For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதலிரவின் போது இந்திய தம்பதிகள் செய்யக்கூடிய 10 விஷயங்கள்!!!

By Ashok CR
|

திருமணமாவதற்கு முன்பாக, பெரும்பாலும் அனைவருமே தங்களின் முதலிரவைப் பற்றி கனவு கண்டிருப்பார்கள். அளவுக்கு அதிகமான எதிர்ப்பார்ப்புகள், அளவுக்கு அதிகமான சந்தோஷம், சற்று நடுக்கம் மற்றும் இதை போன்ற பல விதமான உணர்வுகளை நீங்கள் பெற்றிருப்பீர்கள். பின்ன என்னங்க, பல வீர தீர செயல்கள் புரிய வேண்டிய அற்புதமான இரவல்லவா அது!

ஆனால் நீங்கள் நினைத்ததை போல் அது அமையலாம் அல்லது அமையாமலும் கூட போகலாம். பெரும்பாலான இந்திய தம்பதிகள் தங்கள் முதலிரவின் போது முடிவில்லாத வகையில் உடலுறவில் ஈடுபட வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் அது சாத்தியமாவது வெகு அரிதே!

இன்னும் இதனை அனுபவிக்காதவர்களுக்கு, முதலிரவின் போது என்ன தான் நடக்கும் என வியப்பாக இருக்கலாம். அதனால் முதலிரவின் போது இந்திய தம்பதிகள் செய்யக்கூடிய 10 விஷயங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 மரக்கட்டை போல் உறங்குதல்

மரக்கட்டை போல் உறங்குதல்

இந்திய திருமணங்களின் படி, மிகப்பெரிய சடங்குகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஒரு மிகப்பெரிய பட்டியலாக இருக்கும். அவையனைத்தையும் முடித்த பிறகு யாருக்கு தான் சோர்வாக இருக்காது. மற்றவர்களுக்கே இப்படி என்றால் சம்பந்தப்பட்ட திருமண ஜோடிகளுக்கு கேட்கவா வேண்டும்? அவர்கள் தான் இதனால் மிகவும் பாதிக்கப்படுபவர்கள். அதனால் அவர்கள் தங்கள் முதலிரவு அறைக்குள் நுழையும் போது, எப்போடா படுக்கையில் சாய்ந்து ஆழ்ந்த தூக்கத்தை போடுவோம் என்று தான் நினைப்பார்கள்.

திருமண ஆடைகள் மற்றும் அணிகலன்களை கழற்றுவது

திருமண ஆடைகள் மற்றும் அணிகலன்களை கழற்றுவது

கனமான திருமண ஆடைகளை நீண்ட நேரம் அணிந்து வந்த தம்பதிகள், முதலிரவு அறைக்குள் நுழைந்த உடனேயே அதனை முதலில் கழற்றவே முற்படுவார்கள். அதுவும் மணப்பெண்ணால் அவ்வளவு கனமான ஆடைகளை தனியாக கழற்றுவது என்பது இயலாத விஷயமாகும். பின்ன என்ன, ஆடைகளில் உள்ள ஆயிரக்கணக்கான பின்களை எல்லாம் எடுக்க வேண்டாமா என்ன? முடிவில்லா இந்த அணிகலன்களைக் கழற்ற தங்கள் மனைவிக்கு உதவியே கணவன்மார்கள் அயர்ந்து போவார்கள். இப்படி கதை போகையில், அந்த அறையில் அந்த எண்ணம் உண்டாகுமா என்ன?

கேலி கிண்டல்களை சமாளித்தல்

கேலி கிண்டல்களை சமாளித்தல்

தங்கள் முதலிரவை வீட்டில் கொண்டாடினாலும் சரி, அல்லது ஹனிமூன் சூட்டில் கொண்டாடினாலும் சரி, தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் செய்யும் கேலி கிண்டல்களுக்கு பஞ்சமே இருக்காது. இதனை அனுபவிக்காத தம்பதிகளே இருக்க முடியாது. இந்த கேலிகளும் கிண்டல்களும் போதாதா, தம்பதிகள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வந்த அவர்களின் முதலிரவு கெட்டுப்போவதற்கு? தொலைப்பேசி அழைப்புகள், அலாரம் கடிகாரங்கள், கதவுகளை தட்டுதல் போன்றவைகள் இதற்கு சில உதாரணங்கள். சில தம்பதிகள் இவ்வகையான கேலிகளையும் கிண்டல்களையும் சமாளிப்பதிலேயே தங்கள் முழு இரவையும் செலவழிக்க வேண்டி வரும்.

