For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மூன்று வேளையும் சோறு கிடைக்கும் வரை உங்களுக்கு இது புரியாது!

குடும்பத்திற்காக தன்னை அர்பணித்துக் கொண்ட பெண்மணியின் கதை.

|

வெள்ளிக்கம்பிகள் நிறைந்த தலையை படிய வாரிக்கொண்டே கிட்சனை எட்டிப்பார்த்தார் சிவம். பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. இஸ்திரி போட்டு வைத்திருந்த சட்டையை எடுத்து அணிந்து கொண்டார். இன்னும் வரவில்லை இரண்டு முறை செருமி இருப்பை நினைவுப்படுத்தினார் ஆனால் யாருக்க்கும் அது நினைவுப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை போலும்.

நெற்றியில் திருநீற்றுப்பட்டையை அடித்துக் கொண்டு ஹாலுக்கு வந்துவிட்டார் இன்னமும் வரவில்லை.... ஆரம்ப நிலையில் இருந்த கொதிநிலை மெல்ல உயரே எழும்பிக்கொண்டிருந்து. மெல்ல முணுமுணுத்தார் ஓடுகாலி நாயி எங்க போய் தொலஞ்சாலோ...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எல்லாருக்குமான கடமை :

எல்லாருக்குமான கடமை :

பத்துநிமிடம் கழித்து கையில் காபி வந்ததிருந்தது. கையிலிருக்கும் காபியை விட சிவம் சூடாக இருப்பதை உணர்ந்து கொண்டாள் அந்த தர்ம பத்தினி. 40 வருடங்கள் குப்பைக்கொட்டியவள் ஆயிற்றே வாயை திறக்கவில்லை. காபியை முடித்ததும் இன்னொரு செருமல் அடுத்த நொடி டம்பளர் பத்தினியின் கைகளில் இருந்தது. மனைவி, அம்மா, மாமியார் என எல்லாருக்குமான தனது கடமைகளை முடித்துவிட்டு பாட்டிக்கான கடைமையை செய்து கொண்டிருந்தாள். பேரனை பள்ளியில் சென்று விட வேண்டும், வரும் போது காய்கறி வாங்க வேண்டும் சமைக்கவேண்டும் வரிசையாய் தன் வேலைகளை பட்டியலிட்டுக் கொண்டாள்.

Image Courtesy

மழை :

மழை :

மாலை ஏழு மணிக்கு அந்த தர்மபத்தினிகோவிலுக்கு கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே தூறல் ஆரம்பித்திருந்தது. வெளியில் வந்து பார்த்தவர் பேரனை உள்ளே அழைத்துக் கொண்டு கதவை மூடிக்கொண்டார். இப்போ கோவிலுக்கு ரொம்ப முக்கியம்... நேரங்கெட்ட நேரத்துல தான் எல்லாம் செய்வா என்று மழை வந்ததற்கும் மனைவி மேல் பழி போட்டுக்கொண்டார். இரண்டு மணி நேரமாக விடாமல் மழை பெய்து சதி செய்தது பாவம் தர்மபத்தினி வெளியில் இருக்கிறாள் என்று தெரியவில்லை போலும். அலுவலகத்திலிருந்து வந்தவர்கள் தங்கள் அறைகளில் தஞ்சமடைந்தனர்.

இரவு உணவு :

இரவு உணவு :

ஒன்பது மணிக்கு தொப்பலாய் நனைந்த படி முக்காடிட்டு வாசலில் வந்து நிற்க, இப்டியா நனஞ்சுட்டு வருவா... அறிவில்ல... உன்ன யாரு இந்த நேரத்துல கோவிலுக்கு போகச் சொன்னது... நைட் சாப்பாடு இனிமே தான் பண்ணபோறியா என்று சுற்றிலும் கேள்விகள்... அவர்களுக்கு நடுவே ஹை... பாட்டி பப்பி ஷேம் என்று ஒரு கீச் குரலும் கேட்க தவறவில்லை. நடுங்கிக் கொண்டே தன் அறைக்குச் சென்று புடவையை மாற்றிக் கொண்டு கிட்சனுக்குள் அடைக்களமானாள். ஈரத்தலையை துவட்டக்கூட நேரமில்லை, கட்டியிருக்கும் துண்டை பிரித்து துவட்ட வேண்டும், தலை பாரமாகிக் கொண்டேயிருந்தது. தலை பாரம் முக்கியமா பிள்ளையின் பசி முக்கியமா இரண்டு நிமிஷத்துல இது வெந்துரும் தட்டுல போட்டு போய் எவ்ளோ நேரம் வேணும்னாலும் தலைய துவட்டிக்கலாம் என்று நினைத்துக்கொண்டாள்.

