Latest Updates
-
டிபன் கடை ஸ்டைல் கருப்பு உளுந்து சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 07 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு விபத்தும் நடக்க வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
Aadi Month Rasipalan 2026: ஆடி மாதத்தில் கோடிகளை குவிக்கப் போகும் 5 ராசிக்காரங்க இவங்க தான்! -
ஜூலை 16-ல் சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், வெற்றியையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்.. -
நியூமராலஜி படி இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களின் தோற்றம் மட்டுமல்ல ஆன்மாவும் அழகானதாக இருக்குமாம் -
உங்க பல் மஞ்சளா இருக்கா? வெள்ளையாக்க இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
1/2 கப் கடலைப்பருப்பு இருந்தா டக்குனு இந்த குருமாவை செய்யுங்க - இட்லி, தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
வாழைப்பழமும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
AC ரிமோட்டில் நீங்கள் செய்யும் இந்த தவறு உங்க கரண்ட் பில்லை தாறுமாறா அதிகரிக்குமாம் - கரெக்ட்டா யூஸ் பண்ணுங்க
உங்கள் காதலனின் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடுவது எப்படி?
உங்கள் காதலன் அல்லது கணவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுவதில் நீங்கள் முதல் நபராக இருக்கலாம்.
காதலிப்பதற்கு முன்பு உங்களுடைய பிறந்த நாளையே நீங்கள் மறந்துவிடுவீர்கள் அல்லது கொண்டாடமல் இருப்பீர்கள். ஆனால், காதலிக்க ஆரம்பித்த பிறகு உங்கள் துணையின் பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடவும், அல்லது மிகச்சிறப்பான பரிசை அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். அதேபோல கல்யாணம் ஆன புதிதிலும் இவ்வாறு யோசிப்பீர்கள். வருடங்கள் செல்லசெல்ல பிறந்த நாட்கள் மறந்து கூட போகலாம். ஆனால், முதலில் கொண்டாடிய அந்த பிறப்பான பிறந்த நாளை நீங்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்பீர்கள்.

காதலிக்கும்போது வந்த முதல் பிறந்த நாள் அல்லது கல்யாணத்திற்கு பிறகு வரும் முதல் பிறந்த நாளை மிகச்சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். உங்கள் காதலன் அல்லது கணவனின் பிறந்த நாளுக்கு என்ன பரிசு தரலாம், எவ்வாறு கொண்டாடலாம் என்று யோசித்து கொண்டிருக்க்றீர்களா? அப்படி என்றால் உங்களுக்கான சில யோசனைகளை இங்கே காணலாம்.

வாழ்த்தும் முதல் நபராக இருக்கலாம்
உங்கள் காதலன் அல்லது கணவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுவதில் நீங்கள் முதல் நபராக இருக்கலாம். முதலில் வாழ்த்து தெரிவிப்பதும், வாழ்த்து பெருவதும் மிகுந்த மகிழ்ச்சியை தரும். நீங்கள் முதலில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும்போது, அவர் மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பின் தீவிரத்தை நிச்சயமாக புரிந்துகொள்வார். இது உங்களுக்குள் இன்னும் நெருக்கத்தை ஏற்படுத்தும். அத்துடன் ஒரு சுவையான பிறந்தநாள் கேக்கையும் அவருக்காக நீங்கள் கொண்டு வரலாம்.

பிடித்த உணவுகளை சமைப்பது
உங்கள் காதலன் அல்லது கணவனுக்கு பிடித்த உணவுகளை அந்நாளில் அவருக்காக நீங்கள் செய்துகொடுக்கலாம். அவர் விரும்பிய உணவுகளை காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைகளிலும் சமைத்து கொடுக்கலாம்.
நீங்களும் உங்கள் காதலனும் ஒன்றாக இல்லாவிட்டாலும், அவருக்காக பிரத்யேகமாக சமைத்த காலை உணவை நிச்சயமாக எடுத்துச் செல்லலாம். அல்லது உங்கள் காதலன் வேறொரு இடத்தில் தங்கியிருந்தால், அவருக்கான காலை உணவை நீங்கள் ஆர்டர் செய்யலாம். இது அவருடைய காலை பொழுதை விறுவிறுப்பாக துவங்க உதவும்.

ஒரு அழகான நினைவை புதுபிக்கலாம்
உங்களுக்குள் நிகழ்ந்த ஒரு அழகான நினைவை நீங்கள் மீண்டும் அதேபோல செய்து புதுப்பிக்கலாம். இது அவரது பிறந்த நாளில் நீங்கள் கொடுக்கும் ஒரு சிறந்த பரிசாக இருக்கும். எடுத்துக்காட்டாக, நீங்கள் இருவரும் உங்கள் முதல் விடுமுறையை ஒன்றாகக் கழித்த இடத்தை மீண்டும் பார்வையிடத் திட்டமிடலாம் அல்லது நீங்கள் போட்டோஷூட் செய்த நினைவுகளை புதுப்பிக்கலாம். மேலும், நீங்கள் இருவரும் முதல்முறையாக ஒருவரை ஒருவர் சந்தித்த இடத்திற்கு அவரை அழைத்துச் செல்லலாம்.

பயணத்திற்கு செல்லலாம்
நீங்களும் உங்கள் காதலனும் ஏற்கனவே அலுவலக வேலைகளில் சோர்வடைந்து, நகர குழப்பத்திலிருந்து விலகி சிறிது நேரம் செலவிட விரும்பினால், ஒரு அழகான பயணத்தைத் திட்டமிடுவதை விட சிறந்தது வேறு என்ன இருக்கப்போகிறது. உங்கள் காதலன் நீண்ட காலமாக பார்வையிட திட்டமிட்டிருந்த இடத்தை நீங்கள் தேர்வு செய்து அவரை அங்கு கூட்டிச்செல்லலாம். இது உங்கள் காதலனின் பிறந்தநாளை மறக்கமுடியாத ஒன்றாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல், நீங்களும் புத்துணர்ச்சி அடைவீர்கள்.

