Just In
- 1 hr ago
ஓரின சேர்க்கையாளருக்கு ஏற்பட்டுள்ள புதிய ஆரோக்கிய பிரச்சனை என்னவென்று தெரியுமா?
- 5 hrs ago
கட்டுக்கடங்காமல் ஓடும் குதிரையை கட்டுப்படுத்த இந்த இளைஞர் செய்யும் வேலையை நீங்களே பாருங்களேன்…!
- 6 hrs ago
அகோரிகள் ஏன் மனித உடல்களை சாப்பிடுகிறார்கள் தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க...!
- 10 hrs ago
இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா?
Don't Miss
- Automobiles
டிக் டாக் மோகத்தால் நடந்த விபரீதம்.. வேலையையிழந்து பரிதவிக்கும் ஓட்டுநர்...
- Finance
41,000 தொட்டு முடிந்த சென்செக்ஸ்..! 12,075-ஐக்கு மேல் நிறைவடைந்த நிஃப்டி..!
- News
விஜய் திவஸ் டிசம்பர் 16: இந்திய ராணுவத்தின் வரலாற்று பெருமை வாய்ந்த வங்கதேச விடுதலை போர்!
- Sports
தம்பி.. உங்க வண்டவாளம் ஊருக்கே தெரிஞ்சுடுச்சு.. டகால்டி வேலை செய்து வசமாக சிக்கிய வெ.இண்டீஸ் வீரர்!
- Movies
நினைவுகள் மறைவதில்லை... கல்யாண போட்டோவை வெளியிட்டு பிரியதர்ஷன் உருக்கம்
- Technology
சாம்சங் கேலக்ஸி எம்20, எம்30 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.!
- Education
UPSC NDA: யுபிஎஸ்சி என்டிஏ தேர்வு முடிவுகள் வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உடல் பருமனாக இருக்கும் தம்பதிகளிடம் ஏற்படும் இந்த ஒரு பிரச்சனை மிகவும் மோசமானது!
உடல் பருமன் என்பது தான் பலரது கவலை. பள்ளி, கல்லூரி வரை உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தவர்கள் கூட, வேலைக்கு சேர்ந்த பிறகு உடல் பருமனாகிவிடுகிறார்கள். இதற்கு காரணம் உட்கார்ந்தே வேலை செய்யும் முறை தான்.
கணவன் - மனைவி இருவரும் உடல் பருமனாக இருந்தால் அவர்களிடம் ஏற்படும் இந்த ஒரு தாக்கம், அவர்களுடைய இல்வாழ்க்கையில் பூகம்பமாகிவிடுகிறது...

உடல்பருமன் தம்பதி!
மற்றவரோடு ஒப்பிடுகையில் கணவன் - மனைவி இருவரும் உடல்பருமனாக இருந்தால் சீரான மாதவிடாய் சுழற்சியின் போது இருக்கும் கருத்தரிப்பு வாய்ப்புகள் இவர்களுக்கு பாதி அளவு தான் இருக்கும் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது அமெரிக்க தேசிய சுகாதார மையம் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

நீண்ட நாள்!
அமெரிக்க தேசிய குழந்தைகள் நலம் மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனத்தின் சீனியர் ஆய்வாளர் ராஜேஸ்வரி சுந்தரம் முன்னின்று நடத்திய இந்த ஆய்வில் தான் உடல் பருமனாக இருக்கும் தம்பதிகள் கருத்தரிக்க நீண்ட காலம் எடுத்துக் கொள்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.

ஆண், பெண் உடல்பருமன் தாக்கங்கள்!
உடல் பருமனாக இருக்கும் பெண்ணிடம் மாதவிடாய் சுழற்சி கோளாறுகள் காணப்படுகின்றன. உடல் பருமனாக இருக்கும் ஆணிடம் விந்தணு தரம் மற்றும் எண்ணிக்கை கோளாறுகள் உண்டாகின்றன என இதற்கு முந்தைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.

உடல் எடை மற்றும் கருவளம்!
போஸ்டன் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதார பிரிவு எபிடெமியாலஜி பேராசிரியர் லவுரன் வைஸ் இதுகுறித்து கூறுகையில், "உடல் உடை கொண்டு கருவளத்தில் தாக்கம் உண்டாகும். எனவே, ஆரோக்கியமான முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் தம்பதிகள் தங்கள் உடல் எடையில் அக்கறை செலுத்த வேண்டும்" என கூறுகிறார்.

ஆய்வு!
இந்த ஆய்வில் தொடர்ந்து பல மாதவிடாய் சுழற்சி காலத்தில் தம்பதிகளின் கருவளம் மற்றும் கருத்தரிக்கும் வாய்ப்பு ஆய்வு செய்யப்பட்டது. மேலும், ஆய்வாளர்கள் தம்பதிகளின் உடல் வேலைகள், அதற்கான காரணிகளையும் சேர்த்து ஆராய்ந்தனர்.

தம்பதிகள்!
இந்த ஆய்வில் 18 - 48 வயதுடைய 500 தம்பதிகள் பங்கெடுத்துக் கொண்டனர். இதில் அவர்களது வாழ்வியல் முறை, பழக்கவழக்கங்கள் போன்றவை ஆய்வு செய்யப்பட்டது. உடல் பருமனாக இருக்கும் தம்பதிகளிடம் டைப் 2 நீரிழிவு மற்றும் இதய கோளாறுகள் உண்டாகும் வாய்ப்புகளும் அதிகமாக இருக்கின்றன.