Latest Updates
-
சிக்கன் எடுத்தா.. இப்படி மசாலா அரைச்சு கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 05 ஜூலை 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கதவை தட்டப்போகுதாம் -
சுக்கிரன் சூரியன் ஆளும் ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 5 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா தஞ்சாவூர் கொத்சு செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வார ராசிபலன் (05 July 2026-11 July 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்ணை திருமணம் செய்யும் ஆண்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
நெல்லை ஸ்டைல் தேங்காய்ப்பால் கோழி குழம்பு ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
200 ஆண்டுகளுக்கு மேல் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆள்வதற்கு காரணமாக இருந்தது இந்த 5 விஷயங்கள்தான் -
ஐயங்கார் ஸ்டைல் புடலங்காய் பால் கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
செவ்வாய் ரோகிணி நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
திருமண வாழ்க்கை போர் அடிக்காமல் இருக்க தம்பதிகள் தினமும் செய்ய வேண்டிய விஷயங்கள்!!!
திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டுமானால் தம்பதிகள் சில மணிநேரங்களை ஒன்றாக கழிக்க வேண்டும். ஆனால், அது மட்டும் போதுமா? இல்லை, தம்பதிகள் தங்களுக்கிடையில் என்றென்றும் நல்ல உறவை பராமரிக்க பல்வேறு செயல்களைச் செய்ய வேண்டும். இதில் ஒன்றாக நேரத்தைக் கழிப்பது, திருமண பந்தத்தில் மிக முக்கியமான விஷயமாகும். இதன் மூலம் இருவரும், மற்றவரின் விருப்பு, வெறுப்புகளை நன்றாக புரிந்து கொள்ளவும், பிரச்சனைகளை ஏற்படுத்தும் விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் முடியும்.
உறவுகள் குறித்து திரைப்படங்கள் சொல்லும் கதை!
ஒரு உறவை உருவாக்கி வளர்ப்பதென்பது தொடர்ச்சியான விஷயமாகும். இதற்காக தம்பதிகள் தினமும் செய்ய வேண்டிய சில வேலைகள் உள்ளன. இரு வேறுபட்ட உலகத்தைச் சேர்ந்த, இரு மனிதர்கள் என்று புரிந்து கொண்ட போதும், இதற்கு காதலும் அடிப்படையாக இருக்கும். இந்த உறவை சுமூகமாக பராமரிப்பதற்கு மிகப்பெரிய அளவிலான மாற்றங்களை ஒவ்வொருவரும் செய்ய வேண்டியிருக்கும்.
முத்த விஷயத்தில் எப்படியெல்லாம் நாம் சொதப்புகிறோம் என்று தெரியுமா?
இந்த விஷயத்தை நடைமுறையில் கொண்டு வர விரும்பினால், தம்பதிகள் தினமும் சில விஷயங்களை செய்ய வேண்டும். நீங்கள் விரும்பிய ஒரு விஷயத்தை அவர்கள் கொண்டிருந்ததால், அந்த மனிதரின் மேல் காதல் கொண்டிருப்பீர்கள். எனவே நீங்களிருவரும் சேர்ந்து ஒரு செயலைச் செய்வதென்பது ஒன்றும் கடினமாக செயலாக இராது.
அதற்கு தினமும் சில விஷயங்களை தம்பதிகள் பின்பற்றி வந்தால், உங்களுடைய உறவை நன்றாக உருவாக்க முடியும். இங்கு தரப்பட்டுள்ள ஐடியாக்களை முயற்சி செய்து பாருங்கள். அவற்றில் சில உங்களுக்கும் கூட பயனுள்ளதாக இருக்கலாம்.

முத்தம்
நீங்கள் ஒன்றாக இருக்கும் நாளில், ஒரு நாள் கூட முத்தம் கொடுத்துக் கொள்ள மறவாதீர்கள். உங்களுடைய துணையின் மேல் நீங்கள் கொண்டுள்ள காதலை அழகாக வெளிப்படுத்த உதவும் அற்புதமான வழிமுறை இது தான்.

ஒன்றாக நேரத்தை கழியுங்கள்
உறவு வளர்ந்து வரும் நேரத்தில், உங்களிடையே சில ஒற்றுமைகள் இருப்பதை உணர்வீர்கள். தங்களிடையே புதிய விஷயங்களை வளர்க்க விரும்பும் தம்பதிகள், மிகவும் யோசித்து அறிவுப்பூர்வமாக முடிவெடுக்க வேண்டியிருக்கும். பொதுவாக ஈர்ப்பூட்டும் விஷயங்களை நீங்கள் கவனித்துக் கொண்டிருக்கும் போது, நீங்கள் விரும்பும் விஷயங்களும் கூட அவரிடம்/அவளிடம் இருப்பதை அறிந்து ஆச்சரியப்படுவீர்கள். உறவுகளை நீண்ட நாட்களுக்கு நிலைநாட்ட விரும்பும் சிறந்த வழிமுறைகளில் இதுவும் ஒன்றாகும்.

மாற்றங்கள்
ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் இரு நபர்கள் போதுமான அளவிற்கு பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்ள முடியும். சூழலுக்கு ஏற்றபடி உங்களை மாற்றிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டியது நீங்கள் இருவரும் செய்ய வேண்டிய விஷயமாகும். அதற்கு மன்னிக்கும் மனவோட்டத்தை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் மற்றும் ஒருவரையொருவர் அடிக்கடி குறை சொல்லிக் கொள்வதையும் நிறுத்தி விட வேண்டும். ஒன்றாக வாழும் தம்பதியினர் தினமும் செய்ய வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்.

திறமையாக தொடர்பு கொள்ளுதல்
நாட்கள் நகர்ந்து செல்லும் போது, உங்களவரை விரும்புவதாக சொல்லி நெடுநாட்கள் ஆகியிருப்பதை உணர்வீர்கள். இந்த விஷயங்களை நீங்கள் உரக்கச் சொல்ல வேண்டும்; அவர்கள் விரும்பப்படுவதை இந்த செயல் அறியச் செய்யும். இந்த விஷயம் அனைத்து விதமான உணர்வுகளுக்குள்ளும் செல்லும் ஆற்றலை பெற்றுள்ளது. உங்களுடைய உணர்வுகளை எந்தவித மாற்றமும் இல்லாமல், துணைவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த வழிமுறையை தினமும் செய்தால் உறவை காதலுடன் வளர்க்க முடியும்.

உடல் ரீதியான தொடர்பு
உடலின் ஆசைகளைத் தொட வேண்டும். அது மூளையை தூண்டி விடும்! இது தான் மனித இனத்தின் மிகவும் அடிப்படையான குணமாகும். அலுவலகத்திலிருந்து வரும் உங்கள் கணவரை/துணைவியை, வீட்டுக்குள் நுழைந்தவுடன் கட்டிப் பிடித்துக் கொள்ளுங்கள்; வேறு சில நேரங்களில் இந்த விஷயம் இதே வகையில் உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். இதன் மூலம் தம்பதிகள் தங்கள் உறவுகளை உறுதியாக வளர்க்க முடியும்.



Click it and Unblock the Notifications