For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களே! உங்க மனைவி உடலுறவில் 'இப்படி' நடந்துக்கிட்டா.. நீங்க இருமடங்கு திருப்தி அடைவீர்களாம்...!

|

உங்கள் கூட்டாளருடன் மேற்கொள்ளும் வழக்கமான பாலியல் அமர்வுகள் உங்களுக்கு இன்பத்தையும் திருப்தியும் வழங்குவதில்லை. எப்போதும் ஒரே மாதிரியான பாலியல் வாழ்க்கை இறுதியில் சலிப்பை ஏற்படுத்திவிடும். உங்கள் பாலியல் வாழ்க்கைதான் உங்கள் உறவில் ஒரு நெருக்கமான இணைப்பை உருவாக்குகிறது. இது ஆரோக்கியமான உறவுக்கு முக்கியமானது. திருமணத்திற்குப் பிறகு உங்கள் கணவனின் பாலியல் உந்துதலில் மாற்றத்தைக் கவனிப்பது மிகவும் இயல்பானது என்பதை அறிந்து கொள்ளுங்கள். இதற்கான காரணங்கள் பல இருக்கலாம்.

உங்கள் கணவர் உங்கள் மீது காதல் மனநிலையில் இருப்பதை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும். குறிப்பாக நீங்கள் அவரின் கவனத்தை முழுவதும் ஈர்க்க, சில விஷயங்களை செய்ய வேண்டும். எதையும் கட்டாயப்படுத்தாதீர்கள், ஆனால் இந்த விஷயங்களை முயற்சிப்பது நிச்சயமாக உங்களுடன் நெருக்கமான தருணங்களைப் பகிர்ந்து கொள்ளும் மனநிலைக்கு உங்கள் கணவரை கொண்டு வரும். உங்கள் கணவனின் பாலியல் உணர்வை தூண்ட செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரணத்தை கண்டுபிடியுங்கள்

காரணத்தை கண்டுபிடியுங்கள்

உங்கள் கணவர் பாலியல் மனநிலையில் இருக்கிறாரா என்பதை முதலில் நீங்கள் அறிந்துகொள்வது முக்கியம். ஏனெனில், அவர் ஏன் அந்த மனநிலையில் இல்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்வது முக்கியம். அதற்கான காரணங்களை நீங்கள் கண்டுபிடிக்க முடிந்தால், உங்கள் கணவரை பாலியல் மனநிலையில் சேர்ப்பது மற்றும் அவரை உடல் ரீதியாக ஈர்ப்பது உங்களுக்கு மிகவும் எளிதான செயலாக இருக்கும்.

MOST READ: காமசூத்ராவில் கூறப்பட்டுள்ள 'இத' ட்ரை பண்ணுனா.. உங்க செக்ஸ் வாழ்க்கை வேற லெவலில் இருக்குமாம்..!

பாலியல் உணர்வை தூண்டுங்கள்

பாலியல் உணர்வை தூண்டுங்கள்

உங்கள் கணவனை பாலியல் ரீதியாக தூண்டுவதற்கான மற்றொரு எளிய வழி, உங்கள் இருவருக்கும் இடையிலான பாலியல் சந்திப்பை முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவுவது. சத்தம் எழுப்புங்கள், அவரது காதுகளில் புத்திசாலித்தனமான ஒன்றைக் கிசுகிசுக்கவும், அவரிடமிருந்து படுக்கையில் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள், அவர் உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பதை அவருக்குத் தெரியப்படுத்துங்கள். அவரின் பாலியல் உணர்வை தூண்ட செக்ஸியான மெசேஜ் மற்றும் படங்களை அனுப்பி, அவரை தயார் படுத்துங்கள்.

கவர்ச்சியான ஆடையை அணியவும்

கவர்ச்சியான ஆடையை அணியவும்

பொதுவாக ஆண்கள் தங்கள் மனைவியை கவர்ச்சி உடையில் காண விரும்புவார்கள். நீங்கள் ஒரே மாதிரியாக ஆடை அணிந்தால், உங்கள் கணவன் ஒவ்வொரு நாளும் உங்களுடன் ஒரே போலவே பழகுவார். மேலும் அவருக்குப் புதிதாக எதுவும் தோன்றாது. ஆதலால், சில நேரங்களில், உங்களுக்கு பொருத்தமான தளர்வான மற்றும் கவர்ச்சியான ஆடைகளுக்கு மாறவும். பின்னர், அவர் உங்களுடன் படுக்கையில் நன்றாக விளையாடுவார்.

