For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களே! உங்க மனைவி அல்லது காதலி மகிழ்ச்சியாக இருக்க இது மாதிரி செய்யுங்க போதும்...!

|

ஒரு பெண்ணை மகிழ்விப்பது கடினம் என்று மக்கள் கூறுகிறார்கள். பொதுவாக யாரை மகிழ்விப்பதாய் இருந்தாலும், அவர்களை முதலில் புரிந்து கொள்வதுதான் முக்கியம். உங்கள் மனைவி அல்லது காதலியை நீங்கள் எவ்வாறு மகிழ்ச்சியடைய செய்வது என்பது பற்றி யோசிக்கிறீர்களா? அது அவ்வளவு கடினமானதல்ல. உங்கள் மனைவிக்கு சில இனிமையான விஷயங்களைச் செய்வதன் மூலம் நீங்கள் எப்போதும் அவரை மகிழ்விக்க முடியும். மேலும், ஒரு காதலனாக, நீங்கள் ஒருபோதும் உங்கள் காதலியை வருத்தப்படுத்தவோ அல்லது அவளை இருளில் காணவோ விரும்ப மாட்டீர்கள்.

தங்கள உறவு வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழத்தான் அனைவரும் விரும்புவர்கள். இதில், பொதுவாக ஆண், பெண் இருவருக்கும் திருமண தொடக்கத்தில் இருக்கும் மகிழ்ச்சி, அதன் பின்பு இருப்பதில்லை.

நீங்கள் ஏற்கனவே உங்கள் தலையை சொறிந்து, அவளை எந்த வகையில் சந்தோஷப்படுத்த முடியும் என்று யோசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் சரியான இடத்திற்கு வந்துவிட்டீர்கள். ஏனென்றால், உங்கள் மனைவியை பிரியப்படுத்தவும், அவளை மகிழ்விக்கவும் சில அற்புதமான வழிகளை இக்கட்டுரையில் நாங்கள் பட்டியலிட்டுள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அவள் பேசுவதை கேளுங்கள்

அவள் பேசுவதை கேளுங்கள்

உங்களுடன் பேசும் ஒருவரை புறக்கணிப்பது மிகவும் கஷ்டமானதாக இருக்கும். குறிப்பாக அந்த நபர் உங்கள் மீது மிக அன்பாக இருந்தால், அது அவர்களை மிகவும் சங்கடப்படுத்தும். உங்கள் காதலி மகிழ்ச்சியாக இருப்பதற்கான சிறந்த மற்றும் எளிதான வழிகளில் ஒன்று அவள் சொல்வதைக் கேட்பதுதான். சில நேரங்களில், அவள் சொல்வதைக் கேட்பதில் உங்களுக்கு ஆர்வம் இருக்காது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நீங்கள் இப்போது பேசும் மனநிலையில் இல்லை என்பதை அவளுக்குத் தெரியப்படுத்துவது நல்லது. ஆனால் உங்கள் தொலைபேசியைப் பயன்படுத்துவது அல்லது வேறு ஏதாவது செய்வது, அவள் முக்கியமான ஒன்றைப் பற்றி பேசும்போது அல்லது அவளுடைய எண்ணங்களைப் பகிரும்போது நீங்கள் அவளைப் பற்றி கவலைப்படவில்லை என்பதை இது காட்டுகிறது.

ஆண்களின் ஆண்குறி அளவு உடலுறவின்போது பெண்களுக்கு என்ன மாதிரி பிரச்சனைகளை ஏற்படுத்தும் தெரியுமா?

