Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
இந்த சாதாரண செயல்கள் உங்களின் உடலுறவில் கூடுதல் சுவாரஸ்யத்தை சேர்க்குமாம் தெரியுமா?
வாழ்க்கை மாற்றத்தாலும், குழந்தைகளின் வருகையாலும் பலரும் உடலுறவில் ஆர்வத்தை இழந்துவிடுகின்றனர். இதனால் நாளடைவில் அவர்களுக்குள் இருக்கும் நெருக்கம் குறைந்து விடுகிறது.
தம்பதிகளின் பாலியல் வாழ்க்கை என்பது பல காரணங்களை பொறுத்து மாறுபடுகிறது. சில தம்பதிகள் திருமணமான ஆரம்ப காலக்கட்டத்தில் மட்டும் உடலுறவில் அதிக விருப்பத்துடன் இருப்பார்கள், சிலர் திருமணமாகி பல ஆண்டுகள் கழித்தும் தாம்பத்யத்தில் அதே ஆர்வத்துடன் இருப்பார்கள். இது தம்பதிகளை பொறுத்து வேறுபடும்.

வாழ்க்கை மாற்றத்தாலும், குழந்தைகளின் வருகையாலும் பலரும் உடலுறவில் ஆர்வத்தை இழந்துவிடுகின்றனர். இதனால் நாளடைவில் அவர்களுக்குள் இருக்கும் நெருக்கம் குறைந்து விடுகிறது. சில பழக்கவழக்கங்கள் மூலம் தம்பதிகளுக்குள் இருக்கும் நெருக்கத்தை எப்பொழுதும் குறையாமல் பார்த்துக் கொள்ளலாம். இந்த பதிவில் தம்பதியின் நெருக்கத்தை எப்பொழுதும் துடிப்புடன் வைத்திருக்கும் உடலுறவு குறிப்புகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

இரவு டேட்டிங் செல்லுங்கள்
நீங்கள் காதலில் இருந்ததுபோது எப்படி இருந்தீர்கள் என்பதை சற்று சிந்தித்து பாருங்கள். கண்டிப்பாக இரவு நேர விருந்திற்கும், பார்ட்டிக்கு சென்றிருப்பீர்கள். இப்பொழுதும் உங்கள் துணையை அதுபோன்ற ஒரு நிகழ்வுக்கு அழைத்துச் சென்று ஆச்சரியப்படுத்துங்கள். உங்களின் குழந்தைகளை பெற்றோரிடம் விட்டு விட்டு உங்கள் துணையுடன் நேரத்தை செலவழியுங்கள். இதுவும் முக்கியம்தான்.

உடலுறவு பற்றி பேசுங்கள்
உடலுறவு பற்றி உங்கள் துணையிடம் விவாதிப்பது உங்கள் இருவருக்குள்ளும் இருக்கும் பிரச்சினைகளை களைவதற்கும், உங்களின் எதிர்பார்ப்புகள் என்னவென்று தெரிந்து கொள்வதற்கும் உதவும். எத்தனைமுறை உறவு வைத்துக்கொள்ளலாம் என்பதைப் பற்றியும் நீங்கள் விவாதிக்கலாம். உங்கள் வேலைகள் மற்றும் குழந்தைகளை பாதிக்காத வண்ணம் உங்கள் தாம்பத்ய வாழ்க்கையை எப்படி துடிப்புடன் வைத்துக்கொள்வது என்பது பற்றி இருவரும் சேர்ந்து திட்டமிடுங்கள்.

துணையின் அழகை பாராட்டுங்கள்
உங்கள் தாம்பத்யம் சிறப்பாக இருக்க உங்கள் துணையின் உடல் அழகை நீங்கள் பாராட்ட வேண்டியது அவசியமாகும். உங்கள் சொற்கள், கண்கள் மற்றும் கைகள் மூலம் உங்கள் கூட்டாளியின் உடலைப் பாராட்டுங்கள். உங்களின் பார்வையாலேயே உங்கள் துணையை சிறப்பாக உணர வைக்கவேண்டும். இது உங்கள் இருவருக்குள்ளேயும் பாலியல் ஆசைகளை அதிகரிக்கும்.

சரசமாடுதல்
திருமணம் முடிந்து விட்டது என்பதற்காக நீங்கள் உங்கள் துணையுடன் கடலை போடவோ அல்லது சரசமாக பேசவோ கூடாது என்று அர்த்தமில்லை. உங்கள் அலுவலக நேரத்தில் அவர்களுக்கு A ஜோக்ஸ் அனுப்பலாம், அன்று இரவு நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று அனுப்பலாம், நீங்கள் பார்த்த கவர்ச்சியான உடை, படம் போன்றவற்றின் புகைப்படத்தை அனுப்பலாம். இது உங்கள் பாலியல் வாழ்க்கையில் சிறப்பான மாற்றத்தையும், தூண்டுதலையும் ஏற்படுத்தும்.

முன்விளையாட்டுக்களை ஒருபோதும் தவிர்க்காதீர்கள்
உடலுறவிற்கு முன் செய்யும் முன்விளையாட்டுகள் தம்பதிகளை நெருக்கமாகக் கொண்டுவருவதோடு அவர்களுக்கு நெருக்கமான உணர்வையும் தருகிறது. வெறுமனே உறவில் ஈடுபடுவது உங்களுக்கு நாளடைவில் சலிப்பை ஏற்படுத்தும். ஆனால் முன்விளையாட்டுடன் உடலுறவை தொடங்கும்போது உங்கள் துணைக்கு அடுத்து என்ன நடக்கும் என்னும் எதிர்பார்ப்பைத் தூண்டும். இது உங்கள் உறவிற்கு அதிக சுவாரஸ்யத்தை சேர்க்கும்.

திட்டமிடப்படாத உடலுறவு
உங்கள் துணையுடன் தன்னிச்சையாக உடலுறவு கொள்வது பற்றி சிந்தியுங்கள். இது உங்கள் கூட்டாளருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். வீட்டில் மனைவி தனியாக இருக்கும்போது அலுவலகத்துக்கு விடுமுறை போட்டுவிட்டு அவர்களுடன் கலவியில் ஈடுபடுவது உங்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும். இது உங்கள் துணையை ஏங்க வைக்கும்.

தவறான தருணங்களை சரியாக பயன்படுத்துவது
உங்கள் மனைவி எதிர்பாரக்த தருணத்தில் நீங்கள் அவர்களை சீண்டுவது உங்கள் மனைவியை வெளியில் கோபப்படுத்தினாலும் உள்ளுக்குள் அதனை ரசிப்பார்கள். உங்கள் நண்பர் இல்லத்திற்கு சென்று இருக்கும்போது தனிமையான தருணத்தில் அவர்களிடம் குறும்பில் ஈடுபடுவது அவர்களை கிளர்ச்சியடைய வைக்கும். வீட்டில் அனைவரும் இருக்கும்போது தனிமையான இடத்தில் நீங்கள் குறும்பில் ஈடுபடலாம், இதுபோன்ற செயல்கள் உங்களின் காதலையும், உடல் நெருக்கத்தையும் எப்போதும் குறையாமல் பார்த்துக் கொள்ளும்.



Click it and Unblock the Notifications











