For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களே! 'அந்த' விஷயத்தில் உங்க மனைவியை திருப்திபடுத்த நீங்க 'இத' செஞ்சா போதுமாம்...!

|

இன்றைய பெரும்பாலான தம்பிகளின் முக்கிய பிரச்சனை திருப்தியற்ற உடலுறவு மற்றும் உடலுறவில் சலிப்பு ஏற்படுவது,. தாம்பத்திய வாழ்க்கை சரியாக அமையும்போது, அந்த உறவில் மகிழ்ச்சி நிலைத்து இருக்கும். உங்கள் உறவில் மகிழ்ச்சியை உருவாக்கும் உடலுறவை திருப்திகரமாக்குவது எப்படி என்று நீங்கள் நினைத்தால், அதற்கு பல பதில்கள் கிடைக்கும். ஆனால் நீங்கள் தீவிரமான ஃபோர்ப்ளேவில் ஈடுபட்டிருந்தால் உங்களுடைய செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதை நீங்கள் எப்போதாவது உணர்ந்தீர்களா? ஒரு ஆணாக நீங்கள் படுக்கையில் உங்கள் மனைவியை திருப்திப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி யோசிக்காமல் இருக்கலாம்.

உங்கள் மனைவி அல்லது காதலிக்கு பாலியல் தூண்டுதலை உணர அதிக நேரம் தேவைப்படலாம். ஃபோர்ப்ளேவில் அதிக நேரம் இருக்க தோன்றலாம். ஆகையால், நீங்கள் விரைவாக ஃபோர்ப்ளேவை முடித்துவிட்டு க்ளைமாக்ஸை நெருங்குவது, உங்கள் துணையை பலவீனமடையச் செய்வதற்கான வழியாகும். ஃபோர்ப்ளேவை ஆராய்வதற்கு உங்களுக்கு உதவக்கூடிய சில உதவிக்குறிப்புகளை இக்கட்டுரையை காணலாம். இந்த வழிகள் உங்கள் துணையை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பாலியல் ரீதியாக தூண்ட உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விருப்பங்களை பற்றி பேசுங்கள்

விருப்பங்களை பற்றி பேசுங்கள்

உங்கள் கைகள் உன் மனைவியின் உடலை கட்டிப்போட்டிருக்கும்போது, அவளுக்கு என்ன வேண்டும் அல்லது என்ன விருப்பம் என்று அவளிடம் கேளுங்கள். இது சிறிய விளையாட்டு முதல் நீங்கள் அவளை உச்சக்கட்டத்திற்கு அழைத்து செல்லும் வரை எதுவாகவும் இருக்கலாம். அவள் குறும்பு மற்றும் ஆசைகளை வெளிப்படுத்தும்போது, அவளிடம் உங்களுடைய விருப்பங்களை சொல்லலாம். அவள் உடலுறவை ரசிக்கிறாள் என்பதையும், படுக்கையில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவள் விரும்புகிறாள் என்பதையும் இந்த வழியில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

MOST READ: உடலுறவில் நீங்க உச்சகட்ட இன்பம் அடைய உங்களுக்கு உதவும் ஸ்டேஜ் என்னென்ன தெரியுமா?

குறும்புதனம் செய்யுங்கள்

குறும்புதனம் செய்யுங்கள்

பூட்டிய படுக்கையறையில் மட்டுமே ஃபோர்ப்ளேவை தொடங்க முடியும் என்று யார் சொன்னது? அந்த உணர்வு உங்கள் மனதைத் தாக்கும் எந்த தருணத்திலும் நீங்கள் ஃபோர்ப்ளேவை தொடங்கலாம். உங்கள் மனதில் என்ன நடக்கிறது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதற்கான குறிப்பை உங்கள் துணைக்கு கொடுக்க குறும்பு மெசேஜ்களை நீங்கள் அனுப்பலாம். குறும்பு சில்மிஷ்களையும் நீங்கள் காலையில் இருந்தே உங்கள் மனைவியிடம் தொடங்கலாம். இதன் மூலம் இருவரும் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பே உங்கள் மனைவியை உற்சாகமாக நீங்கள் உணர வைக்கமுடியும்.

கைகள் உடலை ஆராயட்டும்

கைகள் உடலை ஆராயட்டும்

இருவரும் படுக்கையறையில் இருக்கும் தருணம், உங்கள் கைகள் மெதுவாக உங்கள் துணையின் உடலை ஆராயட்டும். அவளுடைய ஆடைகளை அகற்ற உங்கள் கைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அவளுடைய உடலை அவளது ஆடைகளால் மூடலாம். உங்கள் கை அவளது ஆடைகளில் நழுவி அவளது தோலையும் வளைவுகளையும் உணரட்டும். இதை உங்கள் காதலி அல்லது மனைவி மிக விரும்புகிறாள்.

காதுகளில் குறும்பு விஷயங்கள்

காதுகளில் குறும்பு விஷயங்கள்

உங்கள் துணை வெட்கத்தில் கண்ணை மூடிக்கொண்டிருக்கும்போது, அவளுடைய காதில் குறும்பு விஷயங்களை நீங்கள் கிசுகிசுக்கலாம். அடுத்து நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை அவளுக்குத் தெரியப்படுத்துங்கள். அவளுடைய சொற்களை உங்கள் வார்த்தைகளில் விவரிக்கவும், உங்கள் வார்த்தைகளின் மூலம் அவளைத் தூண்ட முடியும். இதை நீங்களும் உங்கள் துணையும் மிகவும் விரும்புவீர்கள்.