நேர்மையாக இருங்கள்

நேர்மையாக இருங்கள்

எந்தவொரு உறவிலும் நேர்மை என்பது மிக முக்கியமானது. உங்கள் உறவை நீண்ட காலம் நீடிக்கவும், வலுவாக இருக்கவும், நீங்கள் ஒருவருக்கொருவர் நேர்மையாக இருக்க வேண்டியது அவசியம். இது உங்கள் காதலியை மகிழ்ச்சியடையச் செய்யும். பெண்கள் எப்போதும் தங்கள் துணை நேர்மையாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். ஆண்கள் நேர்மையற்றவர்களாக இருக்கும்போது அல்லது சந்தேகத்திற்குரியவர்களாக இருக்கும்போது பெண்கள் வெறுக்கிறார்கள். எனவே, நீங்கள் எப்போதும் உங்கள் பெண்ணை உளவு பார்ப்பவராக இருந்தால் அல்லது அவளுடன் நேர்மையாக இருப்பதில் அக்கறை காட்டாதவராக இருந்தால், நீங்கள் இந்த பழக்கத்தை மாற்றுவது நல்லது.

அன்பை வெளிப்படுத்துங்கள்

அன்பை வெளிப்படுத்துங்கள்

உங்கள் பெண்ணை மகிழ்ச்சியாகவும் நேசிக்கவும் இது மற்றொரு எளிதான வழியாகும். உங்கள் பெண் மீதான உங்கள் அன்பைத் தெரிவிப்பதில் தவறில்லை. நீங்கள் அவளை எவ்வளவு நேசிக்கிறீர்கள், உங்கள் வாழ்க்கையில் அவள் எவ்வளவு அதிர்ஷ்டம் மற்றும் முக்கியம் என்று நீங்கள் எப்போதும் அவளிடம் சொல்லலாம். அவளுடைய கண்களைப் பார்க்கும்போது அவளிடம் சில இனிமையான விஷயங்களைச் சொல்ல முயற்சி செய்யலாம். இது நிச்சயமாக அவளுக்கு மகிழ்ச்சியைத் தரும், மேலும் உங்களுடைய அன்பு ஆழமாக வளரும்.

அவளுக்காக சிறிது நேரம் ஒதுக்குங்கள்

அவளுக்காக சிறிது நேரம் ஒதுக்குங்கள்

உங்கள் காதலிக்காக சிறிது நேரம் ஒதுக்குவதை விட வேறு எதுவும் சிறப்பாக இருக்க முடியாது. நீங்கள் எப்போதும் பரபரப்பான சூழ்நிலையில் இருந்தாலும், அவளுடன் சில தரமான நேரத்தை செலவிட முயற்சிக்கவும். இது அவள் முகத்தில் ஒரு புன்னகையைத் தருவது மட்டுமல்லாமல், அவளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். உங்கள் காதலிக்கு மகிழ்ச்சியைத் தருவதற்காக நீங்கள் இதைச் செய்கிறீர்கள் என்பதை அவள் கவனிப்பாள். ஆதலால், அவள் உன்னை இன்னும் அதிகமாக காதலிப்பாள்.

சுயஇன்பம் செய்வதால் பிறப்புறுப்பு பாதிக்கப்படுமா? உண்மை என்னானு தெரிஞ்சிக்கோங்க...!

நினைவு பரிசுகளை வழங்குங்கள்

நினைவு பரிசுகளை வழங்குங்கள்

நீங்கள் ஒரு வணிக பயணத்திற்கு அல்லது உங்கள் நண்பர்களுடன் சாலை பயணத்திற்கு செல்ல திட்டமிட்டால், உங்கள் காதலிக்காக சில நினைவு பரிசுகளை கொண்டு வருவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது சாக்லேட்டுகள், ஆபரனங்கள், ஒரு கைப்பை போன்ற எது வேண்டுமானாலும் இருக்கலாம். நீங்கள் அவளை நேசிக்கிறீர்கள் என்பதைக் காட்ட இது ஒரு அழகான வழியாகும். நீங்கள் தொலைவில் இருந்தபோதும் அவள் உங்கள் மனதில் இருப்பது தெரிந்தால், இது நிச்சயமாக அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

