Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
உங்க செக்ஸ் வாழ்க்கை வேற லெவலில் இருக்க இந்த பண்டைய கால செக்ஸ் முறையை ஃபாலோ பண்ணுங்க...!
பாலியல் அதிருப்தி மற்றும் குறைந்த செக்ஸ் உந்துதல் கொண்ட தம்பதிகள் தாந்த்ரீக உடலுறவை முயற்சி செய்து அவர்களின் பாலியல் இன்பத்தை அதிகரிக்கலாம். இது அவர்களுக்குள் நெருக்கத்தை அதிகரிக்க உதவும்.
எல்லாருடைய வாழ்க்கையிலும் பாலியல் இன்பம் என்பது மிக முக்கியமானது மற்றும் இன்றியமையாதது. ஆண், பெண் உறவை நெருக்கமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க செக்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் கணவன் அல்லது மனைவியுடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும்போது, நீங்கள் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள விரும்பினால், அதற்கு தாந்திரீக செக்ஸ் முறை, உங்களுக்கு உதவும். இது உங்களுடைய செக்ஸ் பரவசத்தை தூண்டுகிறது.
தாந்த்ரீக செக்ஸ் என்பது உங்களுக்கும் உங்கள் கூட்டாளருக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் ஒரு மெதுவான, தியான பாலியல் வடிவமாகும். இது உங்கள் எல்லா புலன்களிலும் கவனம் செலுத்துகிறது மற்றும் மெதுவான சுவாசத்தின் அடிப்படையில் உங்கள் பாலியல் வாழ்க்கையை ஒழுங்குபடுத்துகிறது. வெற்றிகரமான மற்றும் நெருக்கமான வாழ்க்கை முறைக்கு, தாந்திரீக செக்ஸ் முறை எப்படி உதவுகிறது என்பதை இக்கட்டுரையின் மூலம் விரிவாக காண்போம்.

தாந்த்ரீக செக்ஸ் முறை
'தாந்த்ரீக செக்ஸ்' என்பது, உங்களுக்கும் உங்களது துணைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த உதவும் மெதுவான மற்றும் தியான வடிவிலான பாலியல் உறவு ஆகும். இந்த பயிற்சி செய்வதன் நோக்கம் பாலியல் இன்பத்தை வாழ்நாளின் பேரின்பமாக மாற்றுவது. ஒரு நபர் தனது பயம், பதட்டம், கவனச்சிதறல்கள், மன அழுத்தத்தை தவிர்த்து, அவர்களின் மனம், ஆன்மா, உணர்ச்சிகள் மற்றும் பாலியல் ஆசை ஆகியவற்றைத் திறக்க உதவும் ஒரு பண்டையகால நடைமுறை இது. உங்களது எல்லா உணர்ச்சிகளையும் முன்னிறுத்தி, மெதுவான சுவாசித்தலின் மூலம், உங்களது பாலியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள இந்த தாந்திரீக செக்ஸ் முறை உதவுகிறது.

நினைவாற்றல் பயிற்சி
தாந்த்ரீக செக்ஸ் எனபது உங்கள் மனதின் உள் பகுதியுடன் இணைக்க உதவுகிறது. இது உங்களை உங்கள் உள் ஆத்மாவுடன் மீண்டும் இணைக்க உதவுகிறது. உங்களின் ஐந்து புலன்களையும் கட்டுப்பாட்டில் வைத்து, மெதுவாக சுவாசிக்கும்போது, நீங்கள் செய்யும் வழக்கமான பாலியல் செயல்களை விட இந்த செக்ஸ் மிகவும் மகிழ்ச்சிகரமானதாக மாறும்.

மன அழுத்தத்தை நீக்குகிறது
செக்ஸ் உங்களின் மன அழுத்தத்தை குறைத்து, இன்பத்தை தருகிறது. மேலும், பதற்றம் மற்றும் அச்சத்தை நீக்குகிறது. அந்த வகையில், தாந்த்ரீக செக்ஸ் உங்களின் மன அழுத்தம் மற்றும் கவலையை நீக்க உதவுகிறது. இந்த செக்ஸ் முறை உங்கள் எல்லா புலன்களையும் கட்டுப்பாட்டில் வைத்து செயல்படுவதால், இது எந்த உணர்ச்சி அல்லது மன அழுத்தத்தையும் நீக்க உதவுகிறது.