ஆரம்பம் :

ஆரம்பம் :

முந்தைய நாள் இரவு நனைந்ததன் பரிசாக தலைவலியும் ஜலதோஷமும் வந்துவிட்டது. பிடிவாதம் பிடித்தக் கிழவி வெளியில் சொல்லிக் கொள்ள வில்லை. விக்ஸ் டப்பா தீரும் வரை தேய்த்துப்பார்த்தால் கை வைத்தியம் எதேதோ செய்து பார்த்தால் பலனளிக்கவில்லை. தலைக்கவசம் அணிந்தது போல கிண்ணென்று இருந்தது அவளுக்கு ஒரு வாரத்தில் ஜுரமும் சேர்ந்து கொண்டது.

Image Courtesy

ஓய்வு :

ஓய்வு :

இந்நேரத்துக்கு சுக்குமல்லி காபி குடிச்சா நல்லாயிருக்கும்... நோவு எப்ப தீரும்னே தெரியலயே.... பாத்திரம் கிடக்கு..... புள்ளைங்க வந்துரும்... நிம்மதியாய் உறங்கக்கூட முடியவில்லை. புலம்பிக்கொண்டே வேறு வழியில்லை எழுந்து கடமையை செய்யச் சென்றுவிட்டாள். ஒரு வாரமாக அவளுக்கு உடல் நலம் சரியில்லை என்று யாருக்கும் புரியவில்லை தட்டில் வேளா வேளைக்கு சோறு கிடைக்கும் வரை யாருக்கும் புரியப்போவதுமில்லை.

வழக்கத்தை விட உடல் வலி அதிகமாக இருந்தது. மூச்சு விடக்கூட முடியாமல் நெஞ்சை அடைப்பது போல் இருந்தது. மதிய உணவை முடித்துக் கொண்டு படுக்கச் சென்றாள் எப்போதும் மூன்று மணிக்கு எழுந்துவிடும் அவள் ஐந்து மணியாகியும் தூங்கிக் கொண்டிருந்தாள். அறைக்குள் எட்டிப்பார்த்தார். இன்னும் தூங்குகிறாள் சிவத்திற்கு லேசாக கரிசனம் எட்டிப்பார்த்தது எழுப்பாமல் வெளியேறிவிட்டார். மாலை காபி அவ்வளவு முக்கியமல்லவா!

Image Courtesy

காபியும் பஜ்ஜியும் :

காபியும் பஜ்ஜியும் :

காபி சொல்லிவிட்டு காத்திருக்கும் நேரத்தில், எண்ணெய்க் குளியல் முடித்து பளபளப்பாக தட்டில் விழுந்த வாழைக்காய் பஜ்ஜி மீது ஆசை வந்துவிட்டது. சூடாக இரண்டு பஜ்ஜி,தேங்காய் சட்னி தேவாமிருதமாய் நுழைந்தது. முடித்ததும் சர்க்கரை குறைவாக காபி, பஜ்ஜியின் சுவையை குறைத்தாலும் வயிறு நிறைந்துவிட்டது. மெல்ல கால்போன போக்கில் எங்கெங்கேயோ சுற்றிவிட்டு இந்நேரம் எந்திருச்சுருப்பா என்று நினைத்துக் கொண்டே வந்தவருக்கு அதிர்ச்சி இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறாள் மணி ஏழாகிவிட்டது.

நிம்மதி :

நிம்மதி :

எட்டு மணிக்கு மகனும் மருமகளும் நுழையும் போதே, இன்னக்கி ஹோட்டல்ல சாப்டணும்டா. அவளப்பாரு மதியம் 12 மணிக்கு தூங்கப்போனவ இன்னமும் தூங்குறா.... என்று புகார் வாசித்தார். உள்ளே நுழைந்த மகன் எதோ வித்யாசத்தை உணர்ந்தவன் தூங்கிக் கொண்டிருந்தவள் அருகில் சென்று பார்த்தான் கையை தொட்டுப் பார்த்தான். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம் என்று நினைத்து எழுப்பினான் ஜில்லிட்ட உடம்பிலிருந்து எதுவும் பதிலும் வரவில்லை.

வீட்டிற்கு வந்து பார்த்த மருத்துவர் முடிஞ்சு மூணு மணி நேரம் ஆச்சு சார் என்று தலையை தொங்கப்போட்டுக்கொண்டு வெளியேறிவிட்டார். கட்டிலுக்கு அருகில் நின்றிருந்த மகனை தன் பக்கம் இழுத்துக் கொண்ட மனைவியிடம் என்ன சொல்வதென்றே தெரியாமல் அன்னிசையாய் கண்ணீர் வந்து கொண்டிருந்தது தர்மப்பத்தினியின் மகனுக்கு.

உள்ளே நடக்கும் களேபரங்களை வெளியிலிருந்து எட்டிப்பார்த்துக் கொண்டிருந்த சிவம் பேசினார்,

போய்ட்டாளா....

என்ன அவசரம் இப்போ.... எல்லாத்தையும் விட்டுட்டு போய்ட்டா கழுத

பொறுப்பில்லாம விட்டுட்டு போய்ட்டா..

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real life story of a old lady

Here is a real life story of a old woman who sacrificed her life for her family
Desktop Bottom Promotion