Latest Updates
-
1 கைப்பிடி கொடாமல்லியும், 2 தக்காளியும் இருந்தா.. காலையில் இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. -
அக்டோபர் 19, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நவம்பர் 12 வரை இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஒரே இரவில் பளிச்சென்று ஜொலிக்கணுமா? அப்ப நைட் டைம்-ல இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால் நவம்பர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் -
5 முட்டை இருந்தா இந்த ஆப்கானி முட்டை மசாலாவை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடற டேஸ்ட்ல இருக்கும் -
ஆயுத பூஜைக்கு இப்படி சுண்டல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப வெளிப்டையானவர்களாக இருப்பார்களாம் - இவங்க வாயில பொய் வரது ரொம்ப கஷ்டம் -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? பூஜை செய்ய உகந்த நேரம் எது? -
வெள்ளை நிற ஆடையில் உள்ள விடாப்பிடியான கறைகளை நீக்கும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க
இந்த குணம் இருப்பவர்களை ஒருபோதும் காதலிக்காதீங்க... இவங்க செக்ஸ் அடிமையா இருக்க வாய்ப்பிருக்கு...!
பாலியல் வாழ்க்கை சில நேரங்களில் பயமாக இருக்கும், குறிப்பாக நீங்கள் ஒரு பாலியல் அடிமையுடன் டேட்டிங் செய்யும் போது. செக்ஸ் மீதான அவரது வெறித்தனமான ஆவேசம் அவர்களுடனான உறவை தொடரவதை சிரமமாக்கிவிடும்.
பாலியல் அனுபவம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமானதாகும். ஆனால் சிலசமயங்களில் பாலியல் அனுபவம் மோசமானதாக மாற வாய்ப்புள்ளது. குறிப்பாக மோசமான துணையுடன் பாலியலை பகிர்ந்து கொள்ளும்போது உங்கள் வாழ்க்கையே நரகமாக மாற வாய்ப்புள்ளது.

பாலியல் வாழ்க்கை சில நேரங்களில் பயமாக இருக்கும், குறிப்பாக நீங்கள் ஒரு பாலியல் அடிமையுடன் டேட்டிங் செய்யும் போது. செக்ஸ் மீதான அவரது வெறித்தனமான ஆவேசம் அவர்களுடனான உறவை தொடரவதை சிரமமாக்கிவிடும். போதைப்பொருட்களுக்கு அடிமையாக இருப்பதைக் காட்டிலும் பாலியல் அடிமைத்தனம் மிகவும் ஆபத்தானதாகும். இந்த பதிவில் நீங்கள் பாலியல் அடிமைகளுக்கான அறிகுறிகளை தெரிந்து கொள்ளலாம்.

படுக்கையில் எப்போதும் ஆதிக்கம் செலுத்துவது
பாலியலுக்கு அடிமையானவர்கள் எப்போதும் படுக்கையில் ஆதிக்கம் செலுத்துவார்கள். தங்கள் பங்குதாரர் என்ன உணரக்கூடும் என்பதில் அவர்கள் அக்கறை இருக்காது, மேலும் பாலியல் மீது தீராத பசியைக் கொண்டிருப்பார்கள். இறுதியில் அவர்கள் தங்கள் துணையை பாலியல் பொம்மை போல உணர வைப்பார். அவர்கள் தங்கள் சொந்த மனநிறைவை மட்டுமே எதிர்பார்க்கும் சுயநல காதலர்களாக இருப்பார்கள்.

எப்போதும் பெண்களுடன் கடலை போடுவது
பாலியல் அடிமைகள் பொதுவாக கமிட்மென்ட் போபிக் என்னும் குறைபாடு இருக்கும், அவர்கள் வாய்ப்பு கிடைக்கும் பெண்களுடனும் உல்லாசமாக இருப்ப முயலுவார்கள். அதற்காக கிடைக்கும் அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வார்கள். இது அவர்களின் உடலுறவு பசியை போக்குவதற்கான வழியாகும். கூடுதலாக அவர்கள் தொடர்ச்சியாக பொய் கூறுவார்கள், தங்களுடைய அனைத்து ரகசியங்களையும் மறைப்பார்கள்.

'இல்லை' என்ற பதிலை ஏற்கமாட்டார்கள்
இது மிகவும் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும். உடலுறவுக்கான அவர்களின் வேண்டுகோள் ஒருபோதும் முடிவடையாது, அவர்கள் விரும்பும் போதெல்லாம் உடலுறவு கொள்வதை தங்கள் கூட்டாளர் எதிர்த்தால் அவர்கள் மிகவும் கோபப்படுவார்கள். உண்மையில் இது அச்சுறுத்தல் அல்லது உடல்ரீதியான துன்புறுத்தலுக்கு கூட வழிவகுக்கும்.

செல்போன் மற்றும் லேப்டாப்பை ரகசியமாக வைத்திருப்பது
இவர்கள் தங்கள் மொபைல், மடிக்கணினி போன்ற சாதனங்களின் பாஸ்வேர்டை பாதுகாக்க விரும்புவார்கள், அவற்றை ஒருபோதும் மற்றவர்களை பயன்படுத்த அனுமதிக்க மாட்டார்கள். குறிப்பாக துணையைப் பயன்படுத்த அவர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். மேலும் அவர்களின் பாலியல் வேட்கைக்கான விருப்பம் மற்றவர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்டது.

உடலுறவுக்குப் பிறகும் அவர் சுயஇன்பம் காண்பது
பல பாலியல் அடிமைகள் உடலுறவுக்குப் பிறகும் சுயஇன்பம் செய்கிறார்கள். அவர்களின் செக்ஸ் இயக்கி மிக அதிகமாக உள்ளது, மேலும் இதுபோன்றவர்கள் கிட்டத்தட்ட எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அனைத்து தருணங்களிலும் தூண்டப்படுவார்கள்.

கடந்த கால உறவுகள்
பாலியலுக்கு அடிமையானவர்கள் எந்த அளவிற்கும் செல்லலாம், கடந்த காலங்களில் பல கூட்டாளர்களை ஏமாற்றியிருக்க வாய்ப்புள்ளது. இப்போதெல்லாம் மோசடி செய்வது அசாதாரணமானது அல்ல என்றாலும், பாலியல் அடிமையாக்குபவர்கள் தொடர் ஏமாற்றுக்காரர்கள் மற்றும் ஒரே நேரத்தில் பல உறவுகளைக் கொண்டிருப்பார்கள்.



Click it and Unblock the Notifications
