மற்ற ஆண்கள் மீது மனைவி ஈர்ப்பு கொள்வதற்கான 8 காரணங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

எந்த ஒரு விஷயமும் முகத்திற்கு நேராகவோ, மறைவாகவோ மறைக்காமல் செய்யும் வரை உறவில் எந்த பிரச்சனைகளும் எழ போவதில்லை.

என்று நாம் நமது துணையிடம் சில விஷயங்களை மறைக்கிறோமோ அப்போது தான் சந்தேகங்கள் வளரும். இதன் காரணத்தால் சண்டை சச்சரவுகள் பிறக்கும்.

இதையும் படிங்க: ஆண்களால், படுக்கையறையில் பெண்கள் அசௌகரியமாக உணரும் 9 விஷயங்கள்!

ஆசை என்பது அணைக் கட்டினாலும் தடுக்க முடியாது. ஆனால், மனக்கசப்பு அல்லது கருத்து வேறுபாடு காரணமாக பிடிக்கவில்லை என்றால் நேரடியாக கூறி விவாகரத்து செய்துக் கொண்டு வேறு நபருடன் இணைவது தான் சரியே தவிர.

ஒருவருக்கு தெரியாமல் வேறு நபருடன் இணைய நினைப்பது உணர்வு ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தவறான செயல்.

இதையும் படிங்க: உடலுறவில் ஈடுபடும் போது அழுவது ஏன்? 6 பெண்கள் பகிர்ந்துக் கொண்ட உண்மைகள்!

ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கு கூட திருமணத்திற்கு பிறகு வேறு நபரிடம் ஈர்ப்பு அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கிறது.

இதில், ஓர் பெண் திருமணத்திற்கு பிறகு தன் கணவனை காட்டிலும் வேறு ஆண் மீது ஈர்ப்பு கொள்ள காரணமாக இருக்கும் 8 விஷயங்கள் பற்றி இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரணம் #1

காரணம் #1

உடலுறவு!

தாம்பத்தியம் என்பது ஆரம்பக் காலக்கட்டத்தில் உறவை வலுப்படுத்தும் மிக முக்கியமான கருவியாக இருக்கிறது. இதில், தடை அல்லது மறுப்பு, சரியான ஈடுபாடின்மை போன்றவை வேறு நபர் மீது ஈர்ப்பு கொள்ள ஊக்குவிக்கும் செயலாக இருக்கிறது. இது ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும்.

காரணம் #2

காரணம் #2

எதிர்பார்ப்புகள்!

திருமணத்திற்கு பிறகு தான் இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம் எல்லா பெண்கள் மத்தியிலும் இருக்கும்.

அந்த எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாத சமயத்தில் அவர்கள், தன் துணை மீது வெறுப்பு அடையலாம். இதன் காரணமாக வேறு ஆண் மீது ஈர்ப்பு அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

காரணம் #3

காரணம் #3

கனவு!

திருமணத்திற்கு முன்பே பெண்கள் மத்தியில் தனக்கு வரப்போகும் துணை இப்படி இருக்க வேண்டும். இந்த குணாதிசயங்கள் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசைகள் பல இருக்கும்.

அவை எல்லாம் நிராசையாக மாறும் போது கணவன் மீதான ஈர்ப்பு குறைய வாய்ப்புகள் அதிகம்.

காரணம் #4

காரணம் #4

கொடுமை!

பெரும்பாலும் மனைவிக்கு வேறு ஆண் மீது ஈர்ப்பு அதிகரிக்க காரணமாக் இருப்பது கொடுமைபடுத்துவது, சந்தேகப்படுவது போன்ற குணங்கள் தான். ஆண்களிடம் பெண்கள் அதிகம் வெறுக்கும் குணாதிசயங்கள் இவை.

காரணம் #5

காரணம் #5

வேறு நவரிடமிருந்து கிடைக்கும் அன்பு!

தன் கணவனிடம் இருந்து கிடைக்காத அன்பும், அக்கரையும் வேறு ஆணிடம் இருந்து கிடைக்கும் பட்சத்தில், அந்த ஆண் மீது மனைவிக்கு ஈர்ப்பு அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

காரணம் #6

காரணம் #6

பாதுகாப்பு!

பெண்கள் தன் துணையிடம் பெரிதும் எதிர்பார்ப்பது பாதுகாப்பு தான். அந்த பாதுகாப்பு தன் கணவனிடம் அல்லாமல், வேறு நபரிடம் இருந்து தான் கிடைக்கிறது என்ற பட்சத்தில் அவருக்கு வேறு நபரிடம் ஈர்ப்பு ஏற்படுவதில் ஆச்சரியமில்லை.

காரணம் #7

காரணம் #7

பணம்!

பணம் என்ற குறி மனதில் ஆழ பதிந்துவிட்டால். அது கண்ணை மற்றுமல்ல, மனதையும் கூட குருடாக்கிவிடும்.

தன் துணையிடம் இல்லாத பணம், வேறு நபரிடம் இருந்து கிடைக்கிறது என்பதால் உறவில் இருந்து விலகும் பெண்களும் இருக்கிறார்கள்.

காரணம் #8

காரணம் #8

கண்டுக்கொள்ளாமல் இருப்பது!

தான் என்ன செய்தாலும் கணவன் உணர்வு ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தன்னை கொண்டுக் கொள்ளாமல் இருக்கும் பட்சத்தில் பெண்களுக்கு வேறு ஆண்கள் மீது ஈர்ப்பு அதிகரிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reasons Behind The Extramarital Affair

Reasons Behind The Extramarital Affair, take a look in here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter