Latest Updates
-
சனிபகவான் வக்ர நிலை அடைவதால் டிசம்பர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் இவங்கதான் -
தக்காளியுடன் இந்த பொருளை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
செட்டிநாடு ஏழுகறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இந்த மாதிரி நீங்க சாப்பிட்டு இருக்கவே மாட்டிங்க -
இந்த 5 ராசிகளில் பிறந்தவர்களின் தன்னம்பிக்கை மலையை விட பெரிதாம் - இவங்க நினைச்சதை சாதிக்காம விடமாட்டாங்க -
10 வெண்டைக்காய் இருந்தா இந்த மாதிரி அருமையான புலாவ் செய்யுங்க - வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க -
உதட்டில் முத்தம் கொடுக்கும் போது கண்கள் ஏன் தானாக மூடுகிறது தெரியுமா? இதுல இவ்வளவு ரகசியம் இருக்கா? -
புதன் மிதுன ராசிக்குள் நுழைவதால் உருவாகும் பத்ர யோகம் இந்த 3 ராசிகளை ஜெயிக்கிற குதிரையாக மாத்தப்போகுதாம் -
இந்த 4 விஷயங்களை பின்பற்றுபவர்கள் சீக்கிரம் கோடீஸ்வரர் ஆவார்களாம் - சாணக்கியர் சொல்லும் வாழ்க்கை ரகசியம் -
டிபன் கடை ஸ்டைல் கருப்பு உளுந்து சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 07 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு விபத்து நடக்க வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை
தங்கள் மனைவிக்காக, நடிகர் விஜய், அஜித் என்னெல்லாம் பண்ணிருக்காங்க தெரியுமா?
தங்கள் மனைவிக்காக, நடிகர் விஜய், அஜித் என்னெல்லாம் பண்ணிருக்காங்க தெரியுமா?
பெரும்பாலும் நாம் அஜித், விஜயிடம் இருந்து ஸ்டைல், டான்ஸ், நடிப்பு போன்றவற்றை தான் கண்டிருப்போம், ரசித்திருப்போம், சிலர் அவரிகளிடம் இருந்து நடிப்பு, டான்ஸ் போன்றவற்றை கற்றும் இருப்பார்கள். ஆனால், விஜய் மற்றும் அஜித்திடம் இருந்து ரிலேஷன்ஷிப் சார்ந்த சில டிப்ஸ் கூட கற்றுக் கொள்ளலாம்.
அவர்கள் நடித்த படங்களில் இருந்தல்ல, நிஜ வாழ்க்கையில், தங்கள் துணை, குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் இவர்கள் இருவரும் எப்படி நடந்துக் கொள்கிறார்கள். அதன் மூலம் நாம் என்னென்ன கற்றுக் கொள்ளலாம் என்பது குறித்து ஒரு ஸ்பெஷல் தொகுப்பு...

லண்டன் ட்ரிப்!
வருடத்திற்கு ஒரு முறையாவது மனைவி, குழந்தைகளுடன் லண்டன் ட்ரிப் சென்றுவிடுவார் விஜய். அங்கே தனது மனைவி சங்கீதாவின் வீட்டில் ஓய்வெடுத்து, அங்கிருந்து மகன் சஞ்சயின் திட்டத்தின் படி பிற இடங்களுக்கு பயணம் தொடருமாம்.
டிப்ஸ்: நீங்கள் எவ்வளவு பெரிய வேலை, தொழில் செய்துக் கொண்டிருந்தாலும், குடும்பத்துடன் நேரம் ஒதுக்க வேண்டியது மிகவும் அவசியம். நீங்கள் சம்பாதித்து கொடுக்கும் பணத்தை விட, நீங்கள் குடும்பத்துடன் செலவழிக்கும் நேரம் தான் உங்களை ஒரு சிறந்த குடும்ப தலைவனாக திகழ செய்யும்.
மேலும், நீங்கள் குடும்பத்துடன் செல்லும் சின்ன சின்ன பிக்னிக் உறவில் இறுக்கம் பெருகவும், உங்கள் மனம், உடல் மற்றும் உறவின் ஆரோக்கியம் பெருகவும் உதவும்.

பிறந்தநாள்!
படத்தின் ஷூட்டிங் காரணமாக எந்த இடத்திற்கு சென்றிருந்தாலும், தனது பிறந்தநாளின் போது அம்மா மடி அருகே வந்துவிடுவார் விஜய். ஒருபோதும் இதை விஜய் தவறியதே இல்லை. அந்த நாள் முழுக்க அம்மா உடனே தான் இருப்பார்.
டிப்ஸ்: வாழ்க்கை என்பது பணமீட்டுவது மட்டுமல்ல. நல்ல நினைவுகளை மீட்டுவது. நல்ல நாள், விஷேச நாட்களில் கூட நமக்கு பிடித்தவர்களுடன், நம்மை விரும்பும் நபர்களுடம் செலவிட முடியாத வேலை, தேவையே இல்லை. வெறும் பணத்தால் நினைவுகளை வாங்கிட முடியாது. உடன் நல்ல உறவுகளும் இருக்க வேண்டும்.

