For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவால் உங்கள் துணையை விட்டு பிரிந்து கஷ்டப்படுறீங்களா? அப்ப கண்டிப்பா இத படிங்க...

உலகமெங்கிலும் கொரோனா பாதிப்பால் குடும்பத்திற்குள்ளேயே தனியாக இருக்க வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இது நம் மனநிலையை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் உறவுகளுக்கிடையே உள்ள தூரத்தையும் அதிகமாக்கி உள்ளது என்றே

|

உலகமெங்கிலும் கொரோனா பாதிப்பால் இப்பொழுது குடும்பத்திற்குள்ளேயே தனியாக இருக்க வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இது நம் மனநிலையை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் உறவுகளுக்கிடையே உள்ள தூரத்தையும் அதிகமாக்கி உள்ளது என்றே கூறலாம். நீங்கள் தனிமைப்படுத்தலை கையாள நேர்ந்தால் உங்கள் துணையுடன் வெளியே செல்ல முடியாது, உங்கள் குழந்தைகளுடன் விளையாட முடியாது, தனி அறையில் வெகு நாட்களாக இருப்பது உங்களுக்கு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் கஷ்டத்தை ஏற்படுத்தக் கூடும்.

Quarantine and Long Distance Relationship: Don’t Let Lockdown Affect Your Love

ஏன் அருகில் இருக்கும் தம்பதிகள் கூட இந்த கால கட்டத்தில் நீண்ட தூரத்தில் இருப்பதாக உணர்கின்றனர். இதனால் நிறைய பேர்கள் மன மற்றும் உளவியல் ரீதியான ஆபத்துக்களை சந்திப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். உளவியல் மருத்துவர்களின் கருத்துப்படி நாம் நம் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடும் போது அது நம் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் கடினமான நேரங்களை அல்லது சூழ்நிலைகளை எளிதில் போராட உதவுகிறது.

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் இந்த நெருக்கம் என்பது இயலாத காரியம். எனவே நீங்கள் சமூக தூரமாக இருந்தால் கூட உங்கள் உறவு பாதிக்காமல் அன்பை என்றென்றும் காக்க நாங்கள் சில ஐடியாக்களை இங்கே கூறுகிறோம். இது உங்கள் உறவை பேண கை கொடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தனிமைப்படுத்துதலை புரிந்து கொள்ளுதல்

தனிமைப்படுத்துதலை புரிந்து கொள்ளுதல்

முதலில் நீங்கள் மட்டும் தனிமைப்படுத்தலில் இல்லை. உங்களைப் போன்ற ஏராளமான தம்பதிகள் தனிமைப்படுத்தலை சந்தித்து வருகிறார்கள். இந்த தனிமைப்படுத்துதல் ஒரு கடினமான நேரம் தான், மன அழுத்தத்தை அதிகரிக்கும் நேரம் தான். ஆனால் உங்கள் ஒருவரின் தனிமை உங்கள் உறவுகளை காக்கும் என்ற புரிதலை மனதிற்குள் கொண்டு வாருங்கள். தினமும் உங்கள் உறவில் அன்பு என்ற பூ பூக்க சிறிதளவு தண்ணீர் ஊற்றினாலே போதும் என்பதை மறவாதீர்கள். அது போலத்தான் வாழ்க்கையும் தினமும் உங்கள் அன்பான உறவுகளுடன் தொலைவில் இருந்து உரையாடுங்கள். உங்கள் அன்பான வார்த்தைகள் மற்றும் கவனிப்பின் மூலம் அவர்களை அருகில் வைத்துக் கொள்ளுங்கள். அது போதும் உங்கள் மன அழுத்தத்தை விரட்ட.

தூரமும்.. உறவு சிக்கல்களும்..

தூரமும்.. உறவு சிக்கல்களும்..

எப்பொழுதும் தூரம் என்பது உறவுகளில் சிக்கல்களை ஏற்படுத்தக் கூடியது. தம்பதிகள் ஒன்றாக இருந்து நேரம் செலவழிக்கும் போது புரிதலும் அதிகரிக்கும் சண்டை வரத்தும் குறைகிறது. ஆனால் இந்த தனிமைப்படுத்துதல் நேரம் உங்களுக்கு இடையை உள்ள இடைவெளியை அதிகமாக்க கூடும். இந்த இடைவெளியை முதலில் இருவரும் புரிந்து கொள்ள முற்படுங்கள். சரியான புரிதலைக் கொண்டு இந்த இடைவெளியை பூசி விடலாம்.

