For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலுறவின்போது பெண்கள் உச்சக்கட்டம் அடைந்ததைபோல நடிப்பதற்கு இதுதான் காரணம்…!

|

இந்த கட்டுரையை நீங்கள் படிக்கிறீர்கள் என்றால், உங்கள் வாழ்க்கையில் உடலுறவின் போது ஒரு முறையாவது நீங்கள் அடையும் உச்சக்கட்டத்தை போலியானதாகக் கருதியிருக்கிறீர்கள் என்று அர்த்தம். சமீபத்தில் மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி, 64 சதவீத மக்கள் தங்கள் வாழ்க்கையில் உச்சக்கட்டத்தை ஒரு முறையாவது போலியாக்கியுள்ளனர். பெண்கள் தாங்கள் உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டது போல் போலியாக நடிக்க வாய்ப்புகள் அதிகம். அதேபோல ஆண்களும் தாங்கள் க்ளைமாக்ஸை அடைந்துவிட்டதாக கள்ளத்தனமாக ஒப்புக் கொள்கின்றனர்.

The surprising reasons why people fake orgasms

ஆண்களும் பெண்களும் உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டதாக போலியாக கூறுவது ஏன் என புரிந்து கொள்வது எளிதான காரியம் அல்ல. இதில் அதிகளவு போலியாக நடிப்பது பெண்களே என்கிறது மற்றொரு ஆய்வு. ஏனென்றால் பெண்கள் தங்களுடைய கணவனுக்காகவோ இல்லை காதலனுக்காகவோ இவ்வாறு போலியாக நடிக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடலுறவில் உச்சக்கட்டம்

உடலுறவில் உச்சக்கட்டம்

உடலுறவின் போது இருவரும் தங்கள் காதலுடன் சேர்ந்து தங்களைப் பரிமாறிக் கொள்வார்கள். நீங்கள் உங்கள் கணவரை அல்லது காதலனை அதிகமாக நேசிக்கிறீர்கள். ஆனால், உடலுறவின் போது அவர் உங்களை முழுவதுமாக திருப்பதிபடுத்தவில்லை என்பது உங்களுக்கும் வருத்தம். அவருக்கும் வருத்தம். இது அமைதியான உங்களுடைய வாழ்க்கையில் பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தலாம்.

அதனால் நீங்கள் உச்சக்கட்டத்தை உணராத போது கூட, அதை சரிசெய்வதற்காக, அவர்களை மோசமாக உணராமல் இருக்க செய்ய போலியான சத்தமிடுதல் அல்லது முணுகலுடன் உச்சத்தை அடைந்துவிட்டதாகக் காட்டிக் கொள்கிறீர்கள்.

பெண்கள் சொல்ல மறுக்கப்படுகிறது

பெண்கள் சொல்ல மறுக்கப்படுகிறது

மனித உறவுகள் மிகவும் சிக்கலானது. அதிலும், ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரும் முழு திருப்தியுடன் தங்களுடைய தாம்பத்திய உறவில் இருக்கிறார்களா என்ற எண்ணிக்கையும் மிகக்குறைவு. இங்கு ஒரு பெண் தான் விரும்பும் நபருடன் உடலுறவு வைத்துக் கொள்ள அவளுக்கு உரிமையில்லை. அதேபோல உடலுறவின்போது தனக்கு இன்பம் கிடைக்க இவ்வாறு செய்யுங்கள் என்று பெரும்பாலான பெண்கள் கூறுவதும் இல்லை. காரணம் பெண்கள் உடலுறவைப் பற்றிப் பேசுவது என்பது அவள் நடத்தையுடன் ஒப்பிடப்படும்.

உண்மையில் ஆண்கள் உச்ச நிலை அடைவதற்கும், பெண்கள் உச்ச நிலை அடைவதற்கும் வெவ்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஆண்கள் உடலுறவின்போது விரைவில் உச்சக்கட்டத்தை அடைய வாய்ப்புகள் அதிகம். ஆனால், இயல்பாகவே பெண்கள் உச்ச நிலை அடைய கொஞ்சம் நேரம் பிடிக்கும். இதை பலர் அறிந்திருப்பதில்லை.

இன்பத்தை அதிகரிக்க..

இன்பத்தை அதிகரிக்க..

