For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெரும்பாலான ஆண்கள் உடலுறவின்போது உச்சகட்டம் அடைந்ததாக நடிக்கிறார்களாம் ஏன் தெரியுமா?

|

உடலுறவு என்பது ஆண் ,பெண் உறவில் இன்றியாமையாத ஒன்று. உடலுறவை பொருத்து பெரும்பாலான உறவுகளில் சிக்கல்கள் வருவதும், வராமல்போவதும் இருக்கிறது. இதில், உடலுறவில் ஈடுபடும் இருவரின் விருப்பம் மற்றும் அவர்களின் புதிய முயற்சியை சார்ந்தது. தங்களுடைய துணையை எவ்வாறு திருப்பதிபடுத்த வேண்டும் என்று ஒவ்வொரு துணையும் நினைத்தால், அவர்களின் உறவில் உச்சகட்டத்தை அடையலாம்.

பெரும்பாலான பெண்கள் உச்சகட்டம் அடைவது இல்லை என்ற புகார்கள் உள்ளன. பெண்கள் தங்களின் துணைக்காக உடலுறவில் உச்சகட்டம் அடைந்ததாக போலியாக நடிக்கிறார்கள். இந்த விஷயத்தில் ஆண்களும் புணர்ச்சி அடைந்ததாக போலியாக நடிக்கிறார்கள் என்ற புள்ளி விவரங்களும் வெளியாகியுள்ளன. இக்கட்டுரையில் ஆண்களின் உச்சகட்டம் பற்றிய உண்மை விஷயங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆண்களுக்கும் இடங்கள் உள்ளன

ஆண்களுக்கும் இடங்கள் உள்ளன

பெண்களுக்கு ஜி-ஸ்பாட், ஏ-ஸ்பாட் மற்றும் ஆழமான இடம் இருக்கும்போது, ஆண்களுக்கும் இடங்கள் உள்ளன. அவை அவர்களை மிகவும் உற்சாகப்படுத்துகின்றன. தலையுடன் இணைக்கப்பட்ட திசு (ஃப்ரெனுலம்), பெரினியம் மற்றும் புரோஸ்டேட் சுரப்பி ஆகியவை இன்பகொடுக்கும் இடங்கள். பெண்கள் அவரின் ஆண்களை உச்சகட்டம் அடைய செய்ய இந்த இடங்களில் தீண்டலாம்.

வாரத்திற்கு இத்தனை முறை விந்தணுக்கள் வெளியேற்றும் ஆண்களுக்கு புரோஸ்டேட் கேன்சர் வராதாம்...!

புரோஸ்டேட்

புரோஸ்டேட்

உடலுறவில் புரோஸ்டேட் மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். புரோஸ்டேட் என்பது சிறுநீர்ப்பை மற்றும் ஆண்குறிக்கு இடையில் அமைந்துள்ள ஒரு வால்நட் அளவிலான சுரப்பி ஆகும். புரோஸ்டேட் மலக்குடலுக்கு முன்னால் உள்ளது. புரோஸ்டேட் விந்தணுக்களை வளர்க்கும் மற்றும் பாதுகாக்கும் திரவத்தை சுரக்கிறது. பெண்களுக்கு எப்படி சில பகுதிகள் உள்ளனவோ, அதேபோல ஆண்களுக்கும் உள்ளது.

புணர்ச்சி- விந்து வெளியேறுதல்

புணர்ச்சி- விந்து வெளியேறுதல்

உச்சகட்டம் அடைவது என்பது விந்துதள்ளல் இல்லை. ஆண்களின் ஆண்குறியில் இருக்கும் சிறிய பகுதிதான், அவர்களை உச்சகட்டம் அடைய வைக்கிறது. சிறியதாக இருந்தாலும், அதுதான் அவர்களுக்கு பெரிது. அவை திரவமின்றி க்ளைமாக்ஸைக் கொண்டிருக்கக்கூடிய திறன் கொண்டவை. அதாவது உலர்ந்த புணர்ச்சியைக் கொண்டிருக்கின்றன.

விந்தணுக்களின் பயணம்

விந்தணுக்களின் பயணம்

விந்தணுக்களின் பயணம் மிக வேகமாக உள்ளன. அவை உசைன் போல்ட்டின் வேகத்தில் பயணிக்கின்றன. அதாவது 28 எம்.பிஹெச். இருப்பினும், அவை பெண்களின் அண்டப்பகுதியை அடையும் போது, அவை 4 எம்.பி.எச் -ஆக உள்ளன.

அந்த காலத்தில் பெண்கள் யோனியை வைத்து மேற்கொள்ளப்பட்ட வினோதமான கர்ப்ப பரிசோதனைகள் என்னென்ன தெரியுமா?

எவ்வளவு விந்தணுக்கள்?

எவ்வளவு விந்தணுக்கள்?

ஆண்கள் தங்கள் வாழ்க்கையில் 50 லிட்டர் விந்தணுக்களை வெளியிடுகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. துல்லியமாகச் சொல்வதானால், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் பதினான்கு கேலன் விந்தணுக்களை உடலுறவின்போது அல்லது சுய இன்பம் அல்லது தூக்கத்தின்போது வெளியிடுகிறார்கள்.

பெண்களை விடக் குறைவானது

பெண்களை விடக் குறைவானது

ஆண்களின் உச்சகட்டம் பெண்களைக் காட்டிலும்குறைவானது. ஆண்கள் 5 வினாடிகள் முதல் 22 விநாடிகள் வரை புணர்ச்சி பெறலாம். ஆனால், பெண்களுக்கு, சராசரியாக 20 வினாடிகள் தேவைப்படும்.

உங்க அக்குள் கருப்பா அசிங்கமா இருக்கா? இந்த வீட்டு வைத்தியங்கள யூஸ் பண்ணி பாருங்க...!

ஆண்களும் போலி புணர்ச்சி

ஆண்களும் போலி புணர்ச்சி

பெரும்பாலான பெண்கள் உடலுறவின்போது தாங்கள் உச்சகட்டத்தை அடைந்ததுபோல நடிக்கிறார்கள் என்கிறது ஆய்வுகள். அதேபோல, ஆண்களும் தாங்கள் புணர்ச்சி அடைந்ததாக போலியாக நடிக்கிறார்கள். பத்து ஆண்களில், மூன்று பேர் உடலுறவின்போது உச்சகட்டம் அடைந்ததுபோல போலியானவர்களாக இருக்கலாம். மேலும், 30 சதவிகித ஆண்கள் போலி புணர்ச்சியைக் கொண்டுள்ளனர்.

விந்துதள்ளல் தவிர்க்க முடியாதது

விந்துதள்ளல் தவிர்க்க முடியாதது

விந்துதள்ளல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஆண்கள் விந்தணுக்களை வெளியேற்றுவது அவர்களின் உடல் நலத்திற்கும் நல்லது. ஒரு மனிதன் பாலியலால் தூண்டப்பட்டு ஒரு குறிப்பிட்ட புள்ளியை அடைந்த பிறகு, உச்சிகட்டத்தை அடைவது கட்டாயமாகும். ஆதலால், உடலுறவில் புதிய முயற்சிகளை செய்து உச்சகட்டம் அடைய முயற்சி செய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Mind-blowing facts about male orgasm

Here we discussing about the mind-blowing facts about male orgasm.
Story first published: Saturday, June 13, 2020, 18:50 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more