அம்மா உணவு!
நான்-வெஜ் உணவுகள் என்றால் விஜய்க்கு மிகவும் பிரியம். அதிலும், அம்மா சமைக்கும் அசைவ உணவுகளுக்கு பெரிய ரசிகர். டயட்டை கடினமாக கடைப்பிடிக்கும் விஜய், அம்மாவின் அசைவ சமையலின் போது மட்டும், டயட்டை கொஞ்சம் தளர்த்தி கொள்வாராம்.
டிப்ஸ்: நீங்கள் ஹோட்டலில் சாப்பிடும் உணவிற்கும், அம்மா, மனைவி கைகளில் சாப்பிடும் உணவிற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. என்னதான் உலகின் மோஸ்ட் பெஸ்ட் செஃப் சமைத்து கொடுத்தாலும், அம்மா, மனைவி உணவில் இருக்கும் அன்பும், அக்கறையும் அதில் இருக்காது.
வெறுமென, அவர்கள் சமைத்து போடுவதை சாப்பிடுவதை மட்டும் தவிர்த்து, அவர்களது சமையலை பாராட்டுங்கள். பெரும்பாலும், உப்பு, காரம் குறைவாக இருக்கும் போது குறை கூறுவோமே தவிர, அவர்கள் வாய்க்கு ருசியாக சமைத்து போடும் போது வாய் நிறைய பாராட்டி இருக்க மாட்டோம். உங்கள் வயிறு நிறைந்தால் மட்டும் போதுமா? அவர்களது மனதும் நிறைய வேண்டும் தானே...

டார்லிங்!
தனது காதல் மனைவி ஷாலினியை மிகவும் மரியாதையுடன் நடத்தும் நபர் அஜித். பெரும்பாலும் ஷாலினியை பெயர் சொல்லிக் கூட அழைக்க மாட்டாராம் டார்லிங் என்று மட்டுமே செல்லமாக கூப்பிடுகிறார். அதே போல தான் வீட்டை விட்டு வெளியேறும் போது, ஷாலினியை செல்லமாக ஹக் செய்து லவ் யூ சொல்லி தான் கிளம்புகிறார் அஜித்.
டிப்ஸ்: தனியாக இதிலிருந்து டிப்ஸ் கூற தேவையில்லை. அஜித் பின்பற்றும் இந்த முறையை நீங்களும் பின்பற்றினால், வீட்டில் பெரிதாக சண்டையே வராது. பெரும்பாலான பெண்கள் தங்கள் கணவனுடன் எதிர்பார்ப்பது இது போன்ற சின்ன சின்ன அன்பான விஷயங்கள் தான்.

வேலை!
தனது வேலை மற்றும் இல்லறத்தை சரி பங்காக பிரித்து காண்பவர் அஜித். இரண்டையும் இரு கண்களாகவே வைத்துள்ளார். வீட்டில் வேலையையும், வேலையில் வீடு சார்ந்த விஷயங்களையும் கலந்து தன்னை குழப்பிக் கொள்பவர் அல்ல அஜித்.
அதனால் தான், படத்தை நடித்து முடித்த பிறகு, அதன் வெற்றி, தோல்வி பற்றியோ, ப்ரமோஷன் விஷயங்களுக்கோ அஜித் பெரிதாக தலை காட்டுவதும் இல்லை, கருத்து கூறுவதும் இல்லை.
டிப்ஸ்: ஆண்கள் செய்யும் பெரிய தவறே, வீட்டு டென்ஷனை அலுவலகத்தில் காண்பிப்பது, அலுவலக டென்ஷனை வீட்டில் காட்டுவது. இதனால் வீட்டிலும் பிரச்சனை, அலுவலகத்திலும் பிரச்சனை வரும். எனவே, இதில் நீங்கள் சரியாக கையாள துவங்கினாலே போதும், எல்லாம் சுபமாக அமையும்.

புதுமை!
அஜித் தனது பழைய வீட்டை முழுவதும் இடித்துவிட்டு, டெக்னாலஜியுடன் புதிதாக கட்டியிருக்கிறார். இந்த வீட்டை முழுவதும் ரிமோட் கண்ட்ரோல் மூலமாக இயக்க முடியுமாம்.
டிப்ஸ்: நீங்கள் வீட்டை இடித்து புதுமையாக மாற்ற வேண்டும் என்பதெல்லாம் இல்லை. உங்கள் வீட்டில் இருப்பவரின் விருப்பத்திற்கு ஏற்ப உங்களால் என்ன செய்ய முடியுமோ, அதை தவறாமல் செய்யுங்கள். மனைவி, குழந்தைகளின் விருப்பதை நிறைவேற்றுங்கள். அது போதும். நீங்கள் வீட்டை உங்கள் கண்ட்ரோலில் வைத்து கொள்ளலாம்.

ஆசை!
மனைவி ஷாலினிக்கு பேட்மிட்டன் என்றால் பிரியம். அவரது விருப்பத்திற்கு ஊக்கமளித்து தேவையான அனைத்து வசதிகளும் செய்துக் கொடுத்தார் அஜித். இப்போது அவர் புதுப்பித்துள்ள வீட்டில் கூட, ஷாலினிக்கு தனியாக ஒரு உள்ளரங்க கோர்ட் மற்றும் நடனம் பயிலும் தனது மகளுக்கு தனி டான்ஸ் ஃப்ளோர் அமைத்து கொடுத்துள்ளார் அஜித்.
டிப்ஸ்: உங்கள் மனைவி, குழந்தைகளின் ஆசைகள் என்ன என்பதை கேட்டு, அதை நிறைவேற்றுங்கள். இது அவர்கள் விரும்பும் உடையில் துவங்கி, படிப்பு, வேலை என அனைத்திற்கும் பொருந்தும்.
நான் சொல்றது கேளு என்பதை தவிர்த்து, அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்டு, அதற்கு எப்படி உதவலாம் என செயற்பட்டால்... நீங்களே சிறந்த குடும்ப தலைவன்.



Click it and Unblock the Notifications