For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களுக்கு அனுப்பவே கூடாத மெசேஜ்கள் என்னே தெரியுமா? தெரியாம கூட இப்படி அனுப்பிறாதீங்க...!

பெண்களுக்கு மெசேஜ் பண்ணுவது என்பது மிகவும் கடினமான மற்றும் சிக்கலான ஒன்றாகும். ஏனெனில் ஆண்கள் சாதாரணம் என நினைத்து செய்யும் மெசேஜ்கள் பெண்களுக்கு ஆண்களின் மீது தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும்.

|

ஆண்களை விட பெண்கள் மெசஜ் செய்வதை உறவின் முக்கியமான நிலையாக அவர்கள் கருதுகின்றனர். உறவை அடுத்த நிலைக்கு எடுத்து செல்வதற்கும், ஆண்களைப் பற்றிய சரியான புரிதலுக்கும் ஆண்கள் செய்யும் மெசேஜ் என்பது மிகவும் முக்கியமானதாகும். காதல் மட்டுமல்ல நட்பை தொடர்வதற்கு கூட பெண்கள் ஆண்கள் செய்யும் மெசேஜைதான் அளவுகோலாக வைத்துள்ளனர்.

Texts You Should Never Send A Woman

பெண்களுக்கு மெசேஜ் பண்ணுவது என்பது மிகவும் கடினமான மற்றும் சிக்கலான ஒன்றாகும். ஏனெனில் ஆண்கள் சாதாரணம் என நினைத்து செய்யும் மெசேஜ்கள் பெண்களுக்கு ஆண்களின் மீது தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும். இந்த பதிவில் ஆண்கள் பெண்களுக்கு அனுப்பக்கூடாத குறுஞ்செய்திகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Why Aren't You Answering Me?

Why Aren't You Answering Me?

ஆண்களை விட பெண்கள் அதிகளவு செல்போனை உபயோகப்படுத்துகிறார்கள். பெண்கள் உங்களின் குறுஞ்செய்திக்கு பதில் கூறாமல் இருக்க மூன்று காரணங்கள்தான் இருக்கும். ஒன்று அவர்கள் உண்மையாக பிஸியாக இருக்க வேண்டும், அவர்கள் நீங்கள் குறுஞ்செய்தி அனுப்பியதை மறந்திருப்பார்கள், மற்றொன்று உங்களுக்கு மெசேஜ் அனுப்ப விரும்பவில்லை. ஏன் பதில் சொல்ல மறுக்கிறாய் என்று நீங்கள் கேட்பது அவர்கள் உங்கள் மேல் கோபத்தில் இருந்தால் அதனை மேலும் அதிகரிக்கும் ஒரு செயலாக இருக்கும்,

Who's That Guy?

Who's That Guy?

யார் அந்த பையன்? என்று நீங்கள் அனுப்பும் குறுஞ்செய்தி உங்களின் உறவுக்கு நீங்களே அடித்துக்கொள்ளும் சாவுமணி ஆகும். ஏனெனில் இது சந்தேகம் மற்றும் பொறாமையின் வெளிப்பாடாகும். ஒருவேளை உங்களுக்கு இதற்கான பதிலை தெரிந்து கொள்ள விரும்பினால் அதனை குறுஞ்செய்தியில் கேட்காமல் நேரில் பேசும்போது கேட்பது சேதாரத்தை குறைக்கும். கேட்கும்போதும் " நான் உன்னை ஒருவருடன் பார்த்தேன், ஆனால் நான் உன்னை தொந்தரவு செய்ய விரும்பவில்லை" என்று கூறுவது உங்களுக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

Think I'll Go To Bed Early Today

Think I'll Go To Bed Early Today

" இன்னைக்கு நைட் சீக்கிரம் தூங்க போயிருவேன் " இந்த சின்ன பொய் உங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு பெண்ணைக் கவர தோழர்களே பெரும்பாலும் பயன்படுத்தும் சிறிய பொய்கள், காலப்போக்கில் குவிந்துவிடும். இதுபோன்ற பொய்கள் உங்களுக்கு தற்காலிக சந்தோசத்தை ஏற்படுத்தலாம், ஆனால் நீங்கள் கூறியது பொய் என்று தெரிந்து விட்டால் அதற்குப்பின் உங்களின் அனைத்து செயல்களும் சந்தேகத்திற்கு உரியதாக மாறிவிடும். எனவே நீங்கள் என்ன செய்யப்போகிறீர்களோ அதை அவர்களிடம் உண்மையாக கூறிவிடுங்கள்.

