For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தம்பதிகளிடையே உடலுறவில் நெருக்கத்தை அதிகரிக்க இந்த ஈஸியான வழிகளே போதுமாம் தெரியுமா?

|

ஒவ்வொரு வெற்றிகரமான திருமணத்திற்கும் பின்னால், நிறைய படுக்கையறை ரகசியங்கள் உள்ளது. தம்பதியினரிடையே உடல்ரீதியான நெருக்கம் அவர்களுக்குள் இருக்கும் காதலையும், உணர்ச்சிகளையும் உயிருடன் வைத்திருக்கிறது. காதல், நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு ஒரு திருமணத்தில் மிக முக்கியமான தூண்களாக நிற்கும் போது, செக்ஸ் மற்றும் உடல்ரீதியான நெருக்கம் அதற்கு எந்த விதத்திலும் குறைவானது இல்லை.

உங்கள் உறவின் அழகிய தருணங்களை நினைவுபடுத்துவது உங்கள் இருண்டு போன திருமண வாழ்க்கையில் நிச்சயம் ஒளியேற்றும். எனவே உங்கள் திருமணத்தில் அந்த உடல் ஆர்வத்தை மீண்டும் கொண்டு வர உதவும் சில வழிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கட்டியணைப்பது அவசியம்

கட்டியணைப்பது அவசியம்

திருமணமான தம்பதிகள் தங்கள் வாழ்க்கையில் மிகவும் பிஸியாக இருப்பதால் உடலுறவுக்குப் பிறகு கட்டியணைப்பதை மறந்துவிடுகிறார்கள். நீங்கள் கட்டிப்பிடிக்கும்போது, உங்கள் உடலில் அதிக அளவு ஆக்ஸிடாஸின் வெளியிடப்படுகிறது, இது உங்களுக்கும் உங்கள் கூட்டாளருக்கும் இடையே உள்ள அன்பை அதிகரிக்கிறது. மேலும் என்னவென்றால், உங்கள் துணையை அரவணைக்கும்போது நீங்கள் குறைந்த மன அழுத்தத்தையும் நிம்மதியையும் உணர்வீர்கள்.

 உங்கள் தொலைபேசியை அணைக்கவும்

உங்கள் தொலைபேசியை அணைக்கவும்

தம்பதிகள் ஒருவருக்கொருவர் நெருக்கமான தருணங்களை பகிர்ந்து கொள்ள மறந்துவிட்டதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். நீங்கள் இருவரும் படுக்கைக்குச் சென்றபிறகு உங்கள் ஃபோன்களை லாக் செய்து வைப்பது சரியானது, படுக்கையில் உள்ள உடல் நெருக்கத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்

மசாஜ்கள்

மசாஜ்கள்

மெதுவான, சிற்றின்ப மசாஜ் சரியான காரணங்களுக்காக உங்களையும் உங்கள் துணையையும் தூண்டிவிடும். உங்களுக்கு தேவையானது ஒரு சில வாசனை மெழுகுவர்த்திகள், மங்கலான வெளிச்சம், எண்ணெய் மற்றும் ரொமாண்டிக் மூட். உங்கள் துணையின் உடல் தளர்ந்து ஓய்வெடுக்க உங்கள் கைகளை வழிநடத்த வேண்டும். இது உங்கள் இருவருக்கும் இடையேயான பாலியல் இன்பத்தை கடுமையாக அதிகரிக்கலாம்.

நிர்வாணமாகத் தூங்குவது

நிர்வாணமாகத் தூங்குவது

உங்கள் துணையுடன் நிர்வாணமாக தூங்குவதை விட சிறந்தது எதுவுமில்லை. சிலருக்கு இது விசித்திரமாகத் தோன்றினாலும், தங்கள் திருமணத்தில் நெருங்கிய தொடர்பை இழந்த மற்ற ஜோடிகளுக்கு இது சுவாரஸ்யமாகவும், விடுதலையாகவும் இருக்கலாம். நிர்வாணமாக தூங்குவது உங்கள் துணையுடன் மிகவும் தூய்மையான வகையில் உங்களை இணைக்க உதவுகிறது, இது பின்னர் படுக்கையறையில் சிறப்பான அனுபவத்திற்கு வழிவகுக்கலாம்.

கற்பனைகள்

கற்பனைகள்

உங்கள் மனதில் எப்போதும் இருக்கும் பாலியல் கற்பனைகளை முயற்சி செய்ய பயப்பட வேண்டாம். எனவே இப்போது அந்த கற்பனைகளுடன் பரிசோதனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது, ஏனென்றால் நீங்கள் எவ்வளவு அதிகமாக பாலியல்ரீதியாக வெளிப்படையாக இருக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்கள் துணை உங்ர்களின் உணர்ச்சிகளுக்கு பதிலளிக்க முடியும். உடல்ரீதியான, நெருக்கமான கற்பனைகளைப் பகிர்வது கண்டிப்பாக உங்களையும் உங்கள் துணையையும் நெருக்கமாக கொண்டுவரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ways to Increase Physical Intimacy in Your Marriage

Check out the easy ways to increase physical intimacy in your marriage.