For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களே! ஆண்களை “அந்த ” நேரத்தில் திருப்திபடுத்த நீங்கள் என்ன செய்யனும் தெரியுமா?

|

உடலுறவு என்றால் பொதுவாக ஆண்கள்தான் அதிகம் செயல்படுவார்கள் மற்றும் அதில் அதிக கவனம் செலுத்துவார்கள் என்று கூறுவதுண்டு. பெண்களும் பல பாலியல் நுட்பங்களை தெரிந்துகொள்வது அவசியம் எனப் புரிந்துகொள்வதில்லை. பல வித்தைகள் தெரிந்தவன் என்று ஆண்களை கூறுவார்கள். பெண்களை மகிழ்விக்க ஆண்கள் பல முயற்சிகளை மேற்கொள்ளும்போது, ஏன் பெண்களும் ஆண்களை சந்தோஷப்படுத்த பல விஷயங்களைத் தெரிந்துகொண்டு செயல்படக்கூடாது.

efforts-women-make-for-better-sex

பொதுவாக பெண்கள் கூச்சம் சுபாவம் உடையவர்கள். ஆனால், இந்த விஷயத்தில் இதை தவிர்ப்பது பல பாலியல் வித்தைகளை கற்றுக்கொள்வதற்கு உதவும். இது உங்களுக்கும் உங்கள் துணைக்கும் நன்மையளிக்கும். உங்களின் பாலியல் வாழ்க்கையும் சிறப்பாக அமையும். சமையலில் பல கலைகளை கற்று கணவனை அசத்தும் பெண்கள் பாலியல் கலைகளை தெரிந்துகொண்டு உங்கள் கணவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுங்கள். உங்கள் கணவனை மகிழ்ச்சியடைய நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி இங்கே தெரிவிக்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அப்பாவி பெண்ணாக நடியுங்கள்

அப்பாவி பெண்ணாக நடியுங்கள்

படுக்கையறையில் சில உற்சாகத்தை சேர்க்க சில பொய்கள் அவசியம். நீங்கள் படுக்கையில் ஒரு அப்பாவி பெண் போல தோற்றமளிக்கலாம். இது உங்கள் இருவருக்குள் ஒரு வேடிக்கையான விளையாட்டை ஏற்படுத்தும். இந்த நடிப்பு நீண்ட தூரம் செல்லக்கூட வாய்ப்புள்ளது. இது உங்கள் துணையை மேலும் உற்சாகப்படுத்தும். தினமும் புதிது புதிதான முறையில் உடலுறவை முயற்சி செய்யுங்கள்.

MOST READ:உங்கள் படுக்கையறையில் நீண்ட நேரம் "விளையாட" இத பண்ணுங்க போதும்...!

விருப்பத்தை கேளுங்கள்

விருப்பத்தை கேளுங்கள்

நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உங்கள் துணை விரும்புகிறார் என்று கேட்டுத் தெரிந்துகொண்டு, உங்களால் முடிந்தவரைச் செய்யுங்கள். இது நிச்சயமாக ஒரு மனிதனை திருப்திப்படுத்தும். தன்னுடைய மனைவி அல்லது காதலி தன்னைப் பிரியப்படுத்த மிகவும் கடினமாக முயற்சி செய்கிறாள் என்பதை அவர்கள் அறிவார்கள். உங்கள் துணை சோர்வாக இருக்கும்போது, நீங்கள் தொடங்கலாம். எல்லாவற்றையும் விட்டு வெளியேற அவரை அனுமதிக்காதீர்கள். இருவரும் திருப்பதியாகவும் வரை உங்கள் பாலியல் வாழ்க்கையை அனுபவியுங்கள்.

பல நுட்பங்களைப் படிக்கவும்

பல நுட்பங்களைப் படிக்கவும்

பல ஆபாச படங்களின் காட்சிகள் ஆண்களின் கற்பனைகளை சித்தரிக்கின்றன. ஆண்களுக்கு ஏற்ற ஆபாசத்தை கண்டுபிடித்து ஆண்கள் விரும்புவதைத் தெரிந்துகொள்ள முயற்சிக்கவும். நுட்பங்களை தெரிந்துகொண்டு, உங்கள் துணையிடம் நீங்கள் கற்ற வித்தைகளை இறக்கலாம். அது உங்கள் துணைக்கு திருப்பமாக இருக்கும். ஆபாச நுட்பங்களை பயன்படுத்தும்போது, அதை உங்கள் இயல்பான பாணிக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளுங்கள்.

நல்ல உடல்வாகு

நல்ல உடல்வாகு

நிறைய பெண்கள் தங்களுடைய உடலை நல்ல வடிவமைப்பாக வைத்துக்கொள்ள விருப்பம். ஆனால், எல்லாருக்கும் அது அமைவதில்லை. நல்ல உடல்வாகுள்ள பெண்களை ஆண்களுக்கு பிடிக்கும். ஆதலால், உங்கள் உடலை நீங்கள் சரியாக வைத்திருப்பது அவசியம். ஆனால், இதை மிகைப்படுத்த வேண்டியதில்லை. ஆரோக்கியமாக இருப்பது அவசியம். உணவு மற்றும் உடற்பயிற்சி செய்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும் மற்றும் உங்கள் உடல்வாகு அப்படியே இருக்கும்.