போர்பிளே

போர்பிளே

பொதுவாக உடலுறவை மேலும் சுவாரஸ்யமாக்குவது போர்பிளேதான். இது ஆண்களுக்கும் பொருந்தும். உடலுறவுக்கு முன்னும், பின்னும் விளையாட்டுகள் இருக்க வேண்டியது அவசியம். இது உங்கள் நெருக்கத்தை அதிகரித்து, முழு திருப்தியை வழங்குகிறது. கலவியை தொடங்குவதற்கு முன் தீண்டல், பேச்சு, பாலியல் சீண்டல் போன்றவை தம்பதியர் இருவரின் ஆர்வத்தை பலமடங்கு தூண்டும். அதுபோல் உடலுறவு முடிந்ததும் சிறிய பேச்சுக்கள் விளையாட்டுக்கள் உங்களை நன்றாக உணர வைக்கும்.

MOST READ: ஆண்களே! உங்க மனைவி உங்களுக்கு உண்மையா இல்லை என்று உணர்த்தும் அறிகுறிகள் என்ன தெரியுமா?

உடலுறவைத் தொடங்குவது

உடலுறவைத் தொடங்குவது

படுக்கையில் உங்கள் கணவரின் கவனத்தை ஈர்ப்பதற்கான எளிய வழிகளில் ஒன்று, உடலுறவை முதலில் தொடங்குபவர். எப்போதும் ஆண்கள் முன்னிலை வகிக்க வேண்டும் என்று காத்திருக்க வேண்டாம். அவர் எப்போதும் பொறுப்பேற்பது மற்றும் உங்களுடன் உடல் ரீதியாக நெருக்கமாக இருக்க உங்களை கவர்ந்திழுப்பது அவருக்கு சலிப்பை ஏற்படுத்தும். சில நேரங்களில் விளையாட்டை திருப்புங்கள். இது உங்கள் கணவனின் மனநிலையை எவ்வளவு விரைவாக மாற்றுகிறது என்பதைப் பாருங்கள்.

செக்ஸியான மசாஜ்

செக்ஸியான மசாஜ்

ஒரு முறை, உங்கள் காதலன் அல்லது கணவனுக்கு கவர்ச்சியான முறையில் மசாஜ் செய்யுங்கள். ஒரு மசாஜ் உங்கள் கணவனின் மனநிலையை எவ்வாறு மாற்றும் என்பது உங்களுக்குத் தெரியாது. கொஞ்சம் முயற்சி செய்து, கவர்ச்சியாக உடை அணிந்து அவருக்கு மசாஜ் செய்யுங்கள். உங்களிடமிருந்து ஒரு வகையான ஈர்ப்பை உங்கள் கணவர் அறிந்துகொள்வார். ரொமெண்டிக்கான விஷயங்களை நீங்கள் அவரின் காதில் கிசுகிசுக்கலாம்.

 ஒன்றாக குளிக்கவும்

ஒன்றாக குளிக்கவும்

உங்கள் கணவனுடன் சிறிது நேரம் ஷவரில் ரொமான்ஸ் செய்வது மூலம் நீங்கள் அவரை ஆச்சரியப்படுத்தலாம். இருவரும் ஒன்றாக குளிக்கலாம். இது உங்களுக்கு சிற்றின்பத்தை வழங்குகிறது. இறுதியில் இது உடலுறவுக்கு வழிவகுக்கும். சில நேரங்களில், நீங்கள் படுக்கையறையில் உள்ள பாலியல் வழக்கத்தை விட்டுவிட்டு, இதுபோன்ற செயல்களில் ஈடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

how to get your man in the mood for romantic night

Here we are talking about the how to get your man in the mood for romantic night.
Story first published: Sunday, June 6, 2021, 9:30 [IST]