For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தை வேண்டாம் என்று சொன்ன கணவனுக்காக பெண் செய்த பலே ஐடியா! My story #78

கருவில் இருக்கும் குழந்தைக்கு தாய் எழுதி நெகிழ்சியான கடிதம்.

|

என்னிலிருந்து இந்த உலகிற்கு அறிமுகமாகப்போகும் என் பூந்தளிருக்கு,உன் அம்மா எழுதுவது,

சிறிய ஸ்மைலியும் ஹார்ட் சிம்பளுடன் ஆரம்பிக்கும் இந்த கடிதத்தில் சந்தோஷங்களும் மகிழ்ச்சியும் ஆங்காங்கே தெளித்திருந்தாலும் முழுவதும் வேதனையும் மனக்குமுறலும் நிரம்பியிருக்கிறது. கருவுற்ற ஒரு தாய் தன் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு எழுதி வைத்திருக்கும் கடிதம் தான் இது.

இது கற்பனையன்று.தன் கணவருடனான தன் வாழ்க்கை குறித்து குறிப்பாக குழந்தைப் பேறு தொடர்பாக அவர்களுக்குள் நடந்த விவாதங்களை முன் வைத்து எழுதியிருக்கிறார்.

குழந்தை வேண்டுமென்றாலும் வேண்டாமென்றாலும் யார் முடிவு செய்ய வேண்டும்? ஒவ்வொருவருக்கும் ஒரு பதில் இருக்கும்.கணவன் மனைவிகளில் ஒருவர் வேண்டாமென்று சொல்ல இன்னொருவர் வேணும் என்பார். ஆனால் எங்கள் விஷயத்தில் அப்படியல்ல இருவருமே குழந்தை வேண்டாம் என்று தான் சொன்னோம். அப்படியே முடிவெடுத்திருந்தோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மருத்துவமனை :

மருத்துவமனை :

அன்றைக்கு அலுவலகம் முடிந்து நான் வீட்டிற்கு வருவதற்குள்ளாகவே அவர் வந்திருந்தார்.

வந்துட்டியா... நாளைக்கு என் டீ எல் டாட்டருக்கு ப்ர்த்டே பார்டி போகணும். உனக்கு ஓகே தான? சீக்கிரம் வந்திடலாம்ல

எதுவும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தேன்.

நான் வேணா பிக்கப் பண்ணிக்க வரவா? நம்ம டைரக்டா போய்டலாம்.

......

ஏன் அமைதியா இருக்க? ஆஃபிஸ்ல எதாவது பிரச்சனையா? வர்ற வழில....

நாளைக்கு ஹாஸ்பிடல் போகணும்.

ஏன்? என்னாச்சு? என்ன திடீர்னு

ஐ திங்க் ஐம் ப்ரெக்னண்ட்.

எங்களின் கனவு :

எங்களின் கனவு :

அதன் பிறகு இருவரும் பேசிக்கொள்ளவில்லை. டைனிங் டேபிளில் உட்கார்ந்து இரவு உணவை சாப்பிட்டு முடித்தும் கை கழுவக்கூட தோன்றாமல் அப்படியே உட்கார்ந்திருந்தோம்.

ஆர் யூ சீரியஸ்...எப்டி.... அவரே ஆரம்பித்தார்.

நம்மளோட லைஃப்ல இன்னும் நம்மளோட ட்ரீம்ஸ் அச்சீவ் பண்ணல. இன்னும் நம்ம செட்டில் ஆகல அதுக்குள்ள குழந்தை வந்தா... கண்டிப்பா பாத்துக்க முடியாது. நம்மளோட கனவு எல்லாம் போய்டும்.

மொத்தத்துல சொல்லப்போன நம்மளோட கனவு எல்லாமே சிதஞ்சிடும்.

ஆமோதித்தேன்.

நீ கூட மாஸ்டர்ஸ் படிக்கணும்னு சொன்ன...

எல்லாம் ஒ.கே., இப்போ என்ன பண்றது?