MOST READ: ‘அந்த ' நேரத்தில் ஆண்கள் செய்யுற இந்த விஷயங்கள் பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காதாம்...!

கவர்ச்சியான உள்ளாடைகள்

கவர்ச்சியான உள்ளாடைகள்

சில பெண்கள் தங்களுக்கு வளைவான உடல்வாகு இல்லையென்று கவலை கொள்ள வேண்டாம். சில நல்ல உள்ளாடைகளுடன் அதை மறைக்க முடியும். இது உங்களை கவர்ச்சியாகவும், அழகாகவும் காண்பிக்கும். படுக்கையறையில் கவர்ச்சியான ஆடைகளையே எப்போதும் உடுத்துங்கள். நீங்கள் உள்ளாடைகள் அணியும்போது சின்னசின்ன சில்மிஷம் செய்ய ஆண்களுக்கு உதவும். இது உங்கள் இருவருக்கும் பாலியல் வாழ்க்கையில் மசாலாவை சேர்க்கும்.

துணையை பாராட்டுங்கள்

துணையை பாராட்டுங்கள்

யாரவது உங்களைப் பாராட்டினால் நீங்கள் அதை விரும்பமாட்டீர்களா? கண்டிப்பாக பாராட்டு பெறுவதை அனைவரும் விரும்புவார்கள். நேர்மறையான கருத்து எப்போதும் வரவேற்கப்படுகிறது. உங்கள் காதலன் அல்லது கணவனிடம் நீங்கள் கூறுகள் "நீங்கள் நன்றாக செயல்படுகிறீர்கள் அல்லது இது நன்றாக இருக்கிறது" என்று சொல்லுங்கள். மேலும், அவரை பாராட்ட பல்வேறு சொற்றொடர்களை உபயோகப்படுத்துங்கள். இது உங்கள் துணைக்கும் நல்ல நெருக்கத்தை ஏற்படுத்தும்.

ஆலோசனை பெறலாம்

ஆலோசனை பெறலாம்

செக்ஸ் விஷயத்தில் பல பெண்கள் தங்கள் நண்பர்களின் ஆலோசனையை நம்புகிறார்கள். தனிப்பட்ட அனுபவத்திலிருந்து வருவது மிகவும் நம்பகமானதாக ஆக்குகிறது. சில பெண்கள் மிகைப்படுத்த முனைகிறார்கள். உங்கள் நண்பர்கள் சொல்லும் அனைத்தையும் நம்ப வேண்டாம். இருப்பினும், அந்த ஆலோசனை உங்களுக்குச் சரியாக இருந்தால் மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.

MOST READ: உடலுறவில் கூடுதல் சுவாரஸ்யம் அடைவதற்கான புதிய வழிகள் என்னென்ன தெரியுமா?

பாலியல் நிலைகள்

பாலியல் நிலைகள்

ஒரேமாதிரியான பாலியல் நிலை உங்கள் பாலியல் வாழ்க்கையில் சலிப்பை ஏற்படுத்தும். உங்கள் உடலுறவை மேலும் கூடுதல் சுவாரஸ்யம் அடைய வைக்க புதியபுதிய பாலியல் நிலைகளை நீங்கள் கையாளலாம். அதற்கு உங்கள் உடல் ஒத்துழைக்க வேண்டும். ஒரு நெகிழ்வான உடலைப் பராமரிக்க உடற்பயிற்சி அவசியம். ஒரு நெகிழ்வான உடலை நீங்கள் பராமரித்தால் எந்த பாலியல் நிலையையும் நீங்கள் செய்யலாம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல், இது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் பாலியல் வாழ்க்கைக்கும் நன்மையளிக்கிறது.

நாக்கைப் பயிற்றுவிக்கவும்

நாக்கைப் பயிற்றுவிக்கவும்

லிப் லாக் முத்தம் அதிக பலன்களை தருகிறது. நிறைய நேரம் லிப் லாக் முத்தம் கொடுப்பது மேலும் உங்கள் பாலியல் உணர்ச்சியைத் தூண்டுகிறது. உங்கள் வாயில் ஒரு செர்ரி துண்டுகளை பற்றி, உங்கள் துணையும் நீங்களும் விளையாடலாம். சில உணர்ச்சிமிக்க இயக்கங்களுக்கு நாக்கைப் பயிற்றுவிப்பது மிக முக்கியம். ஒவ்வொரு நாளும் உங்கள் நாக்கை ஒவ்வொரு திசையிலும் நகர்த்தப் பயிற்சி செய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Efforts Women Make for Better Sex

Here we talking about the efforts women make for better sex.
Story first published: Saturday, January 11, 2020, 18:05 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more