For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலுறவில் உச்சக்கட்ட இன்பத்தை அடைய உடலுறவிற்கு முன் இந்த விஷயங்களை கண்டிப்பா செய்யணுமாம்...!

|

ஆண்-பெண் உறவை வலுப்படுத்தும் விஷயமாக இருப்பது அவர்களுக்குள் இருக்கும் தாம்பத்யமாகும். கணவன், மனைவிக்குள் இருக்கும் தாம்பத்யம் பல வெளிப்புற காரணிகளால் பாதிக்கப்படலாம். உடலுறவில் ஈடுபடுவதற்கு முன் அதற்கான சூழ்நிலையையும், முன்னேற்பாடுகளையும் தம்பதியினர் செய்ய வேண்டியது அவசியம்.

உடலுறவுக்கான முன்னேற்பாடுகளை ஆண்கள்தான் செய்ய வேண்டுமென்ற கட்டாயம் இல்லை பெண்களும் செய்யலாம். ஆரோக்கியமான மற்றும் முழுமையான உடலுறவிற்கு அதற்கான சரியான திட்டமிடல் அவசியமாகும். இந்த பதிவில் ஆரோக்கியமான உடலுறவிற்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 ஒப்புதல்

ஒப்புதல்

நீங்கள் திருமணமானவராக இருந்தாலும் சரி அல்லது காதலில் இருந்தாலும் சரி, உடலுறவு கொள்வதற்கு முன்பு நீங்கள் எப்போதும் மற்றவரின் ஒப்புதலைப் பெற வேண்டும். பொதுவாக பெண்ணின் சம்மதம் மட்டுமே முக்கியம் என்ற தவறான எண்ணம் நிறைய பேருக்கு உள்ளது. ஆனால் சம்மதம் என்பது ஒரு பாலினம் சார்ந்ததல்ல, சிலசமயம் ஆண்களும் ஒப்புதல் அளிக்காமல் இருக்கலாம். உடலுறவு கொள்வதற்கு முன் இரு தரப்பினரும் அதற்கு உடன்பட வேண்டும்.

சுகாதாரம்

சுகாதாரம்

சுகாதாரம் மோசமாக இருப்பதை விட உடலுறவை மோசமாக மாற்றும் விஷயம் வேறெதுவும் இல்லை. முக்கியமாக காலை எழுந்ததும் பல் துலக்காத ஒருத்தரை முத்தமிட யாரும் விரும்ப மாட்டார்கள். முத்தமிடுவதற்கு முன் உங்கள் சுவாசத்தின் வாசனையை புத்துணர்ச்சியாக இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். நீங்கள் வெளியே சென்று வந்திருந்தால் உடலுறவிற்கு முன் அவசியம் குளிக்க வேண்டும்.

பாதுகாப்பு நடவடிக்கை

பாதுகாப்பு நடவடிக்கை

தற்போது குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் உங்களுக்கு இல்லாவிட்டால் பாதுகாப்பான உடலுறவு வைத்துக்கொள்வது அவசியம். நீங்கள் உடலுறவு வைத்துக் கொள்ள போகிறவரை பற்றி முழுமையாக தெரியாவிட்டால் பாலியல் பரவும் நோய்களால் பாதிக்கப்படும் அபாயத்தைத் தவிர்க்க ஆணுறை போன்ற பாதுகாப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.

சாணக்கிய நீதியின் படி இந்த குணமுள்ளவர்கள் வாழ்க்கையில் தீராத செல்வத்தை பெறுவார்களாம்...!

லூபிரிக்கன்ட்ஸ்

லூபிரிக்கன்ட்ஸ்

லூபிரிக்கன்ட்ஸ் மகிமையை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். உயவு இல்லாததால் உடலுறவில் இருந்து நீங்கள் பெறும் இன்பத்தை குறைக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? எண்ணெயை அடிப்படையாகக் கொண்ட, நீரில் கரையக்கூடிய மற்றும் கிரீம் போன்ற பல்வேறு வகையான லூபிரிக்கன்ட்ஸ் உள்ளன. எனவே ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏற்ற லூபிரிக்கன்ட்ஸை தேர்ந்தெடுக்கவும்.