உங்களை உங்கள் கூட்டாளருடன் இணைக்கிறது
தாந்த்ரீக உடலுறவின் முதல் விதி, ஒருவருக்கொருவர் கண்களைப் பார்த்து ஆழமான, மெதுவான சுவாசத்தை எடுக்க வேண்டும். இது உங்களுக்கும் உங்கள் கூட்டாளருக்கும் ஒருவருக்கொருவர் ஆற்றல்களை சேமித்து வைக்க உதவுகிறது மற்றும் மிகவும் நெருக்கமான இணைப்பை உருவாக்க உதவுகிறது. நீங்கள் இன்னும் ஆழமாகச் செல்ல விரும்பினால், உங்கள் கூட்டாளியின் கண்களைப் பார்த்து, உங்கள் இருவரின் ஆற்றல்களுக்கு ஏற்ப செயல்படுங்கள்.

இன்பத்தில் முழுமையன கவனம் செலுத்த உதவுகிறது
உடலுறவு என்பது வெறும் ஐந்து அல்லது பத்து நிமிடத்தில் முடித்துவிடுவதில்லை. உடலுறவை மகிழ்ச்சியாகவும் திருப்திகரமானதாகவும் அனுபவிக்க அதிக நேரம் எடுத்து நன்றாக செயல்படுங்கள். குறைந்த பட்சம், தாந்த்ரீக செக்ஸில் கவனம் செலுத்துங்கள். உங்கள் கூட்டாளியின் உடலை ஆராய்வது உங்கள் இருவருக்கும் மகிழ்ச்சியான அலைகளின் சிற்றலைகளை உருவாக்கும். இது உங்கள் இருவருக்கும் உணர்வுபூர்வமாக திருப்தி அளிக்க உதவும்.

கவலை மற்றும் மன அழுத்தத்தை குறைக்கிறது
அதிக மன அழுத்தம் மற்றும் பதட்டம் பிரச்சினைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு, தாந்த்ரீக செக்ஸ் மிகவும் உதவியாக இருக்கும். இது உடலுறவில் நீங்கள் நன்றாக செயல்பட உதவுகிறது மற்றும் கவலைக்குரிய நபருக்கு ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த உதவுகிறது. மேலும் சிறந்த செயல்திறனுக்காக மெதுவான சுவாசத்தையும் கட்டுப்படுத்துகிறது.

பேரின்பத்தை தருகிறது
தாந்த்ரீக செக்ஸ் அன்பைப் புதுப்பிக்க உதவுகிறது. மேலும், இரண்டு உடல்கள் மற்றும் அவற்றில் வாழும் ஆத்மாக்களின் ஒன்றியத்தைக் கொண்டாடுவதற்கான ஒரு வழியாகவும் இந்த செக்ஸ் முறை மாறுகிறது. இந்த வழியில், தம்பதிகள் உடல், உணர்ச்சி மற்றும் ஆன்மீக மட்டத்தில் இணைக்க முடியும். இது அவர்களுக்கு பேரின்பத்தை கொடுக்கும்.

இறுதி குறிப்பு
பாலியல் அதிருப்தி மற்றும் குறைந்த செக்ஸ் உந்துதல் கொண்ட தம்பதிகள் தாந்த்ரீக உடலுறவை முயற்சி செய்து அவர்களின் பாலியல் இன்பத்தை அதிகரிக்கலாம். இது அவர்களுக்குள் நெருக்கத்தை அதிகரிக்க உதவும். தம்பதிகள் இருவரும் தாந்த்ரீக உடலுறவில் தேர்ச்சி பெறும்போது அவர்கள் மனதையும் ஆன்மாவையும் ஒருவருக்கொருவர் நன்றாக அறியலாம்



Click it and Unblock the Notifications