For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த அறிகுறிகள் இருந்தால் அவர் ஆபாசப்படங்களுக்கு அடிமையாக இருக்கிறார் என்று அர்த்தம்... உஷாரா இருங்க

ஆபாசப்படங்களை அளவிற்கு அதிகமாக பார்ப்பது அல்லது அதற்கு அடிமையாவது போன்ற குறைபாட்டுக்கு மனநல சிகிச்சை அளிக்க வேண்டுமா என்பது பல காலமாக விவாதத்திற்கு ஒன்றாகும்.

|

ஆபாசப்படங்களை அளவிற்கு அதிகமாக பார்ப்பது அல்லது அதற்கு அடிமையாவது போன்ற குறைபாட்டுக்கு மனநல சிகிச்சை அளிக்க வேண்டுமா என்பது பல காலமாக விவாதத்திற்கு ஒன்றாகும். போதைப்பழக்கங்களுக்கு அடிமையாவது போலவே ஆபாசப்படங்களுக்கு அடிமையாவதும் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பல தாக்கங்களை ஏற்படுத்தும்.

Signs of Porn Addiction

ஆபாசப்படங்கள் பார்ப்பது போதையாகவோ அல்லது நிர்பந்தமாகவோ இருந்தாலும் அதிலிருந்து வெளிவர வேண்டியது அவசியமாகும். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் ஆபாசப்படங்களுக்கு அடிமையாக உள்ளார்கள். இதில் மோசமான செய்தி என்னவெனில் பலருக்கும் அவர்கள் ஆபாசப்படங்களுக்கு அடிமையாகி இருப்பதே தெரிவதில்லை. இந்த பதிவில் ஒருவர் ஆபாசப்படங்களுக்கு அடிமையைவிட்டதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உங்களால் நிறுத்த முடியாது

உங்களால் நிறுத்த முடியாது

நீங்கள் உண்மையாக முயற்சித்தப் போதிலும் உங்களால் ஆபாசப்படங்களை பார்ப்பதை நிறுத்த முடியாது. உங்கள் துணையால் ஆபாசப்படங்கள் பார்ப்பதை நிறுத்த முடியாவிட்டால் அவர்கள் இணையத்தில் அதிக நேரம் செலவிடுவதை நீங்கள் பார்க்கலாம். நீங்கள் அவர்களுடன் தொடர்பு கொள்ள நினைத்தாலும் அவர்கள் உங்களை தவிர்த்து ஆபாசப்படத்தையே பார்ப்பார்கள்.

மேலும் மேலும் எதிர்பார்ப்பார்கள்

மேலும் மேலும் எதிர்பார்ப்பார்கள்

ஆபாசப்படத்திற்கு அடிமையானவர்கள், அதிகமான படங்களை காண அனுபவ பசியோடு இருக்கிறார்கள் என்று தெரிவிக்கின்றனர். மற்ற போதை பழக்கங்களை போலவே இவர்களும் அது இல்லாத நேரத்திலும் அவர்கள் அதனை பற்றிய சிந்தனையிலேயே இருப்பார்கள். உங்கள் துணை ஆபாசப்படங்களுக்கு அடிமையாக இருந்தால் அவர்கள் உங்களிடமிருந்து வேறொரு அறைக்கு பதுங்குவதை நீங்கள் கவனிக்கலாம். அதைப் பற்றி நீங்கள் அவர்களிடம் கேள்வி கேட்கும்போது அவர்கள் அதனை தவிர்க்கவும் அல்லது உங்களுடன் கோபப்படவோ செய்யலாம்.

நேரத்தை வீணடிப்பார்கள்

நேரத்தை வீணடிப்பார்கள்

ஆபாச போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆபாசப்படத்தைப் பார்ப்பதற்கு அதிக நேரத்தை இழக்க நேரிடும், எதையும் சாதிக்காமல் நாள் முழுவதையும் வீணடிக்கலாம். ஆபாசத்திற்கு அடிமையான ஒருவர் சோம்பேறித்தனமாகவும், உருப்படியாக எதனையும் செய்யாமல் இருப்பதை நீங்கள் காணலாம். அவர்கள் அதனை தவிர வேறு எதிலும் ஆர்வம் காட்டாமல் இருப்பார்கள்.

MOST READ: மே மாதத்தில் பிறந்தவர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள்... அவர்களின் உண்மையான குணம் என்ன தெரியுமா?

உடலுறவில் ஆர்வம் இழப்பது

உடலுறவில் ஆர்வம் இழப்பது

ஒருவர் ஆபாசப்படத்திற்கு அடிமையாகும் போது அவர்கள் உண்மையான செக்ஸ் மீதான ஆர்வத்தை இழக்கிறார்கள். அது மட்டுமல்லாமல், ஆபாசப்படத்தில் பார்க்கும் நபர்களுடன் ஒப்பிடும்போது அவர்கள் தங்கள் கூட்டாளரை குறைவாக கவர்ச்சியாகக் காண்கிறார்கள். ஆபாச போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கூட்டாளியின் உடலமைப்பில் ஆர்வத்தை இழக்க நேரிடும். நீங்கள் அவர்களுடன் பாலியல்ரீதியாக ஈடுபட முயற்சிக்கும்போது இது அவர்களுக்கு தொலைதூர அல்லது ஆர்வமற்றதாகத் தெரிகிறது. மற்றவர்களை விட இவர்களுக்கு அதிக தூண்டுதல் ஏற்படும்.

