For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மனைவியை சில்லறை காசுகளால் புதுவிதமாக டார்ச்சர் செய்த எக்ஸ் கணவன் - ஆடிப்போன நீதிமன்றம்!

மனைவியை சில்லறை காசுகளால் புதுவிதமாக டார்ச்சர் செய்த எக்ஸ் கணவன் - ஆடிப்போன நீதிமன்றம்!

|

சண்டிகரில் ஒரு வினோத வழக்கு குடும்பநல நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. சமீபத்தில் விவாகரத்த பெற்ற மனைவிக்கு, மாதம் 25 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சமாக அளிக்க வேண்டும் என்று தீர்ப்பு வந்ததையொட்டி, முன்னாள் கணவர், 25 ஆயிரம் ரூபாயில் 24, 600 ரூபாயை ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்களாக அனுப்பி வைத்திருக்கிறார்.

இதனால் கடுங்கோபம் அடைந்த முன்னாள் மனைவி, கணவன் சில்லறை காசுகளை கொடுத்து என்னை டார்ச்சர் செய்கிறார் என்று மீண்டும் நீதிமன்ற வாசலை ஏறி இருக்கிறார்.

நேற்று (ஜூலை 24) நடந்த நீதிமன்ற அமர்வில் இந்த வழக்கை நீதிபதி வரும் ஜூலை 27ம் நாளுக்கு ஒத்திவைப்பதாக கூறியுள்ளார். நீதிபதி இரண்டு நாட்கள் இந்த வழக்கை ஒத்திவைக்க காரணம் என்ன தெரியுமா? அந்த ஆண் கொடுத்த நாணயங்களை சரியாக இருக்கிறதா என்று கண்டறிய.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
துன்புறுத்தல்!

துன்புறுத்தல்!

மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு கொஞ்சம் சுவாரஸ்யமாக நகர்ந்தது. முன்னாள் கணவர் ஒருவர் விவாகரத்து பெற்ற தனது மனைவிக்கு அளிக்க வேண்டிய ஜீவனாம்ச தொகையை சில்லறை காசுகளாக கொடுத்துள்ளார்.

இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற மனைவி, அந்த பையுடன் நீதி மன்றத்தை நாடி, இதுவும் ஒரு வகையில் டார்ச்சர் மற்றும் துன்புறுத்தல் தான். இவர், சட்டத்தை ஏமாற்றுகிறார் என்று கூறியுள்ளார்.

2015!

2015!

இந்த தம்பதியினர் கடந்த 2015ம் ஆண்டே குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தனர். வழக்கின் முடிவில் விவாகரத்து வழங்கிய நீதிமன்றம், கணவரை, மனைவிக்கு மாதம் ரூபாய் 25 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

ஆனால், பணம் இல்லை என்று கூறி அந்த கணவன் கடந்த இரண்டு மாதங்களாக ஜீவனாம்சம் அளிக்காமல் இருந்திருக்கிறார். மேலும், முன்னாள் மனைவி உயர் நீதிமன்றத்தை நாட, கொடுக்க வேண்டிய 50 ஆயிரம் ரூபாயை (இரண்டு மாத நிலுவை) கொடுக்க கூறி தீர்ப்பு வந்துள்ளது.

பணம் இல்லை!

பணம் இல்லை!

ஜீவனாம்ச தொகையை சில்லறை காசுகளாக கொடுத்த முன்னாள் கணவர், தன்னிடம் மாதாமாதம் கொடுக்க அவ்வளவு தொகை இல்லை என்று கூறியுள்ளார். ஆனால், முன்னாள் மனைவியோ.., அவர் கூறுவது சுத்தமான பொய், அவர் ஒரு வழக்கறிஞர். அவரிடம் நிறைய பெரிய நபர்கள் கிளையன்ட்டாக இருக்கிறார்கள்.

மேலும், அவர் பெயரில் நிறைய சொத்துக்கள் இருக்கின்றன. நான் பணம் அவசியமாக தேவை.முன்னர் பல ஒத்திவைப்புகளுக்கு பிறகு பணத்தை கொடுத்தார். இப்போது சில்லறை காசுகளாக கொடுத்துள்ளார். இந்த சில்லறை காசுகளை வைத்து நான் என்ன செய்ய? எந்த வங்கியில் இதை ஏற்றுக் கொள்வார்கள் என்று முன்னாள் மனைவி நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிடுக்குப்பிடி!

கிடுக்குப்பிடி!

ஏற்கனவே வழக்கறிஞராக பணியாற்றிவரும் முன்னாள் கணவன், நீதி மன்றமே ஆடிப்போகும் வகையில்... தீர்ப்பின் எந்த ஒரு இடத்திலும் ஜீவனாம்ச பணத்தை நூறு, ஐநூறு, இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களாக தான் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட வில்லை.

மேலும், இந்த சில்லறைகளை சரியாக எண்ணுவதற்கு என் மூன்று ஜூனியர்கள் வேலை செய்திருக்கிறார்கள் என்றும் நீதிமன்றத்தில் தன் பக்க நியாயத்தை எடுத்துக் கூறி இருக்கிறார்.

கடுப்பான நீதிபதி!

கடுப்பான நீதிபதி!

ரூபாய். 24,600 சில்லறையாக கொடுத்த வழக்கறிஞர் கணவர், மீத நானூறு ரூபாயை நான்கு நூறு ரூபாய் தாளாக கொடுத்திருக்கிறார்.

இந்த வினோத வழக்கை விசாரித்த மாவட்ட செசன்ஸ் நீதிபதி ரஜினிஸ் கே ஷர்மா, அந்த ரூ.24,600 சில்லறை காசுகளை எண்ணி முடிக்க கூறி இருக்கிறார். தற்சமயம் இந்த வழக்கின் அடுத்த ஹியரிங் வரும் ஜூலை 27ம் தேதி ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Advocate Husband Gives His Former Wife Alimony Amount All of it in Coins!

A man from chandigarh, who works as advocate, has given the alimony amout of Rs. 24,600/- all of it in coins. Divorced Ex Wife got angry because of his method.
Desktop Bottom Promotion