சில இனிமையான உரைகளை அனுப்புங்கள்

சில இனிமையான உரைகளை அனுப்புங்கள்

உங்கள் பிஸியான சூழ்நிலை காரணமாக அல்லது நீங்கள் தனி நகரங்களில் இருப்பதால் உங்கள் மனைவியுடன் சிறிது நேரம் செலவிட முடியாவிட்டால், நீங்கள் அவளுக்கு சில இனிமையான குறுஞ்செய்திகளை அனுப்ப முயற்சி செய்யலாம். இது நிச்சயமாக உங்களுக்கு வேலை செய்யும். உதாரணமாக, நீங்கள் உங்கள் துணைக்கு சில இனிமையான மேற்கோள்களை உரை செய்யலாம் அல்லது முதல்முறையாக அவளைப் பார்த்தபோது நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள் என்பதை அனுப்பலாம். அவள் எவ்வளவு சிறப்பு வாய்ந்தவள் என்பதையும் நீங்கள் எழுதலாம் அல்லது நீங்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்ட சில இனிமையான நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.

சில இனிமையான குறிப்புகளை எழுதுங்கள்

சில இனிமையான குறிப்புகளை எழுதுங்கள்

இனிமையான செய்திகளை அனுப்புவது அவள் மீதான உங்கள் அன்பை வெளிப்படுத்தவும், அவளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தவும் ஒரு சிறந்த வழியாகும் என்பதில் சந்தேகமில்லை. ஆதலால், அவளுக்காக ஒரு சிறிய குறிப்பை ஏன் எழுத முயற்சிக்கக்கூடாது. காதல் கடிதங்கள் கொஞ்சம் பழமையானதாக தோன்றினாலும், அவை உங்கள் உறவில் அதிசயங்களைச் செய்யலாம். அவளுக்காக உங்கள் உணர்ச்சிகளைக் குறித்து எழுதி, அவளது கைப்பையிலோ அல்லது அவள் அவற்றைக் கண்டுபிடிக்கக்கூடிய இடங்களிலோ நீங்கள் வைக்கலாம். நீங்கள் ஒரு நீண்ட காதல் கடிதம் எழுத வேண்டியதில்லை. அதற்கு பதிலாக, நீங்கள் புன்னகைக்க ‘ஐ லவ் யூ' அல்லது வேறு சில இனிமையான செய்திகளை எழுதலாம்.

பெரும்பாலான ஆண்கள் உடலுறவின்போது உச்சகட்டம் அடைந்ததாக நடிக்கிறார்களாம் ஏன் தெரியுமா?

துணையை மதியுங்கள்

துணையை மதியுங்கள்

நாம் அனைவரும் தங்கள் துணையிடமிருந்து மரியாதையை விரும்புகிறோம். உங்கள் துணையின் அன்பிற்கு உங்கள் துணிச்சலான பக்கத்தைக் காட்டுங்கள். அவளுக்கு ஒரு பண்புள்ளவராக இருங்கள். அவளுடைய உணர்ச்சிகள், எண்ணங்கள், கருத்துகள் மற்றும் தேர்வுகளை மதித்து அவளை மகிழ்விக்க முடியும். இது நீங்கள் அவளை கவனித்துக்கொள்கிறீர்கள் என்று நம்புவதற்கும், அவள் இருக்கும் விதத்தில் அவளை ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் இது உதவும். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு உறவை நீண்ட காலம் நீடிப்பதற்கும் வலுவாக இருப்பதற்கும் மரியாதை மிகவும் தேவைப்படும் காரணியாகும்.

பாராட்டு தெரிவியுங்கள்

பாராட்டு தெரிவியுங்கள்

பெண்கள் தங்கள் கூட்டாளர்களிடமிருந்து பாராட்டுக்களைப் பெற விரும்புகிறார்கள். அது உண்மையானது. ஆகவே, உங்கள் துணைக்கு ஏன் சில பாராட்டுக்களை தெரிவித்து அவளை சந்தோஷப்படுத்தக்கூடாது? அவளுடைய உடல் தோற்றத்தை நீங்கள் எப்போதும் பாராட்ட வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. வேலையில் விஷயங்களை கையாளும் விதத்தையும் அல்லது அவர் உங்களை கவனித்துக்கொள்ளும் முறையையும் நீங்கள் பாராட்டலாம். அவரது தலைமை, தகவல் தொடர்பு மற்றும் பிற திறன்களையும் நீங்கள் பாராட்டலாம். உதாரணமாக, அவள் நன்றாக சமைக்கிறாள் என்றால், அவளைப் பாராட்டுங்கள். இது உங்கள் மனைவிக்கு சிறந்த மகிழ்ச்சியை தரும்.

