For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க முத்தம் உங்கள் காதலியை/மனைவியை மயக்கற மாதிரி இருக்கணுமா? அப்ப இப்படி ட்ரை பண்ணுங்க...!

காதல் மற்றும் உடலுறவில் முத்தம் முக்கியமானது, அதை மறுப்பதற்கில்லை. இது பொதுவாக ஒரு புதிய கூட்டாளருடனான உங்கள் முதல் உடல் தொடர்பாகும்.

|

காதல் மற்றும் உடலுறவில் முத்தம் முக்கியமானது, அதை மறுப்பதற்கில்லை. இது பொதுவாக ஒரு புதிய கூட்டாளருடனான உங்கள் முதல் உடல் தொடர்பாகும். ஒரு மோசமான முத்தம் உங்களை உறவை விட்டு மொத்தமாக வெளியேற்றக்கூட செய்யும். ஆனால் நல்ல முத்தம் எது மோசமான முத்தம் எது என்னவென்பதை எப்படி கண்டறிவது என்பதுதான் குழப்பமான ஒன்றாகும்.

Ways To Improve Your Kissing Skills

உங்களுக்கு மோசமான முத்தம் போல் தோன்றுவது வேறு ஒருவருக்கு நல்ல முத்தமாக இருக்கலாம். இது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. ஆனால் ஒரு பெரிய முத்தத்தின் விளைவு ஒருபோதும் மறக்கப்படாது, மேலும் ஒரு நல்ல முத்தம் உங்களை மேலும் ஏங்க வைக்கும். நீங்கள் முத்தம் கொடுப்பதில் சிறந்தவராக இருக்க விரும்பினால் அதற்கான சில உதவிக் குறிப்புகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எப்போதும் உதடுகளை ஈரப்பதமாக வைத்திருங்கள்

எப்போதும் உதடுகளை ஈரப்பதமாக வைத்திருங்கள்

கரடுமுரடான உதடுகளால் ஒருவரை முத்தமிடுவது மொத்தமாக முத்தத்தை கெடுத்துவிடும். எனவே உங்கள் துணையை முத்தமிடுவதற்கு முன்பு உங்கள் உதடுகளை நன்கு தயார் செய்து கொள்ளுங்கள். நீங்கள் சிக்கலான எதையும் செய்ய வேண்டியதில்லை - ஒரு லிப் தைம் தடவவும். உங்களிடம்கையில் இல்லையென்றால், நீங்கள் ஒரு முத்தம் கொடுப்பதற்கு முன்பு சிறிது தண்ணீரைப் பருகவும், உதடுகளை விரைவாக ஈரப்படுத்தவும்.

முத்தமிடுவதற்கு முன்பு கடுமையான உணவைத் தவிர்க்கவும்

முத்தமிடுவதற்கு முன்பு கடுமையான உணவைத் தவிர்க்கவும்

உங்கள் கூட்டாளருடன் நீங்கள் சரியான மேக்அவுட் செய்ய போகிறீர்கள் என்று தெரிந்தால் கண்டிப்பாக வெங்காயம், பூண்டு, ப்ரோக்கோலி, காபி அல்லது மதுபானம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இந்த பொருட்கள் உங்கள் வாயில் கடுமையான வாசனையை ஏற்படுத்தும். மேலும் அவை உங்களின் அனைத்து திட்டங்களையும் தோல்வியுறச் செய்யும். உங்கள் வாயின் வாசனையை சமநிலைப்படுத்தும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.

மிண்ட் எப்போதும் வைத்திருங்கள்

மிண்ட் எப்போதும் வைத்திருங்கள்

முத்தம் எப்போதும் நிகழும் அதற்கான தருணம் எப்போது அமையும் என்று ஒருபோதும் நமக்கு தெரியாது. எனவே எப்போதும் கையில் மிண்ட் வைத்திருங்கள். ஒருவேளை உங்களிடம் மிண்ட் கைவசம் இல்லையென்றால் சிறிது எலுமிச்சையை சாப்பிடவும். இது சரியான மற்றும் எளிமையான மாற்று வழியாகும். சிட்ரஸ் துர்நாற்றத்தை நடுநிலையாக்கும்.

