For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகை அதிரவைத்த 10 பெரும் அரசியல் படுகொலைகள்!

|

அரசியல் காரணமாகவும், அரசியலில் பெரும் பதவிகளில் இருந்த போது அவர்கள் கொண்டுவந்த சட்ட திருத்தங்கள் மற்றும் செய்த செயல்கள், முன்விரோதம் என பல காரணங்களால் அரசியல் படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. இதில், பெரும்பாலும் படுகொலை செய்யப்பட்டவர்கள் தேச தலைவர்களாக இருந்தவர்கள்.

நூற்றுக்கணக்கில் கொலை செய்த உலகின் டாப் 10 ரண கொடூரமான சீரியல் கில்லர்ஸ்!!

அதிலும் பலர் பதவியில் இருக்கும் போதே படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில், காந்தியில் துவங்கி, ஜூலியஸ் சீசர் வரை பலரும் இந்த அரசியல் விரோதம் காரணத்தால் படுகொலை செய்யப்பட்டவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவங்கள் எல்லாம் அந்தந்த தேசம் என்பதை தாண்டி உலகையே அதிர வைத்தவை ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 ஆபிரகாம் லிங்கன்

ஆபிரகாம் லிங்கன்

ஆபிரகாம் லிங்கன் தியேட்டரில் நாடகம் பார்த்து கொண்டிருக்கும் போது, அதே நேரத்தில் இவர் ஜான் வில்க்ஸ் பூத் என்பவரால் படுகொலை செய்யப்பட்டார்.

 லார்ட் லூயிஸ் மவுண்ட்பேட்டன்

லார்ட் லூயிஸ் மவுண்ட்பேட்டன்

பிரிட்டிஷ் ராயல் குடும்பத்தை சேர்ந்த லார்ட் லூயிஸ் மவுண்ட்பேட்டன், அயர்லாந்தில் விடுமுறை நாட்களில் இருந்த போது படுகொலை செய்யப்பட்டார்.

 மேல்கோம் எக்ஸ்

மேல்கோம் எக்ஸ்

கருப்பு தேசியவாதியான மேல்கோம் எக்ஸ்-ஐ இஸ்லாம் நாட்டை சேர்ந்த மூவர் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர்.

காந்தி

காந்தி

இந்திய சுதந்திர போராட்ட தலைவரான காந்தியை கோட்சே துப்பாக்கியால் மூன்று சுட்டு படுகொலை செய்தார்.

 ஜான் எப் கென்னடி

ஜான் எப் கென்னடி

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எப் கென்னடியை லோனர் லீ ஹார்வார்ட் என்பவரால் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைக்கான காரணம் மறைக்கப்பட்ட சதி என கூறப்படுகிறது.

 மார்டின் லூதர் கிங்

மார்டின் லூதர் கிங்

குடிவுரிமைக்காக போராடிய தலைவர் மார்டின் லூதர் கிங். இவர் கழுத்தில் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் அமெரிக்கவையே அதிர வைத்தது.

 இந்திரா காந்தி

இந்திரா காந்தி

இந்திய முன்னால் பிரதமர் இந்திராகாந்தி அவரது பாதுகாவலராக இருந்த நபரால் 33 குண்டுகளால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

 ராஜீவ்காந்தி

ராஜீவ்காந்தி

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி, மனித குண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இது இந்தியாவை மட்டுமின்றி உலகையே மிரள வைத்த சம்பவமாக அமைந்தது.

 ஜூலியஸ் சீசர்

ஜூலியஸ் சீசர்

இவரது சபையை சேர்ந்த விரோதிகளே இவரை 23 கத்தியால் குத்தி கொன்றனர்.

 பிரான்ஸ் ஃபெர்டியான்ட்

பிரான்ஸ் ஃபெர்டியான்ட்

ஆஸ்ட்ரோ-ஹங்கேரியன் பேரரசாக இருந்தவர். இவரை போஸ்னியன் பிரிவினைவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது மரணம் முதலாம் உலகப்போர் உண்டாக முக்கிய காரணியாக அமைந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கருப்பட்டி மிட்டாய்..

English summary

Ten Assassinations That Shook The World

Ten Assassinations That Shook The World, take a look.
Desktop Bottom Promotion