Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
முதலிரவின்போது உங்களுக்கு ஏற்படும் 'இந்த' விஷயத்தை சரிசெய்ய என்ன பண்ணனும் தெரியுமா?
திருமண முதலிரவில் அறைக்குள் சென்றவுடன் விளையாட்டை தொடங்கிவிடக்கூடாது. தம்பதிகள் இருவரும் நம்விட்டு சிறிது நேரம் பேசுங்கள். இருவரின் விருப்பங்களையும் சேர்ந்து பேசுங்கள். முதலில் பேச்சை செக்ஸியா தொடங்குங்கள்.
திருமண நாள் முதலிரவு என்பது மகிழ்ச்சிகரமான ஒன்று. தம்பதிகள் தங்கள் தாம்பத்திய பயணத்தை தொடங்கும் நாள். முதன்முதலாக தம்பதிகள் உடலுறவு கொள்வது அவர்களுக்கு உற்சாகத்தையும் இன்பத்தையும் அளிக்கும். இப்போது திருமணம் செய்யவிருக்கும் தம்பதிகள் முதலிரவை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். உங்கள் திருமண இரவில் முதல்முறையாக உடலுறவு கொள்ளும்போது, பைத்தியக்காரத்தனமான நடுக்கம் மற்றும் பதட்டம் இருப்பது அனைவருக்கும் மிகவும் பொதுவானது. மேலும் முதலிரவில் அனைத்தையும் சரியாக செய்ய வேண்டும் என்பது குறித்து மன அழுத்தம் ஏற்படுவது இயற்கையானது.

எனவே, மணமக்களாக இருப்பதற்கு, நீங்கள் செய்யக்கூடிய முதல் விஷயம் அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும். ஒரு கவர்ச்சியான உள்ளாடைகளை அணிந்து, உங்கள் திருமண இரவில் முதல் முறை உடலுறவுக்கு நீங்கள் தயாராகலாம். முதலிரவில் உங்களுக்கு ஏற்படும் பயத்தையும், நடுக்கத்தையும் கையாளுவதற்கு உதவும் உதவி குறிப்புகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

வித்தியாசமான அனுபவமாக இருக்கும்
முதல்முறையாக உடலுறவு கொள்ளும்போது சில தயக்கங்களும், நடுக்கங்களும் இருப்பது இயல்பு. தம்பதிகளில் பொதுவாக பெண்களுக்கு வலி, சங்கடங்கள் போன்றவை இருக்கும். ஆனால், அதற்காக கவலைப்பட வேண்டாம். உடலுறவு என்பது ஒரு அற்புதமான விஷயம். தம்பதிகள் இருவரும் தங்களுடைய விருப்பங்களை பரிமாறிக்கொள்ளலாம். இது அனைவருக்கும் நடக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான விஷயம். உடலுறவின்போது, சோர்வடைந்துவிட்டால் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் உங்கள விளையாட்டை ஆரம்பிக்கலாம்.

தொடர்பு கொள்ளவும்
திருமண முதலிரவில் அறைக்குள் சென்றவுடன் விளையாட்டை தொடங்கிவிடக்கூடாது. தம்பதிகள் இருவரும் நம்விட்டு சிறிது நேரம் பேசுங்கள். இருவரின் விருப்பங்களையும் சேர்ந்து பேசுங்கள். முதலில் பேச்சை செக்ஸியா தொடங்குங்கள். உடலுறவைப் பற்றி பேசுவதற்கு நீங்கள் கூச்சமாக இருந்தால், உங்கள் எண்ணங்களையும் கவலைகளையும் உங்கள் துணையிடம் தெரிவிக்கவும். துணையின் கவலையை போக்கி அவரை அல்லது அவளை உங்கள் நிலைக்கு கொண்டுவரவும். ஏனென்றால்,உடலுறவில் தம்பதிகள் இருவரும் இன்பத்தை அடையவும் வசதியாக இருப்பதற்கும் தொடர்புகொள்வது, ஆதவாது பேசுவது அவசியம்.

ஓரிரு நாள் காத்திருங்கள்
திருமண நாளின் முதலிரவில் உடலுறவு கொள்ள நீங்கள் மிகவும் பயப்படுகிறீர்கள் என்றால், அதைப் பற்றி உங்கள் துணையுடன் பேசி, நீங்கள் இருவரும் அதை ஓரிரு நாட்கள் தள்ளிப்போடலாம். உடலுறவு குறித்த பயம் மற்றும் தயக்கத்தை போக்கி பின்னர், இருவர் இணைந்து செயல்படலாம். இது உங்கள் இருவருக்கும் இடையே ஆறுதலை அதிகரிக்கும். இந்த செயல் மிகவும் மகிழ்ச்சியான எதிர்பார்க்கப்பட்ட உடலுறவுக்கு உங்களை தயார்படுத்தும்.

பொறுமை வேண்டும்
முதல்முறையாக உடலுறவு கொள்ளும்போது, அது சரியாக இருக்காது. தம்பதிகள் இருவருக்கும் சில தயக்கங்கள் அச்சம், எப்படி கையாள்வது என்று தெரியாமல் இருக்கும். இதனால், நிறைய அதிருப்தியும் ஏமாற்றமும் இருக்கும். ஆனால் உங்கள் செக்ஸ் வாழ்க்கையை முழுமையாக்குவதற்கு பயிற்சியும் நேரமும் தேவை என்பதை அறிந்து கொள்ளுங்கள். காலப்போக்கில், நீங்கள் விரும்பும் மகிழ்ச்சியான உடலுறவை அடைய முடியும்.

கன்னித்தன்மை
உங்கள் கன்னித்தன்மையைப் பற்றி அதிகம் சிந்திக்கவோ அல்லது கவனம் செலுத்தவோ வேண்டாம். இது உங்களை மேலும் பதற்றமடையச் செய்யும். மேலும் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையேயான பாலியல் மனநிலையையும் குறைக்கலாம். உங்கள் கன்னித்தன்மையை இழப்பது சில வலிகளை ஏற்படுத்தலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். ஆனால் அது முடிந்துவிட்டால், உங்கள் திருமண வாழ்க்கையில் பாலியல் இன்பம் மற்றும் சிற்றின்பம் மட்டுமே இருக்கும்.



Click it and Unblock the Notifications