உதடுகள் மட்டும் முத்தத்திற்கான இடமில்லை

உதடுகள் மட்டும் முத்தத்திற்கான இடமில்லை

ஒரு சிறந்த மேக்அவுட் என்பது கழுத்து, கன்னங்கள், காதுகுழாய்கள், தோள்பட்டை என அனைத்து இடங்களிலும் முத்தம் மற்றும் கடித்தலை உள்ளடக்கியது. இது உங்கள் முத்தத்தைக் காட்டிலும் உங்கள் துணையை முத்தமிடுவதை நீங்கள் எவ்வளவு விரும்புகிறீர்கள் என்பதை உணர்த்தும்.

நாக்குக்கும் உதடுகளுக்கும் இடையில் மாறிக் கொண்டே இருங்கள்

நாக்குக்கும் உதடுகளுக்கும் இடையில் மாறிக் கொண்டே இருங்கள்

சிலர் உதடு முத்தங்களை விரும்புகிறார்கள், மற்றவர்கள் அதிக நாக்கை விரும்புகிறார்கள். க்கள் இந்த வழியில் முத்தமிடுவதற்கான காரணம், அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அல்லது இறுதியில் அவர்கள் விரும்புவதுதான். இரண்டு வழிகளிலுமே, நீங்கள் உங்கள் துணையுடன் செய்ய வேண்டியதாகும். இது உங்கள் காதலை மேலும் அதிகரிக்கும்.

உங்கள் துணையின் வழியை பின்பற்றுங்கள்

உங்கள் துணையின் வழியை பின்பற்றுங்கள்

முத்தத்தில் இறங்குவதற்கு முன்பு இது சமரசம் சார்ந்தது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக உங்களுக்கும் உங்கள் கூட்டாளருக்கும் ஒரே முறை இல்லையென்றால் கண்டிப்பாக ஒருவர் சமரசம் செய்ய வேண்டும். எல்லோரும் ஒரே மாதிரியாக முத்தமிடுவதில்லை, அதனால்தான் பெரும்பாலும் முத்தத்தின் நடுவில் குழப்பம் ஏற்படுகிறது. உங்களை விட உங்கள் துணை நன்றாக முத்தம் கொடுத்தால் கண்ணை மூடிக்கொண்டு அவருக்கு ஒத்துழையுங்கள். இதில் ஈகோவை காட்டாதீர்கள்.

ஒருவரையொருவர் பாராட்டுங்கள்

ஒருவரையொருவர் பாராட்டுங்கள்

" நீங்கள் ஒரு சிறந்த முத்தமிடுபவர்" என்று ஒருவருக்கொருவர் சொல்வதைப் போல எதுவும் முத்தத்தை சிறப்பாக்குவது எதுவுமில்லை. நேர்மையான பாராட்டும், பாசிட்டிவான விமர்சனமும் உங்கள் முத்தத்தை ஒவ்வொரு முறையும் அழகாக்கும்.

உடலுறவுக்கான முதல் படியாக முத்தத்தை நினைக்காதீர்கள்

உடலுறவுக்கான முதல் படியாக முத்தத்தை நினைக்காதீர்கள்

முத்தமிடுவது, சிலருக்கு உடலுறவுக்கு வழிவகுக்கும் என்று பொதுவாக தெரியும் என்றாலும், நீங்கள் அதை அப்படி பார்க்க வேண்டியதில்லை. முத்தம் என்பது தனித்துவம் வாய்ந்தது அதற்கென சில வழிகளும், அழகியலும் உள்ளது. அதனை எப்போதும் செக்ஸ்க்கான முதல் படியாக பார்க்கக்கூடாது. ஏனெனில் இது உங்கள் திருப்தியை பாதிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways To Improve Your Kissing Skills

Read to know how you can become a better kisser.
Story first published: Saturday, November 7, 2020, 16:32 [IST]
Desktop Bottom Promotion