MOST READ: உடலுறவுக்கு முன்பு நீங்க செய்யும் 'இந்த' விஷயம்தான் உங்களுக்கு உச்சக்கட்ட இன்பத்தை தருமாம்...!

விளையாட்டை மெதுவாக தொடங்குங்கள்

விளையாட்டை மெதுவாக தொடங்குங்கள்

ஃபோர்ப்ளேவின் போது நீங்கள் அவசரப்பட வேண்டியதில்லை. ஃபோர்ப்ளே ஆரம்பத்தில் மெதுவாகவும் மென்மையாகவும் செயல்படுங்கள். இது விஷயங்களை ஒரு கடினமான முறையில் தொடங்குவது ஒரு திருப்புமுனையாக இருக்கக்கூடும். எனவே ஆரம்பத்தில் அதை மெதுவாக செய்ய முயற்சிக்கவும். உங்கள் துணையின் வெளிப்பாடு மற்றும் பதிலைப் பொறுத்து நீங்கள் அதை சற்று கடினமானதாக மாற்றலாம்.

 செக்ஸ் பொம்மைகள்

செக்ஸ் பொம்மைகள்

நீங்கள் ஃபோர்ப்ளேவில் இன்னும் சில வேடிக்கைகளைச் சேர்க்க விரும்பினால், சில செக்ஸ் பொம்மைகளை வைத்து விளையாட்டலாம். உங்கள் மனைவி ஆதிக்கம் செலுத்துவதை நீங்கள் காண விரும்பினால், இந்த பொம்மைகளை அவள் பொறுப்பேற்க அனுமதிக்கலாம். நீங்கள் செக்ஸ் பொம்மைகளைப் பயன்படுத்தும்போது, முத்தம் கொடுத்தலையும் தொடுதலையும் கைகோர்த்துக் கொள்ளுங்கள். இந்த வழியில் உங்களுக்கு ஒர் அற்புதமான அனுபவம் கிடைக்கும்.

மசாஜ் செய்யுங்கள்

மசாஜ் செய்யுங்கள்

தம்பதிகளுக்கு மசாஜை விட சிற்றின்பம் வேறு என்ன இருக்க முடியும்? நீங்கள் உங்கள் மனைவியின் முதுகில் இருந்து தொடங்கலாம். பின்னர் அவளது இடுப்பு, முதுகு மற்றும் வயிற்று பகுதி என உங்கள் கைகளாலும், நாவாலும் மசாஜ் செய்யலாம். பின்னர் தொடைகள் மற்றும் கணுக்காலிலும் மசாஜ் செய்யலாம். உங்கள் துணையின் மென்மையான சருமத்தை மென்மையாக அணுகுங்கள். மசாஜ் மென்மையாகவும், உணர்ச்சி நிறைந்ததாகவும் இருக்கும்போது, நீங்கள் இருவரும் உடலுறவை மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம்.

MOST READ: காமசூத்ராவில் கூறியுள்ள 'இந்த' விஷயங்கள செஞ்சா... உங்க செக்ஸ் வாழ்க்கை வேற லெவலில் இருக்குமாம்!

உடலை புதிய வழியில் ஆராயுங்கள்

உடலை புதிய வழியில் ஆராயுங்கள்

நீங்கள் இருவரும் நீண்ட காலமாக உடலுறவில் ஈடுபட்டிருந்தாலும், அவளுடைய உடலை முதல் தடவையாக ஆராய்வது போல புதிய வழியை தேடுங்கள். அவளுடைய வளைவு, நெளிவுகளையும், தோலையும் நீங்கள் எத்தனை முறை பார்த்தாலும், அது எப்போதும் உங்களுக்கு புதிதாக இருப்பதாக அவள் உணரட்டும். நீங்கள் மசாஜ் செய்வதற்காக மட்டுமே செய்கிறீர்கள் என்றால், நீங்கள் முழுமையாக இந்த இன்பத்தை அனுபவிக்க முடியாது. உண்மையான அன்போடு விரும்பத்தோடு தொடங்கும்போது, அது உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

இறுதிகுறிப்பு

இறுதிகுறிப்பு

ஃபோர்பிளேவில் அதிக நேரம் செயல்படுங்கள். இது உங்கள் உறவை மேலும் வலுப்படுத்தும். நேரம் எடுத்து ஒவ்வொரு கணமும் இன்பத்தை அனுபவியுங்கள். இந்த வழியில் முயற்சி செய்வது உங்களுக்கும் உங்கள் துணைக்கும் ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். எத்தனை முறை உறவு கொண்டாலும், உங்கள் உறவில் சலிப்பு ஏற்படாது. புதிது புதிதாகச் செயல்பட முயற்சி செய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tips to keep your woman happy in bed

Here we are talking about the tips to keep your woman happy in bed .
Story first published: Wednesday, July 21, 2021, 18:00 [IST]