For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

‘அந்த ’ நேரத்தில் ஆண்கள் செய்யுற இந்த விஷயங்கள் பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காதாம்…!

|

"இருமணம் இணையும் திருமணம், ஈருடல் ஓர் உயிர்" என்று பல வசனங்கள் பேசி வந்தாலும், உடலுறவு என்று வரும்போது, ஒவ்வொருவருக்கும் அவர்களின் விருப்பு வெறுப்புகள் இருக்கின்றன என்பது நிதர்சனம். சிலர் படுக்கையறையில் நீடித்த ஃபோர்ப்ளேவை விரும்பலாம், மற்றவர்கள் உடலுறவை விரைவாக முடிக்க விரும்புகிறார்கள்.

things-women-hate-while-having-sex

இப்படியிருக்க, இங்கிலாந்தில் ஒரு பிரபலமான செக்ஸ் டாய்ஸ் நிறுவனம் பாலியல் மகிழ்ச்சி ஆய்வு 2019 என்ற ஒரு கணக்கெடுப்பை நடத்தியது நடுத்தர வயதுடைய ஆண்கள், பெண்களிடம் அவர்களின் பாலியல் மகிழ்ச்சி குறித்து கேட்கப்பட்டு எடுக்கப்பட்ட ஆய்வு இது. இந்த ஆய்வு குறித்த தகவல்களையும், படுக்கையறையில் பெண்கள் விரும்பாத சில விஷயங்களை குறித்தும் இங்கு காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆய்வு கூறுவது

ஆய்வு கூறுவது

ஆய்வின் கண்டுபிடிப்புகளின்படி, பத்து ஆண்களில் ஒன்பது பேர் உடலுறவின் போது உச்சகட்டத்தைப் பெறுகிறார்கள், ஆனால் பத்து பெண்களில் ஏழு பேர் மட்டுமே க்ளைமாக்ஸை அடைகிறார்கள் என்று தெரிவித்துள்ளது. பெண்கள் உச்சக்கட்டத்தை அடைந்ததுபோன்று பொய்யாக நடிக்கிறார்களே தவிர, அவர்கள் உண்மையில் உச்சக்கட்டத்தை அடைவதில்லை.

MOST READ:உடலுறவில் கூடுதல் சுவாரஸ்யம் அடைவதற்கான புதிய வழிகள் என்னென்ன தெரியுமா?

திருப்தி அடைவது

திருப்தி அடைவது

ஆய்வில் பங்கேற்ற பெண்களில் கிட்டத்தட்ட 30 சதவீதம் பேர் உடலுறவின்போது, சுயநினைவை உணருவதை வெறுக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளனர். ஆனால், ஆண்கள் செக்ஸ் முடிவடையும் போது அவர்கள் மிகப்பெரிய திருப்தியடைந்ததாக தெரிவிக்கிறார்கள். ஆய்வின்படி, உடலுறவில் பெண்களுக்கு கிடைக்காத விஷயங்களில் போதிய ஃபோர்ப்ளே இல்லாதது, உச்சகட்டத்தை பெறாதது மற்றும் குறுக்கிடப்படுவது ஆகியவை அடங்கும்.

போதுமான ஃபோர்ப்ளே இல்லை

போதுமான ஃபோர்ப்ளே இல்லை

உடலுறவுக்கு இடையில் குறும்பாக விளையாடுவதற்கோ அல்லது மகிழ்ச்சி பெறுவதற்கு போதுமான ஃபோர்ப்ளே இல்லாதபோது, பெரும்பாலான பெண்களுக்கு ஒரு பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தும். ஃபோர்ப்ளே என்பது மிகுந்த பசியில் இருப்பவருக்கு வழங்கப்படும் உணவு போன்று மிக முக்கியமானது. பெண்களுக்கு செக்ஸ் ஒரு இன்பமான செயலாக மாற்றுவதற்கு சிறிது நேரத்தையும் சக்தியையும் ஃபோர்ப்ளேயில் ஆண்கள் முதலீடு செய்வது மிகவும் முக்கியம்.

உடலுறவு கொள்ள விரும்புவதில்லை

உடலுறவு கொள்ள விரும்புவதில்லை

பெரும்பாலான பெண்கள் பல காரணங்களுக்காக தங்கள் உடல்களைப் பற்றி சுய உணர்வுடன் இருக்கிறார்கள். பிரசவத்திற்குப் பிறகு அல்லது திருமணத்திற்குப் பிறகு பெண்களின் உடல் பருமன் கூடலாம். உங்கள் மனைவி அல்லது காதலி எப்படி இருக்கிறார் என்பது இங்கு முக்கியம் இல்லை. சுய உணர்வுடன் இருக்கும் எந்தவொரு பெண்ணும் தன்னுடைய சுயநினைவை கிண்டல்பேசும் ஆணுடன் உடலுறவு கொள்ள விரும்புவதில்லை.

