Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ஆண்களின் இந்த சின்ன சின்ன செயல்கள்தான் பெண்களை காதலிக்கத் தூண்டுகிறதாம் தெரியுமா?
பெண்களை பொறுத்த வரையில் ஆண்களிடம் இருக்கும் எந்த குணங்கள் அவர்களை ஈர்க்கிறது என்பது எவராலும் கூறமுடியாது. இது ஒவ்வொரு பெண்களுக்கும் மாறுபடும், ஆண்களை பெண்களின் கண்களுக்கு அழகாக காட்டும் குணம் பல இருக்
இந்த உலகத்தில் விஞ்ஞானத்தால் இன்றும் கண்டுபிடிக்க முடியாத ஒரு விஷயம் என்னவென்றால் அது பெண்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதுதான். காதலில் விழுவதற்கு ஆண்களுக்கு இருக்கும் காரணமும், பெண்களுக்கு இருக்கும் காரணமும் வித்தியாசமானதாக இருக்கும். ஆண்களிடம் கேட்கும்போது பெண்ணின் உருவம், தோற்றம், பேச்சு என பல காரணங்கள் இருக்கும்.

பெண்களை பொறுத்த வரையில் ஆண்களிடம் இருக்கும் எந்த குணங்கள் அவர்களை ஈர்க்கிறது என்பது எவராலும் கூறமுடியாது. இது ஒவ்வொரு பெண்களுக்கும் மாறுபடும், ஆண்களை பெண்களின் கண்களுக்கு அழகாக காட்டும் குணம் பல இருக்கிறது. ஆண்களை நோக்கி பெண்களை ஈர்க்கும் விஷயங்களுக்கு நீண்ட பட்டியல் உள்ளது. இதில் பல காரணங்கள் மிகவும் குழந்தைத்தனமாகவும், சாதாரண விஷயமாகவும் இருக்கும். இந்த பதிவில் பெண்களை ஈர்க்கும் ஆண்களின் சின்ன சின்ன செயல்கள் என்னவென்று பார்க்கலாம்.

இருக்கைக்கு வழிகாட்டும் போது உங்கள் கையை அவளது முதுகில் லேசாக வைப்பது
பெண்கள் பொதுவாகவே நற்பண்புகளை கொண்டவர்களை விரும்புவார்கள். ரு பெண்ணை எப்படி நடத்த வேண்டும் என்று தெரிந்த ஒருவருடன் இருக்க அவர்கள் விரும்புகிறார்கள். ஒரு ஆண் தன் கையை அவள் முதுகில் சற்று வைத்து இருக்கைக்கு அழைத்துச் செல்லும்போது ஒரு பெண் நேசிக்கிறாள். நீங்கள் அவ்வாறு செய்யும்போது அவர்கள் வசதியாகவும், பாதுகாப்பாகவும் உணர்கிறாள்.

மென்மையான பார்வையுடன் பெண்களைப் பார்ப்பது
ஆண்களின் கடுமையான பார்வை எப்பொழுதும் பெண்களுக்கு வெறுப்பையும், சங்கடத்தையும் ஏற்படுத்தும். பெண்களை மென்மையாக பார்க்கும்போது அதனை அவர்களை நேசிக்கிறார்கள். பெண்கள் நேரடியாக கண்களை பார்த்து மென்மையாக பார்த்து பேசுபவர்களை எப்போதும் விரும்புவார்கள்.

உடற்பயிற்சி செய்வது
உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் பெண்களை ஆண்கள் எப்பொழுதும் விரும்புவார்கள் என்பது வெளிப்படையான ஒன்றாகும். பெண்களுக்கும் இது பொருந்தும், கட்டுமஸ்தான உடலமைப்பைக் கொண்ட ஆண்களை பெண்கள் எப்பொழுதும் நேசிப்பார்கள். உடற்பயிற்சி செய்யும்போது ஆண்களின் உடலில் ஏற்படும் வியர்வை பெண்களை ஈர்க்கும் ஒன்றாக இருக்கிறது. இறுக்கமான தசைகள் மற்றும் பரந்த தோள்கள் பெண்களால் எப்பொழுதும் தவிர்க்கமுடியாதவை.

சமைப்பது
நீங்கள் விரும்பும் பெண்ணை உண்மையில் நீங்கள் கவர விரும்பினால் அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் உணவை அதிகம் விரும்புபவர்கள் என்றால் நீங்கள் கண்டிப்பாக அவர்களுக்கு சமைத்து கொடுக்க வேண்டும். அவர்களுக்காக நீங்கள் செய்யும் சின்ன சின்ன சமையல் கூட உங்கள் மீதான அவர்களின் ஈர்ப்பை அதிகரிக்கும்.

வீட்டில் பத்திரமாக இறக்கி விடுவது
இந்த உலகில், பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்கள்நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது, நீங்கள் பெண்ணின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டால், அவர் உங்களால் ஈர்க்கப்படுவார் என்பதில் ஆச்சரியமில்லை. அவர்கள் உங்களை வெளிப்படையாக ரசிக்காவிட்டாலும் உங்களை பற்றிய எண்ணம் அவர்கள் மனதில் உயரும். இதனை அவர்களை ஈர்ப்பதற்காக மட்டும் செய்யாதீர்கள், அவர்கள் மீதான உண்மையான அக்கரையில் செய்யுங்கள்.

ஆதரவாக இருப்பது மற்றும் ஆலோசனைகள் வழங்குவது
பெண்களுக்கு தங்கள் ஆதரவைக் காட்டும் மற்றும் அவர்களுக்கு உதவி வழங்கும் ஆண்கள் அவர்கள் அபிமானத்தை எளிதில் பெற இயலும். உதவி செய்யத் தயாராக இருக்கும் ஆண்களையும், சரியான அறிவுரையையும் வழங்கும் ஆண்களை பெண்கள் ரசிப்பார்கள். தன்மீது உண்மையான அக்கறை இருக்கிறதா என்பதை பெண்கள் இதை வைத்தே கண்டறிவார்கள்.

முடியுடன் விளையாடுவது
ஆண்கள் தங்கள் முடியின் இடையில் விரல்களை வைத்து மென்மையாக விளையாடுவதை பெண்கள் ரசிக்கிறார்கள். ஆனால் எப்பொழுதும் அதையே செய்துகொண்டு இருக்கக்கூடாது. தலையில் க்ளிப்புகள் மாட்டி விடுவது, கூந்தலை ஒதுக்கி விடுவது போன்றவை அவர்களை மகிழ்ச்சியுறவைக்கும்.

மென்மையாக வாகனம் ஓட்டுதல்
வேகமாக வாகனம் ஓட்டுவதை பெரும்பாலும் ஆண்கள் விரும்புவார்கள், ஆனால் பெண்களுக்கு அப்படியல்ல. பெண்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாகனம் ஓட்டும் ஆண்களுடன் இருக்க விரும்புகிறார்கள். மூர்க்கத்தனமாக வாகனம் ஓட்டும் ஆண்களை பெண்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை.

குழந்தைகளிடம் அன்பு காட்டுவது
குழந்தைகளிடமும், ஆண்களிடமும் மென்மையாக நடந்து கொள்ளும் ஆண்களை பெண்கள் எப்போதும் நேசிப்பார்கள். பெண்கள் மென்மையானவர்களாக மற்றும் வளர்க்கும் தன்மையைக் கொண்டிருப்பதால், நீங்கள் விலங்குகள் மற்றும் குழந்தைகளிடம் நல்லவர்களாகவும், கனிவாகவும் இருக்கும்போது அவர்கள் உங்களை கவர்ச்சியானவர்களாகக் காண்கிறார்கள்.

அவர்களின் இருப்பை உணர்வது
ஒரு பெண் தனது இருப்பை மற்றவர்கள் ஒப்புக் கொள்ளும்போது அதை விரும்புவார். இதனை ஆண்களால் உணர முடியாது, ஆனால் நீங்கள் அவர்களின் மரியாதையைக் சிதைக்காமல், அவர்களுடன் பணிவுடன் பேசும்போது இது உங்களை கவர்ச்சியாகக் காட்டுகிறது. இந்த சிறிய விஷயங்களை அவர்கள்ள் நிச்சயமாக கவனிப்பர்கள்.

சாலையை கடக்க உதவுவது
சாலைகளைக் கடப்பது பெரிய விஷயமல்ல, ஆனால் சாலையைக் கடக்க அவர்களுக்கு உதவுவது உண்மையில் ஒரு பெண்ணின் இதயத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அவர்களின் கையை நீங்கள் பிடிக்கும் விதத்தை அவர்கள் கவனிப்பார்கள், சாலையை கடக்கும்போது பாதுகாப்பான திசையில் அவர்களை வைப்பது, நீங்கள் அவர்கள் மேல் அக்கறை காட்டுவதாக நம்ப வைக்கிறது.

பின்புறம் இருந்து கட்டிப்பிடிப்பது
பெண்கள் இதனை மிகவும் ஆறுதலான ஒன்றாக கருதுகிறார்கள். அவர்களை சுற்றி உங்களின் கைகள் சுற்றி வளைக்கும் போது அது அவர்களை மிகவும் ஆறுதலாகவும், பாதுகாப்பாகவும் உணரச்செய்யும். அவர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைப்பதால், அவர்களை பாதுகாப்பாக உணர வைப்பது மிகச் சிறந்த விஷயம் என்று பெண்கள் நினைக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications