ஆணுறைக்கு பதிலாக பிளாஸ்டிக் பை பயன்படுத்திய தம்பதி, ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டனர்!

Posted By:
Subscribe to Boldsky

கருத்தடை மாத்திரைகள், ஆணுறை, காப்பர் டி என கருத்தரிப்பதை தடுக்க எவ்வளவோ முறைகள் இருக்கின்றன ஏன் பண்டைய காலங்களில் கூட பாதரசம், ஆலிவ் எண்ணெய், தேன், வினிகர், டக்கஸ் கரோட்டா போன்றவற்றை பயன்படுத்தியுள்ளனர்.

ஆனால், ஒரு விசித்திர தம்பதி ப்ளாஸ்டிக் பையை உடலுறவுக் கொள்ளும் போது ஆணுறை போன்று பயன்படுத்தி இப்போது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பெற்று வருகின்றனர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வியட்நாம் தம்பதிகள்!

வியட்நாம் தம்பதிகள்!

வியட்நாம் சேர்ந்த ஒரு தம்பதியர் உடலுறவில் ஈடுபடும் போது பிளாஸ்டிக் பையை ஆணுறையாக பயன்படுத்தியதால் காயங்களுடன் அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

கணவன், மனைவி இருவருக்கும் பிறப்புறுப்பு பகுதியில் புண்கள், சிராய்ப்புகள் மற்றும் இரத்தப்போக்கு.

வெட்கம்!

வெட்கம்!

ஆணுறை வாங்க வெட்க்கப்பட்டுக் கொண்டு, பிளாஸ்டிக் பையை பாதுகாப்பு கருதி பயன்படுத்தியதாக அந்த தம்பதி இருவரும் தெரவித்துள்ளனர்.

இது போன்ற முட்டாள்தனமான விஷயங்களில் ஈடுபட துணிவதற்கு பதிலாக, கூச்சம், வெட்கம் பார்க்காமல், ஆணுறை, கருத்தடை வாங்க முற்படலாம்.

ஆண்டி-பயாடிக்!

ஆண்டி-பயாடிக்!

மருத்துவர்கள் அந்த தம்பதிகளுக்கு ஆண்டி-பயாடிக் அளித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்களது பிறப்புறுப்பில் தொற்றுகள் உண்டாகியிருக்கின்றன என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மென்மையானது!

மென்மையானது!

பெண்ணுறுப்பு மிகவும் மென்மையானது. பெண்ணுறுப்பின் வெளி பகுதியை காட்டிலும், உட்பகுதி மிகவும் மென்மையானது.

பிளாஸ்டிக் போன்ற கடுமையான, சொரசொரப்பானவற்றை கொண்டு உடலுறவில் ஈடுபட்டால் காயங்கள் ஏற்படத்தான் செய்யும் என மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.

விழித்த வியட்நாம்!

விழித்த வியட்நாம்!

இந்த கிறுக்குத்தனமான தம்பதிகளின் நடவடிக்கை கண்டு, வியட்நாம் மருத்துவமனை ஒன்று 2,700 பேர் மத்தியில் நடத்திய ஆய்வில், 16% பேர் மட்டுமே ஆணுறை பயன்படுத்துவதாக பதில் கிடைத்தது. 25% பேர் ஆணுறை வாங்க தயக்கமாக உணர்வதாக தெரிவித்துள்ளனர்.

விழிப்புணர்வு!

விழிப்புணர்வு!

இந்த செயலுக்கு பின், வியட்நாமில் பாதுகாப்பான உடலுறவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Couple uses plastic bag instead of a condom, ends up in hospital

Couple uses plastic bag instead of a condom, ends up in hospital!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter