவன் அப்படி மாறியிருக்க மாட்டான் அவ்வளவு சீக்கிரம் மாற மாட்டானே.... அவன் என்னைய மறந்தாலும் பரவாயில்ல..... நான் அதுக்காக வேற ஒரு வாழ்கைய தேடிப் போனும்னு அவசியமில்ல..... என்றேன்.

வருடங்கள் உருண்டோடியது. நடுவில் ஒரு முறை தற்கொலைக்கு முயல, அதன் பிறகு அந்த பேச்சையே எடுக்கவில்லை.

 அவனுக்கு :

அவனுக்கு :

அவன் குடும்பத்தை விட்டு வேலைக்காக வெளியூரில் இருந்ததால் எனக்கு இருந்த பிரசரில் பாதியளவு தான் இருந்தது, பத்து வருடமாக ஊர்ப்பக்கம் வருவதையே தவிர்த்திருந்தான் திருமணப் பேச்சு எடுக்கிறார்கள் என்பதற்காக

அவளுக்கு திருமணமாகியிருக்கும் என்ற எண்ணம் எழுந்த போதிலும், என் மனசுல அவ தான் இருக்கா என்று சொல்லி இருந்திருக்கிறான்.

முகநூல் :

முகநூல் :

பல வருடங்கள் கழித்து எதார்த்தமாக தம்பி லேப்டாப்பில் பேஸ்புக் பதிவு செய்து உள்ளே நுழைந்து தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தேன்.... அப்படி தேடிய போது இவனின் பெயரை பார்க்க தொடர்ந்து தேடி கண்டுபிடித்தேன். நட்பு வேண்டுகோள் விடுத்த அடுத்த நொடி அக்சப்ட் ஆனது.

சத்தியமாய் இவ்வளவு வருடங்கள் கழித்து, மீண்டும் அவனை சந்திப்பேன் என்று கனவிலும் எதிர்ப்பார்த்திருக்கவில்லை, சொல்லி வைத்தாற் போல இருவரும் அப்பறம் லைஃப் எப்டி போகுது வொய்ப் என்ன பண்றாங்க என்று நானும், ஹஸ்பண்ட் என்ன பண்றாரு என்று அவனும் கேட்டுக் கொண்டோம்.

கல்யாணம் :

கல்யாணம் :

நேரில் சந்திக்கும் போது அறிமுகப்படுத்துவதாய் சொன்னான்..... சந்தித்து கொண்ட போது தான் இருவரும் ஒருவரை ஒருவர் நினைத்துக் கொண்டு திருமணமே செய்து கொள்ளாமல் இருந்திருக்கிறோம் என்பது தெரிந்தது.

நான் மட்டுமல்ல என் மேல் அவ்வளவு அன்பு செலுத்த ஒரு நபர் இருக்கிறார் என்ற உணர்வே என்னை மீண்டும் உயிர்தெழ வைத்திருந்தது. வீட்டில் சொன்னோம்.... இவ்வளவு வருடங்கள் கழித்தும் மாறா காதலுடன் வந்து நிற்பதை பார்த்து வியந்து போனார்கள்.

பெற்றோர்கள் சம்மதத்துடன் இனிதே எங்கள் திருமணம் நடந்தேறியது..... இப்போது எங்கள் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை துவங்கியிருக்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Boy Waits 18 Years To Marry His Girl Friend

Boy Waits 18 Years To Marry His Girl Friend
Story first published: Saturday, March 17, 2018, 16:59 [IST]
Desktop Bottom Promotion