For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களே! உங்க மனைவி உடலுறவில் ஆர்வம் காட்டாமல் இருப்பதற்கு 'இது' தான் காரணமாம்...!

|

ஒரு உறவு மகிழ்ச்சிகரமாகவும், வெற்றிகரமாகவும் தொடர நெருக்கம் மிகவும் முக்கியமானது. நெருக்கம் உங்கள் உறவை உயிரோடு வைத்திருக்கிறது. தம்பதிகள் இருவரையும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக கொண்டுவருகிறது. மேலும் ரொமான்ஸை கட்டுக்குள் வைத்திருக்கும். ஒரு உறவு மகிழ்ச்சியாக தொடர்வதற்கு பாலியல் இன்பம் முக்கிய காரணமாக இருக்கின்றன. தம்பதிகள் ஒருவருக்கொருவர் அவர்களின் துணைகளின் ஆசைகளையும், விருப்பங்களையும் தெரிந்துகொண்டு அதன்படி நடக்க வேண்டும். உடலுறவில் சலிப்பு ஏற்படாமல் இருக்க பல புதிய நிலைகளை முயற்சி செய்ய வேண்டும். காலப்போக்கில் கவர்ச்சியையும் ஈர்ப்பையும் இழந்து உடலுறவில் சலிப்பு ஏற்படுவது பல உறவுகளில் மிகவும் பொதுவானது.

பல சந்தர்ப்பங்களில் இந்த ஆர்வ இழப்பு பெண்களிடம் இருந்தே தொடங்குகிறது. காலப்போக்கில் உங்கள் மனைவி உங்களை நெருங்குவதற்கு ஆர்வம் காட்டாமல் போகலாம். வழக்கமான உடலுறவு பெரும்பாலும் பெண்களுக்கு சலிப்பை ஏற்படுத்தலாம். பெண்களுக்கு ஏன் உடலுறவில் ஆர்வம் குறைகிறது என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், அதற்கான பதிலை இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அவள் ஏன் ஆர்வம் காட்டவில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்

அவள் ஏன் ஆர்வம் காட்டவில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்

ஒரு உறவில் கணவன், மனைவி நெருக்கமாக இணைவதற்கு உடலுறவு அவசியம். ஆண், பெண் இருவரும் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சியோடு விளையாடும்போது தான் அவர்களுக்கு இன்பம் கிடைக்கும். ஒருவரின் ஆசை மற்றும் விருப்பங்களை தெரிந்துகொண்டு அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாகவும் நீங்கள் விளையாட்டை தொடங்கவேண்டும். உங்கள் மனைவிக்கு ஏன் உடலுறவில் ஆர்வம் இல்லை என்பதற்கான காரணத்தை அறிந்துகொண்டு, அதை சரி செய்யுங்கள்.

அதிருப்தி

அதிருப்தி

பாலியல் ஆசை, பெண்கள் உறவைப் பற்றி எப்படி உணர்கிறார்கள் என்பதோடு நேரடியாக தொடர்புடையது.

உங்கள் மனைவி திருமணத்தில் உண்மையில் அதிருப்தியாக இருக்கலாம். அவள் வாழ்க்கையில், ஏதோ ஒன்று அவளை எரிச்சலூட்டிக்கொண்டிருக்க வேண்டும். இதனால் அவள் படுக்கையில் உன்னை விட்டு விலகிச் செல்கிறாள். கேட்கும் போது, ​​அவள் உடலுறவில் சில பழக்கங்கள் அல்லது பெரிய பிரச்சனைகளை சுட்டிக்காட்டலாம். அவள் உங்களுடன் உணர்ச்சிபூர்வமான தொடர்பை உணராமல் இருக்கலாம்.

போர்ஃபிளே இல்லாதது

போர்ஃபிளே இல்லாதது

உடல்ரீதியான செயல்பாட்டையும் தாண்டி உடலுறவில் அதிக விஷயங்கள் உள்ளது. பெண்கள் போர்ஃபிளேவை அதிகம் விரும்புகிறார்கள். நீங்கள் அதைத் தவிர்த்துவிட்டு நேரடியாக உடலுறவுக்குச் செல்லும்போது, நீங்கள் அவளின் ஆசைகளையும் விருப்பங்களையும் விட்டுவிடுகிறீர்கள். உங்கள் மனைவி உடலுறவை விரும்பவில்லை என்பதை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள். நீங்கள் அவளை அதிகமாக தொட வேண்டும் ஆராய வேண்டும் என்று அவள் விரும்புகிறாள்.

அழுத்தம் மற்றும் சோர்வு

அழுத்தம் மற்றும் சோர்வு

உங்கள் மனைவி வேலைக்கு செல்பவராக இருந்தால், எல்லாவற்றையும் நிர்வகிப்பது மிகவும் கடினம். தொழில் மற்றும் தனிப்பட்டவேலைகளின் பெரும் சுமை பெரும்பாலும் பெண்களை சோர்வடையச் செய்கிறது. அலுவலகம் மற்றும் வீட்டு வேலைகள் என அனைத்திலும் சோர்வாக இருப்பதால் உங்கள் மனைவி உடலுறவு கொள்ளும் மனநிலையில் இல்லாமல் இருக்கலாம். எனவே, உடலுறவில் ஈடுபடுவதை விட இரவில் ஓய்வெடுக்க விரும்புவது இயற்கையானது. அவளின் பிரச்சனைகளை புரிந்துகொண்டு அவளுடைய வேளைகளில் நீங்கள் கவனம் செலுத்தலாம்.

வலி நிறைந்த உடலுறவு

வலி நிறைந்த உடலுறவு

வயது அதிகரிக்கும் போது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் உடல் மற்றும் ஹார்மோன் மாற்றங்களை அனுபவிக்கிறார்கள். உடலுறவு உங்கள் மனைவிக்கு வேதனையாக இருக்கலாம். உடலுறவின் போது அவள் அசௌகரியமாக உணரலாம். நீங்கள் அவளுடன் தொடர்பு கொண்டு, அதிக லூப்ரிகண்ட் அல்லது மகளிர் மருத்துவ நிபுணரை சந்திப்பது போதுமானதா என்று கேட்கலாம். எப்படியிருந்தாலும், இது கவலைக்குரிய விஷயம்.

வழக்கமான உடலுறவு

வழக்கமான உடலுறவு

உங்கள் மனைவி உடலுறவில் ஆர்வம் காட்டாததற்கு மற்றொரு சாத்தியமான காரணம், அவள் உடலுறவில் சலித்துவிட்டதால் இருக்கலாம். வெளிப்படையாக, அதே பழைய மந்தமான அலல்து வழக்கமான உடலுறவில் ஈடுபட அவள் விரும்பாமல் இருக்கலாம். எனவே, சில புதிய பாலியல் நிலைகள் அல்லது கற்பனைகளை முயற்சிப்பது உங்கள் பாலியல் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reasons why your wife may not be interested in love making in tamil

Here we are talking about the Reasons why your wife may not be interested in love making.
Story first published: Friday, December 10, 2021, 18:30 [IST]