Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
படுக்கையறையில் இதுக்கெல்லாமா மூட் அவுட் ஆவாங்க... தெரிஞ்சுக்கோங்க
குழந்தைப் பிறப்புக்கு பிறகான தாம்பத்தியம் என்பது படுக்கையறை வரைக்கும் வந்து மூட் அவுட் ஆக்கும் அனுபவங்கள் உங்களுக்கு இருந்திருக்கும். அதில் முக்கியமான 10 விசயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அலைபேசி ஒலி
தேனிலவுக்கு போறப்ப மட்டும் தான் தொந்தரவு இல்லாமல் மனைவியோட சந்தோசமா இருக்க முடியும். அதிலும் குழந்தைகள் பிறந்துவிட்டால் நீங்களும் உங்கள் மனைவியும் படுக்கையறையில் இணைவதைப் பற்றி கொஞ்சம் யோசிக்கத் தான் வேண்டும்.

அப்படியே வாய்ப்பு கிடைத்து உல்லாசமாக இருக்கலாம் என்றால் அப்பத் தான் எதாவது மூட் அவு ஆகிற மாதிரி சம்பவங்கள் நடைபெறும். அப்படி உங்களை மூட் அவுட் ஆக்குற 10 விசயங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் காணலாம்.

போன் அழைப்பு மணி
குழந்தை குட்டின்னு வந்ததுக்கு அப்புறம் அலுவலகத்துக்குலாம் லீவை போட்டுட்டு மனைவியுடன் கொண்டாடலாம் என வீட்டிற்கு வருவோம். ஆனால் அடிக்கடி அடிக்கும் தொலைபேசி அழைப்பு மணி உங்கள் கவனத்தை சிதறடிக்கும். இது மாதிரி முக்கியமான நேரங்களில் விளக்கை அணைப்பது போல் அலைபேசியையும் அணைத்து வையுங்களேன்.

உடல்நிலை
சில உடல் உபாதைகள் உங்கள் கவனத்தை சிதறடிக்கும். அந்த வகையில் உங்கள் இணையருக்கு முத்தம் கொடுக்கும் போது மூக்கில் சளி ஒழுகுதல் மிகப்பெரிய சங்கடத்தை ஏற்படுத்தும்.

சம்மந்தமில்லாத இசை
இசை எல்லாத் தருணங்களிலும் நம்மை மகிழ்விக்கும். அதே போல் சூழ்நிலைக்கு ஏற்றார் போல் பாடல்கள் ஒளிக்கும் போது அது தன்னிச்சையாக உங்களை மூட் அவுட் ஆக்கிவிடும்.

ஒரு அளவுக்கு டர்ட்டியா பேசுங்க
டர்ட்டியா பேசுறது அப்டிங்குறது ஒரு கலை. அதை வந்தா மட்டும் முயற்சி பண்ணுங்க. வரலைன்ன பேசாம அமைதியா இருந்திருங்க. எப்படி ஜோக்குங்கிற பேருல மொக்கைப் போட்டா கடுப்பாகுமோ அதேக் கடுப்பு தான் படுக்கையிலும் நடக்கும்.

உங்க காதலி பேர் எல்லாம் மனைவிக்கிட்ட
நீங்கள் நிறைய பொண்ணுங்களிடம் டேட் செய்திருக்கலாம். ஆனால் அதற்காக மனைவி பெயரை மாத்தி கூப்பிடுவது எல்லாம் கொஞ்சம் ஓவர் தான். மாத்திக் கூப்பிட்டா மூட் அவுட் மட்டும் ஆகாது. அதுக்கப்பறம் கட்டில் பக்கம் தலைவச்சுக் கூட பார்க்க முடியாது.

இந்த வாட்ச்மேன் தொல்லை இருக்கே
வீட்டை பாதுகாக்குறதுக்காக வாட்ச்மேனை வேலைக்கு வச்சா அடிக்கடி உங்களை தொந்தரவு பண்றதே அவர்களின் வேலையாக இருக்கும். மத்த நேரமெல்லாம் சும்மா இருந்துட்டு நேரங்கெட்ட நேரத்துல கதவைத் தட்டும் போது வருகிற மூட் அவுட் கோபத்தின் உச்சத்துக்கே போய் நிற்கும்.

பாத்து பண்ண வேணாமா
ரொம்ப நாள் இடைவேளை விட்டதால கவனக்குறைவுகள் அதிகமாக ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே உடலுறவில் ஈடுபடுபவர்களில் யாரேனும் ஒருவர் காயம் ஏற்படக்கூடும். என்னதான் அளவுக்கடந்த ஆசைகள் இருந்தாலும் மூட் அவுட் ஆகி வேற வேலையை பாக்க கிளம்ப வேண்டியது தான்.

குரங்கு வித்தையெல்லாம் காட்டுனா இப்படித்தான்
கண்ட புத்தகங்களை எல்லாம் படித்துவிட்டு வித்தியாசமாக எதாச்சும் முயற்சி பண்றேனு பண்ணி அது ஜெயிக்காம போச்சுன்னு வச்சுக்கோங்க. எதிர் தரப்பில் இருக்கவங்கள் உங்களை சும்மா விடமாட்டாங்க.. அடுத்த ரவுண்ட் வாய்ப்பும் அம்போன்னு போயிடும்.

சோறு தானே முக்கியம்
இந்தப் பிரச்சினைக்கும் கட்டிலுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. எங்கையாவது நல்லா சாப்பிடலாம்னு ஜோடியா போனா... அல்லது உங்களுக்கு பிடிச்ச சாப்பாடு கண்ணு முன்னாடி இருந்து சாப்பிட முடியாமல் போன ஆகுற மூட் அவுட் தான் இது எல்லாத்துக்கும் தலையானது. ஆமா எல்லாம் வழிவிட்டாலும் வயிற்றில் பிரச்சினை இருந்தா என்ன பண்ண முடியும்.

குழந்தை
அப்பா அம்மாவை ஊருக்கு அனுப்பியாச்சு. இரவு வேலைக்கும் விடுமுறை வாங்கியாச்சு. வாட்மேனுக்கு விடுமுறை குடுத்தாச்சு. குழந்தையும் தூங்க வச்சாச்சு. இப்படி எவ்ளோ தான் மாஸ்டர் பிளான் போட்டாலும். அவன் நம்ம குழந்தை இல்லையா... திடீரென்று எழுந்து பயமா இருக்கு நான் இன்னைக்கு அம்மாக்கூடத் தான் தூங்குவேனு சொல்லுவான் பாரு. அப்ப உங்க தொண்டையை அடைக்கிற துக்கம் விடியிற வரைக்கும் நிச்சயம் நீடிக்கும்.



Click it and Unblock the Notifications











