For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க வைப் கிட்ட இந்த 7 விஷயத்த கரக்டா பண்ணா, லைப் தூள்டக்கரா இருக்கும்!

பெற்றோரான பிறகும், உறவில் காதல் குலையாமல் பார்த்துக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டியவை!

|

திருமணத்திற்கு பிறகு நண்பர்களுடன் சேர்ந்து பேசும் போது, "ஏன்டா மச்சா நீ வேற, அவ டார்ச்சர் தாங்க முடியல, பேசாம கல்யாணம் பண்ணாமலே இருந்திருக்கலாம் போல..." என்று கூறாத நண்பனே இருக்க முடியாது.

என்னதான் கொஞ்சி, சீராட்டி, மனைவி சிறப்பாக கவனித்துக் கொண்டாலும், எல்லாரும் சொல்றாங்க... நானும் சொல்றேன் என பொண்டாட்டியை குறை கூறும் கணவனின் குணம் மாறவே மாறாது.

இது போக, திருமணமாகி, குழந்தை பிறந்த பிறகு தான் காதலில் கொஞ்சம் விரிசல் எட்டிப்பார்க்க துவங்கும். குழந்தை, வளர, வளர கணவன் - மனைவி காதலிலும் விரிசல் வளரும். இந்த விரிசல் உண்டாகாமல் உறவை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்?

அதற்கு நீங்கள் கடைபிடிக்க வேண்டிய 7 விஷயங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நேரம்!

நேரம்!

குழந்தை பிறந்த பிறகு, உங்களுக்கான நேரம் என்பது கொஞ்சம் பறிபோக துவங்கும். நீங்கள் இருவரும் தனித்தனியே உங்கள் நேரத்தை குழந்தையின் வளர்ப்பு மற்றும் பராமரிப்பில் அதிகம் செலவிடுவீர்கள்.

இதனால், குழந்தை வளர்ந்த பிறகு உங்கள் இருவருக்குள் இருந்த காதலின் அளவு குறைய துவங்கலாம். இதை தவிர்க்க, குழந்தை இல்லாத போது நீங்கள் இருவரும் நேரம் செலவழித்து உங்கள் இருவருக்குள்ளான உறவை புதுப்பித்து கொள்ள வேண்டியது அவசியம்.

இதை கூடலில் மட்டுமின்றி, அரவணைப்பு, அக்கறை, அன்பு என அனைத்திலும் காட்ட வேண்டும்.

பேசுங்க!

பேசுங்க!

காதலித்த போது, திருமணத்தின் ஆரம்பத்தில் உங்கள் மனைவிக்கு மிகவும் பிடித்தமான விஷயமாக இருந்த விஷயம், நீங்கள் அடிக்கடி அவரை பற்றி விசாரித்து கொண்டிருந்ததாக தான் இருக்கும்.

எப்படி இருக்க, சாப்டியா என்பதை தாண்டி, குழந்தை பெற்ற பிறகு பொதுவான விஷயங்கள் நீங்கள் அதிகம் பேசியிருக்க மாட்டீர்கள்.

குழந்தை பெற்ற பிறகு அவர்கள் படங்கள் பார்ப்பதை நிறுத்தியிருக்க மாட்டார்கள், அவர்களுக்கான விருப்ப, வெறுப்புகள் எதுவும் மாறி இருக்காது, எனவே, அதைப்பற்றி பேசி, அதை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துங்கள்.

பாராட்டு!

பாராட்டு!

உங்கள் துணை செய்யும் சின்ன, சின்ன விஷயங்களுக்கும் பாராட்டு தெரிவிக்க மறக்க வேண்டாம். இது வெறும் பாராட்டு மட்டுமல்ல, அவர்களை ஊக்குவிக்கும் மருந்தும் கூட.

பரிசு, புடவைகளை தாண்டி உங்கள் மனைவி உங்களிடம் இருந்து எதிர்பார்க்கும் ஒரே விஷயம் பாராட்டு மட்டும் தான். அதுதான், அவர்களை அடுத்த 24 மணிநேரத்திற்கு குடும்பத்திற்காக நிற்காமல் சுழல வைக்கும்.

ஹாபி!

ஹாபி!

உங்கள் இருவருக்கும் மத்தியில் இருக்கும் பொதுவான பிடித்த செயலை, சேர்ந்து செய்யுங்கள், படம் பார்ப்பது, பாடல் கேட்பது, புத்தகம் வாசிப்பது, சமைப்பது, வாக்கிங் செல்வது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், அதை தனித்தனியாக செய்வதை விடுத்து, ஒன்றாக சேர்ந்து செய்யுங்கள், காதல் மழை விரைவில் பொலியும்.

லவ் யூ!

லவ் யூ!

உங்க மனைவிக்கிட்ட கல்யாணமான ஐந்து வருடத்திற்கு பிறகு, அல்லது குழந்தை பிறந்த ஓரிரு ஆண்டுகளுக்கு பிறகு எத்தனை முறை ஐ லவ் யூ சொல்லி இருப்பீர்கள், ஒரு நாளுக்கு ஒருமுறை?, ஒரு வாரத்திற்கு ஒருமுறை?, ஒரு மாதத்திற்கு ஒருமுறை?

தினமும் சொல்லுங்க பாஸ். இது அவசியமற்ற சண்டையை கூட முடித்து வைக்கும் ஆகசிறந்த கருவி. காசா, பணமா... இன்னைல இருந்து தினமும் சொல்லுங்க! சொல்லி தான் பாருங்களேன்!

மூன்றாம் நபர்!

மூன்றாம் நபர்!

எங்கள் இருவருக்கும் மத்தியில் வேறு யாரும் வரக் கூடாது என எல்லா சமயத்திலும் நாம் கூறிவிட முடியாது. அதிலும், திருமணமான ஐந்தாறு ஆண்டுகளுக்கு பிறகு உங்கள் இருவரை அறிந்த ஒரு மூன்றாம் நபர் அவசியம் தேவை.

சில சமயங்களில் உங்கள் இருவருக்குள் சண்டை வந்தால், அவரவர் நியாயம் மட்டுமே பேசுவீர்களே தவிர, உங்கள் மனைவி / கணவன் மீது இருக்கும் நியாயம், அவர் உங்களுக்கு செய்த காரியங்களை ஈகோ வெளியே பேச மறுக்கும்.

அப்போது, உங்கள் மத்தியில் இருந்து, அந்த சண்டையை தீர்த்து வைக்க ஒரு ஆரோக்கியமான மூன்றாம் நபர் அவசியம் தேவை. அது உங்கள் தோழர்களாக இருக்கலாம், உறவினர்களாக இருக்கலாம்.

மன்னிப்பு!

மன்னிப்பு!

இந்த உலகத்திலேயே மிக பெரிய நல்ல குணம், தயங்காமல் தன்மீதிருக்கும் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்பது தான். அதே, போல மன்னிப்புக் கேட்பவரை மன்னிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

பேருந்தில், ரோட்டில் யாரோ ஊர் பெயர் தெரியாத நபர்களிடம் எளிதாக சாரி என மன்னிப்பு கேட்க துளியும் தயங்காத நாம், நம்முடன் வாழ்க்கையை பகிர்ந்துக் கொண்டுள்ள துணையிடம் மன்னிப்பு கேட்க மட்டும் ஈகோ, கவுரவ குறைச்சல் பார்ப்பது சரியா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Protect Your Love Life Even After Become a Parent?

How To Protect Your Love Life Even After Become a Parent?
Desktop Bottom Promotion