சரியான இடம்

சரியான இடம்

உடலுறவின் இன்பத்தை அதிகரிக்க, சரியான இடத்தில் அன்பை உருவாக்குவது முக்கியம். எனவே உங்களின் சுற்றுசூழல் உடலுறவில் முக்கியப்பங்கு வகிக்கிறது. ஒருவேளை உங்களின் அறை மோசமாகவும், துர்நாற்றத்துடனும் இருந்தால் உங்களின் உடலுறவு எப்படி நல்லதாக அமையும் என்று சிந்தித்து பாருங்கள்.

மனநிலையை உருவாக்குங்கள்

மனநிலையை உருவாக்குங்கள்

அருகிலுள்ள அறையில் மக்கள் பேசும் சத்தத்தை தொடர்ந்து கேட்கக்கூடிய ஒரு அறையில் உடலுறவு கொள்வதை கற்பனை செய்து பாருங்கள். மென்மையான இசைபின்னணியில் இசைக்கும் போது நறுமண மெழுகுவர்த்திகளின் பளபளப்பு மற்றும் மணம் ஒரு கவர்ச்சியான இடத்தை நினைவூட்டுகிறது. எது உங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்? நிதானமான மனநிலையில் உடலுறவு கொள்வது முக்கியம்.

இந்த ராசிகளில் பிறந்தவர்கள் செக்ஸ் விஷயத்தில் கில்லியாக இருப்பார்களாம் தெரியுமா?

மூளையைத் தூண்டுங்கள்

மூளையைத் தூண்டுங்கள்

பெண்களுக்கு உடலுறவு என்பது அவர்களின் மூளையில் இருந்து தொடங்குகிறது. மூளை பிறப்புறுப்பை விட சக்திவாய்ந்த பாலியல் உறுப்பு ஆகும், ஏனென்றால் அதுதான் பாலியல் உறவை நோக்கி இயக்குகிறது. எனவே மூளையை காமத்தை நோக்கி நகர்த்துவது கூடுதல் இன்பத்தை வழங்கும். உங்கள் கற்பனை திறனுடன் முன்விளையாட்டுக்களை மறந்து விடாதீர்கள்.

எளிதில் கழட்டக்கூடிய உடைகளை அணியுங்கள்

எளிதில் கழட்டக்கூடிய உடைகளை அணியுங்கள்

உற்சாகமாக உடலறுறவை தொடங்கும்போது இறுக்கமான ஆடைகளை அணிந்திருப்பது உங்கள் உற்சாகத்தை வெகுவாக குறைக்கும். செக்ஸ் என்பது தன்னிச்சையாக செய்ய வேண்டிய ஒரு செயலாகும், எனவே இறுக்கமான உடையணிந்து அதனை கடினமாக்காதீர்கள். நீங்கள் உடலுறவில் ஈடுபடப் போகிறீர்கள் என்பது முன்கூட்டியே உங்களுக்குத் தெரிந்தால் அதற்கேற்றாற் போல எளிதில் கழட்டக்கூடிய உடையணியுங்கள்.

உங்களை சுற்றியும் உங்கள் வீட்டை சுற்றியும் இருக்கும் கண்திருஷ்டியை எளிதில் எப்படி விரட்டலாம்?

சிறுநீர் கழித்துவிட்டு செல்லுங்கள்

சிறுநீர் கழித்துவிட்டு செல்லுங்கள்

உடலுறவில் ஈடுபடும்போது சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற அவசரம் ஏற்பட்டால் எவ்வளவு சங்கடமாக இருக்கும். உடலுறவுக்குப் பிறகு சிறுநீர் கழிப்பது முக்கியம் என்றாலும், அதற்கு முன்பும் அதனை செய்ய வேண்டியது அவசியமாகும். எனவே உடலுறவு கொள்வதற்கு முன் ஆண்-பெண் இருவரும் தங்கள் சிறுநீர்ப்பையை காலியாக வைத்துக்கொள்வது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things To Do Before Having Sex

Doing these things before having sex will improve your sex drive.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more