MOST READ: உண்மையான கேஜிஎப் பற்றி மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள் என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!

Please, Give Me Another Chance

Please, Give Me Another Chance

எனக்கு இன்னொரு வாய்ப்புக்கொடு என்று கெஞ்சுவது உங்களின் மீது எந்த விதத்திலும் அவர்களுக்கு இரக்கத்தை ஏற்படுத்தாது. மேலும் இந்த மாதிரி கெஞ்சுவது உங்கள் மீது அவர்கள் அதிகாரம் செலுத்துவதற்கு வழிவகுக்கும். ஒரு உறவில் இருவரும் சமமான அதிகாரத்தை கொண்டிருக்க வேண்டும், இவ்வாறு மெசேஜ் அனுப்புவது உங்களை கோழையாக அவரின் கண்களுக்கு காட்டும். இதற்குப் பதிலாக உங்கள் தவறை எப்படி சரி செய்வது என்று கேளுங்கள்.

Just Checking Up On You

Just Checking Up On You

" எங்கே இருக்கிறாய் என்று சும்மா கேட்டேன் ", ஒரு பெண்ணுக்கு நீங்கள் எப்போதும் அனுப்பக்கூடாது குறுஞ்செய்திகளில் ஒன்று அவர் எங்கு இருக்கிறார் மற்றும் அவரின் செயல்களை கேள்விக்குள்ளாக்கும் மெசேஜ் ஆகும். அவர்களிடம் எதார்த்தமாக இதனை கேட்பது தவறானது அல்ல, ஆனால் அவர்கள் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் விதத்தில் மெசேஜ் அனுப்புவது உங்கள் உறவிற்கு நல்லதல்ல.

Sorry, Sorry, So Sorry…

Sorry, Sorry, So Sorry…

செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பது நல்லதுதான், ஆனால் மன்னிப்பு கேட்டே அவர்களை எரிச்சலடைய வைக்கக்கூடாது. கட்டாயப்படுத்திக் கேட்கப்படும் மன்னிப்பு உங்களின் மீதான வெறுப்பைத்தான் அதிகரிக்கும். மன்னித்த பிறகும் மீண்டும் மீண்டும் அதே செயலை நியாபகப்படுத்தும் விதத்தில் மன்னிப்பு கேட்பது மீண்டும் அந்த தவறை அவர்களுக்கு நியாபகப்படுத்திக் கொண்டே இருக்கும்.

I'm Bored

I'm Bored

போரடிக்கிறது அதனால் மெசேஜ் செய்தேன் என்று கூறுவது உங்களுக்கு எதன் மீதும் பற்று இல்லை என்று நீங்கள் கூறுவது போல அர்த்தமளிக்கும். இது உங்கள் நேரத்தை நீங்கள் மதிக்கவில்லை, உங்கள் நாளை நிரப்ப மற்றவர்களை நம்புவது போல் தெரிகிறது. மேலும் உங்களின் பொழுதுபோக்கிற்காக அவர்கள் இல்லை என்ற எண்ணம் அவர்களுக்குள் எழும், இதனால் அவர் உங்களை தவிர்ப்பதற்கு வாய்ப்புள்ளது.

MOST READ: உங்க பிறந்த தேதி படி அடுத்த வருஷத்தோட தொடக்கம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா?

K or Hmm

K or Hmm

சுவாரஸ்யமான ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டு அதற்கான பதிலுக்கு காத்திருக்கும்போது நீங்கள் வெறுமனே " சரி " அல்லது " ஓகே " என்று அனுப்புவது உங்களுக்கு அவர்களுடன் பேசுவதில் விருப்பம் இல்லை என்று தோற்றத்தை உருவாக்கும். பெண்கள் மிகவும் மென்மையானவர்கள் அதனால் இந்த நிராகரிப்பை அவர்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இதன் அர்த்தம் நீங்கள் உரையாடலை முடித்துக் கொள்ள விரும்புகிறீர்கள் என்பதாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Texts You Should Never Send A Woman

Here is the list of texts you should never send a woman
Story first published: Monday, December 2, 2019, 17:59 [IST]
Desktop Bottom Promotion