Latest Updates
-
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
பெண்கள் செய்யும் இந்த விஷயங்களை ஆண்கள் முற்றிலும் வெறுக்கிறார்கள்... இதனால் ப்ரேக்கப்பே நடக்கலாமாம்!
ஆண்கள் எப்போதுமே தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மாட்டார்கள், ஆனால் சில விஷயங்களைப் பற்றிப் பேச ஆண்கள் பயப்படுவார்கள்.
ஆண்கள் எப்போதுமே தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மாட்டார்கள், ஆனால் சில விஷயங்களைப் பற்றிப் பேச ஆண்கள் பயப்படுவார்கள். ஆண்கள் தங்கள் காதலி செய்வதை அல்லது பேசுவதை நிறுத்த வேண்டும் என்று விரும்பும் சில நடத்தைகள் உள்ளன.

அவற்றை சரியான நேரத்தில் சரிசெய்யா விட்டால் இந்த விஷயங்கள் உறவை பெரிய அளவில் பாதிக்கும். தங்கள் காதலி செய்வதை நிறுத்த வேண்டும் என்று ஆண்கள் விரும்பும் சில விஷயங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒரு விஷயத்தை மிகவும் இழுப்பது
பெண்கள் சில சமயங்களில் உரையாடலை நீட்டிப்பதாக ஆண்கள் நினைக்கிறார்கள். மேலும் இது ஆண்களுக்கு முற்றிலும் பிடிக்காத ஒன்று. சண்டை அல்லது வாக்குவாதம் ஏற்படும் போது, தேவையில்லாமல் விஷயத்தை நீட்டிப்பதை விட ஒரு தீர்வை எட்டுவது அவசியம். பெண்கள் சமாதானத்தில் ஈடுபட மறுத்து அதை இழுத்தடிக்கும்போது, ஆண்களுக்கு விரக்தி ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

அமைதியாக இருக்கும்போது தொந்தரவு செய்வது
அனைத்து பெண்களும் சில சமயங்களில் தங்கள் துணையுடன் பேசுவும், உரையாடுவும் விரும்புகிறார்கள். ஆனால் பொதுவாக ஆண்கள் எதையாவது ஆழ்ந்து சிந்திக்கும் போது அமைதியாக இருப்பார்கள். ஆனால் பெண்களும் அவர்களைத் தவறாகப் புரிந்துகொண்டு ஏதோ தவறு இருப்பதாக நினைக்கிறார்கள். ஆண்கள் சிறிது நேரம் அமைதியாகவும், தனியாகவும் இருக்க விரும்புகிறார்கள், பெண்கள் அந்த சமயத்தில் தொந்தரவு செய்யக்கூடாது.

நம்பத்தகாத எதிர்பார்ப்புகளைக் கொண்டிருத்தல்
காதல் திரைப்படங்களைப் பார்த்த பிறகு, பெண்கள் தங்கள் காதலரிடமிருந்து நம்பத்தகாத எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பதில் ஆச்சரியமில்லை. இந்தத் திரைப்படங்களில் கதாப்பாத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ள விதம் முற்றிலும் யதார்த்தமற்றதாக இருக்கும். இது ஆண்களிடமிருந்து அதிகமாக எதிர்பார்க்க பெண்களுக்கு வழிவகுக்கிறது, மேலும் இது இறுதியில் ஆண்களுக்கு அதிக சுமைகளை ஏற்படுத்துகிறது.

பொழுதுபோக்குகளை விரும்புவது போல் நடிப்பது
தங்கள் துணை தங்கள் பொழுதுபோக்குகளை உண்மையில் விரும்புவதற்குப் பதிலாக விரும்புவதைப் போல நடிக்கும்போது ஆண்கள் அதை வெறுக்கிறார்கள். இதனால் அவர்கள் தங்கள் துணையுடன் சமமாக இருக்க முடியும் மற்றும் அவர்களுடன் போதுமான நேரத்தை செலவிடலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். தாங்கள் நடிப்பதை ஆண்களால் கண்டுபிடிக்க முடியாது என்று பெண்கள் நினைக்கலாம் ஆனால் உண்மையில் அவர்களால் முடியும். மேலும் பெண்கள் அதை செய்வதை நிறுத்த வேண்டும் என்று ஆண்கள் விரும்புகிறார்கள்.

கிளம்புவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வது
ஆண்களை விட பெண்கள் தயாராக அதிக நேரம் எடுத்துக் கொள்வதாக பெரும்பாலான ஆண்கள் கருதுகின்றனர். தயாராவதற்கு 10 நிமிடங்கள் தேவை என்று பெண்கள் கூறுகிறார்கள், ஆனால் முடி, ஒப்பனை, உடை பொருத்துதல் போன்ற அனைத்தையும் செய்ய ஒரு மணி நேரம், சில சமயங்களில் அதைவிட அதிகமாகிறது. ஆண்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் போது அதை வெறுக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications