For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க செய்யும் இந்த விஷயம் தான் உங்களோட பாலியல் வாழ்க்கைய சந்தோஷம் இல்லாமா ஆக்குதாம்...!

உங்களுடைய உறவு மற்றும் பாலியல் உறவை அழிக்கக்கூடிய மற்றொரு பொதுவான காரணம் ஒருவருக்கொருவர் அவமரியாதையாக நடந்துகொள்வது. எந்தவொரு உறவின் அடிப்படையும் மரியாதையாக நடந்துகொள்வது முக்கியம்.

|

இன்றைய நவீன உலகில் ஆண், பெண் உறவில் பெரும்பாலும் முக்கிய பிரச்சனையாக இருப்பது அவர்களின் பாலியல் வாழ்க்கைதான். திருமணமான சில ஆண்டுகளிலே அல்லது சில மாதங்களிலே பாலியல் வாழ்க்கை உங்களுக்கு சலித்து போகலாம். அவ்வாறு சலிக்காமல் இருக்க நீங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உங்கள் உறவை நீண்ட காலம் இணைத்து வைத்திருக்க உங்கள் பாலியல் வாழ்க்கையும் முக்கிய காரணம். உட்கார்ந்தே சோம்பேறியாக இருப்பது மட்டுமல்ல, உங்கள் பாலியல் வாழ்க்கையை மந்தமானதாக மாற்றுவதற்கு பல காரணங்கள் உள்ளன.

mistakes that are killing your relationship life in tamil

உங்கள் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும் சில பழக்கங்களும் முட்டாள்தனமான நடைமுறைகளும் உள்ளன. அவற்றை பற்றி தெரிந்துகொள்ள இக்கட்டுரையை முழுவதுமாக படியுங்கள். மேலும், இந்த தவறுகளை நீங்கள் சரி செய்து, உங்கள் செக்ஸ் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக மாற்றுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிக மன அழுத்தம்

அதிக மன அழுத்தம்

வேலை அல்லது வீட்டு வேலைகள் அல்லது படுக்கையில் வெவ்வேறு விஷயங்களை முயற்சிப்பதாக இருந்தாலும், எல்லாவற்றிலும் நீங்கள் அதிக மன அழுத்தத்தை எடுத்துக் கொண்டால், அது உங்கள் பாலியல் வாழ்க்கையை அழித்துவிடும். மன அழுத்தம் உங்களை எதிலும் கவனம் செலுத்த அனுமதிக்காது. மேலும் உங்கள் கார்டிசோலின் அளவு அதிகமாகும். இந்த நிலைகள் உங்கள் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் பிற ஹார்மோன் உற்பத்திகளை அடக்குவதில் செயல்படுவதால், பாலியல் மனநிலையைக் கொல்லும். மன அழுத்தத்திலிருந்து விடுபட யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொள்ளுங்கள்.

தூக்கம் இல்லாமை

தூக்கம் இல்லாமை

நீங்கள் எப்போதும் சோர்வாக இருப்பதற்கு தூக்கமின்மை ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். நீங்கள் அதிக வேலை செய்து, உங்கள் உடலுக்கு போதுமான ஓய்வு கிடைக்கவில்லை என்றால், நாளின் முடிவில் அது சோர்வாக இருக்கும். அதனால் உடலுறவு கொள்வதற்கு உங்கள் மனமும், உடலும் சரியாக ஒத்துழைக்காது. ஆதலால், ஒருநாளைக்கு குறைந்தது 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். உங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும்.

சமநிலையற்ற ஹார்மோன்

சமநிலையற்ற ஹார்மோன்

உங்களுக்கு மருத்துவ ரீதியாக சில சிக்கல்கள் இருப்பதாக நீங்கள் நினைத்தால், நீங்கள் விவேகமாக நடந்துகொண்டு உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். நீங்கள் இயற்கையாகவே குறைந்த டெஸ்டோஸ்டிரோனுடன் பிறந்திருக்கலாம். இதற்கான சிகிச்சைகளை நீங்கள் மேற்கொண்டு உங்கள் இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழலாம்.

தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டை வருவது

தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டை வருவது

சண்டைகள் போடாத கணவன், மனைவியே இவ்வுலகில் இல்லை எனலாம். ஏனெனில், தம்பதிகளுக்குள் சண்டை வருவது மிகவும் சாதாரணம். ஆனால், அது எந்த சூழ்நிலை எதை பற்றியது என்பதுதான் பிரச்சனையை மிக தீவிரமாக எடுத்துச்செல்வது. நீங்களும் உங்கள் துணையும் அதிகமாக சண்டையிட்டு, அது எப்போதும் ஆரோக்கியமற்றதாக இருந்தால், அது உங்கள் பாலியல் வாழ்க்கையை பாதிக்கும் என்பது வெளிப்படையானது. சண்டைகள் போட்டுக்கொண்டாலும் இருவரும் விட்டுக்கொடுத்து சமாதானமாக செல்ல வேண்டும்.

திருப்தியற்ற செக்ஸ்

திருப்தியற்ற செக்ஸ்

உங்கள் துணை உங்களை திருப்திப்படுத்தாத நேரங்களும் உள்ளன. அதனால் பல ஏமாற்றங்களுக்குப் பிறகும், நீங்கள் அதை உணரவில்லை அல்லது உங்கள் துணை உணரவில்லை என்றால், நீங்கள் இருவரும் இதைப் பற்றி விவாதிக்க வேண்டிய நேரம் இது. படுக்கையில் நீங்கள் என்ன விரும்புகிறீர்கள், எப்படி விரும்புகிறீர்கள், அவர்கள் என்ன தவறு செய்கிறார்கள் என்று சில சமயங்களில் உங்கள் துணையிடம் சொல்ல வேண்டும். உங்களுக்குப் பிடிக்காததை அவர்கள் தொடர்ந்து செய்து, பிரச்சினை என்னவென்று கூட அவர்களிடம் சொல்லப்படாவிட்டால், பிரச்சனைகள் எப்படி தீரும்?

மரியாதைக் குறைவாக நடத்துவது

மரியாதைக் குறைவாக நடத்துவது

உங்களுடைய உறவு மற்றும் பாலியல் உறவை அழிக்கக்கூடிய மற்றொரு பொதுவான காரணம் ஒருவருக்கொருவர் அவமரியாதையாக நடந்துகொள்வது. எந்தவொரு உறவின் அடிப்படையும் மரியாதையாக நடந்துகொள்வது முக்கியம். உங்கள் துணையிடம் நீங்கள் எப்போதும் அவமரியாதையாக நடந்துகொண்டிருந்தால், நீண்ட காலத்திற்கு உங்கள் உறவு மகிழ்ச்சியாக இருக்காது. இது உங்கள் பாலியல் வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

mistakes that are killing your relationship life in tamil

Here we are talking about the mistakes that are killing your relationship life in tamil.
Story first published: Tuesday, August 2, 2022, 15:28 [IST]
Desktop Bottom Promotion