For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருப்தியான செக்ஸ் வாழ்க்கைக்கு பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது என்ன தெரியுமா?

|

ஆண், பெண் உறவை பொறுத்தவரை உடலுறவுதான் அவர்களின் உறவின் நிலையை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதற்கும், தம்பதிகளுக்குள் நெருக்கத்தை அதிகரிப்பதற்கும் உதவியாக இருக்கும். கணவன், மனைவி தங்கள் அன்பை வெளிப்படுத்துவதற்கு உடலுறவானது மிகசிறந்த வழியாகும். ஆனால் அது சரியாக அமையாத போது உறவுக்குள் விரிசல்கள் ஏற்படலாம்.

பெண்களை பொறுத்தவரை ஆண்களை விட அவர்களுக்கு கலவியில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆனால் அனைத்து பெண்களுக்கும் இந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறுகிறதா என்றால் கண்ணை மூடிக்கொண்டு இல்லை என்று கூறிவிடலாம். பெரும்பாலான ஆண்களுக்கு பெண்களின் எதிர்பார்ப்பே என்னவென்பது தெரிவதில்லை. திருப்திகரமான செக்ஸ் வாழ்க்கைக்கு பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது சில சாதாரண விஷயங்களைத்தான். அவை என்னென்னெ என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சொற்கள் அல்லாத அறிகுறிகளுக்கும் கவனம் செலுத்த வேண்டும்

சொற்கள் அல்லாத அறிகுறிகளுக்கும் கவனம் செலுத்த வேண்டும்

துரதிர்ஷ்டவசமாக பல ஆண்களுக்கு தங்களின் துணையை எப்படி இசைப்பது என்று தெரிவதில்லை. பெண்கள் அனுப்பும் சிக்னல்களை பெரும்பாலும் ஆண்கள் புரிந்து கொள்வதேயில்லை என்பதே பெண்களின் முக்கியமான குற்றச்சாட்டாகும். பெண்களின் வாய்மொழி சொற்கள் மட்டுமில்லாமல் அவர்களின் உடல் குறிப்புகள் (முனகல், கனமான சுவாசம், அதிகரித்த உயவு) ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். உங்களால் அவர்களின் சிக்னல்களை புரிந்து கொள்ள இயலாவிட்டால் அவர்களிடம் நேரடியாக கேளுங்கள்.

முன் விளையாட்டு மற்றும் பின் விளையாட்டு

முன் விளையாட்டு மற்றும் பின் விளையாட்டு

சில ஆண்கள் செக்ஸ் என்பது ஊடுருவல் மட்டும்தான் என்று நினைக்கிறார்கள். ஆனால் பெண்களை பொறுத்தவரை கலவிக்கு முன்னும், பின்னும் விளையாட்டுகள் இருக்க வேண்டியது அவசியம். கலவி முடிந்தவுடன் ஆண்கள் விலகுவது பெண்களுக்கு கைவிடப்பட்டது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தும். கலவியை தொடங்குவதற்கு முன் தீண்டல், பேச்சு, பாலியல் சீண்டல் போன்றவை பெண்களின் ஆர்வத்தை பலமடங்கு தூண்டும்.

கவனிக்கப்படாத இடங்களை கண்டறிவது

கவனிக்கப்படாத இடங்களை கண்டறிவது

ஒரு பெண் கலவியின் போது ஆண் தன்னை முற்றிலுமாக ஆராய்ந்து அந்த அனுபவத்தை சாகச அனுபவமாக மாற்ற வேண்டும் எதிர்பார்ப்பார். ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்கள் உடலில் ஒரு ஜி ஸ்பாட் இருக்கும் அதனை சரியாக கண்டறிந்து அதனை கவனிக்க வேண்டியது ஆண்களின் பொறுப்பாகும். அவரது உள் தொடையைப் போன்ற புறக்கணிக்கப்பட்ட ஈரோஜெனஸ் மண்டலங்களை விரும்புவதையும், முத்தமிடுவதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

வரலாற்றையே மாற்றிய உலகின் மோசமான மகாராணிகள்... தலைசுற்ற வைக்கும் பெண்களின் மிருகத்தனம்...!

குறும்பு பேச்சு

குறும்பு பேச்சு

பெண்கள் தாங்கள் விரும்பியதை உணர விரும்புவார்கள். அதற்கு ஆண்களின் பேச்சுதான் அடிப்படையாகும். அவர்கள் எப்படி உங்களை ஈர்த்தார்கள் எப்படி உங்களை இயக்குகிறார்கள் என்பதை அறிய விழைகிறார்கள். ஒவ்வொரு பெண்ணின் தேவையும் மாறுபடும், சிலர் செக்சியான பேச்சை விரும்புவார்கள், சிலர் காதலனை பேச்சை விரும்புவார்கள், சிலர் கலவி குறித்த விளக்கங்களை விரும்புவார்கள். இதில் தங்களின் துணை எதை விரும்புகிறார்கள் என்பதை ஆண்கள்தான் சரியாக கண்டறிந்து அதனை செய்ய வேண்டும்.