உணர்வுகளை புரிந்துகொள்ளுங்கள்

உணர்வுகளை புரிந்துகொள்ளுங்கள்

உங்கள் கூட்டாளரை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பது அல்லது சில சமயங்களில் அவளைப் புறக்கணிப்பது, அவளுக்கு குறைந்த மதிப்புடையதாக உணரக்கூடும். அன்பான மற்றும் அக்கறையுள்ள காதலனாக நீங்கள் இதை ஒருபோதும் செய்யக்கூடாது. எனவே, உங்கள் காதலியை நீங்கள் முக்கியமாக உணர வைப்பது நல்லது. இதற்காக, அவள் ஏதாவது சொல்கிறாள் என்றால் அவளுக்கு கவனம் செலுத்துங்கள், அவளுடைய ஆலோசனையைப் பெறவும், அவளுடைய விருப்பங்களை மதிக்கவும், அவளை உங்கள் திட்டங்களில் சேர்க்கவும் முயற்சி செய்ய வேண்டும். ஒரு வேளை, நீங்கள் அவளுடன் உடன்படவில்லை என்றால், அதையும் அவளுக்குத் தெரியப்படுத்தலாம்.

கருத்தடை என்ற பெயரில் பல பெண்களின் உயிரை பலிவாங்கிய அந்தக்கால முட்டாள்தனமான சிகிச்சை முறைகள்...!

உணவை சமைத்து ஆச்சரியப்படுத்துங்கள்

உணவை சமைத்து ஆச்சரியப்படுத்துங்கள்

நீங்களும் உங்கள் காதலிக்கு விருப்பமான உணவை சமைப்பதன் மூலம் அவள் இதயத்தை வெல்ல முடியும். ஏனென்றால், ஆண்கள் மட்டும் உணவை விரும்பவில்லை. பெண்களும் உணவை விரும்புகிறார்கள். எனவே, அவளை மகிழ்விப்பதற்கான வழிகளைப் பற்றி நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், சில சுவையாக உணவை சமைத்து கொடுத்து அவளை ஆச்சரியப்படுத்துவது பற்றி நீங்கள் யோசிக்கலாம். ஆனால் நீங்கள் சமைப்பதில் அவ்வளவு சிறப்பாக இல்லாவிட்டால், இணையத்தில் கிடைக்கும் சமையல் குறிப்புகள் மூலம் உதவி பெறலாம் அல்லது அவளுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்யலாம்.

கடினமான காலங்களில் அவளை ஆதரிக்கவும்

கடினமான காலங்களில் அவளை ஆதரிக்கவும்

சில கடினமான காலங்களில் அவளை ஆதரிப்பதை விட அவளை மகிழ்விப்பதற்கான மற்றொரு வழி என்ன? அவள் கஷ்டப்படும் காலகட்டத்தில், நீங்கள் அவள் கைப்பிடித்து அவளுக்காக இருக்கிறேன் என்று கூறவேண்டும் என்று அவள் எதிர்பார்க்கிறாள். மேலும், இந்த வழியில் நீங்கள் உங்கள் காதலிக்கு சரியான முடிவை எடுப்பதற்கும் அவளுடைய இலக்குகளை அடைவதற்கும் உதவலாம். நீங்கள் குறைந்தபட்சம் அவள் பக்கத்திலேயே தங்கி அவளை மனரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் ஆதரிக்கலாம். உங்கள் மனைவியை மகிழ்விக்க வேறு பல வழிகள் இருக்கலாம். ஆனால் உங்களுடைய ஆதரவுதான் அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி. இது உங்கள் மனைவியை மகிழ்ச்சியடையச் செய்வது மட்டுமல்லாமல், உங்கள் உறவின் வேர்களை பலப்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ways to make your girlfriend feel happy and loved

Here we are talking about the ways to make your girlfriend feel happy and loved.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more