தொடர்பு தான் உங்களுக்கான திறவுகோல்

தொடர்பு தான் உங்களுக்கான திறவுகோல்

ஒவ்வொரு நாளும் உங்கள் அன்பானவருடன் பேச மறக்காதீர்கள். தினமும் மொபைல் மூலமாக தொடர்பு கொண்டு பேசுங்கள். உங்கள் பேச்சு பெரிதாக இல்லாவிட்டாலும் அது அவர்களின் நலம் விசாரிப்பாக இருக்கலாம். தூரமாக இருந்தால் கூட உன்னுடன் நான் இருக்கிறேன் என்று அவர்களை தைரியப்படுத்துங்கள். நீங்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதே உங்கள் மனதில் நேர்மறை எண்ணங்களை கொண்டு வரும்.

மனம் இருந்தால் ஒன்றாக எதையும் செய்யலாம்

மனம் இருந்தால் ஒன்றாக எதையும் செய்யலாம்

நீங்கள் உடல் ரீதியாக ஒன்றாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் மன ரீதியாக ஒன்றாகி இருக்கிறீர்கள். உடல் ரீதியாக இல்லாமல் கூட நீங்கள் நிறைய விஷயங்களை ஒன்றாக செய்யலாம். உதாரணமாக உங்கள் டிவியில் ஒரு படத்தை பார்க்கிறீர்கள் என்றால் இருவரும் இணைந்து வீடியோ கால் மூலம் ஒன்றாக பார்க்கலாம். ஏன் வீடியோ அழைப்பின் மூலம் ஒன்றாக நீங்கள்ள் சமைக்கலாம். ஏன் ஒன்றாக இணைந்து புத்தகங்கள் படிக்கலாம். இதெல்லாம் உங்களுக்கு புது உற்சாகத்தை கொடுக்கும். இருவரும் இணைந்தே இருப்பது போன்ற உள்ளுணர்வை உங்களுக்கு இட்டுச் செல்லும்.

எதிர்கால திட்டத்தை தீட்டுங்கள்

எதிர்கால திட்டத்தை தீட்டுங்கள்

இந்த தனிமைப்படுத்துதல் காரணமாக நடக்க இருக்கிற நிறைய திருமணங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதில் நீங்களும் பாதிக்கப்பட்ட ஒருவராக இருக்கலாம். ஆனால் இது உங்கள் திருமணத்தை சிறப்பாக நடத்துவதற்கான கூடுதல் நேரத்தை இது உங்களுக்கு வழங்கியுள்ளது என்று யோசியுங்கள். உங்கள் துணையுடன் பேசி எதிர்கால திட்டங்களை தீட்டுங்கள். உங்கள் காதலை இன்னும் அழகாக்க இந்த நேரங்களை நீங்கள்ள் கையில் எடுங்கள். தூரம் அதிகரித்த மாதிரியும் தெரியாது உங்கள் காதலுக்கும் புத்துயிர் ஊட்டின மாதிரி இருக்கும்.

தவறான புரிதல்களை இதோடு தூக்கி எறியுங்கள்

தவறான புரிதல்களை இதோடு தூக்கி எறியுங்கள்

உங்கள் உறவை பாதிக்கிற எந்தவொரு கருத்து வேறுபாடுகளையும் தூக்கி எறியுங்கள். எதையும் அனுமதிக்க வேண்டாம். உங்களுடைய எல்லா சந்தேகங்களையும் தவறான புரிதல்களையும் அழிக்க முற்படுங்கள். உங்கள் துணையை முழுமையாக புரிந்து கொள்ள முற்படுங்கள். நீங்களும் உங்கள் துணையும் வெளிப்படையாக பேசிக் கொள்வதன் மூலம் உறவு பிணைக்கும்.

தூரம் தான் இரண்டு பேரை இணைக்கும் பாலம்

தூரம் தான் இரண்டு பேரை இணைக்கும் பாலம்

இரண்டு தம்பதிகள் இடையே தூரம் எப்பொழுதும் ஒரு காந்தம் போல செயல்படும். அது உங்கள் நினைவுகளை அழகாக்கும், நினைவுகளை புரட்ட வைக்கும். உங்கள் நினைவுகளுடன் பயணிக்க வைக்கும். உண்மையில் தூரம் தான் உங்கள் காதலை சுமந்து செல்லப் போகிறது. இந்த தனிமை உங்களுக்கு உறவுகளின் அர்த்தத்தையும் முக்கியத்துவத்தையும் புரிய வைக்கும். அதனால் தான் இந்த இடைவெளி முடிந்ததும் உண்மையில் அதிகமாக காதலிப்பவர்கள் ஏராளமாக இருக்கப் போகிறார்கள்.

அப்புறம் என்னங்க நீங்களும் உங்கள் அன்பை பேண ரெடியாகிட்டிங்களா....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Quarantine and Long Distance Relationship: Don’t Let Lockdown Affect Your Love

Are you living a long-distance relationship due to a quarantine situation? Here’s how you can thrive and make it even stronger.
Desktop Bottom Promotion