என்ன செய்யலாம் :

என்ன செய்யலாம் :

எங்களுக்கு உன் வருகையை சந்தோசமாக நினைக்கக்கூட முடியவில்லை வேண்டா வெறுப்பாக, அழையா விருந்தாளியை எப்படி துரத்துவது என்று யோசிக்கும் மனநிலையில் தான் இருந்தோம்.

இது தான் ஒரே வழி... வேற ஆப்ஷனே இல்ல...

என்னது?

அபார்ட் பண்ணிரலாம்.

சரி என்று சொல்வதா வேண்டாமென்று சொல்வதா என்று தெரியவில்லை. இப்போது நான் யாருக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்று எதுவும் புரியவில்லை.

இது சரியா? :

இது சரியா? :

அன்றைய இரவு முழுவதும் இருவருக்கும் தூக்கமில்லை. மறு நாள்...

சின்ன சின்ன எமோஷன்ஸ்க்கு எல்லாம் நீ இப்டி பண்ணா நம்ம லைஃப்ல எதையும் அச்சீவ் பண்ணவே முடியாது. சொல்றத கேளு. இது நிதானமா பொறுமையா யோசிக்கிற விஷயம் கிடையாது.

டைம் பார் ஆகிட்டா நம்ம கையில எதுவுமில்ல.

சோ... சீக்கிரம் வேலைய பாரு.

என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறினான்.

மருத்துவரிடம்.. :

மருத்துவரிடம்.. :

இது நம்ம குழந்தையில்லயா? அத விட ஒரு உயிர். அது கொல்றது.... இது சரியா தப்பான்னே என்னால யோசிக்க கூட முடியல.

இதுல யோசிக்க என்ன இருக்கு. நம்ம ட்ரீம் அச்சீவ் பண்ணனும்னா எந்தப் பிரச்சனை வந்தாலும் அதுல இருந்து சீக்கிரம் வெளிய வந்து ஓடணும்.நம்ம ஆரம்பத்துலயே பேசின விஷயன் தான இது? அப்பறம் ஏன் இவ்ளோ யோசனை.

நான் பதிலளிக்கூட அவகாசம் கொடுக்காமல், சாய்ந்தரம் ஹாஸ்பிட்டல் போலாம். சீக்கிரம் வந்துரு என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.

மருத்துவனைக்குச் சென்றோம்.விசாரித்தார், எச்சரித்தார். இல்லை எங்களுக்கு குழந்தை வேண்டாம். என்று இருவருமே உறுதியாகச் சொன்னோம்.

மருத்துவர் என்னிடமும் தனியாக பேசினார். கணவரோ அல்லது அவரது வீட்டினரோ மிரட்டினார்களா என்று கேட்டார்.

அப்படியெல்லாம் எதுவுமில்லை. நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் தான் என்றேன்.

சரி.வர்ற ஞாயிற்றுக்கிழமை பண்ணிடலாம். காலைல பதினோறு மணி போல வந்திடுங்க.

மூன்று நாட்கள் :

மூன்று நாட்கள் :

இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது. நீ இறக்கப்போகிறாய். நான் ஒரு கொலைக்காரி இந்த முடிவு சரியானது தானா? குற்ற உணர்வுடன் இனி வரப்போகும் நாட்களை எப்படி நகர்த்தப்போகிறேனோ என்கிற் பயம் என்னை ஆட்கொண்டு விட்டது.

வெள்ளி இரவு...

ஏய்... நாளைக்கு உடனே பூனே போகணும்... ரொம்ப முக்கியமான மீட்டிங் இப்போ தான் என் டீ எல் மெசேஜ் பண்ணியிருக்காரு... அவரால போக முடியாதாம் சோ..என்னைய போக சொல்லியிருக்காரு

என்னை அணைத்து. இந்த சூழல்ல நான் உன்னைய தனியா விட்டு போகக்கூடாது தான் ஆனா...

நீ தைரியாம இத சமாளிப்பன்னு நம்புறேன். மூணு நாள்ல வந்திடுவேன்.சண்டே.. நீ மட்டும் என்று ஆரம்பிக்க.

தலையாட்டினேன். ஐ வில் மேனேஜ்.