அதிகம் எதிர்பார்ப்பார்கள்

அதிகம் எதிர்பார்ப்பார்கள்

ஆபாச போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் செக்ஸ் குறித்த நம்பத்தகாத எண்ணங்களை உருவாக்குகிறார்கள். இது படுக்கையறையில் அவர்களுக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும், எளிதில் விரக்தியடையக்கூடும், மேலும் அவர்களின் கூட்டாளரை அந்நியப்படுத்தலாம். இது நிகழும்போது, அவர்களின் துணை உடல்ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் சங்கடமாக உணர முடியும்.

ஈர்ப்பை இழந்து விடுவார்கள்

ஈர்ப்பை இழந்து விடுவார்கள்

ஆபாச போதை என்பது தங்கள் துணைக்கு அழகு பற்றிய துன்பகரமான நம்பத்தகாத எதிர்பார்ப்புகளை அளிக்கும். இது அவர்களின் பங்குதாரர் அவர்களின் தோற்றத்தைப் பற்றி புண்படுத்துவதோடு அவர்களின் சுயமரியாதைக்கு ஒரு பெரிய சிக்கலை உருவாக்கும்.

MOST READ: உலகையே அச்சுறுத்திய மாயன்களின் முடிவு எப்படி இருந்தது தெரியுமா? மாயன் காலண்டர் என்பது உண்மையா?

உடல் வலியில் இருப்பார்கள்

உடல் வலியில் இருப்பார்கள்

ஆபாச போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் உண்மையில் உடல் வலியை அனுபவிக்க ஆரம்பிக்கலாம். இது ஆபாசப்படத்தைப் பார்க்கும்போது ஏற்படும் உடல் அசைவுகளிலிருந்தோ அல்லது அதிகப்படியான கணினி பயன்பாட்டுடன் வரும் சிரமத்திலிருந்தோ இருக்கலாம், ஆபாசப்படத்திற்கு அடிமையானவர்கள் மணிக்கட்டு, முதுகு மற்றும் கழுத்து வலி மற்றும் தலைவலி குறித்து அடிக்கடி புகார் கூறுகிறார்கள்.

பணத்தை இழப்பார்கள்

பணத்தை இழப்பார்கள்

ஆபாச போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்ட சிலர் உயர்தர பார்ப்பதற்காக பணத்தை செலவழிக்கத் தொடங்குகிறார்கள். இது நிகழும்போது, அவர்கள் விரைவில் ஒருவித நிதி நெருக்கடியில் விழ ஆரம்பிக்கலாம். பணப் பிரச்சினைகள் குறித்து அவர்கள் அதிகம் புகார் கூறுவதால் இது தோன்றுகிறது, ஆனால் இந்த சிக்கல்களின் உண்மையான காரணத்தை அவர்கள் வெளியிட விரும்புவதில்லை.

கவனச்சிதறல்கள் இருக்கும்

கவனச்சிதறல்கள் இருக்கும்

ஒருவர் ஆபாசப்படத்திற்கு அடிமையாகும்போது, அவர்கள் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களிலிருந்து திசைதிருப்பப்படுவார். நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது வேலையில் இருக்கும்போதும் அவர்களின் மனம்எண்ணம் ஆபாசப்படங்களை சுற்றியே இருக்கும். இது உண்மையில் அவர்களின் வேலை மற்றும் உறவுகளை பாதிக்கலாம். இது அவர்களின் கூட்டாளரிடமிருந்தும் அவர்களுடன் இணைவதற்கான முயற்சிகளிலிருந்தும் அவர்களைத் தூரமாக்குகிறது.

MOST READ: கொரோனா நோயில் இருந்து குணமானவர்கள் மூலம் மீண்டும் கொரோனா பரவலாம்... கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி..

அதிக கோபப்படுவார்கள்

அதிக கோபப்படுவார்கள்

எந்தவொரு போதைப்பொருளையும் போலவே, ஆபாச போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஆபாசப்படமின்றி இருந்தால் எளிதில் எரிச்சலடைவார். ஆபாசப்படங்கள் பார்க்க தாமதமாகினால் அவர்களை பொறுமையை இழப்பார்கள். இது அவர்களின் கூட்டாளரைத் துன்புறுத்துவதையும் எளிதாக்கும்.அவர்கள் மிகவும் எரிச்சல், கிளர்ச்சி அல்லது ஒழுங்கற்றவர்களாக இருப்பார்கள். அவர்களின் கூட்டாளர் அவர்களின் ஆளுமையில் பெரிய மாற்றங்களைக் கவனிக்க முடியும், மேலும் அவர்கள் முன்பு நேசித்த அதே நபரா என்று அவர்களுக்கு சந்தேகத்தை எழுப்பும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Signs of Porn Addiction

Check out the top 10 signs of porn addiction.
Desktop Bottom Promotion