உடலுறவின் போது ஆண்குறியைப் பெண் நாவால் சுவைப்பதும், பெண் பிறப்புறுப்பை ஆண் நாவல் சுவைப்பதைக் காட்டிலும் மகிழ்ச்சிகரமான விஷயம் ஏதுமில்லை. இதில், இருவருக்கும் அதிக இன்பம் கிடைக்கும். பொதுவாக பிறப்புறுப்புகள், ஆசனவாய், முலைக்காம்புகள் மற்றும் பெரினியம் போன்ற ஈரோஜெனஸ் மண்டலங்களின் தொடர்ச்சியான தூண்டுதலைத் தொடர்ந்து, உடலுறவில் உச்சக்கட்டத்தை அடைவது நடைபெறும்.

ஃபோர்ப்ளேவில் மட்டும் உச்சக்கட்டத்தை அடைந்துவிட முடியாது. அதுபோல சில சமயங்களில் உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டதுபோல போலியாக முனகலிடும் ஒலியும், உண்மையாக அடையும் உச்சக்கட்ட ஒலிக்கு ஒருபடி அதிகமாகத் தெரியும்.

MOST READ :தனக்கு தானே பேசிக்கொள்பவரா நீங்கள்? அப்படினா இத தெரிஞ்சிக்கோங்க...!

உடலுறவில் மந்தம்

உடலுறவில் மந்தம்

சந்தோஷமான பாலியல் உறவை நீங்கள் நன்றாக அனுபவிக்காத போது, இடையில் எனக்கு மந்தமாக உள்ளது என்று கூற முடியாது. காரணம் தங்களுக்குக் குறை உள்ளதாக துணை கருதிக் கொள்வார் என நினைத்து அச்சம் கொள்வது. இதற்கு வேறு வழி எதுவுமில்லை என்பதால், உடலுறவை முடிக்க அடுத்த சிறந்த காரியத்தைச் செய்கிறார்கள். அதுதான் போலி உச்சக்கட்டம்.

ஒரு வேளை தாம்பத்தியத்தில் ஆண் அல்லது பெண் உச்ச நிலை அடையவில்லை எனில், தங்களிடம் குறையுள்ளதாக தங்களுடைய துணை கருதிவிடுவாரோ என்ற அச்சமும் அல்லது உணர்வு ரீதியாக இது அடுத்த முறையான தாம்பத்தியத்தை தடுக்குமோ என்ற சில காரணங்களாலும் உடலுறவில் உச்சத்தை அடைந்துவிட்டதாக கூறுகிறார்கள்.

துணையை ஊக்கப்படுத்துதல்

துணையை ஊக்கப்படுத்துதல்

உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டதாகக் கூறுவதற்கு முக்கிய காரணம் நேர்மறையான கருத்துக்களை வழங்குவது. உடலுறவில் உன்னுடைய செயல் என்னைத் திருப்தியடைய செய்தது என்று கூறுவது.

உடலுறவில் இன்பத்தை அதிகரிக்கத் தான் திருப்தியடைந்து விட்டதாக போலியாகக் கூறுவதால் உங்களுடைய துணை ஊக்கத்தில் இன்னும் உடலுறவில் நன்றாக செயல்படுவார். உங்களை உச்சக்கட்டத்தை அடைய வைக்க இன்னும் புதிதாக யோசனை செய்து உடலுறவில் ஈடுபடுவார். இதனால் நீங்கள் உண்மையாக ஒருநாள் உச்சத்தை உணரமுடியும்.

உரையாடல் நிகழ்த்தலாம்

உரையாடல் நிகழ்த்தலாம்

உங்கள் துணை உச்சத்தை அடைந்துவிட்டதாக போலியாக கூறுகிறார் என்பதை நீங்கள் அறிந்துகொண்டால், அது நேர்மையான உரையாடலுக்கான நேரம். அவர்களுக்கு இன்பத்தை தர அவர்களின் உணர்ச்சியைத் தூண்ட எப்படி எங்குச் செயல்பட வேண்டும் என்று பேசுவதில் தவறில்லை.

இவ்வாறு பேசுவது உங்கள் உடலுறவை மட்டுமல்லாது உறவையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும். உடலுறவிற்கு முன்பு உரையாடுவது, அல்லது இருவரும் இணைந்து ஆபாச படங்களைப் பார்ப்பது போன்ற சில விஷயங்கள் உங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும். இதைப் பற்றி பேசுவது உங்களுக்கு சற்று அசெளகரியமாக இருந்தால், நீங்கள் தொட விரும்பும் இடத்திற்கு நேர்மாறாக உங்கள் துணையின் கையை வழிநடத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The surprising reasons why people fake orgasms

Read to know The surprising reasons why people fake orgasms
Story first published: Thursday, November 28, 2019, 13:15 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more