For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தை இல்லாத வாழ்க்கையும் இனிமை தான். எப்படி தெரியுமா?

குழந்தை இல்லாத வாழ்க்கையை எப்படி இனிமையாக வாழ்வது என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது

By Lakshmi
|

திருமணமாகி குழந்தைகளுடன் வாழும் வாழ்க்கை அழகானது. ஆனால் திருமண வாழ்க்கையில் குழந்தைகள் இல்லாமல் போவது கூட அழகானது தான். நீங்கள் தான் உங்கள் வாழ்க்கையை அழகாக்கிக்கொள்ள வேண்டும்.

மருத்துவர் உங்களால் குழந்தை பெற முடியாது என்று கூறியவுடன் உங்கள் வாழ்க்கை நின்று போவதில்லை. முதலில் அந்த உண்மையை புரிந்து கொள்ள சற்று சிரமமாக தான் இருக்கும். அடுத்தது மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற எண்ணம்.

இது சற்று பெரிய பிரச்சனை தான். உங்களை சுற்றி உள்ளவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது. ஆனால் நீங்கள் மற்றவர்களுக்காக வாழ வேண்டாம். உங்களுக்காக வாழுங்கள். இங்கே எப்படி உங்கள் வாழ்க்கையை மற்றவர் கண்டு வியக்கும் படி மாற்றிக்கொள்வது என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

முதலில் உங்கள் வீட்டில் இருக்கும் சோகத்தை வெளியேற்றுங்கள். உங்கள் துணையிடம் பேசி உங்களுக்காக ஒரு குழந்தையை தத்தெடுத்துக்கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் ஆதரவின்றி இருக்கும் ஒரு குழந்தைக்கு தாய் தந்தை பாசம் கிடைக்கும். உங்களுக்கும் பிள்ளை பாசம் கிடைக்கும்.

#2

#2

உங்களது சேமிப்பு தொகையை பயன்படுத்தி வெளியிடங்களுக்கு சென்று வாருங்கள். புது புது இடங்களுக்கு சென்று பலதரப்பட்ட மக்களை சந்திப்பதன் மூலம் உங்களது மனதில் உள்ள சோகங்கள் மறையும்.

#3

#3

செல்ல பிராணிகளை வளர்த்துங்கள். அவை உங்களிடம் குழந்தையை போல பாசமாக நடந்து கொள்ளும். நாய், பூனை, கிளிகள் ஆகியவற்றை வளர்பதன் மூலம் உங்கள் வீடு குதுகலமாக இருக்கும்.

#4

#4

உங்கள் வீட்டில் இருக்கும் சிறிய இடத்தில் காய்கறிகள், பூக்கள் என சில செடிகளை வளர்பதன் மூலம் உங்களது மனம் லேசாகும். இது உங்களது குழந்தை வளர்வதை போல கொஞ்சம் கொஞ்சமாக வளர்வது மனதிற்கு இதமாக இருக்கும்.

#5

#5

உங்களது வாழ்க்கையில் அடைய விரும்பும் இடத்தை அடைய போராடுவதில் முழு கவனத்தையும் செலுத்துங்கள். இதனால் உங்களுக்கு பெயர், புகழ், பணம் அனைத்தும் கிடைக்கும். குறிப்பாக தனிமை உணர்வு குறையும்.

#6

#6

விளையாட்டு தனமான வாழ்க்கை உங்கள் வாழ்வில் உள்ள சோகத்தை போக்கும். உங்களது பொழுதுபோக்குகள், சமையல் கற்றுக்கொள்வது, எழுதுவது, பிடித்த புத்தகத்தை படிப்பது என உங்கள் நேரத்தை உங்கள் துணையுடன் சேர்ந்து கழியுங்கள்.

#7

#7

இறை நம்பிக்கை ஒருவரது மனதை அமைதியாக மாற்றும். இது உங்களது சோகங்களை போக்கி மனதை ஒருநிலைப்படுத்தும். உங்கள் துணைக்கும் இறை நம்பிக்கை இருந்தால், இருவரும் சேர்ந்து கோவில்களுக்கு அடிக்கடி சென்று வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

how to deal with childless marriage

here are the some tips about how to deal with childless marriage
Desktop Bottom Promotion