நெற்றியில் முத்தமிட்டான்.

யு.எஸ் ட்ரிப் :

யு.எஸ் ட்ரிப் :

மூன்று நாட்கள் கடந்து புதன் இரவு வீட்டிற்கு வந்தான். இன்னும் ஆறு மாசத்துல நம்ம ஒரு யூ எஸ் ட்ரிப் போகப்போறோம் என்று ஆரம்பித்து மீட்டிங்கில் நடந்த விஷயங்களை பகிர ஆரம்பித்தான்.

நம்ம யு.எஸ் ட்ரிப் போக முடியாது....

ஏன்? லீவ்வா

இல்ல... நான் அபார்ட் பண்ண போகல..

தலைக்கேறிய கோபம் :

தலைக்கேறிய கோபம் :

என்ன சொல்ற? ஏன் போகல எவ்ளோவாட்டி படிச்சு படிச்சு சொன்னேன். டாக்டர்கிட்ட எல்லாம் பேசியாச்சு... ஏன் இப்டி என்று டென்ஷனான்.

இல்ல குழந்தை பெத்துக்கலாம். வேலைக்கு ஆள் வச்சிக்கலாம். ஆபிஸ்ல ஆறு மாசம் வரைக்கும் மெட்டர்னிட்டி லீவ் கிடைக்கும். நான் லாஸ்ட் மன்த் வரைக்கும் வேலைக்கு போறேன் அப்பறம்...

நம்ம சமாளிக்கலாம். ப்ளீஸ்... எனக்கு இதுல கொஞ்சம் கூட விருப்பமில்ல.

அவனுக்கு கோபம் தலைக்கேறியது.

அவன் வரவில்லை... :

அவன் வரவில்லை... :

ஹோ... மேடம் டெசிஷன் எடுத்துட்டீங்களா? இதுவரைக்கும். இந்த ஆறு வருஷம் லைஃப்ல நம்ம எத்தனை விஷயங்கள டிஸ்கஸ் பண்ணியிருக்கோம். லவ் பண்றப்போ எவ்ளோ பிரச்சனைகள சந்திச்சோம் அப்ப எல்லாம் ரெண்டு பேரும் சேர்ந்து தான டெசிசன் எடுத்தோம். ஆனா இப்போ நீ.... மட்டும்

அப்டியில்ல... நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளு என்று சொல்ல சொல்ல கேட்காமல் அப்படியே தான் கொண்டுவந்திருந்த பேக்கினை எடுத்துக் கொண்டு வெளியேறிவிட்டான்.

சரி இரவு வந்துவிடுவான் என்று நினைத்து விட்டுவிட்டேன். அவன் வரவில்லை. ஒரு குறுஞ்செய்தி வந்தது.

டேக் கேர் :

டேக் கேர் :

நண்பனின் வீட்டில் தங்கியிருப்பதாகவும். என் மீது அதீத கோபத்தில் இருப்பதாகவும், என் முகத்தைக்கூட பார்க்க விரும்பவில்லை. இனி நீயே எல்லா முடிவுகளையும் எடுத்துக் கொள் என்று அனுப்யிருந்தான்.

டேக் கேர் என்று அனுப்பி வைத்தேன்.

அலுவலகமும், கீழ் வீட்டிலிருந்த ஹவுஸ் ஓனர் அக்காவும் மிகவும் உறுதுணையாக இருந்தார்கள். அலுவலக நண்பர்கள் என்னை புரிந்து கொண்ட அளவுக்கு கூட என் காதல் கணவன் என்னை புரிந்து கொள்ளவில்லையே என்ற வேதனை தான் அவ்வப்போது என் நினைவுக்கு வந்து அழுத்திக் கொண்டிருந்தது.

ஆறாம் மாதம் :

ஆறாம் மாதம் :

கால் வீங்கியிருந்தது. வாந்தியும் அதிகமாகி இரண்டு நாட்களாக அலுவலகத்திற்கு விடுமுறை சொல்லியிருந்தேன். அலுவலகத்தோழி ஒருத்தி மருத்துவமனைக்குச் அழைத்துச் சொல்கிறேன் என்று சொல்லி வந்திருந்தால்.

காலையிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை என்று சொன்னதால் சாப்பிட எதாவது தயார் செய்கிறேன். சாப்பிட்டுவிட்டு ஹாஸ்பிட்டல் போகலாம் என்று சொல்லி கிட்சனுக்குள் நுழைந்திருந்தாள். நான் சோர்வாக கண்களை மூடி சோஃபாவிலேயே உட்கார்ந்த படியே படுத்திருந்தேன். ஹெட்ஃபோனில் ரஹ்மான் பாடிக் கொண்டிருந்தார்.

இணையத்தில் :

இணையத்தில் :

திடீரென்று என் காலையாரோ தொட்ட உணர்வு திடுக்கிட்டு கண்விழித்தால் என் காலருகில் என் கணவர். அவள் என் இடப்பக்கம் நின்றிருந்தாள். தோல் தட்டி சிரித்துவிட்டு நகர்ந்து கொண்டாள்.

சீரியசா இது இவ்ளோ எமோஷனாலன விஷயம்னு எனக்குப் புரியல... என்று சொல்லி அவனின் அலுவலகத்திலிருந்து சோசியல் சர்வீஸ் செய்ய ஒரு அனாதை ஆசிரமத்திற்கு சென்ற கதையை விவரித்தான்.

குழந்தை பெத்துக்குறது ஒரு பொண்ணுக்கு எவ்ளோ கஷ்டம், அது ஏன் மறுபிறவின்னு சொல்றாங்க... உடல் ரீதியா மனரீதியா எப்டிஎல்லாம் பாதிக்கப்படுவாங்கன்னு எல்லாத்தையும் நெட்ல தேடிப்படிச்சேன்.

பேசுவது பெருமையா? :

பேசுவது பெருமையா? :

இது எல்லாத்தையும் விட ஆபிஸ்,வீடுன்னு ரெண்டையும் நான் சமாளிப்பேன், குழந்தையையும் பாத்துப்பேன். அதோட என் ட்ரீம்ஸ் நோக்கியும் என்னால போக முடியும்னு உன் மேல நீ வச்ச நம்பிக்கைய கூட நான் வைக்கல....

க்ரேட்... யூ ஆர் க்ரேட். இப்போ ரியலைஸ் பண்ணிட்டேன். இவ்ளோ நாள் உன் கூட இல்லாததுக்கு சாரி... நம்ம கண்டிப்பா இந்தக் குழந்தைய பெத்துக்கலாம். உன் கூட எப்பவும் நான் இருப்பேன்.

குழந்தைய பாத்துக்க தனியா ஆள் எல்லாம் வைக்க வேணாம் அப்பா நான் பாத்துப்பேன் என்று சொல்லும் போதே அவன் குரல் உடைந்திருந்தது,

எனக்கு அவன் மனம் மாறியதை நினைத்து சந்தோசப்படுவதா அல்லது அவன் பேசுவதை நினைத்து பெருமைப்படுவதா என்றே தெரியவில்லை.

அப்பா பாத்துப்பேன் :

அப்பா பாத்துப்பேன் :

உன் ட்ரீம்... சந்தோசம் அதெல்லாம்...?

அப்டி கஷ்டப்பட்டு ட்ரீம் அச்சீவ் பண்ணி என்ன பண்ண? ட்ரீம் முக்கியம் தான் அதே சமயம் என்னோட அச்சீவ்மெண்ட்ட கொண்டாடுறதுக்கு கைதட்டி ரசிக்கிறதுக்கு என்னோட நீ இருக்கணும். நம்ம குழந்தையும் இருக்கணும்.

விரைவில் நீ பிறப்பாய்... இதையெல்லாம் படிப்பாய் வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையும் உணர்ந்து கொள்வாய்.

இப்படிக்கு,

உன் அம்மா, அப்பா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

A mother writes a letter to her kid who is in womb

A mother writes a letter to her kid who is in womb
Story first published: Friday, November 24, 2017, 10:07 [IST]
Desktop Bottom Promotion