Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
உங்கள் முன்னாள் காதலன்/காதலியிடம் இந்த வார்த்தைங்கள தெரியாமகூட சொல்லிராதீங்க...!
காதல் தோல்வி என்பது அனைவரது வாழ்விலும் ஏற்படக்கூடிய ஒன்றாகும். ஒருவர் வாழ்வில் காதல் தோல்வி ஏற்படவில்லை எனில் அவர்களை அதிர்ஷ்டசாலிகள் என்றுதான் கூற வேண்டும்.
காதல் தோல்வி என்பது அனைவரது வாழ்விலும் ஏற்படக்கூடிய ஒன்றாகும். ஒருவர் வாழ்வில் காதல் தோல்வி ஏற்படவில்லை எனில் அவர்களை அதிர்ஷ்டசாலிகள் என்றுதான் கூற வேண்டும். சூழ்நிலையால் பிரியும் காதலுக்கும், காதலர்களிடையே ஏற்படும் பிரச்சினையால் ஏற்படும் காதல் தோல்விக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. எப்படி பிரிந்த காதலாக இருந்தாலும் அதனால் வலி ஏற்படும் என்பது மட்டும் மாறாத ஒன்றாகும்.

பிரிந்த காதலர்களிடம் நீங்கள் சொல்ல நினைக்கும் சில விஷயங்கள் இருக்கும். காதல் பிரிய நீங்கள் காரணமாக இருந்தால் நீங்கள் சொல்ல நினைப்பது ஒன்றாகவும், உங்களை அவர்கள் ஏமாற்றி சென்றிருந்தால் அவர்களிடம் சொல்ல நினைப்பது ஒன்றாகவும் இருக்கும். ஆனால் நீங்கள் எப்போதும் உங்கள் முன்னாள் காதலர்களிடம் சொல்லக் கூடாத விஷயங்கள் சில இருக்கிறது. இந்த பதிவில் உங்கள் முன்னாள் காதலர்களிடம் எந்த சூழ்நிலையிலும் நீங்கள் சொல்லக்கூடாத விஷங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

உன்னை மிஸ் செய்கிறேன்
உங்கள் காதல் முறிவதற்கு நீங்கள் காரணமாக இல்லாமல் இருக்கலாம், அதனால் உங்கள் முன்னாள் காதலன்/காதலியை இப்பொழுதும் நீங்கள் விரும்பலாம். ஆனல் நீங்கள் இல்லாமல் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் அவர்களை மிஸ் செய்வதாக கூறுவது முட்டாள்தனமானது. இது உங்களை ஒன்றிணைக்கும் என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் உண்மையில் இவ்வாறு கூறுவது அவர்களை உங்களை விட்டு மேலும் விலக வைக்கும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இன்னும் உன்னை நேசிக்கிறேன்
இப்போதும் அவர்களை நீங்கள் நேசிப்பதாக இருந்தால் அதை அவர்களிடம் கூறாதீர்கள். நீங்கள் இவ்வாறு செய்வது உங்களின் காதலரை மேலும் உங்களை விட்டு விலக வைக்கும். இவ்வாறு நீங்கள் செய்வது உங்க உறவில் இருந்த பழையக் கசப்புகளை மறைய வைக்கும். இது உங்கள் புதிய உறவின் புதிய தொடக்கத்திற்கு வழிவகுக்கும்.

நண்பர்களாக இருக்கலாமா?
இதைப்பற்றி ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். இது ஒரு நல்ல யோசனையாக உங்களுக்கு தோன்றுகிறதா? உங்கள் காதலை மீண்டும் நட்பாக தொடர கண்டிப்பாக நீங்கள் நினைக்க மாட்டிர்கள். மீண்டும் காதலாக தொடரத்தான் நீங்கள் விரும்புவீர்கள். உங்கள் முன்னாள் காதலர்கள் இதற்கு ஒப்புக்கொண்டாலும்நீங்கள் அவர்களை வெறும் நண்பராக பார்க்க முடியாது.

தனிமையில் இருக்கிறேன்
உங்கள் மீது அனுதாபம் வர வேண்டும் என்று நீங்கள் செய்யும் எந்த செயலும் உங்களுக்கு எதிர்மறையான விளைவே ஏற்படும். சாப்பிட முடியவில்லை, தனிமையில் இருக்கிறேன், மனஅழுத்தத்தில் இருக்கிறேன் என்று என்று உங்களை நீங்களே இழந்து விட்டீர்கள் என்று கூறுவது உங்கள் மீதான வெறுப்பைத்தான் அதிகரிக்கும். இதற்கு முயற்சிக்காமல் உங்களின் பாதையை சரியாக அமைத்துக் கொள்ளுங்கள்.

நான் உன்னை காதலித்து இருக்கக்கூடாது
காதல் முறிந்த ஆதங்கத்தில் அனைவரும் இந்த வார்த்தையை உபயோகித்து இருப்பார்கள். அவர்களை மீண்டும் உங்கள் வாழ்க்கையில் கொண்டுவர நீங்கள் நினைத்தால் இந்த வார்த்தை உங்களுக்கு ஒருபோதும் உதவாது. உங்கள் முன்னாள் காதலர்கள் மீது உங்களுக்கு கோபம் இருந்தால் அதனை வேறு வழிகளில் காட்டுங்கள்.

புதிய காதலை பற்றிக் கூறுவது
உங்கள் முன்னாள் காதலரை பொறாமை பட வைக்கிறேன் என்று நீங்கள் செய்யும் இந்த செயல் உங்களுக்கு பாதகமான விளைவையே ஏற்படுத்தும். கொஞ்சமாக பொறாமையைத் தூண்டுவது உபயோகமானதாக இருக்கும், ஆனால் புதிய காதலில் இருப்பது போலவும் அவர்கள் உங்கள் முன்னாள் காதலரை விட சிறப்பானவராக இருக்கிறார்கள் என்று கூறுவதும் முட்டாள்த்தனத்தின் உச்சம்.

நீ என்னை நடத்திய விதத்தை வெறுக்கிறேன்
கோபமும், மோதலும் உங்கள் காதலை அழிப்பதற்கான வழியாகும். உங்கள் காதலன்/காதலி உண்மையிலேயே உங்களை நடத்திய விதம் உங்களுக்கு அசௌகரியமாக இருந்தால் நீங்கள் அவர்களுடன் மீண்டும் இணைவதில் எந்த அர்த்தமும் இல்லை. உங்கள் காதலர்களின் உணர்ச்சியை தூண்டுவதற்கு இதனை பயன்படுத்தினால் அது சரியான யோசனை அல்ல. உங்கள் முன்னாள் காதலரை கோபப்படுத்துவதை தவிர்க்கவும், இது உங்கள் மனக்கசப்பை அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications