கணவன் / மனைவி தகாத உறவில் ஈடுபட தூண்டும் காரணங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

ஒருவர் தகாத உறவில் இணைய உடல் சார்ந்த உறவு தான் காரணம் என்றில்லை, மனம் சார்ந்த அன்பு கிடைக்காத காரணத்தாலும், தன் துணையிடம் இருந்து கிடைக்காத அன்பு வேறு நபரிடம் இருந்து கிடைக்கும் போது சிலர் தகாத உறவில் இணைகின்றனர்.

Things Pushes a Person to Stepping into Illegal Relationship

இதற்கு நேர்மறை காரணங்களும் இருக்கின்றன, எதிர்மறை காரணங்களும் இருக்கின்றன. எதுவாக இருந்தாலும், தங்களுடன் பிடித்த நபருடன் வாழ விரும்புவோர் சட்டப்படி விவாகரத்து செய்து பிறகு இணைவது தான் சரியானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கவர்ச்சி - அழகு - வயது!

கவர்ச்சி - அழகு - வயது!

ஒருவர் தனது துணைக்கு துரோகம் விளைவித்து தகாத உறவில் நுழைய முதன்முதல் காரணமாக அமைவது இந்த கவர்ச்சி, அழகு, வயது தான்.கணவன் மனைவி இடையே இருக்கும் அந்த வயது வித்தியாசம், உடல் கவர்ச்சி அதிகமாக, தாங்கள் விரும்பும் வண்ணம் வேறு நபரிடம் இருந்து கிடைக்கும் போது இந்த தவறு அதிகமாக நடக்கிறது.

கிடைக்காத அன்பு!

கிடைக்காத அன்பு!

தனது துணையிடம் இருந்து கிடைக்காத அன்பும், அக்கறையும் வேறு நபரிடம் இருந்து அதிகமாக கிடைக்கும் போது வேறு நபருடன் உறவில் இணைய விரும்புகிறார்கள். இது தவறென கூற முடியாது. இதற்க முழு காரணம் அன்பு செலுத்தாத அந்த துணை தான்.

கனவுகள் மெய்ப்படும் போது!

கனவுகள் மெய்ப்படும் போது!

சிலர் தங்களுக்கு என ஒரு கனவு வைத்திருப்பார்கள். ஆனால், கால சூழ்நிலையால் அவர்கள் சாதாரணமாக வேறு நபருடன் ஒரு உறவில் இணைய நிர்பந்தம் உண்டாகியிருக்கலாம். ஆனால், சில காலம் கடந்த பிறகு நாம் கனவு கண்டு வைத்திருந்த நபர் தன் கண் முன்னே தோன்றி, தன்னுடன் பழகும் போது அவர்கள் மனதளவில் தடுமாறி வேறு உறவில் இணைகின்றனர்.

பணம், ஆடம்பரம்!

பணம், ஆடம்பரம்!

தான் வேண்டும் பணம் மற்றும் ஆடம்பர வாழ்க்கை வேறு நபரிடம் இருக்கிறது, அதை அனுபவிக்க தகாத உறவை ஒரு கருவியாக சிலர் கையாள்கிறார்கள்.

இச்சை!

இச்சை!

சிலருக்கு மனதளவில் காணும் இன்பதை விட, உடலளவில் காணும் இன்பமே பெரிதாக தெரியும். அவர்கள் உடலுறவு காரணமாக தகாத உறவில் இணைகின்றனர்.

கொடுமைகள்!

கொடுமைகள்!

கணவன் என்று மட்டுமில்லாமல், குடும்ப உறவினர்களும் அளவிற்கு அதிகமாக கொடுமைப்படுத்தும் போது, அவர்கள் மேல் உண்டாகும் எதிர்மறை எண்ணங்கள், பழி வாங்கும் உணர்ச்சி அல்லது நல்ல வாழ்க்கை தேடி அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவர்களை தகாத உறவில் இணைய தூண்டுகிறது.

இதில் என்ன தவறு?

இதில் என்ன தவறு?

தகாத உறவுகள் குறித்து தற்போது சிலர் கூறி வரும் காரணம் இது. தனக்கு பிடித்த நபருடன் நான் உடலுறவில் ஈடுப்படுகிறேன். உறவில் இணைகிறேன். இதில் என்ன தவறு, இது எனது தனிப்பட்ட உரிமை என கூறுகிறார்கள். அப்படியானால் சட்டப்படி விவாகரத்து செய்து விட்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இதை விடுத்து தகாத உறவில் இணைவது தான் பெருங்குற்றமாக மாறுகிறது.

திரில்!

திரில்!

சிலர் வாழ்க்கையில் திரில் வேண்டும் என எண்ணுவார்கள். பலருடன் உறவில் இருப்பது அவர்கள் திரில்லாக எடுத்துக் கொள்கிறார்கள். கலவையான கலாச்சாரங்களின் மத்தியில் வாழும் நபர்கள் திரில் என்ற பெயரில் இது போன்ற உறவில் இணைகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things Pushes a Person to Stepping into Illegal Relationship

Things Pushes a Person to Stepping into Illegal Relationship!
Story first published: Wednesday, February 22, 2017, 14:00 [IST]
Subscribe Newsletter