Latest Updates
-
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
வெறும் உடலுறவிற்கும்,காதல் நிறைந்த உடலுறவிற்கும் உள்ள வித்தியாசங்கள்...நீங்க எந்த உறவில் இருக்கீங்க?
ஒருவருடன் உடல்ரீதியாக இணைந்திருப்பது மற்றும் உடலுறவில் ஈடுபடுவது என்பது அனைவரின் வாழ்க்கையிலும் ஏற்படக்கூடிய அனுபவமாகும்.
ஒருவருடன் உடல்ரீதியாக இணைந்திருப்பது மற்றும் உடலுறவில் ஈடுபடுவது என்பது அனைவரின் வாழ்க்கையிலும் ஏற்படக்கூடிய அனுபவமாகும். ஆனால் வெறும் உடலுறவிற்கும் உணர்வுரீதியாக உடலுறவு வைத்துக் கொள்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது.

சில அறிகுறிகள் நீங்கள் ஒருவருடன் வெறும் உடலுறவு கொள்கிறீர்களா அல்லது காதலுடன் உடலுறவு கொள்கிறீர்களா என்பதை உங்களுக்கு தெரியப்படுத்தும். காதலோடு உடலுறவு கொள்வதற்கும், வெறும் உடலுறவு கொள்வதற்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

உணர்வுகள் சம்பந்தப்பட்டிருக்கிறதா இல்லையா?
சிலர் உணர்வுகளை உள்ளடக்காத நபர்களுடன் உடல் உறவு வைத்திருக்கிறார்கள். இது வெறும் செக்ஸ், தங்களை மகிழ்விப்பதற்காக அவர்கள் இருவரும் உறவில் ஈடுபடுகிறார்கள். காதலுடன் உடலுறவு கொள்ளும் போது, அது உங்களுக்கு உணர்ச்சிகளைக் கொண்ட நபருடன் மட்டுமே நிகழ்கிறது. உங்கள் அன்பை வெளிப்படுத்துவதற்கு ஒரு வழியாக நீங்கள் உடலுறவை பயன்படுத்துவீர்கள்.

ஒரு முறையா அல்லது வழக்கமானதா?
நீங்கள் ஒரு நபருடன் ஒரு முறை உறவு கொண்டிருந்தால், நீங்கள் இருவரும் ஒப்புக்கொண்ட சாதாரண உடலுறவாக அது இருக்கலாம். ஆனால் நீங்கள்தொடர்ந்து ஒருவருடன் உறவு கொண்டிருக்கிறீர்கள் என்றால், நீங்கள் அவர்களை நேசிக்க ஒரு வாய்ப்பு இருக்கலாம். நீங்கள் படுக்கையில் ஒருவருக்கொருவர் ஆசைகளைப் புரிந்துகொண்டு, தன்னலமற்ற முறையில் அவற்றை நிறைவேற்ற முயற்சி செய்கிறீர்கள், இது ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதற்கான அடையாளமாக இருக்கலாம்.

பிரத்தியேகமானதா இல்லையா?
உங்கள் இருவருக்கும் பல்வேறு தொடர்புகள் இருந்தால் நீங்கள் கேஷுவல் உடலுறவில் ஈடுபடுகிறீர்கள். ஆனால் குறிப்பிட்ட ஒரு நபருடன் பிரத்தியேகமாக உறவு கொண்டிருந்தால் நீங்கள் அவர்கள் மீது அன்பு செலுத்துகிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் இதயத்தில் அவர்களுக்கான உணர்வுகள் நிறைந்திருக்கிறது என்று அர்த்தம்.

தேவைகளை பூர்த்தி செய்கிறீர்களா?
மற்ற நபரைப் பற்றி சிந்திக்காமல் உங்களை உடல்ரீதியாக திருப்திப்படுத்துவது பற்றி மட்டும் நீங்கள் சிந்திக்கிறீர்கள் என்றால், அது சாதாரண செக்ஸ் தான். ஆனால் நீங்கள் மற்ற நபரின் தேவைகளைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தால், உடல்ரீதியாக ஈடுபடும்போது அவர்களுடன் மிகவும் மென்மையாகவும் நடந்து கொண்டால், நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துகிறீர்கள் என்று அர்த்தம்.

வெளிப்படையாக இருக்கிறீர்களா?
நீங்கள் சாதாரண உடலுறவில் ஈடுபட்டிருந்தால், உங்கள் பாதுகாப்பு உணர்வை நீங்கள் குறைக்க மாட்டீர்கள். உங்கள் பலவீனமான பக்கத்தை அவர்களுடன் ஒருபோதும் பகிர்ந்து கொள்ள மாட்டீர்கள். உண்மையான உங்களை அறிந்துகொள்வதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். ஆனால் நீங்கள் அவரை நேசிக்கிறீர்கள் என்றால், உண்மையான உங்களை அறிந்து கொள்வதில் அவர்களிடம் வெளிப்படையாக இருப்பீர்கள்.

நெருக்கமாக உணர்கிறீர்களா?
உடலுறவுக்குப் பிறகு, நீங்கள் மற்றவருடன் உணர்வுபூர்வமாக நெருக்கமாக உணர்ந்தால், நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துகிறீர்கள் என்பதையும், உங்கள் உடல்களை விட ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளது என்பதையும் இது குறிக்கிறது. ஆனால் நீங்கள் மற்ற நபருடன் நெருக்கமாக உணரவில்லை என்றால், சாதாரண உடலுறவுக்காக நீங்கள் அதில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.



Click it and Unblock the Notifications