மனதார பேசுதல்

மனதார பேசுதல்

திருமண நாள் நெருங்கி கொண்டிருக்கும் நேரத்தில், திருமண ஏற்பாடுகள் மற்றும் சடங்குகளுக்கு மத்தியில், பெரும்பாலான தம்பதிகளுக்கு போதுமான அளவு பேசுவதற்கு கூட நேரம் கிடைப்பதில்லை. கடைசியாக, முதலிரவின் போது தான் அவர்களுக்கு அந்த வாய்ப்பே கிடைக்கக்கூடும். நம்பினால் நம்புங்கள், திருமணமான பெரும்பாலானோர் தங்களது முதலிரவை பேசியே தான் கழிப்பார்கள்.

நல்லதொரு குளியலை போடுதல்

நல்லதொரு குளியலை போடுதல்

சேர்ந்தோ அல்லது தனியாகவோ, ஒரு நீண்ட குளியலை போடும் வகையிலும் கூட பெரும்பாலான தம்பதிகள் தங்கள் முதலிரவை கழிப்பார்கள். இது அவர்களின் சோர்வை போக்க உதவதோடு மட்டுமல்லாது, நெருக்கத்தை ஏற்படுத்துவதற்கு மிகச்சிறந்த அனுபவமாகவும் இருக்கும்.

ஷாப்பிங் செய்த பொருட்களை பிரித்தல்

ஷாப்பிங் செய்த பொருட்களை பிரித்தல்

இது கண்டிப்பாக உங்களுக்கு ஆச்சரியமாக தான் இருக்கும், ஆனால் அது தான் உண்மை. பல பெண்களுக்கு தங்களின் ஷாப்பிங் பொருட்களை தங்கள் கணவன்களிடம் காட்டுவதில் அலாதி ஆனந்தம் இருக்கும். அதனால் முதலிரவின் போதே அவர்கள் தங்கள் ஷாப்பிங் பொருட்களை பிரிக்க தொடங்கி விடுவார்கள்.

தேனிலவிற்கு செல்ல மூட்டை முடிச்சுகளை கட்டுதல்

தேனிலவிற்கு செல்ல மூட்டை முடிச்சுகளை கட்டுதல்

ஒரு வேளை, திருமணமான தம்பதிகள் மறுநாளே தேனிலவிற்கு செல்ல வேண்டியிருந்தால், அதற்கு எடுத்துச் செல்ல மூட்டை முடிச்சுகளை எடுத்து வைப்பதை தவிர அவர்களுக்கு வேறு தேர்வே கிடையாது.

திருமண பரிசுகளை பிரித்து பார்த்தல்

திருமண பரிசுகளை பிரித்து பார்த்தல்

திருமணமான தம்பதிகள் தங்கள் முதலிரவை கழிக்கும் மற்றொரு பொதுவான வழி இதுவாகும். முதலில் கேட்பதற்கு இது சந்தோஷம் மிகுந்ததாக தெரியலாம். ஆனால் வீட்டு சாதனங்கள், பாத்திரங்கள், விளக்குகள் போன்ற பொதுவான பரிசுகளை பார்க்கையில் அந்த குதூகலம் எல்லாம் மறைந்தே போகும்.

திருமணத்தைப் பற்றி கலந்துரையாடுதல்

திருமணத்தைப் பற்றி கலந்துரையாடுதல்

முதலிரவின் போது இந்த அற்புதமான பயணத்தில் பயணித்தது பற்றி தம்பதிகள் கலந்துரையாடுவது இயல்பான ஒன்றே. அனைத்து கொண்டாட்டங்கள் மற்றும் நிகழ்வுகளின் போது அவர்கள் கடந்து வந்த அனைத்து அழகிய அனுபவங்களை பற்றியும் அசை போடுவார்கள். அதனால் முதலிரவின் போது அவர்கள் நெருக்கமாவதை விட, நடந்த அனைத்தையும் நினைவு கூறி பொழுதை கழிப்பதில் தான் நேரத்தை செலவிடுவார்கள்.

நம்பிக்கையுடன் உடலுறவை பற்றிய நினைப்புடன் இருப்பது

நம்பிக்கையுடன் உடலுறவை பற்றிய நினைப்புடன் இருப்பது

முதலிரவின் போது பல்வேறு காரணங்களால், செயலில் ஈடுபட முடியாத அனைத்து துரதிருஷ்டவாதிகளும், வழிந்து கொண்டே தூங்கி விடுவார்கள். மறுநாள் விடியற்காலையில் கச்சேரியை வைத்துக் கொள்ளலாம் என்றும் நம்பிக்கையுடன் காத்திருப்பார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ten Things That Indian Couples Actually Do On Their Wedding Night

Here we get you a list of things that Indian couples actually do on their wedding night.
Story first published: Saturday, June 20, 2015, 16:36 [IST]
Desktop Bottom Promotion