For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்கள் உடலுறவில் உச்சக்கட்டத்தை அடைய அவர்கள் ஆண்களிடம் எதிர்பார்க்கும் விஷயங்கள் என்ன தெரியுமா?

|

உடலுறவைப் பொறுத்தவரை உச்சக்கட்டம் என்பது பாலியல் இன்பத்தின் உச்சமாக கருதப்படுகிறது. மேலும், இது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே வேறுபடுகிறது. பெண்களின் உச்சக்கட்டம் பொதுவாக ஆண்களை விட நீண்ட காலம் நீடிக்கும் மற்றும் ஆண்களைப் போலல்லாமல், பெரும்பாலான பெண்களுக்கு மீட்பு காலம் இல்லை, எனவே அவர்கள் மீண்டும் தூண்டப்பட்டால் மேலும் உச்சகட்டத்தைக் கொண்டிருக்கலாம்.

அனைத்திற்கும் மேலாக உடலுறவு என்பது இரு கூட்டாளிகளும் புணர்ச்சியை அடைவது பற்றியது என்பதை ஆண்கள் புரிந்துகொள்வது அவசியம்.இந்த விஷயத்தில் அவர்கள் ஒருபோதும் சுயநலவாதியாக இருக்கக்கூடாது, மேலும் அவர்களின் துணையின் தேவைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் ஆண்களுக்கு உதவ, பெண்கள் புணர்ச்சியை அடைய தேவைப்படும் விஷயங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஃபோர்ப்ளே

ஃபோர்ப்ளே

பல ஆண்கள் உடலுறவை மட்டுமே முக்கிய செயலாக தவறாக நினைக்கிறார்கள். இதன் காரணமாக, பெண்களின் உச்சக்கட்டத்திற்கான அதிக வாய்ப்புள்ள நடவடிக்கைகள் புறக்கணிக்கப்படுகின்றன. இருப்பினும், பல பெண்களுக்கு ஃபோர்ப்ளே முக்கிய நிகழ்வாகும், ஏனெனில் முன்விளையாட்டுகளுக்கு பின் உடலுறவில் ஈடுபடுவது பெண்கள் உச்சக்கட்டத்தை அடைவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும், மேலும் இது ஆண்களுக்கும் சுவாரஸ்யத்தை அதிகரிக்கும்.

பொறுமை

பொறுமை

பெண்களின் இன்பம் ஒரு "வெப்பமயமாதல் விளைவு" என்ற கருத்தை பலர் நம்புகிறார்கள். ஆண்கள் பெரும்பாலும் விந்து வெளியேற்றம் மூலம் உச்சக்கட்டத்தை அடைகிறார்கள், மேலும் தங்கள் கூட்டாளரை அதிக ஏக்கத்தில் தவிக்க விடுகிறார்கள். இதனால் பெண்கள் அவர்களிடமிருந்து கொஞ்சம் பொறுமையை எதிர்பார்க்கிறார்கள். உச்சக்கட்டத்தை அடையும் வரை தங்கள் கூட்டாளர்கள் தங்களுடன் இணைந்திருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

MOST READ: கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் இந்த பக்க விளைவு உண்மையில் நல்ல அறிகுறியாம்... அது என்ன தெரியுமா?

ஓரல்

ஓரல்

2017 ஆம் ஆண்டின் ஒரு ஆய்வின்படி, பல பெண்கள் தங்கள் சிறந்த உச்சக்கட்டத்தை வாய்வழி உடலுறவில் அனுபவித்ததாகக் கூறினர், ஆனால் பலர் அதனை மறுத்தனர், ஏனெனில் அவர்கள் அதனை வெளியில் சொல்ல கூச்சப்பட்டனர். எனவே ஆண்கள் தங்கள் கூட்டாளர்களை திருப்திப்படுத்த வாய்வழி உடலுறவில் அவசியம் ஈடுபட வேண்டும்.

பெண்களின் உடல் பற்றிய புரிதல்

பெண்களின் உடல் பற்றிய புரிதல்

பெண்கள் ஆண்கள் விரும்புவதையும் அவர்கள் எப்படி அதைவிரும்புகிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். கூடுதலாக, பெண் உடலினைப் பற்றிய அறிவும் முக்கியம். அதிர்ச்சியூட்டும் விதமாக, பல ஆண்களுக்கு கிளியோட்ரிஸ் எங்கே இருக்கிறது என்றே தெரியாது. எனவே எங்கள் பாலியல் அறிவை அதிகரிக்க வேண்டிய நேரம் இது.

சுயநலமின்மை

சுயநலமின்மை

நம்மில் பலர் பாலியல் என்பது முதன்மையாக ஆண் இன்பத்திற்காகவே உள்ளது என்ற கருத்தினை உள்வாங்கி வளர்கிறோம். இருப்பினும், இது அப்படியல்ல. தங்கள் துணை உச்சக்கட்டத்தை அடைவதை ஆண்கள் உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக, தன்னலமற்றவராக இருப்பது மிகவும் முக்கியம்.

MOST READ: கோவாக்ஸின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக் வி Vs மாடர்னா தடுப்பூசிகளில் எது உங்களை முழுசா காப்பாற்றும்?

தொடர்பு கொள்ளும் விதம்

தொடர்பு கொள்ளும் விதம்

சிறந்த உடலுறவிக்கு தகவல் தொடர்பு அவசியம் என்பதில் சந்தேகம் இல்லை, அதேபோல் இது உச்சக்கட்டத்திற்கு பொருந்தும். படுக்கையில் நீங்கள் விரும்புவதைப் பற்றிப் பேசுவது, உங்கள் துணை அதைக் கேட்பது உச்சக்கட்டத்திற்கு அவசியமானதாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things Women Want to Attain Orgasm

Here is the list of important things women want to attain orgasm.