கிளிட்டோரல் தூண்டுதல்

கிளிட்டோரல் தூண்டுதல்

பெண்கள் கலவியில் அதிகம் விரும்புவதில் இது முக்கியமானது. பெரும்பாலான பெண்களுக்கு இது ஜி ஸ்பாட்டாக இருக்கும். இதனுடன் விளையாடுவது அவர்களை விரைவில் உச்சகட்டத்திற்க்கு அழைத்துச் செல்லும். அங்கு வெவ்வேறு கால அளவு, அழுத்தம் போன்றவற்றை முயற்சிக்கவும். கிட்டதட்ட அனைத்து பெண்களுமே தங்கள் தாம்பத்ய வாழ்க்கையில் இதனை விரும்புவார்கள்.

பெண்ணின் உடலை அல்ல அவர்களை நேசியுங்கள்

பெண்ணின் உடலை அல்ல அவர்களை நேசியுங்கள்

பெண்கள் உணர்ச்சிரீதியாக அக்கறையுடன் கலவியில் ஈடுபட விரும்புகிறார்கள். ஆனால் பெரும்பாலான பெண்கள் தங்கள் கணவர்களால் கலவியின் போது தாங்கள் வெறும் சதைத்துண்டுகளாக நடத்தப்படுவதாக புகாரளிக்கின்றனர். ஒரு பெண் தன் ஆணின் கண்களில் தன்னை அவர் போற்றுவதைப் பார்க்க விரும்புகிறார். அவர்களின் உச்சக்கட்டம் ஏற்படுத்துவது மட்டுமே கலவியாக இருந்தால் அதனை பெண்கள் ஒருபோதும் மனதார ஏற்பதில்லை.

கிளியோபட்ராவின் மயக்கும் அழகிற்கு காரணமாக இருந்தது இந்த சாதாரண இயற்கை பொருட்கள்தானாம் தெரியுமா?

பெண்கள் முதலில் உச்சக்கட்டம் அடைவதை உறுதிசெய்ய வேண்டும்

பெண்கள் முதலில் உச்சக்கட்டம் அடைவதை உறுதிசெய்ய வேண்டும்

பெண்களுக்கு பலமுறை உச்சக்கட்டம் அடையும் திறன் உள்ளது. எனவே முடிந்தவரை அவர்களை பலமுறை உச்சக்கட்டம் அடைய வைப்பது ஆண்களின் கடமையாகும். பெண்கள் உச்சக்கட்டம் அடைய அவர்களுக்கு

கிளிட்டோரல் தூண்டுதல் வேண்டுமென்பது இங்கு 70 சதவீத ஆண்களுக்கு தெரிவதில்லை. கலவியின்போது ஆண்கள் உச்சக்கட்டம் அடைவதற்கு முன் பெண்கள் உச்சக்கட்டம் அடைவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

பெண்ணை அழகாக உணர வைக்கவும்

பெண்ணை அழகாக உணர வைக்கவும்

நீங்கள் நிர்வாணமாக இருக்கும்போது கண்டிப்பாக இதனை செய்ய வேண்டும். கலவியின் போது எந்த காரணமும் இல்லாமல் போனாலும் பெண்களிடம் அவர்கள் அழகாக இருக்கிறார்கள் என்று கூற மறந்து விடாதீர்கள். இது அவர்களை மிகவும் உற்சாகமாக்கும் தன்னை பாராட்டுவதை எந்த பெண்தான் விரும்பமாட்டார்கள்.

வழுக்கைத்தலையை குணமாக்க செய்யப்பட்ட பண்டையகால சிகிச்சைகள்... இதுக்கு சொட்டையாவே இருந்திரலாம்...!

உடலுறவைத் தாண்டியும் பெண்கள் மீது கவனம் செலுத்துங்கள்

உடலுறவைத் தாண்டியும் பெண்கள் மீது கவனம் செலுத்துங்கள்

ஒரு ஆண் தனக்காக என்னவெல்லாம் செய்கிறான் என்பதை பெண் தெரிந்துகொள்ள விரும்புகிவார்கள். அவர்களுக்காக வாங்கி வரும் சிறிய பரிசு, பூக்கள் என அனைத்திற்கும் பின்னால் தன் மீதிருக்கும் அக்கறைதான் அவர்களின் கண்களுக்குத் தெரியும். கடுமையான வேலைகளுக்கு நடுவிலும் தான் அவரின் நினைவில் இருந்திருக்கிறோம் என்று உணர்வதே பெண்களுக்கு அலாதி இன்பத்தை ஏற்படுத்தும். அதேபோல தான் சொல்வதை ஆண் எந்த அளவிற்கு கேட்கிறான் என்று தெரிந்து கொள்வதும் பெண்களுக்கு திருப்தியை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things Women Need for Satisfying Sex Life

Read to know what every woman likes during lovemaking.
Story first published: Friday, May 29, 2020, 15:30 [IST]