Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
இந்த காதலர் தினத்திற்குள் உங்கள் க்ரஷ்-க்கு உங்களை பிடிக்க வைக்க இந்த சைக்கலாஜிக்கல் தந்திரங்கள் உதவுமாம்!
உங்களுக்கு மிகவும் பிடித்த ஒருவருக்கு உங்களை பிடிக்க வைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அந்த முயற்சியில் நீங்கள் பல சங்கடங்கள், குழப்பங்கள் மற்றும் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம்.
உங்களுக்கு மிகவும் பிடித்த ஒருவருக்கு உங்களை பிடிக்க வைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அந்த முயற்சியில் நீங்கள் பல சங்கடங்கள், குழப்பங்கள் மற்றும் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். உங்கள் க்ரஷ் மீதான உங்கள் உணர்வுகளை அவர்களிடம் வெளிப்படுத்த அதிக தைரியம் வேண்டும்.

நம்பிக்கை, நம்பகத்தன்மை மற்றும் கருத்தில் ஒரு நுட்பமான சமநிலை தேவைப்படுகிறது. ஆனால் நீங்கள் ஒருவரின் கவனத்தை ஈர்க்க விரும்பினால், அதற்கு சைக்காலஜிக்களாக சில தந்திரங்கள் உள்ளன. உங்கள் க்ரஷ் கவனத்தை ஈர்க்க உதவும் சில உளவியல் தந்திரங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

நம்பிக்கையானவராக தோற்றமளியுங்கள்
நம்பிக்கை மிகவும் கவர்ச்சிகரமான பண்பாகும், மேலும் உங்களை அணுகக்கூடியவராகவும் தோன்ற வைக்கும். இருப்பினும், நீங்கள் அதிக ஆக்ரோஷமானவராக அல்லது திமிர்பிடித்தவராக தோற்றமளிப்பதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது உங்கள் க்ரஷை உங்களை விட்டு தொலைவில் நகரத்தும். நேர்மறையான மற்றும் பாதுகாப்பான நடத்தையை பராமரிக்கவும்.

ஆர்வத்தை வெளிப்படுத்துங்கள்
உங்கள் க்ரஷின் வாழ்க்கை மற்றும் ஆர்வங்கள் பற்றிய கேள்விகளை அவர்களிடம் கேளுங்கள், மேலும் அவர்களின் பதில்களைக் கவனமாகக் கேளுங்கள். அவர்களைப் பற்றி அறிந்து கொள்வதில் நீங்கள் எவ்வளவு ஆர்வமாக உள்ளீர்கள் என்பதை இது அவர்களுக்கு வெளிப்படுத்தும். அவர்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதையும் இது காட்டுகிறது.

அவர்களின் உடல் மொழியை பிரதிபலியுங்கள்
உங்கள் க்ரஷின் உடல் மொழியை ஆழ்மனதில் பிரதிபலிப்பது உங்களை எளிதில் தொடர்புபடுத்தக்கூடியவராகவும் ஒத்த எண்ணம் கொண்டவராகவும் தோற்றமளிக்க வைக்கும். ஒருவரின் செயல்களை நீங்கள் பிரதிபலிக்கும் போது, நீங்கள் அவர்களை மதிக்கிறீர்கள் மற்றும் விரும்புகிறீர்கள் என்பதை இது காட்டுகிறது.

அடிக்கடி பாராட்டுங்கள்
ஒருவரின் கவனத்தை ஈர்ப்பதில் பாராட்டுக்கள் சக்திவாய்ந்த கருவியாக இருக்கும். ஆனால் உங்கள் பாராட்டுக்களை புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுங்கள், உங்கள் வார்த்தைகளில் பாசமும் அன்பும் இருக்க வேண்டும். ஒரு நபரின் ஆளுமை அல்லது ஆர்வங்களுக்கு ஏற்ப நீங்கள் பாராட்டுக்களை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஜோக் சொல்லுங்கள்
நகைச்சுவையானது ஒருவருடன் இணைவதற்கும் அவர்களை வசதியாக உணர வைப்பதற்கும் ஒரு சிறந்த வழியாகும். அடிக்கடி வேடிக்கையான மற்றும் சிரிக்க வைக்கும் ஜோக்குகளை சொல்வதன் மூலம் சூழலை இலகுவாகவும், எளிதாகவும் மாற்றக்கூடியவர்களுடன் இருக்க அனைவரும் விரும்புவார்கள். உங்கள் க்ரஷை சிரிக்க வைப்பதில் நீங்கள் வெற்றி பெற்றால், உங்கள் இலக்கை நீங்கள் அடையலாம்.

நேர்மறை ஆற்றல்
நேர்மறை ஆற்றல் மற்றவர்களுக்கும் பரவக்கூடியது. மேலும் நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கும் ஒருவரைச் சுற்றி இருப்பது எப்போதும் கவர்ச்சிகரமானதாக இருக்கும். உங்களிடம் நேர்மறையான ஒளி இருந்தால், உங்கள் க்ரஷ் உட்பட, அனைவரும் தானாகவே உங்களைச் சுற்றி இருக்க விரும்புவார்கள. எனவே அனைத்து வகையான புகார்கள், எதிர்மறைக செய்திகள் மற்றும் வதந்திகளைத் தவிர்க்கவும்.



Click it and Unblock the Notifications