MOST READ: இந்த பொஷிசன்கள் உங்களின் உடலுறவை சுவாரஸ்யமானதாக மாற்றும்...!

சுய உணர்வை ஏற்படுத்துதல்

சுய உணர்வை ஏற்படுத்துதல்

உடலுறவில் ஈடுபடும்போது அவளுக்கு பாராட்டுக்களைத் தெரிவியுங்கள் என்று உங்களிடம் கூறவில்லை. ஏனெனில் பொய்யை கண்டுபிடிப்பது எளிது. ஆண்கள் செய்ய வேண்டியது எல்லாம் பெண்களுக்கு சுய உணர்வை ஏற்படுத்துவதுதான். உங்கள் மனைவிக்கு வசதியாக இருப்பதோடு, அவளுடைய எல்லா குறைபாடுகளையும் களைத்து அவளை நேசிக்க வேண்டும்.

பாலியல் வலிமை

பாலியல் வலிமை

தங்களின் பாலியல் வலிமையைப் பற்றி பெருமை பேசும் ஆண்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், அந்த பழக்கத்தை உடனடியாக கைவிடுங்கள். நீங்கள் படுக்கையில் எவ்வளவு நன்றாக இருக்கிறீர்கள் அல்லது கடந்த காலத்தில் எத்தனை பாலியல் வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தீர்கள் என்பதை அறிய யாரும், குறிப்பாக ஒரு பெண் ஆர்வம் காட்டமாட்டார்.

புணர்ச்சியை பற்றி கேட்பது

புணர்ச்சியை பற்றி கேட்பது

இணையத்தில் வெள்ளம் பெருக்கெடுக்கும் எண்ணற்ற உதவிக்குறிப்புகள் இருப்பதால், ஆண்கள் உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டானா இல்லையா என்பது பற்றி அறிய முடியும். ஆனால், பெண்கள் புணர்ச்சியைச் சுற்றியுள்ள பல மர்மங்களால், அது மிகப்பெரிய ஏமாற்றங்களில் ஒன்று. ஒரு பெண்ணுக்குப் புணர்ச்சியடைந்து விட்டாளா? இல்லையா என்று மீண்டும் மீண்டும் கேட்பது, உடலுறவில் ஈடுபடும்போது ஆண்கள் தவிர்க்க வேண்டிய ஒன்று.

MOST READ:இந்த தருணங்களின்போது உங்கள் வாழ்க்கை துணை உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவார்...!

ஜி-ஸ்பாட்

ஜி-ஸ்பாட்

உடலுறவின்போது, பெண்களை உச்சகட்டம் அடையச் செய்ய பல வழிகள் இருக்கின்றன. ஆனால், அதை ஆண்கள் செய்ய தவறுகின்றனர். பெண்களின் ஜி-ஸ்பாட் பகுதியில் ஆண்கள் செயல்படும்போது, அது பெண்களுக்கு இன்பத்தை தருகிறது. ஒரு பெண் ஆணுக்குள் எவ்வளவு ஆழமாக உணர விரும்புகிறாள் என்பது முற்றிலும் தனிப்பட்ட தேர்வாகும். இணையத்திலிருந்து சில இலவச ஆலோசனையைப் பின்பற்ற வேண்டாம். காதலுடன் அவளை கவர முயற்சிக்க வேண்டும்.

பாலியல் வாழ்க்கை

பாலியல் வாழ்க்கை

பெரும்பாலானவர்களுக்கு ஆபாசமானது பாலியல் பற்றிய முதல் தகவல் ஆதாரமாகும். ஆனால் திரையில் நீங்கள் காணும் அனைத்தும் நிஜ வாழ்க்கையில் பொருந்தாது. ஆபாசப் படங்களில் ஆர்வமுள்ள நடிகர்கள் ஈடுபடும் பாலியல் விஷயங்களை உங்கள் பாலியல் வாழ்க்கையுடன் நீங்கள் தொடர்ந்து ஒப்பிட்டுப் பார்க்ககூடாது. உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் பிடித்த விருப்பமான விஷயங்களை மட்டுமே நீங்கள் செய்ய வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things Women Hate While Having Sex

Here we talking about the things women hate while having sex.
Story first published: Saturday, January 4, 2020, 16:46 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more