சிறந்த பிறந்தநாள் அட்டையை உருவாக்கலாம்
உங்கள் காதலனை நீங்கள் அளவுக்கு அதிகமாக காதலித்தால், அல்லது உங்கள் அன்பின் ஆழத்தை காட்ட அவருக்கு காட்ட விரும்பினால், அதற்கு நீங்களாகவே உங்கள் கையால் ஒரு சிறந்த பரிசை செய்து தரலாம். நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பைக் காட்டும் உங்கள் இனிமையான புகைப்படங்களில் சிலவற்றை சேர்த்து ஒரு அழகான பிறந்தநாள் அட்டையை நீங்களே தயார் செய்யலாம்.
உங்கள் உணர்ச்சிகளையும் உங்கள் காதலனுடனான அன்பையும் அதிகரிக்க இது ஒரு இனிமையான தருணமாக இருக்கும். உங்கள் காதலன் நிச்சயமாக இந்த பரிசை பாதுகாப்பாகவும் எப்போதும் அவருடன் நெருக்கமாக வைத்திருப்பார்.

ஆச்சிரியமான ஒரு இரவு உணவை திட்டமிடலாம்
உங்கள் காதலின் பிறந்த நாளைக் கொண்டாட ஒரு ஆச்சரியமான இரவு உணவு விருந்து சிறந்த வழியாகும். அவர் இதுவரை போகாத ஒரு உணவகத்திற்கு நீங்கள் அவரை அழைத்துச் செல்லலாம். அல்லது கேண்டில் லைட் டின்னரை திட்டமிட்டு, அவரது பிறந்த நாளை சிறந்த முறையில் கொண்டாடலாம். அவருக்கு பிடித்த பானம், உணவு மற்றும் இசை மூலம் நீங்கள் அவரை எளிதில் கவர்ந்திழுக்கலாம். இந்த நினைவுகளை என்றென்றும் அவர் நினைவில் வைத்திருப்பார்.

இரவு நேர திரைப்படத்திற்கு செல்லலாம்
உங்கள் காதலனை அவரது பிறந்தநாளில் விசேஷமாக உணர செய்ய நீங்கள் நிச்சயமாக ஒரு இரவு நேர திரைப்படத்தை திட்டமிடலாம். புதிதாக வெளியான திரைப்படத்திற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் அல்லது உங்கள் வீட்டில் ஒரு இரவு நேர திரைப்படத்தை திட்டமிடலாம்.
உங்கள் வீட்டில் அவருக்குப் பிடித்த திரைப்படத்தை அல்லது அவர் எப்போதும் பார்க்க விரும்பிய திரைப்படத்தை திரையிட்டு, சில பாப்கார்ன்கள், திண்பண்டங்கள், குளிர் பானங்கள் மற்றும் வசதியான போர்வை ஆகியவற்றைக் கொண்டு நீங்கள் நிச்சயமாக ஒரு சிறந்த நாளை அவர்களுக்காக உருவாக்க முடியும்.

நல்ல பரிசை உருவாக்கலாம்
உங்கள் காதலனை அவரது நாளில் கவர்ந்திழுப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று அவருக்கு ஒரு சிறந்த பரிசை நீங்களே செய்து கொடுக்கலாம். அல்லது அவர் வாங்க திட்டமிட்டுள்ள விளையாட்டுப் பொருட்களான ஃபுட் பால், கிரிகெட் பேட் போன்ற பொருட்களை பரிசாக கொடுக்கலாம். மேலும், அவர் எப்போதும் வாங்க விரும்பிய ஒரு ஜோடி காலணிகளை நீங்கள் வாங்கி அவருக்கு பரிசாக கொடுக்கலாம்.

பிறந்த நாள் பார்ட்டி
உங்கள் காதலனுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இருக்கும் ஒரு ஆச்சரியமான பிறந்தநாள் விழாவை நீங்கள் ஏற்பாடு செய்யலாம். இது உங்கள் காதலனுக்கு மிக ஆச்சிரியமான பிறந்த நாள் பரிசாக இருக்கும்.
அத்துடன் ஒரு மோதிரத்தை அவரது விரலில் ரகசியமாக போட்டு, அவர் மீது நீங்கள் வைத்திருக்கும் காதலை வெளிபடுத்தலாம். இது ஒரு மகிழ்ச்சியான பிறந்தநாள் பரிசாக மட்டுமல்லாமல், அவருடைய வாழ்க்கையில் உங்களைப் பெறுவதற்கு அவர் பாக்கியவானாக உணர வேண்டும்.

அன்பு முக்கியம்
எதுவாக இருந்தாலும், உங்கள் காதலனின் பிறந்தநாளில் நீங்கள் அவருக்கு அளிக்கும் பிறந்த நாள் பரிசு நேர்மையுடனும், அன்புடன் இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு உறவில் மிகவும் முக்கியமானது உண்மையான உணர்வுகளை புரிந்துகொள்வது, கவனிப்பு மற்றும் அவர்களின் சுயமரியாதை. இவற்றை எல்லாம் புரிந்துகொண்டு அதன்படி, வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழலாம். உங்கள் காதலருக்காக உங்களால் எந்த பரிசையும் வாங்க முடியா விட்டாலும், உண்மையான வாழ்த்து ஒன்றே போதுமானது.



Click it and Unblock the Notifications